Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 13 Jun, 2025 | 05:05 PM தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லப்போவதாக முடிவு செய்துள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், சோளியாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டிணம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் நாள் என்பதால் தடைக்காலம் முடிந்து எப்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது என்பது குறித்து நேற்று (12) மாலை 6 மணியளவில் மல்லிபட்டினத்தில் ஆறு மாவட்ட மீனவர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி திங்கட்கிழமை அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆறு மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர். அந்த கூட்டத்தில் வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும், தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க சொல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் படி மீன் பிடிக்க வேண்டாம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடைக்காலம் நிறைவடைந்த பின், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் - மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு | Virakesari.lk
  2. 13 Jun, 2025 | 05:02 PM நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆசிர்வாதம் பெற்றார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது, மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று, தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன், ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார். திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் | Virakesari.lk
  3. யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (13) மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற கும்பலொன்று அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ். செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை! | Virakesari.lk
  4. Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM கீழடி Join Our Channel 21Comments Share சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார். கீழடி - அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது. இதனால், தமிழர்களின் வரலாற்றை பா.ஜ.க அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. இத்தகைய சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டியிருக்கின்றன. எனவே, அத்தகைய அறிவியல்பூர்வ முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க முடியும்." என்று கூறினார். நயினார் நாகேந்திரன் - கஜேந்திர சிங் - தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது. 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தங்கம் தென்னரசு தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?" என்று எக்ஸ் தளத்தில் பா.ஜ.க-வை விமர்சித்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன், "இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டுக் கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே." என்று பதிவிட்டிருக்கிறார்.
  5. 11 Jun, 2025 | 11:54 AM தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொனண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையில் பொசன் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றுள்ளது. இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன், கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த இளைஞன்விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால் இளைஞனை சோதனையிட்டுள்ளனர். இதன்போது இளைஞனின் உடைமையில் இருந்து கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரைக்குள் வழிபட சென்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்! | Virakesari.lk
  6. 11 Jun, 2025 | 03:29 PM நாட்டுக்கு தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 21,293 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில், இந்தியாவிலிருந்து 6,014 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.2 சதவீதம் ஆகும். அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 1,884 பேரும், சீனாவிலிருந்து 1,277 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,051,096 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 210,074 பேர் இந்தியாவிலிருந்தும், 110,818 பேர் ரஷ்யாவிலிருந்தும், 98,158 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர். அத்துடன், மே மாதத்தில் மாத்திரம் 132,919 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.5 சதவீதமாகும். தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை | Virakesari.lk
  7. 11 Jun, 2025 | 05:11 PM தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk
  8. யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை தலைநகர் கொழும்பிலில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் ! | Virakesari.lk
  9. 11 Jun, 2025 | 05:47 PM குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது. நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது. நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்கள், உடைமை சேதம் மற்றும் பயிர் சேதம் காரணமாக பொருளாதார நட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்மொழியப்பட்ட குரங்கு தடுப்பு சரணாலயத்திற்கான பரிந்துரைகளை வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. மேலும் மாத்தளை மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுவின் அனுமதியும் இதற்குப் பெறப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க ஆகியோரின் தலைமையில் இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குரங்குகளை தடுத்து வைக்க பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க தீர்மானம் | Virakesari.lk
  10. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான வீடொன்றில் பணியாற்றும் பணிப்பெண் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று புதன்கிழமை (11) கைதுசெய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரது பணிப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது! | Virakesari.lk
  11. கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் (வயது 43), அவரது மனைவி பாத்திமா பர்ஹானா-(வயது 34) இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய 5 பேர்களாவர். இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் திங்கட்கிழமை(09) அதிகாலை வந்து இறங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய போது, முஹம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்
