Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 07 Nov, 2025 | 04:10 PM முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். அதன் பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றுவருகிறது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு | Virakesari.lk
  2. 07 Nov, 2025 | 05:13 PM தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி | Virakesari.lk
  3. 07 Nov, 2025 | 06:55 PM பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு பண்ணையிலுள்ள சுகாதாரக் கிராமத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது. சுதேச மருத்துவம் என்பது ஒரு சாதாரண சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். நமது மண்ணின் செடிகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் தலைமுறைகளின் அனுபவ ஞானத்தின் அழகிய சங்கமமே இந்த சிகிச்சை முறை. இந்த மரபு தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படவேண்டும்; புதிய தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறப்படவேண்டும்; அதில் நீங்கள் வகிக்க உள்ள பங்கு மிகப் பொறுப்பானதும் பெருமைமிக்கதுமானதாகும். எமது நோக்கம் தெளிவானது — மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சுகாதார சேவை சென்றடைய வேண்டும். நகர மையங்களில் மட்டுமல்ல தொலைதூர கிராமங்களின் கடைசிக் குடியிருப்புகளுக்கும் அது கிடைக்க வேண்டும். இந்தப் பயணத்தில், ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மக்களுக்குச் செல்லக்கூடிய மிக அருகாமையான நம்பிக்கையான மருத்துவ சேவை ஆளுமைகளாக இருப்பீர்கள். உங்கள் சேவை ஒரு மருந்தளிப்பு அல்ல — அது ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை, ஒரு மனிதநேயம். இன்று நீங்கள் பெறும் நியமனம் ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இது ஒரு மக்கள் சேவைக்கான உறுதி. மக்கள் உங்களை நம்பி வரும்போது, அந்த நம்பிக்கையை நீங்கள் காக்க வேண்டும். இதுவரை பல துறைகளில் மக்கள் சேவை பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நன்கு அறிவோம். நீங்கள் அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இல்லாமல், அத்தருணத்தை மாற்றும் தலைமுறையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளியையும் சந்திக்கும் போது, 'இந்த நிலை நான், அல்லது எனது குடும்பம் என்றால் நான் எப்படி அணுகுவேன்?' என்று நீங்கள் உங்களிடம் கேளுங்கள். அந்த ஒரு கேள்வியே உங்களை சிறந்த சேவை வழங்கும் வழியில் நடத்தி செல்லும். வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தை, மக்கள் சேவைக்கு மிக நெருக்கமான, அணுகத்தக்க மற்றும் செயல்திறனான இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண நிர்வாக அலுவலகங்களை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மட்டுமே வைத்திருக்காமல், மாகாணம் முழுவதுக்கும் அணுகுமுறையை சமமாக்கும் வகையில் பல திணைக்களங்கள் நிலப்பரப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் காணித் திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களம் செயல்பட்டு வருகின்றதும் அதன் எடுத்துக்காட்டுகளாகும். இதேபோன்று, சுதேச வைத்தியத்துறையையும் மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் மையத்திலேயே நாம் அமைப்போம். நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட வாழ்த்துகிறேன், என்றார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி | Virakesari.lk
  4. கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆
  5. அந்த ஊழலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளியே வரும்போது, நடிகையாக மாறிய அந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்றார். பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன். எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர். நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை. துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது. பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் கஷ்டப்பட்டு என் பெயரை உருவாக்கினேன். பலர் அந்தப் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள். நீங்கள் புத்தாண்டு விழாக்களுக்குச் சென்றால், கவனமாக இருங்கள், கவனமாக புகைப்படங்களை எடுங்கள் என்றும் கூறியுள்ளார். பத்மே என்பவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவராவார். Tamilmirror Online || புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது
  6. 06 Nov, 2025 | 12:59 AM முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பொது நிதியில் ரூ. 1.03 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விரிவாகக் கூறப்பட்டுள்ளது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார். 2010-2014 வரையான காலப்பகுதியில் பஷில் ராஜபக்ஷ உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, அதில் 'மகா நெகும' திட்டத்திலிருந்து ரூ. 155,451,612 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 வாகனங்களை அவர் பயன்படுத்தியதாகவும், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் மூன்று சொகுசு வாகனங்கள் மற்றும் 11 பிற வாகனங்கள் உட்பட, அரசுக்கு ரூ. 612,000,000 இழப்பு ஏற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 64 கடற்படை வீரர்கள் மற்றும் 84 ராணுவ வீரர்கள் அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டதாகவும், ரூ. 264,370ஈ 800 பொது நிதியில் அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பொறுப்பான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார வலியுறுத்தியுள்ளார். இந்த முறைப்பாட்டுக்குரிய ஆவணங்களை கமந்த துஷார 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முன்னிலையாகி ஒப்படைத்துள்ளார். பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு; ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை தொடக்கம் | Virakesari.lk
  7. 06 Nov, 2025 | 01:04 PM திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றவர்களும், பாடசாலைக்கு அவசர அவசரமாக செல்கின்ற மாணவர்களும் வீதிகளில் செல்கின்ற கட்டாக்காலி மாடுகளினாலும் அவை வீதியில் போடுகின்ற சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். எனவே குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை (05) கட்டாக்காலி மாடுகள் பிடித்தல் தொடர்பான அறிவித்தலை மாநகரசபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக முதல்வர் விடுத்திருந்தார் அதில் மாநகர எல்லைக்குள் கட்டாகாலி மாடுகள் பொது இடங்களில் நடமாடுவது அதிகரித்த வண்ணம் உள்ளது மற்றும் மக்கள் பாதுகாப்பிற்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாகிறது. இதனால், மாநகர சபை சார்பில் இத்தகைய மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை உரிய உரிமையாளர்கள் மூன்று (03) நாட்களுக்குள் வந்து மீட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மாடுகளை மீளப் பெறாவிட்டால், அவை மாநகர சபைக்கு சொந்தமாக்கப்படும். மாடுகளை மீண்டும் பெற விரும்பும் உரிமையாளர்கள், உரிய அத்தாட்சிப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் மாநகர சபையில் நிர்ணயிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்திய பின்னரே மாடுகளை மீண்டும் பெற இயலும். இனி வரும் காலங்களில் தண்டப்பணத் தொகை மேலும் அதிகரிக்கப்படுமென பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று (06) காலை பிரதான வீதி, கடல்முக வீதி, திருஞானசம்பந்தர் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் பெருமளவான கட்டாக்காலி மாடுகள் திரிவதை படங்களில் காணலாம். திருகோணமலை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் | Virakesari.lk
  8. 06 Nov, 2025 | 02:29 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானை பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யானைகளை துரத்துவதற்கான முயற்சிகளில் கூட அதிகாரிகள் பின்வாங்குவதாகவும், மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் யானையின் தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் கிராமசேவையாளருக்கு அறிவித்தபோதிலும் தாக்குதல் நடந்து இருதினங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு அவர் வருகைதருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமங்களில் நடைபெறும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டிய கிராம சேவையாளரே இவ்வாறான நிலையிலேயே இருந்துவருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர். செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம் | Virakesari.lk
  9. 06 Nov, 2025 | 04:59 PM இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நவம்பர் 3, 2025 திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களில் ஒன்றான செருப்பு 1980 மற்றும் 1995 க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். "குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 25ஆவது சான்று பொருளான செருப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அந்த பாட்டா நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்ட அந்த செருப்பு, 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. " 1986ஆம் ஆண்டு இராணுவ உறுப்பினர்கள் குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான விசாரணையின்போது செம்மணியில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது முதன்முதலில் தெரியவந்தது. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், ஒரு பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும். 45 நாட்கள் நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வாய்வு செப்டெம்பர் 6, 2025 அன்று நிறைவடைந்த நேரத்தில், ஒரு குழந்தையின் எலும்பு உட்பட 239 எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்த மேலதிக ஆய்வுகளுக்கான பாதீட்டை, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். "ஏற்கனவே எடுக்கப்பட்ட 240 மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாதீடு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கென பணியாற்றுவதற்காக, சட்ட வைத்திய அதிகாரிகளான செல்லையா பிரணவன், மயூரதன் உள்ளிட்ட 7 நிபுணர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது." இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15, 2025 அன்று நீதிமன்றில் விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாண நீதிபதி எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ஞா.ரணிதா மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் ஆகியோர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டனர். மழைநீரால் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வைத் ஆரம்பிப்பது குறித்த தீர்மானத்தை ஜனவரி 19, 2026 வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, ஒக்டோபர் 13, 2025 அன்று யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது." செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு | Virakesari.lk
