படம் : பருவகாலம்(1974)
இசை : தேவராஜன்
வரிகள்: புலமைபித்தன்
பாடியோர் : மாதுரி
வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்...(வெள்ளி)
பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை..
எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும் – இனி
எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்...(வெள்ளி)
முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து
சிந்தும் புன்னகையோ – அலை
மோதும் அருவி என்னைப் போலே
இளமைக் கன்னிகையோ..
அன்னை மடியில் பிள்ளை இருந்தால்
அன்பு பெருகாதோ - கொடி
ஆசைக் கொண்டால் தழுவும் பூவின்
உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ..