Everything posted by பிழம்பு
-
சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள் மற்றும் இளைய ராஜாவின் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளைய ராஜாவின் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி வீடு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர். இதேபோல், இளையராஜா அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த மர்ம பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளி கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், கர்நாடக முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து அம்மாநில போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் எந்த மர்மப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே அதுவும் புரளி என உறுதி செய்யப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்று புரளியைக் கிளப்பும் கும்பல் வெளிநாட்டில் இருந்து செயல்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக போலீஸ் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக நாள்தோறும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர், அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள், டிஜிபி அலுவலகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb Threat for Edappadi Palaniswami, Seeman Houses - hindutamil.in
-
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சித்திரவதை செய்து கொலை உடற்கூறாய்வில் திடுக்கிடும் தகவல் யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப் பட்ட நிலையில், அந்தப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது -36) என்ற பெண்ணே நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அந்தப்பெண் கல் அல்லது அது போன்ற பொருளால் தலையில் பலமாகக் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது முகத்தில் எரியக்கூடிய திரவமொன்று ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண் வீட்டைவிட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகைகளை அணிந்து சென்றுள்ளார். எனினும், சடலத்தில் நகைகள் காணப்படவில்லை. அவர் வீட்டை விட்டு புறப்பட்டபோது, சிலருடன் இணைந்து வவுனியாவுக்குச் செல்வதாகக் கணவரிடம் கூறியுள்ளார். எனினும், தனது கணவரிடம் குறிப்பிட்டுக் கூறியவர்களுடன் அவர் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சித்திரவதை செய்து கொலை
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
-
யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி! சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
-
கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல - கோட்டாபய
4 Oct, 2025 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும். அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமும் வழங்கி உள்ளேன். அந்த கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஜி ராஜபக்ஷ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணத்தில் எனது கையொப்பம் இல்லை. அந்த ஆவணத்தில் உள்ள எழுத்துக்களும் தெளிவற்று காணப்படுகிறது. எனவே கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல என நான் உறுதியாக கூறுகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது. கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல - கோட்டாபய | Virakesari.lk
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர். “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையானது பல மாத காலமாக திட்டமிடப்பட்டதாகும். இந்த கைது நடவடிக்கைக்கு நேபாள அரசாங்கமும் சர்வதேச பொலிஸாரும் ஒத்தழைப்பு வழங்கியிருந்தனர். வெளிநாடுகளில் உள்ள பாதாள உலக கும்பலை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்து வருகின்றனர். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk
-
கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர்
14 Oct, 2025 | 05:28 PM மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை. குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம். அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப் பட்டுள்ளது. மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள். ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.குப்பை அகழ்வு செய்தாலும், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை (13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை. நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மன்னாரில் கழிவு அகற்றல் இடம் பெறாது. இது வரை இடம் ஒதுக்கி தரவில்லை. மன்னார் மக்களின் தேவைகளுக்காக 2 ஏக்கர் நிலப் பரப்பை வழங்க முடியாத வன பாதுகாப்பு திணைக்களம் மன்னார் மக்களுக்கு இனியும் தேவைதானா? என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் 30 வருட யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து ஒரு அமைதியான சூழல் இந்த மன்னாரில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு இவன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை காரணமாக அமையப் போகிறது. கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்றார். குறித்த பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,. மன்னார் நகர சபை பிரிவில் கழிவகற்றல் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகின்றது.