  10. புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! 06 Nov, 2025 | 05:29 PM புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பினை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (6) உயர்நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்விலேயே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவியான வித்யா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் இந்த மரண தண்டனை தீர்ப்பினை அறிவித்திருந்தது. புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! | Virakesari.lk
  11. 06 Nov, 2025 | 06:04 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (6) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்டது. இவ்வாறு பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்றபோது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார். சஹரான் குழு போன்றவர்கள் போல ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட, நேற்று புதன்கிழமை (5) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். சில தீய சக்திகள் அந்தப் பகுதியில் ஏதாவது வெடிபொருள் அல்லது வேறு ஏதாவது பொருளை புதைத்து வைத்துவிட்டு, அதை தோண்டி எடுப்பதற்காக குழி தோண்டியிருக்கலாம் என்பது போன்ற பல சந்தேகங்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் இன்று, அப்பகுதிக்கு சென்று நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்ரே இயந்திரம் மூலமாகவும் சோதனையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மட்டு. தாழங்குடா காணியில் மர்மமான குழி - அதிரடிப்படையினர் சோதனை - சஹரான் குழுவின் குண்டுசோதனையை நினைவுறுத்தி தொடர் விசாரணை | Virakesari.lk
  12. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த சில காலங்களாக கைப்பற்றப்பட்ட 950கிலோ போதைப்பொருள்கள் நேற்று எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் கோம்பயன் மணல் இந்து மாயானத்தின் மின்தகன மேடையில் போடப்பட்டு குறித்த போதைப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன . பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்துவரப்பட்ட குறித்த போதைப்பொருள்கள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!
  13. 05 Nov, 2025 | 12:53 PM யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார். யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்? | Virakesari.lk
  14. 05 Nov, 2025 | 03:37 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கொக்குவில் சந்தையில் மரக்கறி வாங்க வந்த நபர் ஒருவருடன் வன்முறை கும்பல் ஒன்று , முரண்பட்டு, அவரை மிக மோசமாக தலைக்கவசங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தால் , சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், மரக்கறி வாங்க வந்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டதுடன் , சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கடந்த வாரம் திருநெல்வேலி , சந்தையினுள் சனநடமாட்டம் அதிமாக காணப்பட்ட பகல் வேளை நிறை போதையில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து , தகாத வார்த்தைகளை பேசி அட்டகாசம் புரிந்த நிலையில் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்தும் , அவர்கள் சம்பவ இடத்திற்கு வராத நிலையில் போதையில் அட்டகாசம் புரிந்தவரின் குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்று இருந்தனர். அதேபோன்று , கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் , சந்தைக்குள் போதையில் இரு தரப்பினர் , முரண்பட்டு , வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைக்குள் ஒரு தரப்பு புகுந்து அங்கிருந்த கத்தியை எடுத்து மற்றைய தரப்பின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர். இரு சந்தைகளிலும் நாளுக்கு நாள் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளை வாங்கி பாவிப்பவர்கள் மற்றும் வன்முறை கும்பல்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , அது அதனை கட்டுப்படுத்த நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம் | Virakesari.lk
  15. 05 Nov, 2025 | 04:49 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசி செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் கவனத்தில் எடுக்காது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர். அவ்வாறு கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் , பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், தொடர்ந்தும் கழிவுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு கழிவுகளை வீசுபவர்களை எச்சரிக்கும் வகையில் அவர்கள் கழிவுகளை வீசி செல்பவர்களின் காட்சிகளின் காணொளிகளின் தரத்தை மிக குறைந்து, அவர்களை ஏனையோர் அடையாளம் காணாத வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு கழிவுகளை வீசுவார்கள் இனிவரும் காலங்களிலும், திருந்தாது இவ்வாறு செயற்பட்டால், அக் காணொளிகளை ஏனையோர் அடையாளம் காணும் வகையில், மிக உயர்ந்த (4K) தரத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளை வீசி சென்றவர்களுக்கு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூரில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கை | Virakesari.lk
  16. 05 Nov, 2025 | 04:53 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் இன்று புதன்கிழமை (05) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாகவும், இச்சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்! | Virakesari.lk
