படம் : ரெல்லி மாப்பிள்ளை (1968)
இசை : KV மகாதேவன்
வரிகள் : வாலி
பாடியோர் : TMS
ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்...(ஆண்டவன்)
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்..(ஆண்டவன்)
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் மேலுக்கு விலை கேட்டார்...
எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவருமில்லை..ஹஹா
அன்பை வாங்கிட எவருமில்லை.......!