Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது Editorial / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0 - 26 இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும். இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந்துள்ளன. சமீபத்திய மதிப்பீடுகள் சூறாவளியின் விளைவுகள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளப்பட்டதை விட பரந்ததாகவும் கடுமையானதாகவும் இருப்பதால், பலர் முழுமையாக மீள்வதற்கு நிலையான ஆதரவு அவசரமாக தேவைப்படுவதாகக் காட்டுகின்றன. "இந்த நிதி இலங்கைக்கு ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது" என்று இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார். "டித்வா சூறாவளி நாடு முழுவதும் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது, மேலும் பல குடும்பங்கள் இன்னும் தங்கள் அடிப்படை அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றன. அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் ஐ.நா. விரைவாக ஆதரவளித்தது. சான்றுகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகளால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த பதிலை உறுதி செய்வதற்காக நாங்கள் அரசாங்கம், சிவில் சமூக கூட்டாளிகள் மற்றும் மனிதாபிமான சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இந்த அவசர நிதி, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆதரவை அடைய உதவும்." ஐ.நா.வின் உலகளாவிய அவசர நிதியம், CERF, திடீர் நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்க மனிதாபிமான பதிலளிப்பவர்களுக்கு விரைவான நிதியை வழங்குகிறது. Tamilmirror Online || ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது
  2. பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது தங்கியுள்ள தங்குமிடங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் மேலும் மக்களுக்கு அறிவுறுத்துகிறார். பதுளை மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருவதாகவும், மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், எனவே மக்கள் பாதுகாப்பான மையங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டார். Tamilmirror Online || பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை
  3. 09 Dec, 2025 | 05:21 PM இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார். பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (09) பார்வையிட்டனர். இதன்போது யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒப்ரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் மூலம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்தி பணியினை முன்னெடுத்து வருகின்றனர் அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி பணிகள் தற்பொழுது இந்திய இராணுவத்தின் ஒப்ரேஷன்சாகர் பந்து அணியினர் முன்னெடுத்த வருகின்றனர். அது மட்டும் இன்றி தற்பொழுது ஏற்பட்ட வெள்ள அர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இதுவரையில் இந்தியா உணவு மற்றும் உடை மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கையிலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் என பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர் | Virakesari.lk
  4. 09 Dec, 2025 | 05:35 PM பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும். கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. பறங்கி, பாலி ஆறுகளின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை | Virakesari.lk
  5. 09 Dec, 2025 | 03:49 PM தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்நிலையில், மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார். இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி காணாமல் போனது தொடர்பில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவிக்கையில், ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவுற்ற பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. தற்போது காணாமல் போன அனகொண்டா பாம்புக் குட்டி இதற்கு முன்னர் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம் | Virakesari.lk
  6. எர்ணாகுளம்: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று (டிச.8) விடுவிக்கப்பட்டார். 8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 8) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை குற்றங்களில் இருந்து விடுவித்தார். ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்தார்.இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்.எஸ். சுனில் எனும் 'புல்சர் சுனில்'. இரண்டாவது குற்றவாளி மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளி பி. மணிகண்டன், நான்காவது குற்றவாளி வி.பி. விஜீஷ், ஐந்தாவது குற்றவாளி எச்.சலீம் என்கிற வடிவால் சலீம், 6-வது குற்றவாளி பிரதீப், 7-வது குற்றவாளி சார்லி தாமஸ், ஒன்பதாவது குற்றவாளி சனில் குமார் என்கிற மேஸ்திரி சனில், மற்றும் பதினைந்தாவது குற்றவாளி சரத் நாயர் ஆவர். பின்னணி என்ன? - பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் போது மொத்தம் 261 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் பல திரைப்படத் துறை பிரமுகர்கள் அடங்குவர். விசாரணை அதிகாரி 109 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் 834 ஆவணங்களை ஏற்றுக்கொண்டது. இரண்டு முக்கிய சாட்சிகளான முன்னாள் எம்.எல்.ஏ பி.டி. தாமஸ் மற்றும் இயக்குநர் பாலச்சந்திர குமார் ஆகியோர் விசாரணையின் போது இறந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிப்பு; 6 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு
  7. 08 Dec, 2025 | 12:26 PM அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன, குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன, குழந்தைகளுக்கு உணவோ சுத்தமான நீரோ இல்லை. பலர் தற்காலிக முகாம்களில் வாழ்கிறார்கள், சிலர் வெள்ள நீரில் நாளுக்கு நாள் நடந்து செல்கிறார்கள். மழை குறைந்த பின்னரும் வீடுகள் கிடைப்பது உறுதி இல்லை. இதனால் அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளேன். 25 மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் நாம் கால தாமதம் செய்ய கூடாது. ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பான நிலைக்கு மாறும் வரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும். இது குறித்து விவாதிக்க பாராளுமன்றம் ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள் ; அவசரமாக பாராளுமன்றம் கூட வேண்டும் ; பிரதமரிடம் நாமல் கோரிக்கை! | Virakesari.lk