  17. அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரியின் எண்ணத்துக்கு தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, அச்சுறுத்தி, சகோதரி தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உடன்பிறந்த சகோதரனின் 11வது வயதில், சகோதரி தனது 18 வயதைக் கொண்டிருந்தபோது இந்த முறைகேடான தொடர்பு ஆரம்பித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது 22 வயதான சகோதரி, வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பெண் 2 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்! | Virakesari.lk
  18. 05 Nov, 2025 | 04:56 PM மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்பி எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை (05) 95 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது போராட்ட களத்தில் இன்றைய தினம் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருந்தார்.அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.எதிர்வரும் காலத்தில் எவ்விதமான காற்றாலை திட்டங்களும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப் படாது என்கின்ற செய்தியை அமைச்சரவை ஊடாக தெரிவித்திருந்தார். எனினும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேளைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடையம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.எனவே இப்போராட்டக்கலத்தில் இருந்து நாங்கள் கூறிக்கொள்வது எமது போராட்டம் நின்று விடாது. குறித்த 14 காற்றாலைகளும் அகற்றப்பட்டு,ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்பட்டு,அதற்கான உத்தரவாதத்தினை வழங்குவதன் மூலமும்,மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்வு இடம் பெறாது என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகின்ற போதே இப்போராட்டம் நிறுத்தப்படும். குறித்த போராட்டம் நூறாவது நாளை எட்டுகின்ற போது மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.கிராமங்கள் தோறும் தீப்பந்த போராட்டமும் முன்னெடுக்கப்படும். நாட்டுக்காகவும்,நாட்டு வளத்தை பாது காப்பதும்,மன்னார் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படும். எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்.அவரது முடிவு கிடைக்கும் வரை இவ் போராட்ட களத்தில் நாங்கள் காத்திருப்போம். எமது கோரிக்கைகளான மன்னார் தீவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 14 காற்றாலைகள் அகற்றப்பட வேண்டும்,ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளால் மன்னார் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புக்களும் உடனடியாக நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபடுவதாக எமக்கு உத்தரவாதம் வழங்கி எழுத்து மூலம் எமக்கு வழங்க வேண்டும், மன்னார் மாவட்டத்தில் எவ்வித கணிய மணல் அகழ்விற்கும் அனுமதி வழங்க கூடாது.ஆகிய மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலை தொடர்பாக நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கின்றோம் - போராட்டக்களத்தில் இருந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவிப்பு | Virakesari.lk
  19. தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை Editorial / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:46 - 0 - 26 இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்குச் சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கைது, மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் வலை வீசியபோது நடந்ததாகத் தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, கைது செய்யப்பட்ட 35 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று கோரினார். ஒன்றிய அரசு, மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே தமிழக மீனவர்கள் மீதும் காட்டி, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விஜய் மேலும், தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் இணைந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினார். இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கை, மீனவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முடிவாக, இந்தக் கைது சம்பவம், தமிழக மீனவர்களின் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விஜயின் அறிக்கை, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது, கடல் எல்லை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதை உணர்த்துகிறது. Tamilmirror Online || தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: விஜய் அதிரடி கோரிக்கை
  20. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு! செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி இவ்வாறே ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் கருத்து தெரிவித்தார். செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு!
  21. 03 Nov, 2025 | 02:46 PM இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர், "செந்தமிழ்ச் சொல்லருவி" சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஞாயிற்றுக்கிழமை (03) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பிரதம விருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்து தத்துவ நெறியிலே எமது முன்னோர்கள் யுகங்களை, கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்காக வகுத்தார்கள். இப்போது நடைபெறுவது கலியுகம். தலைமுறைகள் பற்றியும் சொன்னார்கள். 1945ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களை அமைதியான தலைமுறையினர் என்றார்கள். அவர்கள் பெரிதாக குடித்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. 