Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. கரகாட்டம் எப்படி வெஸ்ரன் ரான்ஸ் ஆனது.? - MR ராதா மரண பகிடி.! 😊
  2. ஒம்.. நிறைய உண்டு தோழர்..! 😄 தாயக பள்ளி நாட்களில் இப்படி நொந்து நூடுல்ஸ் ஆகி போனதுண்டா..? 😄
  3. படம் : துலாபாரம் (1968) இசை :G தேவராஜன் பாடியோர் :TMS & P சுசீலா வரிகள் : கண்ணதாசன் பூச்சிட்டு கன்னங்கள் பொன் மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னிரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் தெரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணிலே இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே (பூச்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் ) செல்வர் இல்லத்தில் சீருட்டும் பிள்ளைக்கு பொன் வண்ணக் கின்னத்தில் பால் கஞ்சி தண்ணீர் உப்பிட்டு காவேரி தண்ணிட்டு கவலைகள் ஆடுது சோரினிலே இதயங்கள் ஏங்குது. வாழ்வினிலே கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்டு காணும் வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு ( பூச்சிட்டு கன்னங்கள் பொன் மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னிரிலே) மாணிக்க தேர் போலே மையிட்டு பொட்டிட்டு மகாராஜன் செல்வர்கள் விளையாடும் கண்ணாடி வளையலும் காகித பூக்களும் கண்ணீர் நீரில் விளையாடும் கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்டு காணும் வரை (பூச் சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது தண்ணீரிலே)
  4. விளையாட்டுகளில் கவனம் செலுத்திய கீழடி தமிழர்கள்.! பொதுவாக ஒரு சமூகம் சிறந்த வாழ்வியலைக் கொண்டதாக இருக்கின்றது அல்லது இருந்தது என்பதினை அறிய அச்சமூதாயத்தின் வாழ்வியலின் வழிமுறைகளை அறிவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்! அந்த வாழ்வியலில் உழைப்பு, உணவு, உறக்கம் போன்றவற்றோடு சேர்ந்து விளையாட்டும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகின்றது. இந்த நூற்றாண்டின் மிக உன்னதமான கண்டுபிடிப்பான கீழடி அகழாய்வுகளில் எத்தனையோ தகவல்கள் தினம் தினம் அன்றைய மக்களின் வாழ்வியலான கட்டடக்கலை, வணிகம், விவசாயத்திற்கான கால்நடை வளர்ப்பு, உணவுக்கான விலங்கு வளர்ப்பு போன்றவற்றை தன்னிடமிருந்த எச்சங்களை வெளிபடுத்திக் கொண்டிருப்பதின் வாயிலாக உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபொருட்களான வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், சதுரங்கக் கட்டைகள் மூலம் அன்றைய சமுதாயம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சிறப்பாகக் கொண்டிருந்ததை அறிய முடிகின்றது. பெண்களையும் சக மனிதராக கருதும் மனப்பான்மை கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற பொருட்களில் அதிகமான வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையில் (தற்போதும் இவ்விளையாட்டு ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) கிடைத்திருக்கின்றது. மேலும் தாய உருட்டி விளையாட்டுக்கான பகடைக்காய்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெண்களையும் ஆண்களுக்கு சமமாகக் கருதும் மனப்பான்மை உடையவர்கள் கீழடி நகர நாகரீகத்தினர் என்பது அறிந்து கொள்ளலாம். பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி உலக நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதபடும் கிரேக்கத்திலேயே எழுந்த அதே காலகட்டத்தில், தமிழ்ச் சமூகமான கீழடியில் பெண்களையும் சமமாகக் கருதி, அவர்களும் தங்கள் களைப்பு நீங்க விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் விளையாட்டுப் பொருட்களை இருப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் உலகத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்த சமூகமாகவே இருந்திருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் அகழாய்வில் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச்சுற்றிகள், வண்டி இழுத்து