  8. 08 Dec, 2025 | 04:59 PM டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் திங்கட்கிழமை (08) கடிதமொன்றைக் கையளித்தனர். ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர். மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார். கலா ஓயா வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் செய்த காரியம் | Virakesari.lk
  9. 08 Dec, 2025 | 05:03 PM இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி போராடுவோம் என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கிறிஸ்ணன் அகிலனை திங்கட்கிழமை (08) நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் எமது கடல் வளங்கள் அழிக்கப்படுவதும் , எமது வலைகள் சேதமாக்கப்பட்டு, எமது வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாமே கடலில் இறங்கி அவர்களுக்கு எதிராக போராடுவோம். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். அங்கு மாவட்டச் செயலக வாயிலை மூடி எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதொரு என தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ள கடற்தொழிலாளர்கள் | Virakesari.lk
  10. 08 Dec, 2025 | 05:11 PM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைக் கட்டாணை ஒன்றை வழங்கியது. இந்நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை என்பதை வலியுறுத்தி விளையாட்டு துறைசார்ந்தவர்கள் பேரணியை முன்னெடுத்தனர். சென் போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம் | Virakesari.lk
  11. 08 Dec, 2025 | 05:04 PM பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். சாமிக்க கருணாரத்ன DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு! | Virakesari.lk
  12. சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு வலம் வந்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே, பல்வேறு பேட்டிகளில், “விஜய் அரசியல் கட்சித் தொடங்கினால், என்னை அழைத்தால் அரசியல் ஆலோசனைகள் வழங்குவேன்” என்று அவர் கூறியிருந்தது இந்த வேளையில் நினைவுகூரத்தக்கது. யார் இந்த நாஞ்சில் சம்பத்? - எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது கம்பீரமான உரையால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரிக் காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர், அந்தக் காலத்திலேயே கருணாநிதியால் பாராட்டப்பட்டார். இருப்பினும் வைகோ மீதான ஈர்ப்பால் அவர் மதிமுகவைத் தொடங்கியபோது அவர் பின்னால் நின்றார். தொடர்ந்து வைகோவுடனும் மனக்கசப்பு வர, அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரன் அணிக்குச் சென்றவர், அமமுக உதயமானதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை எனச் சொல்லி தினகரனை விட்டு விலகினார். பின்னர் திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசினார். ஆனால் திமுக அவரை பெரிதாக அங்கீகரிக்கவில்லை. அதனை அவருமே வெளிப்படையாகப் பல்வேறு இடங்களில் ஆதங்கத்துடன் கூறிவந்தார். அரசியல் தவிர பள்ளி - கல்லூரி விழாக்களிலும் தொடர்ந்து பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். அதனால் இலக்கிய மேடைகளும் அவருக்கு புகழ் வெளிச்சமும், வருமானமும் கொடுத்தன. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று (டிச.5) தவெகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தற்போது திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் அனுபவம் பெற்ற சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்துள்ளார். “தவெகவை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பேன்” - இந்நிலையில் இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார், நான் மெய்சிலிர்த்துப் போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே!” என்று தெரிவித்துள்ளார். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
  13. “இந்தியாவுக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியை ரஷ்யா தொடரும்” - டெல்லியில் புதின் உறுதி புதுடெல்லி: “வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்துக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது” என டெல்லியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய விளாடிமிர் புதின், “எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் வழங்கும் நம்பகமான சப்ளையர் ரஷ்யா. வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்துக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியைத் தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். மேலும், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு அதிகரிப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இருதரப்பு வர்த்தகத்துக்கு தேசிய நாணயங்களைப் பயன்படுத்துவதை நோக்கி இந்தியாவும் ரஷ்யாவும் படிப்படியாக நகர்கின்றன. சிறிய அணு உலைகள் மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை நிர்மாணிப்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய சர்வதேச தளவாட வழித்தடங்களை உருவாக்க ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன. ரஷ்யா - இந்தியா உறவு என்பது வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதில், வார்த்தைகள் முக்கியமல்ல. சாராம்சம்தான் முக்கியமானது. இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். அதை நான் மிகவும் பாராட்டுகிறேன். நாங்கள் பல்வேறு துறைகளில் முன்னேற திட்டமிட்டுள்ளோம். இது எங்கள் உறவில் உள்ள நம்பிக்கையின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு, விமான மேம்பாடு, உயர் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என தெரிவித்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா மீதான புதினின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி. எரிசக்தி பாதுகாப்பு இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூணாக இருந்து வருகிறது. பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை 2030 வரை தொடர நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இரு நாடுகள் இடையே இன்று சுகாதாரம், கப்பல் போக்குவரத்து, ரசாயனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இது நமது வர்த்தகம் மற்றும் முதலீடு பன்முகத்தன்மை கொண்டதாகவும் சமநிலையானதாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்" என தெரிவித்துள்ளார். “இந்தியாவுக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதியை ரஷ்யா தொடரும்” - டெல்லியில் புதின் உறுதி
  14. S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 03:03 - 0 - 58 மக்கள் தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது. 1980ஆம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இதனால் ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016ஆம் ஆண்டு சீனா கைவிட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனாலும், சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், சீனாவில் சரிந்துவரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, ஆணுறைகள், கருத்தடை மருந்துகளின் பயன்பாடுகளை குறைக்க கூடுதல் வரிகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள், திருமணம் தொடர்பான வணிகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரிகளையும் சீனா நீக்கியுள்ளது. Tamilmirror Online || ஆணுறைகள் மீது கூடுதல் வரி விதித்தது சீனா
  15. தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழில் அவை வெளிவருவதில்லை என்று இலங்கை தமிழரசுக் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். Tamilmirror Online || அனர்த்த எச்சரிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு
  16. 05 Dec, 2025 | 05:28 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன் விளைவை அவர் வெகுவிரைவில் உணர்வார். பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்லாமல் புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் பணத்தில் கொழும்பில் தனி வீட்டில் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டு இவர் ஏனையவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார். இது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனர்த்தத்தால் வடக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு தரப்பினருக்கு கௌரவமளிக்கிறோம். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ அல்லது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது, அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு மாடி வீட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத் தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார். எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே யாழ்ப்பாணத்திற்கு விரைந்து வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட உதவினர். மக்களுக்கான பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார். யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன் | Virakesari.lk
  17. 05 Dec, 2025 | 05:21 PM வளிமண்டலவியல் திணைக்களத்தினர் 15 நாட்களாக முன்னறிவிப்பு விடுத்துக்கொண்டிருந்தவேளை, தூங்கிக்கொண்டிருந்த அரசாங்கம், இப்போது வானிலை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (5) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இந்த முன்னறிவிப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர். வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஊடகங்கள் முன்வந்து, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும் பலத்த காற்றும் வீசுவதோடு, இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்தனர். இது பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என்று முழு நாட்டிற்கும் தெரிவித்து வந்தனர். ஊடகங்களுக்கு முன்வந்து இது குறித்து தெரியப்படுத்திய காலப்பிரிவில் நாட்டில் மழை காணப்படவில்லை. வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதானிகள் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, இந்த புயல் அவதானம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வந்தனர். நவம்பர் 11, நவம்பர் 12, நவம்பர் 14 மற்றும் நவம்பர் 17 ஆகிய திகதிகளில் குறித்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளிக்கொணர்ந்து முன்னறிப்புச் செய்துகொண்டே வந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூட நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய திகதிகளில் இந்த விடயம் குறித்து நாட்டுக்கு அறிவித்தார். நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியைச் செய்து வந்தன. நவம்பர் 11 முதல் நவம்பர் 15 வரை இந்த மோசமான வானிலை நிலைமை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்தபோதும் கூட, இடர் முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைகளின் செயலற்ற தன்மைக்கான காரணங்கள் யாது என கேள்வி எழுப்புகிறோம். தற்சமயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினரை நோக்கி விரல் நீட்டாமல் இடர் முகாமைத்துவ செயல்பாட்டில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இந்த சூறாவளி புயலால் இந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். நாட்டில் பல துறைகள் சீர்குலைந்து, மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நேரத்தில், இந்த மோசமான வானிலை குறித்த விடயங்களைச் சரியாக முன்வைத்த அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்களை விடுக்காது, இந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொள்வதே மிக உயர்ந்த கடமையாக அமையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம். வெளித்தெரியும் விதமாக இந்த செயல்முறையை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், விரைவான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரியது. ஆனால் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இவ்வாறு ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாம் இந்த அவசரகால நிலையை கோரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வளிமண்டலவியல் திணைக்களத்தினர் முன்னறிவிப்பு விடுத்தபோது தூங்கிக்கொண்டிருந்த அரசு, இப்போது திணைக்கள அதிகாரிகளை குற்றஞ்சாட்டுகிறது - சஜித் | Virakesari.lk