ஏற்கனவே பாப்பாமோட்டை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மன்னார் நகர சபையினர் தமது பிரிவில் அகழ்வு செய்யப்பட்ட குப்பைகளை கொட்டி வந்தனர். குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கொழும்பை தளமாக கொண்ட சூழலியல் அமைப்பு மேன்முறை நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்ததன் காரணமாக குறித்த இடத்தில் தற்போது கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மன்னார் நகர சபையினர் அண்மைக்காலமாக மன்னார் மையப்பகுதியில் ஒரு இடத்தில் கழிவுகளை கொட்டி வந்தார்கள். ஆனால் குறித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,சூழல் மாசடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை (13) பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் குறித்த கழிவுகள் கொட்டும் இடத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பை போட இடம் இல்லாத காரணத்தால் மன்னார் நகர சபையினர் கழிவுகளை சேகரித்த வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தியுள்ளனர். தற்போது சேகரிக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் கூடுதலான நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இருப்பதன் காரணத்தினால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அடையாளம் கண்டு அவ்விடத்தில் கழிவுகளை கொட்ட தீர்மானிக்கப்பட்ட போதும் கலப் பரிசோதனையின் போது இணக்கமான நிலை ஏற்படவில்லை. வன பாதுகாப்பு திணைக்களத் தினால் முன் மொழியப்பட்ட இடத்தை நாங்கள் அடையாளம் காண முற்பட்ட போது குறித்த இடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இடமாகவும், குறித்த இடம் மக்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட இடமாகவும் காணப்படுகின்ற மையினால் குறித்த இடம் பொறுத்தமற்ற இடமாக காணப்படுகின்றது. இதனால் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை தற்போது காணப்படுகிறது.குறித்த பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக சகல தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.தற்போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பகுதி அதில் ஏற்கனவே கழிவுகள் கொட்டப்படும் இடமாக காணப்படுகின்றது. குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட இடமாக உள்ளது. அதை விட பாப்பாமோட்டை க்கு அருகில் உள்ள இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தற்போது உரிய தரப்பினர் ஊடாக அந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த இடங்களை பார்வையிட்டு இனக்கமான முறையில் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தரமான குப்பைகளை கொட்ட முடியும். தற்போது மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமையினால் மாவட்ட செயலக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார். கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர் | Virakesari.lk
-
"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல்
நாம் தமிழர் கட்சி மெய்யான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கிறது என்றால், மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆகியவற்றை எதிர்த்து எத்தனை போராட்டங்களை சீமான் நடத்தியிருக்கிறார்?" - பேரா. அருணன் Published:51 mins agoUpdated:51 mins ago விஜய் - சீமான் | த.வெ.க - நா.த.க. Join Our Channel 3Comments Share "ஒரு காலத்தில், திராவிட இயக்கங்களிலும், பொதுவுடைமைக் கட்சிகளிலும்தான் இளைஞர்கள் அதிகளவில் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளில் அதிகமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். என்ன காரணம்?" அருணன் "சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை எடுத்துக்கொண்டால், 2019 தேர்தலில் தனித்து நின்று 4% வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. சீமான் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது வேறு விஷயம். அவர்களால் ஒரு எம்.எல்.ஏ சீட், ஒரு எம்.பி சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால், அவர்களின் வாக்கு சதவிகிதம் இரு மடங்காக அதிகரித்தது. அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்." "ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், சீமானுக்கும் உங்களுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, மக்கள் நலக் கூட்டணியைவிட அதிக வாக்குகளைப் பெற்றுக்காட்டுகிறேன் என்று சீமான் சவால் விடுத்தார். தற்போது 8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கும் அவர், சவாலில் வெற்றிபெற்றுவிட்டார்தானே?" “இல்லை. அது, 2016-ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகளைவிட நா.த.க குறைவான வாக்குகளைத்தான் பெற்றது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை ‘சினிமாக்காரர்’ என்று சீமான் கிண்டல் செய்தார். ‘கம்யூனிஸ்ட் இயக்கம் சினிமாக்காரர் பின்னாடி போயிடுச்சு’ என்று அவர் விமர்சித்தார். அப்போதுதான், ‘நீங்களும் சினிமாக்காரர்தானே.. ஒரு சினிமாக்காரர் இப்படிப் பேசலாமா?’ என்று நான் கேட்டேன். அப்போதுதான், வார்த்தைகள் தடித்தன. சீமான் அப்போது விடப்பட்ட சவாலில், அன்றைக்கு அவர் தோற்றார். அதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ‘மக்கள் நலக் கூட்டணிதானே கூடுதலா வாக்குகள் வாங்கியிருக்கு... நா.த.க குறைவாகத்தானே வாங்கியிருக்கு.. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று என்னிடம் கேட்டார்கள். ‘அட இருக்கட்டுங்க... நான் சொன்னது உண்மையா இருந்துருக்கு... அதனால என்ன... அவர் அவருடைய வழியில நல்லபடியா கட்சி நடத்தட்டும்’ என்று சொன்னேன். ஆனால், 2019-ல் நிலைமை மாறி, 2024-ல் இரண்டு மடங்கு வாக்குகள் நா.த.