Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா! யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியாக் காய்ச்சல் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேரியாக் காய்ச்சல் காரணமாக இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் . இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- மலேரியாக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் ஒருவர் 38 வயதுடையவர். மற்றையவர் 29 வயதுடைய நபர். 38 வயதுடைய நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 29 வயதுடைய நபர் மருத்துவ விடுதியிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐரோப்பியாவுக்குச் செல்வதற்காகச் சென்று ஆபிரிக்க நாடொன்றில் என்ற நாட்டில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் விமானம் மூலம் கட்டுநாயக்கவுக்குத் திரும்பியவர்கள். எனவே வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புபவர்கள் கூடுதல் அக்கறையுடன் செயற்படவேண்டும். இது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசேட செயற்றிட்டங்களை 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் முன்னெடுத்தல் அவசியம் - என்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!
  2. 07 Aug, 2025 | 04:18 PM 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும்இ 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது. இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா? இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்? வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!! ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி | Virakesari.lk
  3. 08 Aug, 2025 | 09:06 AM யாழ்ப்பாணத்தின் புகையிரத மார்க்கத்தின் வழியாக பயணிக்கும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று (07) வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில் , ஓடி ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்ததில் புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது. அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில் , அவரை மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் ஏற முயன்ற யுவதி விபத்திற்குள்ளானதில் ஒரு கால் முற்றாக சிதைவு - யாழில் சம்பவம் | Virakesari.lk
  4. 08 Aug, 2025 | 09:57 AM நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பிரதான வீதிகளில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதுடன் மட்டக்குதிரைகளை பொது ஏலத்தில் விடப்படும் என மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து விபத்துகளை ஏற்படுத்தும் மட்டக்குதிரைகளை பிடித்து அகற்ற வேண்டும் என மாநகரசபைக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 15 இற்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகளை பணியாளர்கள் மூலம் பிடித்துள்ளோம் அதனை மாநகரசபைக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக கட்டப்பட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனை தேடி உரிமையாளர்கள் வருகைத்தரும் சந்தர்ப்பங்களில் மட்டக்குதிரையின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் த நகரில் அல்லது பிரதான வீதிகளில் மட்டக்குதிரைகளை இனி திரியவிடக் கூடாது என அறிவுறுத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அதன்படி மட்டக்குதிரை பிடி கூலி, தண்டப்பணம், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் என்பவற்றை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாட்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் விதிக்கப்படும் அபராதத் தொகையைமேலும் அதிகப்படுத்தி வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்கள் கடந்து உரிமை கோரப்படாத மட்டக்குதிரைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர சபை முதல்வர் எச்சரித்துள்ளார். நுவரெலியாவில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளினால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன, அத்துடன் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியிருப்பதால் வீதிகளில் மட்டக்குதிரையின் சாணம், சிறுநீரால் வீதியில் வழுக்குதன்மையும் அதிகரித்து விபத்துகளும் ஏற்படுகின்றன அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது இவை தவிர, வீதியில் திரிவதனால் பொதுமக்கள் மீது மோதுவதினாலும், அவற்றின் கனத்த உடல் பகுதிகள் இடிப்பதாலும் கூட