1945ஆண் ஆண்டு உலகப்போர் முடிவடைந்தது. இதன்காரணமாக உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, உலகத்திலே மக்கள் தொகை குறைந்து விட்டது என்றும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒரு கோஷம் எழுந்தது. அந்த கோஷம் யாழ்ப்பாணத்திலும் ஒலித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் மிதமிஞ்சிய அளவில் பிள்ளைகளை பெற்றார்கள். 1945 -1950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு வீட்டில் 10,12 பிள்ளைகளை பெற்றார்கள். அதனால் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இலங்கையின் குடித்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்தன. ஒரு காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். தற்போது ஐந்தரை இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். ஏனையோர் புலம்பெயர் தேசங்களுக்கு சென்று அங்கே குடித்தொகையை பெருக்குகின்றார்கள். இங்கே, நாம் இருவர் நமக்கிருவர் என்ற காலம் போய், நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று கேட்கின்ற காலம் வந்துவிட்டது. குறிப்பாக தமிழர்களின் குடித்தொகை பெருக்கமானது குறைந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் குடித்தொகை பெருக்கம் 10.5 வீதத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழர்களது குடித்தொகை பெருக்கமானது 11.5 வீதத்திலேயே உள்ளது. தமிழர்களின் குடித்தொகை பெருக்கம் மெல்ல மெல்லமாக உயர்கிறது என்று சொல்கின்ற அளவிற்குகூட இல்லை என்றார். தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு | Virakesari.lk
  22. 03 Nov, 2025 | 02:59 PM செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் | Virakesari.lk
  23. 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! 03 Nov, 2025 | 03:25 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (01) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இரண்டு டிங்கி படகுகளுடன் கைதசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான உத்தரவுடன் இணைக்கப்பட்ட பருத்தித்துறை கடற்படை நிலையம், பருத்தித்துறை காவல்துறையினருடன் இணைந்து, சுப்பர்மடம கடற்கரைப் பகுதி மற்றும் பலாலி முள்ளியவளை பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம் கேரள கஞ்சாவை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! | Virakesari.lk
  24. 03 Nov, 2025 | 05:34 PM சமூக ஊடக செயற்பாட்டாளரும், யூடியூபரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான சாலிய டி.ரணவக்க (Saliya Ranawaka) தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் போல் நடித்து மக்களை ஏமாற்றியதாக அவரது I4 பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜீப் வாகனத்தில் பயணம் செய்யும் நேரடி காணொளி வெளியிட்டுள்ளார், அதில் அரசியல் காரணங்களுக்காக தான் கைது செய்யப்பட்டதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'சிங்கள' அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளர் என்று கூறப்படும் சாலிய, யூடியூப்பில் சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர் என குறிப்பிடப்படுகின்றது. 47 வயதான சாலிய டி. ரணவக்க, 2008 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் லெப்டினன்ட்டாக போர்க்களத்தில் நுழைந்தார், மேலும் தனது 12 ஆண்டு சேவையை முடித்தபோது உளவுத்துறைப் பிரிவில் கப்டனாக இருந்தார். ஈழப் போரின் போது உளவுத்துறை அதிகாரியாக தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பின்னர் அவர் "சிங்கள என்றால் என்ன?" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அரச புலனாய்வுப் பிரிவில் இருந்து ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவில் சேர்ந்த சாலிய ரணவக்க, தனது பன்னிரண்டு ஆண்டு சேவையின் போது பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைப்பாளராகப் பணியாற்றினார். அரச சாரா மட்டத்தில் அரபு வஹாபிசம் குறித்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பித்து வந்த அவர், கோட்டாபய ராஜபக்சவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 இல் சிங்கள தேசிய அமைப்பை நிறுவி அந்த அமைப்பின் மூலம், பொதுமக்களுக்கு வஹாபிசம் குறித்து கல்வி கற்பிக்கப்பட்டது. குரகல, தெவனகல, முஹுது மகா விஹாரயா மற்றும் ஸ்ரீ பாத போன்ற இடங்களில் போராட்டத் திட்டங்களைத் தொடங்கியவர் அவர்தான். அவர் குவாசி நீதிமன்றங்கள் மற்றும் மதரசா பள்ளிகளுக்கு எதிரான ஒரு எதிர்ப்பாளராக இருந்தார். வஹாபிகளைத் தேடியதற்காக கத்தாரில் முன்னதாக கைது செய்யப்பட்டார். ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜதந்திர தலையீடு காரணமாக 3 நாட்களுக்குள் இலங்கைக்குத் திரும்ப முடிந்தது. அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார், அமெரிக்க குடிமகனாக உள்ளார், மேலும் அவர் சமீபத்தில் கனடாவிற்கு வேலை வழங்குநராக அறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது! | Virakesari.lk
  25. 03 Nov, 2025 | 04:27 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் கொலைக்கு பின்னால் 5 பேர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் தலைமையில் “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் கொலை திட்டத்திற்கு பின்னால் கெஹெல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்து , தருன், பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகிய ஐவரும் பிரதானதமாக செயற்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. அத்துடன், இஷாரா செவ்வந்தியின்ட தாயாரின் இறுதி சடங்கை காணொளி எடுத்து அவருக்கு அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர் - இஷாரா செவ்வந்தி | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.