க-வுக்கு அதிகரிக்கின்றன. அதற்கு என்ன காரணம் என்பதை கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் ஆய்வு செய்ய வேண்டும்." "இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சீமான் பேசுகிறார்... அதனால்தான், அவரை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள் என்ற கருத்து சிலரிடம் இருக்கிறது. அது சரியா?" "அதற்காக மட்டுமே இளைஞர்கள் அந்தக் கட்சியை நோக்கிப் போகிறார்கள் என்று பார்க்க முடியாது. தேசிய இன உணர்வு... தமிழ்த் தேசிய இன உணர்வு... அதற்காகத்தான் அங்கு போகிறார்கள். ஆனால், அந்த விஷயத்தை அவர் சரியாக முன்வைக்கவில்லை. இளைஞர்கள் மத்தியில தமிழ்த் தேசிய இன உணர்வு இருக்கிறது. என் பார்வையில், சீமான் பேசும் தமிழ்த் தேசியவாதம் போலியானது. தமிழர்களாகிய நமக்கு ஒரு நல்ல மரபு உண்டு. நம்முடைய தாய்மொழியாம் தமிழுக்கு ஒரு தொன்மை உண்டு. அதற்கு இன்று பொதுவாக ஆபத்து வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னை போன்ற விவகாரங்களையொட்டி, அந்த உணர்வு இயல்பாக அவர்களிடம் வருகிறது. அதை அவர் பயன்படுத்திக்கொள்கிறார். நாம் தமிழர் கட்சி அவருடைய போக்கு சரியல்ல... அவர் காட்டுகிற பாதை சரியல்ல என்பது என்னுடைய மதிப்பீடு. ஆனால், அவருக்குப் பின்னால் செல்லும் இளைஞர்கள் அதையெல்லாம் ஆய்வுசெய்யவில்லை. சீமானைப் பொறுத்தளவில், அவர் தமிழ் பற்றிப் பேசுகிறார். தமிழர்கள் பற்றிப் பேசுகிறார். தமிழர்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார். அதனால், அவர் பின்னால் போகிறார்கள்." "சமீபத்தில் நாம் தமிழர் கட்சி, மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு என்று நடத்துகிறார்கள். அதை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், தி.மு.க-வினரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அந்த மாநாடுகளின் நோக்கம் நியாயமான ஒன்றாக இருக்கிறது. உதாரணமாக, இன்றைக்கு மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போய்வரும் நிலை இருப்பதால், அதை முன்வைத்து மாடுகள் மாநாடு நடத்துகிறார்கள். அதை கேலியாகப் பார்ப்பது சரியா?" "இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பு, ஏற்கெனவே நான் ஆரம்பித்த கருத்தை சொல்லி முடித்துவிடுகிறேன். நாம் தமிழர் கட்சி 8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஒரு நியாயமான தேசிய இன உணர்வுதான் காரணம். தமிழ்த் தேசியம் தொடர்பான ஓர் உரிமைக்குரல் அந்த இளைஞர்களின் நெஞ்சுக்குள் ஒலிக்கிறது. ஆகவே, அவர்கள் அங்கு போகிறார்கள். ஆனால், சீமான் பேசும் தமிழ்த் தேசியம் அடிப்படையில் போலியானது. நாம் தமிழர் கூட்டம் நியாயமான உணர்வு கொண்டிருக்கும் அந்த இளைஞர்கள் தவறான வழியில் போகிறார்கள். அந்த இளைஞர்களை வென்றெடுப்பது குறித்து திராவிட இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும் யோசிக்க வேண்டும்." "சீமான் பேசுவது போலியான தமிழ்த்தேசியம் என்று எதன் அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள்?" "சீமான், தி.மு.க-வை கடுமையாக விமர்சிக்கிறார். திராவிட இயக்கங்களையும், திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்க்கிறார். இவர்கள்தான், தமிழ்த் தேசிய உரிமைக்கான எதிரிகள் என்று காண்பிக்கிறார். இதில்தான் பிரச்னை இருக்கிறது. தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்களை தமிழ்த்தேசியத்தின் எதிரி என்று சொல்லும் சீமான், பா.ஜ.க-வை எதிரி என்று சொல்கிறாரா? போகிற போக்கில் ஊறுகாய் மாதிரி பா.ஜ.க-வை லேசாக விமர்சிப்பார். ஆனால், முழு எதிர்ப்பையும் தி.மு.க மீது மட்டுமே காண்பிப்பார். அவர்களும் தமிழ்த் தேசியம்தானே பேசுகிறார்கள் என்று சொன்னால், ‘இல்லை.. திராவிடம் வேறு தமிழ் வேறு’ என்று வாதம் செய்கிறார் சீமான். அதற்குள் போனால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியும். ஆனால், போலி தமிழ்த் தேசியவாதத்தால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் அங்கு போகிறார்கள் என்றால், அந்த இளைஞர்களை வென்றெடுப்பதற்கு, மெய்யான தமிழ்த் தேசியத்தைப் பேசினால் மட்டும் போதாது, அதற்கான உரிமைப் போராட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்பது என் கருத்து." நாம் தமிழர் கட்சி "போலி தமிழ்த் தேசியவாதம், மெய்யான தமிழ்த் தேசியவாதம் என்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?" "போலி தமிழ்த் தேசியம் என ஏன் சொல்கிறேன்? இன்றைக்கு தமிழ்த் தேசியத்துக்கு ஆபத்து என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தாலும், ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க-வினாலும் வருகிறது. மொழியிலிருந்து, மாநிலங்களை ஒழிப்பதிலிருந்து, ஆளுநர் மூலம் மாநில அரசுக்கு இடையூறு செய்வதிலிருந்து, எல்லாவற்றையும் ஒன்றிய பா.ஜ.க அரசுதானே செய்கிறது. நாம் தமிழர் கட்சி மெய்யான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கிறது என்றால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை அவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டாமா? மெய்யான தமிழ்த் தேசியம் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது பாய வேண்டும். மாநிலங்களே இருக்கக்கூடாது என்கிறார்கள். ஜம்மு காஷ்மீரை ஒழித்துவிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக பிரதமர் மோடி கொண்டாடுகிறார். நாணயமும், தபால் தலையும் வெளியிடுகிறார். இந்த பா.ஜ.