விளையாடும் சக்கரங்களும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக் காய்களும் பல்வேறு அளவில் 80 எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒரு நகர நாகரீகத்தினர் தன்னுடைய சக மாந்தர்கள் எப்படி தங்களின் வாழ்வியலின் பொழுதுகளை திறம்படக் கழித்திட வேண்டும் என்பதை கீழடி பாடம் நடத்துகின்றது. நம்முடைய நிலை கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்தத் தொல்பொருட்களின் மூலம் தமிழர் வரலாறு நமக்கு பாடம் ஒன்றை நடத்துகின்றது. நாகரீகமற்றவர்கள் எனக் கிண்டலடிக்கப்படும் ஆதி கால மக்கள் தத்தமது வாழ்வியலை சிறப்பாக அமைத்திருக்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கி வாழ்வியலை செம்மையாக்கி வேலை, ஊண், உறக்கம், ஓய்வு என திட்டமிட்டு வாழ்ந்து, தமது எச்சங்களை பின்பு ஒரு காலத்தில் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் தரமாக்கி நமக்கு அறிவுப்பாடம் எடுத்திருக்கின்றனர். நாம் நமது அண்டை வீட்டில் வசிக்கும் நெடுநாள் குடியானவனையும் கூட அறியாது ஒரு அவசர கால வாழ்க்கையினை வாழ்ந்து நமது சிறப்பான வாழ்வினை அழித்துக் கொண்டு வருகின்றோம். இயந்திரத்தனமான கார்ப்ரேட் வாழ்வு, அதில் பிழைக்கத் தெரிந்தவனைத் தவிர மீதம் உள்ளவனை மிதித்துச் சென்றிடும் போக்கு, தமது பெற்றோர்களுக்கும் - பெற்றவர்களுக்கும் - கரம் பிடித்தவளுக்கும் சிறிது நேரம் கூட ஒதுக்க இயலாத நிலை என ஒவ்வொன்றாக நாம் இழந்து கொண்டிருக்கும் விசயங்கள் ஏராளம். - நவாஸ் https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38710-2019-10-03-08-24-38
  5. சோம்பு + பல் குத்தும் குச்சி எல்லாம் அங்கயே இருக்கும் தோழர்..👍
  6. ஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்.! சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியை இன்று ஒரேநாளில் பத்தாயிரம் பேர் பார்வையிட்டுளளனர். கடந்த ஜூன் 13 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழ்வராய்ச்சிப் பணிகளால் 2600 ஆண்டுகள் தொன்மையான மனிதர்கள் பயன்படுத்திய இரட்டைச்சுவர், நேர் சுவர், வட்டச்சுவர், நீர் வழிப்பாதை, தங்க அணிமணிகள், உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன. பழந்தமிழர் பெருமையை உலகுக்கு உரைக்கும் வகையில் வெளிப்படும் கீழடி கண்டுபிடிப்புகளை நேரில் காண நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கிறார்கள். http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72533-more-than-10-thousand-people-visit-in-keezhadi-in-single-day.html
  7. ம்ம்.. மச்சகார மனுசன் நல்லா வாழ்ந்திருக்கான்..ஒரே கில்மாதான் .. 😄 டிஸ்கி: காந்தி சயந்தி
  8. சித்தி(1966) திரைப்படம் -- மேல்நாட்டு மோகம் -- M R ராதா மரண பகிடி.. ☺️
  9. படம்: தரிசனம்(1969) இசை: சூலமங்களம் ராஜலட்சுமி வரிகள்: கண்ணதாசன் பாடியோர் :T M S & L R ஈஸ்வரி இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும் இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தேடுது எனக்கும் (இது) இது காலதேவனின் கலக்கம் இதை காதல் என்பது பழக்கம் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது) பனியும் நிலவும் பொழியும் நேரம் மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலைப் போல மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தாலென்ன தினம் ஓடியாடி ஓயுமுன்னே உண்மை உணர்ந்தாலென்ன உறவுக்கு மேலே சுகம் கிடையாது அணைக்கவே தயக்கமென்ன இது ஒட்டை வீடு ஒன்பது வாசல் இதற்குள்ளே ஆசையென்ன (இது) முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும் தேடும் பாதை தானே.... பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே..... இது மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத்தேரே...... இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறி விடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு (இது)
  10. தோழர் விசுகு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.