  18. 05 Dec, 2025 | 06:25 PM யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என கைதியின் சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (5) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள். எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார். மறுநாள் 7ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 8ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார். நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார். தலையில் காயம் ஏற்பட்டு 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள். அண்ணாவிடம் என்ன நடந்தது என கேட்டபோது “எனக்கு அடிச்சு போட்டாங்க” என்று சொன்னார். அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடாமல், என்னை அங்கிருந்து அனுப்பினார். மறுநாள் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்தபோது, அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது. பின்னர் மதியம் தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாம் சரி என கூறி மாலையே வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது. நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று. நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு, முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன். யாழ்ப்பாணத்துக்கு சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்டபோது, மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர். பின்னர் அப்பா மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டுவிடும் என சிறைச்சாலையில் இருந்து, அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார். மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம். 11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 7 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர். வைத்தியர்களிடம் கேட்டால், மூளையில் உள்ள சில கலங்கள் இறந்துவிட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின், நோயாளி சுயநினைவுடன் இருக்கவேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும். 5 வீதமே அதற்கு வாய்ப்புள்ளது என கூறிவிட்டனர். அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்டபோது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள். முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறியபோது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள். உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வைத்தியர்களும் கூறுவதாக இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறாமல் இருக்கிறார்கள். எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூறவேண்டும் என தெரிவித்தார். யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! - உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை | Virakesari.lk
  19. 05 Dec, 2025 | 01:42 PM கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார். குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார். இதன்போது, பிரசவ வழி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண் | Virakesari.lk
  20. 5 Dec, 2025 | 02:01 PM டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது. பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது. இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள், நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம். நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம், அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம். சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம். அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம் | Virakesari.lk
  21. 05 Dec, 2025 | 03:58 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது. அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர். அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு | Virakesari.lk
  22. “இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது. கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். அத்துடன், ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும், 'அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இப்போது அவர்கள், 'ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள். மற்ற எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி என்ன? நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை என கூறியுள்ளார். Tamilmirror Online || “எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்”
  23. அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார். Tamilmirror Online || ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்
  24. 03 Dec, 2025 | 03:44 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களை விட அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை வரை கண்டியில் 88 உயிரிழப்புக்களும், பதுளையில் 83, நுவரெலியாவில் 75 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன் அது மாத்திரமின்றி கண்டியில் 150 பேரும், நுவரெலியாவில் 63 பேரும், பதுளையில் 48 பேரும் காணாமல் போயுள்ளனர். இந்த மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்ட சில பகுதிகளில் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் கூட கடும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்கள் தெரிவித்துள்ளன. எனவே அப்பிரதேசங்களில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர் தொடர்பில் துள்ளியமாக தரவுகளையும் பெற முடியாமலிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாவலப்பிட்டி - தொலஸ்பாகை, பரகல, மடுல்சீமை, ஹங்குராங்கெத்த, நானுஓயா, ரதல்ல, இறம்பொடை, தலவாந்தெண்ணை, கந்தப்பனை, றாகல, மாத்தளை - கம்மடுவ, இங்குருவத்த, ரம்புக்எல - விலானகம, டயகம - போடைஸ், கொத்மலை - ரம்பொடகம, மஸ்கெலியா, நாவலப்பிட்டி - உலப்பனை போன்ற பல பிரதேசங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று வரை தொலைதொடர்புகளும் வழமைக்கு திரும்பவில்லை. இதன் காரணமாக அங்கு உதவிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகளில் உள்ள தானியக்க பணம் வழங்கும் இயந்திரங்களும் (ஏ.டி.எம்.) செயலிழந்துள்ளன. இதனால் வங்களிலிருந்து பணத்தை எடுப்பதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தில் உதவிகள் இன்றி தவிக்கும் மக்கள் மீட்பு பணிகளையும் முன்னெடுக்க முடியாத அவல நிலை; தொலைதொடர்புகள், ஏ.டீ.எம். இயந்திரங்களும் செயலிழப்பு | Virakesari.lk
  25. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கோட்டை நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.