க-வுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டிய சீமான், மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு என்று நடத்திக்கொண்டிருக்கிறார். இதன் பின்னால் இருக்கும் சில பொருளியல் உண்மைகளை நான் மறுக்கவில்லை. இந்த மாநாடுகளை நான் ஒருபோதும் கேலி செய்யவில்லை. மேய்ச்சல் நிலங்கள் பறிபோவதை எதிர்த்து மாடுகள் மாநாடு, சரியானது. சூழலியலைப் பாதுகாக்க மரங்கள் மாநாடு, இது சரியானது. தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பாதுகாக்க கடல் மாநாடு, அதுவும் சரியானது. ஆனால், அவர்கள் இதிலேயே இருப்பதுதான் பிரச்னை. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு நடைபெறுகிறதே... அதை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள்? மாநிலத்துக்கான நிதி ஆதாரங்களை மறுக்கிறார்களே... அதை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தினீர்கள்? மோசமான கல்விக் கொள்கையை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தினீர்கள்? சீமான் Chris மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு எதிராகத்தான் தேசிய இன உணர்வுப் போராட்டம் வெடித்துக்கிளம்ப வேண்டும். ஆனால், சீமான் அப்படியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லையே. அதனால்தான், போலி தமிழ்த் தேசியவாதம் என்று விமர்சிக்கிறேன்.""புதிதாகத் தொடங்கப்பட்ட விஜய் தலைமையிலான த.வெ.க., பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை வழிகாட்டிகளாக முன்னிறுத்துகிறது. அதற்கு என்ன காரணம்?" "பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இருக்கக்கூடிய நல்ல மரபுகளுக்கு விஜய் சொந்தம் கொண்டாடுகிறார். அதற்கான அவசியம் இருக்கிறது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். அல்லது, விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்." TVK Vijay | த.வெ.க - விஜய் "அப்படியென்றால், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் த.வெ.க தொண்டர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?" "த.வெ.க-வில் இருப்பவர்கள் அடிப்படையில் விஜய்யின் ரசிகர்கள். விஜய் போய் நின்றுகொண்டு, ‘என்னைப் பாருங்கள்... இதோ நான் சொல்கிறேன் கேளுங்கள். என் கட்சிக் கொடியைப் பிடியுங்கள். வாக்களித்து என்னை முதல்வ்ர் நாற்காலியில் அமர வையுங்கள்’ என்று அவர் ஏன் பேசவில்லை? பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை முன்னிறுத்துகிறார். அதில், அவர் சாதுர்யமாக இருக்கிறார். அதில் இருக்கும் உண்மை என்னவென்றால், வெகு காலமாக இங்கு இருக்கும் நியாயமான தமிழ்த் தேசிய உணர்வு... தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள்... இவற்றை நாமும் பேச வேண்டும்.. அதற்கான முகங்களை நம் மேடைகளில் வைக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். இதுதான் உண்மை." "நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல் | Prof Arunan interview about the politics of NTK leader seeman and TVK leader Vijay - Vikatan
-
முல்லைத்தீவிற்கான சொகுசுப்பேருந்துசேவை தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் - அமைச்சின் அதிகாரிகள் பதில்
10 Oct, 2025 | 03:52 AM முல்லைத்தீவு - கொழும்பிற்கான குளிரூட்டப்பட சொகுசுப் பேருந்துசேவை எப்போது ஆரம்பிக்கப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவையானது இம்மாதத்திற்குள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென அமைச்சின் அதிகாரிகளால் பதில் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவை இதுவரை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே இந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேரூந்துசேவை ஆரம்பிக்கப்படவேண்டும். இதற்கு முன்பும் இரண்டுதடவைகள் இந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இந்த முல்லைத்தீவு கொழும்பிற்கான சொகுசுப்பேருந்து சேவைதொடர்பில் பேசியிருந்தேன். விரைந்து இச் சேவையை ஆரம்பிக்குமாறும் கோரியிருந்தேன். அதற்கான பதில்கள் கிடைக்குமென எதிர்பார்கின்றேன். தயவுசெய்து இந்த சொகுசுப் பேருந்துசேவையினை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார். இந்நிலையில் இதற்கு அமைச்சின் அதிகாரிகள் பதிலளிக்கையில், கூடியவிரைவில் இந்த பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் எதிர்வரும் 15ஆம் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுசார்ந்த கூட்டமொன்று இடம்பெறும். அக்கூட்டத்தில் இந்த சொகுசுப் பேருந்து சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும். அந்தவகையில் இம்மாத இறுதிப்பகுதிக்குள் இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவிற்கான சொகுசுப்பேருந்துசேவை தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி; இம்மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் - அமைச்சின் அதிகாரிகள் பதில் | Virakesari.lk
-
வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல்
(எம்.நியூட்டன்) வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கழிவகற்றல் பெரும் சவாலாக உருவாகியிருப்பதால் கொழும்பு மாநகர சபையால் கழிவுபொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின் உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டு அத்தகைய திட்டங்களின் சாத்தியபாடுகளை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களை கேட்டுக்கொண்டார். வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல் | Virakesari.lk
-
தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்
சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Published:Today at 8 AMUpdated:Today at 8 AM தஷ்வந்த் Join Our Channel 31Comments Share சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய கொடூரம்! இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார். சம்பவம் நடந்த இரண்டே நாளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தார். தஷ்வந்த் தாயைக் கொன்ற தஷ்வந்த்! அதையடுத்து, பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் டிசம்பரில் செலவுக்குப் பணம் தரவில்லை என தாயை அடித்துக் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பியோடினார். பின்னர், மும்பைக்கு விரைந்த தமிழக தனிப்படை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தஷ்வந்த்தை கைதுசெய்து சென்னை கொண்டுவந்தனர். தனது வாக்குமூலத்தில் தாயைக் கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்பட்டது. தூக்கு தண்டனை + 46 ஆண்டுகள் சிறை! மறுபக்கம், சிறுமி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமோ செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. அடுத்தபடியாக தஷ்வந்த் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கப்பட்ட தூக்கு தண்டனையும், பிறழ் சாட்சியான தந்தையும்! தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் உரிய விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தஷ்வந்த்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, தஷ்வந்த் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியான அவரின் தந்தை பிறழ் சாட்சியாக மாறினார். இதனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்தாண்டு ஏப்ரலில் போதிய ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த்தை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது. ஆதாரமில்லை... DNA ஒத்துப்போகவில்லை... விடுதலை! இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று, அவர் மீதான தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை. எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும், இவ்வழக்கிலிருந்து தஷ்வந்த்தை விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை விடையின்றி நிற்கும் கேள்விகள்... காவல்துறை பதில் என்ன? முதலில் தாயைக் கொலைசெய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் ஆதாரங்கள் இல்லையென 5 மாதங்களுக்கு முன்பு தஷ்வந்த் விடுதலையானார். எனில், அவரின் தாயைக் கொலைசெய்தது யார்? இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லை, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என உச்ச நீதிமன்றமே தஷ்வந்த்தை விடுவித்திருக்கிறது. அப்படியென்றால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது யார்? கீழமை நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையின் பதில் என்ன? மகளை இழந்த பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு தமிழக காவல்துறை என்ன செய்யப்போகிறது? விடையின்றியே நிற்கிறது இந்த கேள்விகள்! போதிய ஆதாரம் இல்லை; 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தஷ்வந்த்தை விடுவித்த உச்ச நீதிமன்றம் | Supreme Court acquits Daswanth in rape and murder case of 6-year-old girl due to insufficient evidence - Vikatan
-
நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:50 - 0 - 47 பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார். நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார். Tamilmirror Online || நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
-
யாழில் புதுவித மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் செல்ல தயக்கம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பாவித்து, கும்பலொன்று பெருமளவு பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும், அதற்காக 10 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் செலவாகும் எனவும் சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் ஊடாக அந்தக் குழு விளம்பரம் செய்துள்ளது. இதற்காக, சில பெண்களின் ஒளிப்படங்களை அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் அந்தக் குழு பயன்படுத்துகின்றது. இந்த விளம்பரத்தை நம்பி அதிலுள்ள இலக்கத்துக்கு சிலர் தொடர்புகொள்ளும் போது குறித்த தனியார் விடுதிகளில் அந்தப் பெண்கள் உள்ளனர் என்று தெரிவித்து மோசடியாளர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயத்தை அறிந்து கொள்கின்றனர். இதுதொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யத் தயங்குவதால், குறித்த குற்றக்குழுவினர் தொடர்ச்சியாக பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பாவித்து இந்த மோசடிகள் இடம்பெறுவதால், தமது விடுதிகளின் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பொலிஸார் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த சட்டவிரோதச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
-
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு
08 Oct, 2025 | 08:57 AM கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் ஆபத்து பகுதிகளாகவும், பன்றிகள் 1992 ஆம் ஆண்டு 59 ஆம் எண் கொண்ட கால்நடைநோய்கள் சட்டத்தின் கீழ் நோய் அபாய விலங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவிப்பு 2025 அக்டோபர் 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். மேலும் இந்த வர்த்தமானி முன்னர் இரத்து செய்யப்படாமலோ, தொடர்புடைய சட்டத்தின் பிரிவு 5(3) இன் கீழ் நீடிக்கப்படாமலோ செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். மேலும், நிலவும் நோய் நிலைமையைப் பொறுத்து செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு | Virakesari.lk
-
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !
08 Oct, 2025 | 09:57 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் சந்திப்பின்போது இருதரப்புக்கும் இடையே முக்கியமான விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன, இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உயர்ஸ்தானிகரும், எம்.ஏ. சுமந்திரனும் விரிவாகக் கலந்துரையாடினர். விசேடமாக, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார். இந்தியா நிதியளிக்கும் வீடமைப்புத் திட்டங்கள், அகதிகள் மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் ஏனைய சமூக மேம்பாட்டுத் துறைகளில் இந்தியா வழங்கும் உதவிகள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு ! | Virakesari.lk
-
‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு
08 Oct, 2025 | 04:47 PM தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 5ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்தாலான கடல் போன்று காட்சியளித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கத்தில் உள்ள பலரும் இணைந்து , 20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அதிபர் எஸ்.முரளிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல திசாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியானது 250 மீற்றர் தூர நீச்சல், 6 கிலோ மீட்டர் தூர சைக்கிளோட்டம் மற்றும் 3 கிலோ மீட்டர் தூர நடை அல்லது ஓட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தாலான டீ-ஷேர்ட் அணிந்த பங்குபற்றுனர்கள் தலா மூவர் அடங்கிய குழுக்களாக இதில் பங்கெடுத்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டும் செய்தியை தமது வீடுகள், பாடசாலை மற்றும் கிராமங்களுக்குக் கொண்டுசென்ற இவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் கூட்டாண்மையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ரொட்டரி கழகம், லயன்ஸ் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் உள்ளிட்ட அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இந்த நிகழ்வில் இந்திரா ஜயசூரியவின் தந்தையான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது மகள் மார்பகப் புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்ட போராட்டத்தையும் நினைவுகூர்ந்திருந்தார். அத்தோடு இந்த விழிப்புணர்வு நெடுமுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மட்டக்களப்பிலும், 19ஆம் திகதி மாத்தறையிலும், 26ஆம் திகதி கொழும்பிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு | Virakesari.lk
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு
08 Oct, 2025 | 04:54 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், விமானப் போக்குவரத்தில் 14.4 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 44,185 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 38,607 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச மாதாந்திரப் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,976 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு, எதிர்வரும் சுற்றுலாப் பயணிகளின் பருவத்தை முன்னிட்டு அதிகரித்துள்ளமையே காரணம் என விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அதிகரித்த இந்த விமானப் போக்குவரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும், உச்ச பயணக் காலப்பகுதியில் பயணிகளுக்குத் திறமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு | Virakesari.lk
-
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது - சாணக்கியன்
08 Oct, 2025 | 06:30 PM அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சாணக்கியன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பான அரசின் தீர்மானம் என்ன என்பது போன்ற கேள்விகளை முன்வைத்த நிலையில், அந்தக் கேள்வி நேற்றைய தினமே தனக்குக் கிடைத்தது என சபையில் இன்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க தனக்கு இரு கிழமைகள் அவகாசம் வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். அந்தக் கேள்வியானது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக சாணக்கியன் கேள்விகளை எழுப்பியிருந்தார். இதனை, இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சாணக்கியன், “அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கிறது. வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இந்த அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான, எமது மக்களுக்கான பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை, அரசு இந்த நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது - சாணக்கியன் | Virakesari.lk
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள். தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையா, அல்லது விடுதலைப் புலி ஆதரவாளர்களையா ? ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் 2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ராஜபக்ஷர்கள் தமது வீடுகளுக்கு செல்வதற்காகவே அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதாக குற்றஞ்சாட்டியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள். அரசாங்கம் அதிவேக வீதி கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது.அதிவேக வீதியை அமைத்தால் நாய்கள்,விலங்குகளுக்கு வீதியை கடக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றே அன்று கூறினீர்கள். இந்த வீதிகள் தங்கத்திலா நிர்மானிக்கப்படுகின்றது என்றும் கேட்டீர்கள். ஆனால் இப்போது உங்களின் தலைவர் எஞ்சியுள்ள அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்றார். அன்று நீங்கள் தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இப்போது ஜனாதிபதிக்கு அதிவேக வீதிகளை திறந்து வைத்திருக்கவும் முடியும். அரசாங்கத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு அமைச்சும் இதுவரையில் அடைந்துள்ள முன்னேற்றம் என்ன? கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதியில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. மக்கள் அடைந்த நன்மை என்ன என்பதனையும் கூற வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்காமல் வேலைத்திட்டங்கள் பாருங்கள். ஒவ்வொரு வாரமும் புது விடயங்கள் பேசப்படுகிறது. இப்போது பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. அன்று பொலிஸ் ஆணைக்குழு வேண்டும். அது சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் இப்போது சுயாதீனத்துவத்தை நீக்கி அதன் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள். இப்போது மிருகக்காட்சி சாலையிலும் விலங்குகள் திருடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீங்கள் கடற்படைத் தளபதியை கைது செய்துள்ளீர்கள். விடுதலைப்புலி புலனாய்வில் இருந்த ஒருவர் வழங்கிய சாட்சிக்கமைய கைது செய்துள்ளீர்கள். குற்றப்புலனாய்வுக்கு ஏற்றவாறு வாக்குமூலங்கள் பதியப்படுகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவை நீக்கி பொலிஸ்மா அதிபரின் கீழ் அதிகாரங்களை கொண்டுவந்து அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது. பொலிஸ்மா அதிபர் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கடந்த காலங்களில் அரசாங்கத்திற்காக கடைக்கு சென்ற பொலிஸ்மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். பொலிஸாரை பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய பொலிஸ் சேவை மாற்றியமைக்க கூடாது. 1980 மற்றும் 1990 ஆம் காலங்களில் இதுபோன்ற நிலைமை இருந்தது. ஆனால் அது தற்போது பொருத்தமாகாது என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன். பொலிஸாரை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாது. தயவு செய்து பொலிஸை அரசியல்மயமாக்குவதை நிறுத்துங்கள். பொலிஸ் ஆணைக்குழுவின் கௌரவத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று கோருகின்றோம். இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள்.? புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையா, அல்லது விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? .ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு | Virakesari.lk
-
கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்
‘விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரவே கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க பாஜக கூறுகிறது’ - சீமான் தூத்துக்குடி: “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல அசிங்கம்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுக தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளதாக சொல்கிறது. இந்த தேர்தலில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வாக்கை எளிதாக திமுகவால் பெற முடியாது. ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதற்கு விசாரணைக் குழுவை பாஜக அனுப்பியுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் மக்களே போராடிய போது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?. அப்போது காவல்துறை, மாவட்ட ஆட்சியர் போராடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே?. வன்முறை ஏற்பட்டாலும் கூட கண்ணீர் புகைக்குண்டு வீசித்தானே கூட்டத்தை கலைத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் பாஜக விசாரணைக்குழு வந்திருக்க வேண்டியதுதானே?. கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள். இப்போது சில மாதத்தில் தேர்தல் வருவதால், அரசியல் செய்வதற்காக உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்பியுள்ளார்கள். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். அதற்கு அவர் பொறுப்பேற்கவே இல்லையே?. ‘இந்த சம்பவத்துக்கு காரணமாகிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள், இது வலிமிகுந்ததாக உள்ளது, இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ‘அங்கு நடக்காதது இங்கு ஏன் நடந்தது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், சின்ன இடத்தை கொடுத்தார்கள்’ என விஜய் சொல்கிறார். நீங்கள் கேட்ட இடம்தானே இது. அங்குதானே எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு முன்னர் கூட்டம் நடத்தினார். சிறிய இடமாக இருந்தால், அந்த இடம் வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியதுதானே. கரூருக்கு அன்று வந்தவுடனே காவல்துறைக்கு நன்றி தெரிவித்து விஜய் பேசினார். சாவு விழுந்தவுடன் அந்த காவல்துறை மீது ஏன் பழிபோடுகிறார். இதனை கேட்கும் போது கடுமையான கோபம் வருகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியாளர்களை, சாதனையாளர்களை அழைத்து பேச வைக்காத தமிழக அரசு, திரைப்பட நடிகர்களை, இயக்குநர்களை பேச வைக்கிறார்கள். கல்வி விழாவுக்கு கூட நடிகர்களை அரசு அழைத்தால், அப்புறம் நடிகர்கள் ஏன் நாடாள துடிக்க மாட்டார்கள். நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம். விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து. விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல, அசிங்கம். நாங்கள் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளோம், 150 வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன். இப்போது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் எங்கே போனார். அப்போது நாங்கள்தான் களத்தில் நின்றோம்” எனத் தெரிவித்துள்ளார் ‘விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரவே கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க பாஜக கூறுகிறது’ - சீமான் | BJP is doing this to bring Vijay into the alliance Seeman speech - hindutamil.in