விபத்துகள் ஏற்பட்டு வீதியால் செல்லும் மக்களுக்கு பல இடையூறுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது அத்துடன் நுவரெலியாவிற்கு வரும் வெளிநாட்டு , உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வீதிகளில் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார். மேலும் நுவரெலியாவில் உரிமையாளர்கள் வளர்க்கும் மட்டக்குதிரை மூலம் சவாரி செய்து பணம் சம்பாதிக்க மாத்திரம் நினைக்கின்றனர். மட்டக்குதிரை மீது பொறுப்பும் அக்கறையும் காட்டாமல் சவாரி இல்லாத நேரத்தில் அவற்றைத் தொழுவத்தில் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பதால் அவை உணவு தேடி பிரதான நகரை நாடி வருகிறது இதன் காரணமாக விபத்துகள் பெருமளவு நடைபெறுகின்றன. விபத்தில் இறப்பு வீதம் குறைவு என்றாலும் கை,கால் முறிவு ,தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இதன் காரணமாக திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிப்பதுடன் அதனையும் மீறி பட்சத்தில் பொது ஏலத்தில் விட நாங்கள் தீர்மானித்துள்ளோம். எனவே மட்டக்குதிரைகளை வளர்ப்பவர்கள் தொழுவத்தில் பராமரித்து கொள்ள வேண்டும் பிரதான நகரில் அல்லது பிரதான வீதியில் சுற்றித்திரியாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்து மாநகரசபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார். நுவரெலியாவில் கண்காணிப்பின்றி திரியும் மட்டக்குதிரை பிடிபட்டால் பொது ஏலத்தில் விடப்படும் - உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | Virakesari.lk
  5. யாழில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! 08 Aug, 2025 | 04:39 PM யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்று வெள்ளிக்கிழமை (08) குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பக தலைவர் தீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். யாழில் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ! | Virakesari.lk
  6. ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம், மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3, 2025 அன்று, அனகாபள்ளி மாவட்டத்தின் புடிமடகா கிராமத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. நடந்தது என்ன? யெரய்யா, அவரது சகோதரர் கொரலய்யா மற்றும் மற்றொரு மீனவருடன், பாரம்பரிய மீன்பிடி படகில் அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில், அவர்களது வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கருப்பு மார்லின் மீன் சிக்கியிருக்கிறது. இந்த மீன், அதன்வேகம், வலிமை மற்றும் கூர்மையான வாள் போன்ற மூக்கு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. மீனவர்கள் வலையை வெட்டி விடுமாறு அறிவுறுத்திய போதிலும், யெரய்யா மீனை இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மீனின் திடீர் அசைவால், அவரது கால் வலையில் சிக்கியது. மற்ற மீனவர்கள் தடுக்க முயல்வதற்கு முன்பே, மீன் அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு எச்சரிக்கை கருப்பு மார்லின் கடலில் மிகவும் ஆபத்தான மற்றும் வேகமான மீன்களில் ஒன்றாகும். இது மணிக்கு 110 கிமீ வேகத்தில் நீந்தக்கூடியது. இதன் எடை 900 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கருப்பு மார்லின் மீன்கள், மீனவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்று கடல் உயிரியல் நிபுணர் டாக்டர் நலின் பிரசாத் எச்சரித்துள்ளார். இந்த மீன்கள் சிக்கியவுடன் வலையை வெட்டி விடுவது பாதுகாப்பானது என்று அவர் கூறுகிறார். இந்த மீன்கள் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கவை, இதன் இறைச்சி ஒரு கிலோவுக்கு 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், இந்த மீன்களில் பாதரசம் (mercury) அதிக அளவில் இருப்பதால், அடிக்கடி உண்பது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அனகாபள்ளி மாவட்ட மீன்வளத் துறை அதிகாரி ஜி. விஜயா கூறுகையில், ”இத்தகைய சம்பவங்கள் அரிதாக இருந்தாலும், மார்லின் போன்ற வலிமையான மீன்கள் மீனவர்களை இழுக்கக்கூடியவை” என்று கூறியிருக்கிறார். மீனவர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து யெரய்யாவை தேடி வந்தநிலையில் தற்போது அவருக்கான சடங்கை செய்ய வீட்டில் உள்ளவர்கள் கூடியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அனகாபள்ளி கடற்கரையில் மோல்லி ஜோகன்னா என்ற மீனவர், கருப்பு மார்லின் மீனால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?
