படம் : சுபதினம்(1969)
இசை : KV மகாதேவன்
வரிகள் : வாலி
பாடியவர் : சீர்காழி
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம் (ஆண்டுக்கு)
நிறைக்குடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கு எல்லாம்
அறுவடை நாளே சுபதினம்
வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான்
அறிவுக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தான்
அன்புக்கு அதுதான் சுபதினம்
காந்தி பிறந்து விடுதலை தந்தான்
உரிமைக்கு அதுதான் சுபதினம்
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவர்க்கே அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கு எல்லாம் சுபதினம் (ஆண்டுக்கு)