நாம் தமிழ் சொற்கள் என நினைத்து அன்றாடம் பயன்படுத்தும் வடமொழிச் சொற்கள்.
1. லயித்தல் - ஒன்றோடொன்று கலத்தல்
2. மூலாதாரம் - அடிப்படை
3. சிற்பி - கம்மியன்
4. சிம்மாசனம் - அரியணை
5. சிங்கம் - அரிமா
6. தியாகம் - ஈகம்
7. திகதி - நாள்
8. பிடிவாதம் - ஒட்டாரம்
9. பிரச்சினை - சிக்கல்
10. பிரதிநிதி - நிகராளி
11. ரகசியம் - கமுக்கம்
12. ராணுவம் - படை
13. ராகம் - இசையளவு
14. ரசித்தல் - மகிழ்தல்
15. வர்ணனை - புனைவு
16. வசனம் - பேச்சு
17. வாக்கியம் - சொற்றொடர்
18. வசந்தம் - இளவேனில்
19. வாரம் - கிழமை
20. வாசனை - நறுமணம்
21. வார்த்தை - சொல்
22. வாக்குரிமை - தேர்தலுக்கான உரிமை = தேர்தலுரிமை
23. வனம் - காடு
24. சுலபம் - எளிமை
25. சமீபம் - அண்மை
26. சமுதாயம் - மக்கள் திரள்
27. சமாதானம் - நல்லமைதி
28. சமாதி - கல்லறை
29. சுவர்க்கம் - மேலுலகம்
30. நரகம் - அளறு
31. சாதனை - வினைத் திறம்
32. சாட்சி - சான்று
33. சாத்தியம் - இயல்வது
34. சந்தேகித்தல் - ஐயுறுதல்
35. சந்ததி - வழித் தோன்றல்
36. சபித்தல் - சாவமிடுதல்
37. சப்தம் - ஒலி
38. சுயம்பு - தான்தோன்றி
39. சமூகம் - குமுகம்
40. சம்பளம் - கூலி
41. சீக்கிரம் - விரைவு
42. சோதனை - ஆராய்ச்சி
43. தேவதை - பெண் பேய்
44. போதை - வெறி
45. யோசித்தல் - சிந்தித்தல்
46. சூரியன் - கதிரவன்
47. அவசியம் - இன்றியமையாமை
48. ஆரம்பம் - தொடக்கம்
49. அனுபவம்- பட்டறிவு
50. அதிசயம் - வியப்பு
நன்றி fb