  7. எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு கருத்துகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மகாராஷ்டிர கூட்டுறவுத் துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் கடந்த சனிக்கிழமை அம்பதாஸ் பவார் வீட்டுக்கு நேரடியாக சென்றார். மேலும், கூட்டுறவு சொசைட்டியில் பவார் பெயரில் இருந்த விவசாய கடன் ரூ.42,500-ஐ அமைச்சர் பாட்டில் முழுமையாக செலுத்தினார். அத்துடன், கடன் பாக்கி இல்லை என்ற சான்றிதழை உடனடியாக பவாருக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை லத்தூர் மாவட்ட ‘கிரந்திகாரி ஷேத்கரி சங்காதன்’ என்ற அமைப்பு நிலத்தை உழுவதற்கு 2 மாடுகளை வாங்கி மேள தாளத்துடன் பவார் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். அங்கு மாடுகளை அவருக்கு பரிசாக வழங்கினர். இதற்கிடையில், தெலங்கானாவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று, பவாரை சந்தித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது. சமூக வலைதளங்களில் வெளிவந்த ஒரு வீடியோ வயது முதிர்ந்த ஒரு ஏழை விவசாயியின் வறுமையை போக்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் | Minister pays off agricultural debt of old man - hindutamil.in
  8. 10 Jul, 2025 | 10:27 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயமாக அமையும். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. குறிப்பாக 1998 / 99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? டி.என்.ஏ பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இப்போதும் அங்கு அகழ்வுகள் நடக்கின்றன. அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி,மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய்,மாத்தளை, செம்மணி, மற்றும் இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? இதனால் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என்றார். அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம் | Virakesari.lk
  9. 10 Jul, 2025 | 12:24 PM இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாநாயக்க" என்று தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார். மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இலங்கை அமெரிக்காவின் அசாதாரண பொருளாதாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார தடைகளை நீக்கினால் வரி மற்றும் கட்டணங்களை சரிசெய்ய முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நினைவுபடுத்தினார். புதிய அறிக்கை ; பழைய அறிக்கை ; அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப் | Virakesari.lk
  10. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் 10 Jul, 2025 | 04:25 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் | Virakesari.lk
  11. 10 Jul, 2025 | 07:58 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை விரிவான பதிலளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வருமாறு கேள்வியெழுப்பினார். விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெங்காயம், உருளைக்கிழங்கு,திராட்சை,கரட், கரணைக்கிழங்கு,பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம் வடக்கு,வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு, தீவகம்,தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின் பேரூர்களில் செய்கை மேற்கொள்ளப்படுகிறது வருகின்றன. குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து, அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலநிலைப் பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதையும், கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு கிடைக்கப்பெறவில்லை என்பதையும்,சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும். அதேவேளை, இவ்வருடம் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் முதலை முழுமையாக இழந்துள்ளதுடன், உற்பத்திப் பொருளின் தரமும் குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்கும் வகையில் நஷ்டஈடு வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் காலாகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குச் செய்கை பாதிப்படையும் வகையில், மானிய அடிப்படையிலான விதைக் கிழங்கு கிடைக்கப் பெறாமைக்கும், தரமான புதிய இனங்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கும் காரணம் என்ன என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா, பார உலோகம் நிறைந்துள்ளதாக கூறப்படுவதன் அடிப்படையில் கிருமிநாசினிப் பயன்பாடு குறைவடைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு பார உலோகம் உண்டா - இல்லையா என்பதை மக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பதற்கு அமைச்சரின் பதில் என்ன ?வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்த உற்பத்திப் பொருட்களுக்கு பத்திற்கு ஒன்று கழிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தக் கழிவுமுறை தம்புள்ள,மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கு ஏன் பின்பற்றப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை தரவுகளுடன் பதிலளிப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார். வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது; சிறீதரன் எம்.பி | Virakesari.lk
  12. யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி 10 Jul, 2025 | 05:25 PM யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார். மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. முதல்வரின் மேற்படி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி | Virakesari.lk
  13. புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு! 10 Jul, 2025 | 05:29 PM தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கீழ் பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு நேற்று புதன்கிழமை (09) குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியைத் கிராம சேவையாளர், விஷேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நேற்றையதினம் (09) மாலை சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த பகுதிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் இன்று காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகியது. புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு! | Virakesari.lk
  14. he Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்! ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால். லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது. நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்! ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி. இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர். நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள். Also Read ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து 'நெக்ஸ்ட் எபிசோடு' பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன. இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா! இந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்! ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் 'மேல் அதிகாரிகளின் உத்தரவு' என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. "உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது" என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.!