  12. தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு 10 Jun, 2025 | 09:15 AM பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலயம் குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். இன்று பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம். தையிட்டியில் வசிக்கும் மக்களிற்கு அந்த ஆலயம் குறித்தோ தேசம் குறித்தோ எந்த பிரச்சினையுமில்லை. தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரம் அவர்கள் கோருகின்றனர். காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து எழவுள்ள குரோதகருத்துக்களையும், புரிந்துணர்வின்மையையும் தவிர்த்துவிட்டு, இந்த பிரச்சினையின் உண்மையான தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள். சட்டவிரோதமாக கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு காணி உரித்துக்கள் உள்ள மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட ஆலயம் குறித்து தையிட்டியில் காணப்படும் உண்மையான பிரச்சினையை நீங்கள் அறிவீர்கள் என நான் நாங்கள் கருதுகின்றோம். பொசன் தினத்தன்று சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனப்பதற்றத்தை தூண்ட முயல்வதாக அறிகின்றோம். தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு | Virakesari.lk
  13. சாவகச்சேரியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த மரத்தளபாட வர்த்தகர் கைது 10 Jun, 2025 | 12:36 PM சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. அதனை அடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவரிடம் இருந்து 330 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் குறித்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில் இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த மரத்தளபாட வர்த்தகர் கைது | Virakesari.lk
  14. 10 Jun, 2025 | 12:35 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாற்றும் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடாத்தும் 'இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் 16 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் | Virakesari.lk
  15. உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் நடந்துகொள்ளும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், ரெலோ தலைவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் நேற்று முன்தினம் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்துகொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். அந்தந்த சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி, ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையை இலங்கை தமிழ் அரசும் தவறாமல் பின்பற்றும். அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று அக்கட்சியின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள். இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயல்பட வேண்டும். அவர்கள் அதற்கு மாறாக செயற்படுவார்களானால் வவுனியா மாநகர சபை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம் என எதிர்பார்க்கக் கூடாது. இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் என்றார். யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு | Virakesari.lk
  16. 10 Jun, 2025 | 05:39 PM பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவித்தார். இதன்போது அவர், வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை | Virakesari.lk
  17. 09 Jun, 2025 | 05:30 PM வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர். தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர். இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி | Virakesari.lk
  18. 09 Jun, 2025 | 05:10 PM கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk
  19. உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk
  20. ‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா? டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.) சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி. படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள். த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி. திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது. நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம். ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும். ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா? | Thug Life Movie Review - hindutamil.in
  21. சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார். "பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார். இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். "அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது," என்று எம்.பி. மேலும் கூறினார். Tamilmirror Online || ”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன”
  22. 05 Jun, 2025 | 06:41 PM வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 9 அடி நீளமான முதலை மீட்பு | Virakesari.lk
  23. 05 Jun, 2025 | 12:17 PM ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும். நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல. சித்தார்த்தன் டக்ளஸை அணுகியது எம்முடன் கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார் | Virakesari.lk
  24. 05 Jun, 2025 | 01:26 PM நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் அடங்கும். 2050 ஆம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரமாக அதிகரிக்கலாம் என உலக வங்கியின் 'ஆபத்திலிருந்து மீள் எழுச்சி தன்மைக்கு தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டில் சுமார் 90 சதவீத மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும், ஐந்து பேரில் ஒருவருக்கும் அதிகமானோர் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொது வரவு செலவு திட்டம் அழுத்தத்தில் இருப்பதால், பெரும்பாலான மாற்றங்களுக்கான முயற்சிகளை தனியார் துறை முன்னெடுக்க முன் வர வேண்டும். அடிக்கடி மாற்றம் ஏற்படும் மற்றும் சேதத்தை விளைவிக்கும் வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப வீடுகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வகுத்துள்ளது. இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் தெற்காசியாவின் வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் (EMDEs) மிகவும் பாதிக்கப்படக்கூடியது. கடந்த இரண்டு தசாப்தங்களில் வெள்ளம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு நிகழ்வுகளின் அதிக அதிர்வெண் காணப்படுவதால் இது மிகவும் சாதாரணமான ஒன்றாகவுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல், தெற்காசியாவில் சராசரியாக ஆண்டுக்கு 67 மில்லியன் மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தீவிர வெப்பநிலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் பெரும் ஆபத்தை சந்திக்கும் என இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. "காலநிலை மாற்றம் பிராந்தியத்தின் விவசாய முறைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் வெப்பநிலை அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை, பருவம் மாறி மழை பெய்தல் மற்றும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளும் அடங்கும்" என குறிப்பிட்ப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை ; உலக வங்கி | Virakesari.lk
  25. போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோர், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என கூறினார். இது தொடர்பில் பரிசீலித்த நீதவான், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.