-
கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்
தவெக கரூர் நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் ஆகியோர் இடம்பெற்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி குழு இந்த ஆய்வுக்குழுவின் விசாரணைக்குப் பிறகு, அமைச்சர் அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``கரூரில் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சோகத்துக்கான முதன்மை காரணங்கள் என்ன? உள்ளூர் அதிகாரிகளால் செய்யப்பட்ட முதற்கட்ட ஏற்பாடுகள், இதுவரை அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றின் பகுப்பாய்வு அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்தச் சூழ்நிலைக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்கான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன? நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன? மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சோகத்திற்குப் பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைத் தயவுசெய்து பரிந்துரைத்துப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தவெக விஜய் பிரசாரம்: 'கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்' - முதல்வருக்கு பாஜக எழுதியிருக்கும் கடிதம் | 'Questions must be answered' - BJP's letter to the Chief Minister! - Vikatan
-
கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்
கரூர் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கரூர் சோகம் - விஜய் அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தச் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், இந்தச் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த நீதிபதி, சம்பவம் தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் போலீஸுக்கு உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும் இன்றைய விசாரணையில், சம்பவம் நடந்த பிறகு எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்ட ட்வீட்டை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியதைக் கவனித்த நீதிபதி செந்தில்குமார், வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். கரூர் சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras High Court orders Special Investigation Team headed by Asra Garg to investigate Karur incident - Vikatan
-
இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்
02 Oct, 2025 | 04:44 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அத்திருத்தப் பிரேரணையில் 'மோதல்கள்' எனும் சொல்லின் மூலம் 'இனப்பிரச்சினை' என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டறிந்துள்ளார். அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்கள்' என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இம்முறை பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை விட மிகவும் வலுவாக அமையவேண்டியது அவசியம் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த சுமந்திரன், அவ்வாறிருக்கையில் முன்னைய தீர்மானங்களில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்களையும் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இப்பிரேரணை அமையக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் பின்னணியில், பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருக்கும் சொற்களும் இவ்வாறு நீர்த்துப்போனால், அது அம்மக்களின் நம்பிக்கையிழப்புக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அப்பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா என உறுதியாகத் தெரியாத பின்னணியில், அப்பிரேரணை எதிர்வரும் 6 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது. இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் | Virakesari.lk
-
மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவுக்கு 30 வருட கடூழிய சிறை!
மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சந்தேக நபர் மீது தண்டனை சட்டக்கோவை 365(2) ம் பிரிவின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங்காணப்பட்டார். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இரண்டாவது குற்றத்திற்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் மூன்றாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறைத் தண்டனை பிறப்பிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவுக்கு 30 வருட கடூழிய சிறை! | Virakesari.lk
-
திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை!
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன. இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர - தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார். இதேவேளை அந்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்தவேண்டும், இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார். திருகோணமலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம் ; குற்றவாளிக்கு 32 வருட சிறை! | Virakesari.lk