  15. குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி பிரதிநிதித்துவப் படம் | மெட்டா ஏஐ ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் இந்தப் புதிய திட்டம் கடந்த சில மாதங்களாகவே அமலில் உள்ளது. இது உள்நாட்டிலும், உலக அரங்கிலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்ய அதிபரின் உத்தரவின் பேரிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான எதிர்ப்புக் குரல் உடனுக்குடன் நசுக்கப்பட்டு விடுவதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. மேலும், ரஷ்ய மக்கள் தொகை குறைந்துவருவதால், அதை ஈடுகட்டவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எப்படிக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்தத் திட்டத்தின் பின்னணி பற்றி அலசுவோம். பின்னணி என்ன? - கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா, அதிக குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. ஆனால், தாய்மை அடையும் வயதை எட்டிய பெண்களுக்கு மட்டுமே அந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ரஷ்யா ஊக்குவித்து, அதற்கு ரூ.1 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை தருகிறது.ரஷ்ய நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களின்படி 2023-ல் ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.41 சதவீதமாக இருந்தது. இது மக்கள் தொகை சமநிலையைப் பெறுவதற்கு தேவையான 2.05%-ஐ விட மிக மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.இந்நிலையில்தான் ரஷ்யாவில் டீன் ஏஜ் பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது. இது குறித்து அந்நாட்டில் இயங்கும், மக்கள் மனநிலையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 43% மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகவும், 40% மக்கள் இதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் பெரிய வித்தியாசமில்லாததால் இயல்பாக அரங்கேறி வருகிறது இளம் மாணவிகள் தாயாகும் போக்கு. புதினின் பார்வை: ரஷ்ய அதிபர் புதின், மிக வலுவான மக்கள் தொகையே, வல்லரசு வளமாகக் காரணமாகும் என்று நம்புபவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகை அதிகமாக இருந்தால், பரந்துபட்ட நிலபரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும், ராணுவமும் ஆள் பலம் பெறும் என்று புதின் தீவிரமாக நம்புகிறார். அந்த வகையில் ரஷ்யாவின் நிலபரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே, உக்ரைன் நிலபரப்பை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்ற புதினினும் திட்டமும், நாட்டின் மக்கள் தொகை சுருங்கி வருவதால் ஆபத்தான நிலையில் இருக்கிறது. மக்கள் தொகை சரிவது ஒரு பக்கம், போரில் உயிர்நீத்த ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மறுபக்கம் என ரஷ்யா நெருக்கடியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தோராயமாக 2,50,000 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்தனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ரஷ்யப் படைகளில் இருந்து சில இளைஞர்கள் உயிர்பிழைத்தால் போதுமென்று தப்பித்தும் வருகின்றனர். ரஷ்யா மட்டுமல்ல... - ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் குறைந்துவரும் மக்கள் தொகை காரணமாக இருந்தாலும் கூட, இது ரஷ்யாவின் பிரச்சினையாக மட்டுமல்லாது உலகின் பரவலான போக்காகவும் இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில், 2050-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறையும் வாய்ப்புள்ளது என்ற கணிப்புகளும் நிலவுகின்றன. அந்த வகையில் மக்கள் தொகை அதிகரிப்புக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது புதின் மட்டுமே இல்லை எனத் தெரிகிறது. ‘ப்ரோநேட்டலிஸ்ட் பாலிசீஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ‘குழந்தைப் பேறை ஊக்குவிக்கும் கொள்கைகளை’ வகுத்த நாடுகளில் ஹங்கேரி, போலந்து, அமெரிக்கா இன்னும் சில நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஹங்கேரி அரசு மூன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்டால் மிக தாராளமான வரிச் சலுகை தருகிறது. போலந்து அரசு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகை தருகிறது. ஒரு குழந்தைக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் வீதம் உதவித் தொகை தரப்படுகிறது. தொழில், வேலை முன்னேற்றத்தை தியாகம் செய்து பெண்கள் குழந்தைப்பேறுக்கு சம்மதம் தெரிவிப்பதால் இந்தப் பெரிய சலுகையை வழங்குகிறது. அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க வேண்டும் என்ற ‘எம்ஏஜிஏ’ (MAGA) கொள்கையோடு ஆட்சி அமைத்துள்ள ட்ரம்ப், குழந்தைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 5,000 டாலர் வரை பெண்களுக்குத் தரலாம் என்ற யோசனையை முன்மொழிந்ததும் நினைவுகூரத்தக்கது. ஸ்பெயின் முன்மாதிரி... - குறைந்துவரும் மக்கள் தொகையை மீட்டெடுக்க சில நாடுகள் இதுபோன்ற நிதி, வரிச் சலுகைகளை மட்டுமே அறிவிக்க, ஸ்பெயின் நாடு தனது சற்றே வித்தியாசமான அணுகுமுறையால் சாதித்துள்ளது. ஸ்பெயினும் குழந்தை பெற்றெடுக்க பெண்களை ஊக்குவித்தலும் கூட, அதையும் தாண்டி தனது நாட்டுக்கு குடியேறிகளாக வந்தவர்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்குவதை அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் கூட இந்தச் சலுகையை தாராளமாக வழங்குகிறது. ஸ்பெயினின் இந்த நடவடிக்கைக்கு கைமேல் பலனாக, அதன் பொருளாதாரம் முன்பைவிட வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ப்ரோநேட்டலிஸ்ட் கொள்கைகளில் புதுமைகளையும், தாராளத்தையும் சில தேசங்கள் காட்டினாலும் கூட ஒரு குறிப்பிட்ட சில குழு, இனம் சார்ந்த பெண்கள் அதிகமாகப் பிள்ளை பெறுவதை இந்த நாடுகள் ஊக்குவிக்கின்றன. இவர்களை ‘விருப்பத்தக்குரிய குடிமக்களாக’ அந்த நாடுகள் கருதுகின்றன. அதாவது இனம், மொழி, மதம், பாலின சார்பு சார்ந்து சிலரை அரசாங்கம் விரும்புகிறது. ஸ்பெயின் நாடு குடியேறிகளை தாராளமாக வரவேற்று தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்கினாலும் கூட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் ஸ்பானிஷ் மொழி பேசும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஹங்கேரி நாடு ஆண் - பெண் (ஹெட்டரோ செக்ஸுவல்) தம்பதிக்கு மட்டுமே இந்தச் சலுகையை தருகிறது. அதுவும் அவர்கள் அதிக வருவாய் ஈட்டும் வர்க்கத்தில் இருக்கிறார்களா என்பதையும் கருத்தில் கொள்கிறது. உலக நாடுகளின் இந்த ‘விருப்பத்துக்குரிய குடிமக்கள்’ போக்கை ட்ரம்ப்பின் செயல்பாடு மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம். பெண்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஊக்கத் தொகைகளை வழங்கத் தயாராக இருக்கும் ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மிகமிக உறுதியாக இருக்கிறார். ட்ரம்ப்புக்கு அமெரிக்க மக்கள்தொகை அதிகமாக வேண்டும். ஆனால் அவர்கள் அமெரிக்கர்களாக இருக்க வேண்டும். ஸ்டாலின் உத்தியை கையிலெடுத்த புதின்: மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க ரஷ்ய அதிபர் புதின், அந்தக் காலத்தில் ரஷ்யாவின் அடையாளமாக இருந்த ஜோசப் ஸ்டாலினின் உத்தியை கையில் எடுத்துள்ளார். 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு ஸ்டாலின் காலத்தில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதையே இப்போது புதினும் பின்பற்றுகிறார். மேலும், ரஷ்யாவில் குழந்தைப் பேறுக்கு எதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் தடை செய்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு பெண் முடிவெடுக்க முடியாது. பெண்களின் கணக்கு: மக்கள் தொகை பெருக்கத்துக்கு உலக நாடுகள் விதவிதமாக, ரகரகமாக கொள்கைகளை வகுக்க, அதை பெண்களின் நலனை அடகுவைத்து மேற்கொள்ளாது, சமூகத் தேவையின் அடிப்படையில் வகுக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானது உழைக்கும் சக்தி. அதனை மக்கள் தொகை பெருக்கத்தினால் மட்டுமே அதிகரிக்க நினைக்காமல், குடியேறிகளுக்கு குடிமக்கள் அங்கீகாரம் வழங்கலாம் என்று பெண்கள் கருதுகின்றனர். அதை விடுத்து, நாட்டிலுள்ள பெண்களை இத்தனை குழந்தை பெற்றெடுங்கள், இந்த மதத்தை, இனத்தை, குலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குழந்தை பெற்றெடுங்கள் என்று நிர்பந்திப்பது பெண்களின் தனிப்பட்ட உரிமைகளை அத்துமீறுவதாகவும், அரசாங்கம் விரும்பும் வகையில் மக்கள் தொகையை பெருக்கும் ஒருவகையிலான இன அல்லது மதவாதமாகவும் மட்டுமே இருக்கும் என்று கண்டனத்தைப் பதிவு செய்கின்றனர். உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் குழந்தைகளை பெற்றெடுக்க பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா - பகீர் பின்னணி | Russia encourages school girls to have children and Shocking background explained - hindutamil.in
  16. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் துப்புரவு நடவடிக்கையில் வெளித்தெரிந்த என்புகள்; செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி! செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவாக்கல் பணியின்போது மேலும் சில மனித என்புகள் இனங்காணப்பட்டுள்ளன. மனித என்பு எச்சங்கள் தென்பட்ட பகுதியில் தற்போது அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 47 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாளான நேற்றும் இரு என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்தநிலையில், ஏற்கனவே அகழ்வு நடைபெறும் பகுதிக்கு வெள்ள நீர் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அகழ்வு நடைபெறும் இடத்துக்கு அருகில் நேற்றுத் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது அங்கும் மனித என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. என்பு எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, ஆய்வுகளின் பின்னர் அங்கும் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகின்றது. துப்புரவு நடவடிக்கையில் வெளித்தெரிந்த என்புகள்; செம்மணியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
  17. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை! வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால் இந்த வணிக சந்தை திட்டமிடப்பட்டது. நாடாவெட்டி ஆரம்பமான வணிக சந்தையானது தொடர்ந்து மாணவர்கள் உள்ளூர் சார்ந்த உற்பத்திகள், குளிர்பானங்கள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை சந்தைப்படுத்தினர். மாணவர்கள் சந்தைப்படுத்திய உற்பத்தி பொருட்களை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை கொள்வனவு செய்தனர். வணிகத்துறை சார்ந்து நல்ல ஒரு எதிர்காலத்தை பாடசாலை மட்டத்தில் உருவாக்குவதும், வர்த்தகத் துறை சார்ந்த விடயத்தை கல்வி துறையில் ஒரு உயர்ந்த பகுதியாக மாற்றும் நோக்கிலும் இந்த வணிக தினமும் வணிக வாரமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் வணிக சந்தை!
  18. 06 Jul, 2025 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) கோட்டபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்ததை போன்று அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பெறுபேற்றை வெகுவிரைவில் அரசாங்கம் விளங்கிக் கொள்ளும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாட்டு கடன் சுமையினால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது.1987 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை காட்டிலும் வெளிநாட்டு கடன் தொகை உயர்வாக காணப்பட்டது. அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த வன்முறைகள் பொறுப்புக்கூற வேண்டுமா என்பதை ஆராய வேண்டும். 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டுமா அல்லது விடுதலை புலிகளின் தாக்குதலினால் அரச நிர்வாக கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு பொறுப்புக்கூற வேண்டுமா என்பதையும் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு 8.6 சதவீதத்தில் 500 மில்லியன் டொலர் கடன் பெறும் போது அதன் பிரதி விளைவை எவரும் ஆழமாக ஆராயவில்லை.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிதியே பாரியளவில் மோசடி செய்யப்பட்டன. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.கோட்டாவுக்கு வழங்கிய ஆணையை பஷில் ராஜபக்ஷ கொள்ளையடித்தார். நாடு மிக மோசமான நெருக்கடிக்குள்ளானது, பின்னர் கோட்;டபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள். அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாக பயன்படுத்தி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்றார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக் கொள்ளும். தேசிய மற்றும் சர்வதேச அரசமுறை கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்களை கடத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது என்றார். அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை ரில்வின், பிமல் ரத்நாயக்க கொள்ளையிட்டுள்ளனர் - சம்பிக்க | Virakesari.lk
  19. 07 Jul, 2025 | 12:16 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும். அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை.இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது.இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது என்றார்.இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் : தேசிய பாதுகாப்பு பாதிப்பு; அரசாங்கத்துக்கு கற்பிக்க தயார் - சரத் வீரசேகர | Virakesari.lk
  20. 06 Jul, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்! | Virakesari.lk
  21. 07 Jul, 2025 | 06:03 PM வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றும் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது. இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து, கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொது மைதானம்! | Virakesari.lk
  22. 07 Jul, 2025 | 07:03 PM யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அந்தவகையில் 07ஆம் திகதி திங்கட்கிழமை 52 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 47 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதிதாக அகலப்படும் குழியிலிருந்து ஒரு மண்டையோடு இன்றைய தினம் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்த மனிதப் புதைகுழிக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk
  23. சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள். இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'. தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு! அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன. சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன. இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை. Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை. அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை. பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன. இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம். கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு! காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்! தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது. இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு! நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'. Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?
  24. சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை. ‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது. லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார். முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது. ’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை? அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம். மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம். 3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in
  25. 04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். இதனையடுத்து, வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.