Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. படம்: சீதா (1967) இசை : KV மகாதேவன் வரிகள்: கண்ணதாசன் பாடியோர் : சீீர்காழி & P சுசீலா நாடி துடிக்குது துடிக்குது - என்னை நாடி துடிக்குது துடிக்குது .. கண்ணழகு நாடி கன்னி இடை நாடி சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி கொஞ்சும் மொழி நாடி கோலமுகம் நாடி பிஞ்சு வடிவாயிருக்கும் வஞ்சிக்கனி நாடி பட்டு மெத்தை நாடி தொட்டு விளையாடி பட்டத்து ராணி என்னும் பதவியை நாடி பள்ளியறை நாடி துள்ளி விளையாடி அள்ளி அள்ளி உண்ணுகின்ற அதிசயம் நாடி சின்ன சிட்டு கோடி ஒன்றை ஒன்று நாடி சிறகினை விரிக்கின்ற காலம் தன்னை நாடி தென்னை இள நீரும் செங்கரும்புச் சாரும் உள்ளங்களில் ஊறிவரும் கனிரசம் நாடி ஆசை பிறக்குது அருகில் அழைக்குது அம்மம்மா போதும் போதும் அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது நாடி துடிக்குது துடிக்குது - என்னை நாடி துடிக்குது துடிக்குது ..
  2. மாவீரர் நினைவுகள் - சந்தோசம் மாஸ்டர் | லெப் கேணல் ராதா | எழுதியவர்: ஜூட் பிரகாஷ் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவன், அபாரமான தமிழ் மொழி ஆற்றல் படைத்தவர். அரியாலையில் இருந்து வந்து, பரி யோவானில் படித்து, உயர்தரத்தில் சித்தியெய்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பெளதீக விஞ்ஞானப் பிரிவில் (Physical Science), பட்டம் பெற்று, திருகோணமலையில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, இயக்கத்திற்குப் போனவர். எண்பதுகளில் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் தனித்துவமாக மிளிர்ந்த குணங்குறிகளிற்கு இவரும் ஒரு அடையாளம். திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்தவர். இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கிய போது, 21 ஒக்டோபர் 1987 அன்று, கோண்டாவிலில் இடம்பெற்ற ஒரு தீரமிகு சண்டையில், இந்திய இராணுவத்தின் இரண்டு தாங்கிகளை அழித்து, இந்திய இராணுவத்தை பின்வாங்கச் செய்து விட்டுத் தான், லெப் கேணல் சந்தோசம் வீரச் சாவடைந்தார். பின்வாங்கிய இந்திய இராணுவம் அடித்த ஷெல்லில் தான் சந்தோசம் மாஸ்டர் மண்ணில் சாய்ந்தார். வித்தாகி விழும் போது, உமைநேசன் என்ற இயற்பெயர் கொண்ட சந்தோசம் மாஸ்டருக்கு 28 வயது தான். 21 ஒக்டோபர் 1987 அன்று தீபாவளி நாள். கோண்டாவிலிலும் அரியாலையிலும் நடந்த சண்டைகளில் இந்திய இராணுவம் பாரிய இழப்புக்களைச் சந்தித்திருந்தது. அன்றிரவு, தீபாவளிக்கு வெடி கொளுத்தாத குறையைத் தீர்க்க, இந்திய இராணுவம் யாழ்ப்பாண நகரை ஷெல்லடியால் அதிரவைத்துக் கொண்டிருந்தது. அதே நாளில் தான் யாழ் ஆஸ்பத்திரி படுகொலைகளும் நிகழ்ந்தது. “சந்தோசம் மாஸ்டர் போறதுக்கு முதல் இந்தியனுக்கு விளையாட்டைக் காட்டிட்டு தான் போயிருக்கிறார்” என்று சனம் பேசிக் கொண்டது. “உங்கள் கொடி மலர் இங்கு மடியுது ஊர்மனை யாவிலும் சாக்குரல் கேட்குது இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை உங்களின் இராணுவம் செய்து முடிக்குது வீசும் காற்றே தூது செல்லு தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு” ≠≠===============≠======== மாவீரர் நினைவுகள்: லெப் கேணல் ராதா தென்னிலங்கையில் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்களப் பெளத்தப் பேரினவாதம் கட்டவிழுத்து விட்ட இனப்படுகொலை (pogrom), கொழும்பில் நல்ல நல்ல வேலைகளில் இருந்த இளைஞர்களையும், பிரபல பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது. கொழும்பில், Hatton National வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹரிச்சந்திரா என்ற இளைஞனையே, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இனவெறி நடவடிக்கைகள், ஆயுதம் ஏந்த வைத்து, லெப் கேணல் ராதாவாக உருவாக்கியது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவனாக வலம் வந்து, கொழும்பில் நல்ல சம்பளத்துடன் வேலையும் பார்த்துக் கொண்டு, வளமான எதிர்காலத்திற்கான கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஆற்றல் மிகு இளைஞனையும், அவன் சார்ந்த இனத்தையும் ஆயுதம் ஏந்த வைத்து, நாசமறுத்தது சிங்கள பெளத்த பேரினவதமே. விக்ரரின் வீரமரணம்திற்குப் பின்னர் மன்னார் தளபதியாகவும், கிட்டு மீதான தாக்குதலிற்குப் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாகவும் ராதா விளங்கினார். மும்மொழியாற்றலும், அதீத வாசிப்பு பழக்கமும் மிக்க ராதா, 20 மே 1987 அன்று, பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில், வீரச்சாவடையும் போது அவருக்கு வயது 31 தான். ராதாவின் தந்தையாரான கனகசபாபதி, தொண்ணூறுகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். “எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா நாங்கள் தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும் நினைவு நூறல்லவா நினைவு நூறல்லவா அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/91790/
  3. நெத்தியடி (1988) பகிடி துணை தலைவர் மேலால் போட்டு இருக்கும் கச்சி துண்டு ரிசைன் அருமை..👌
  4. பல கிளிகள் சேர்ந்தமைத்த குதிரை.👌 தேவிகாபுரம் - அம்மன் கோயில்.👍
  5. படம் : இஸ்கூல் மாஸ்ரர்(1973) இசை : MSV வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : SPB & S ஜானகி பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம் –ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ பொன்னைக் கொண்டு மாலைக் கட்டி மாலையிட வருவாயோ மாலையிட வருவாயோ (பூங்கொடியே) கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடிவிட்டேன் கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஓடிவிடும் கன்னங்களில் என்னனவோ மின்னல் விளையாடும் தாங்கவோ தழுவவோ உண்ணவோ உருகவோ வருஷம் மாசம் போக போக வளரும் ஆசை தீராது தீராது தீராது (பூங்கொடியோ) பூமியிலே வானம் வந்து போதைக் கொண்டு சேர்ந்துவிடும் சேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும் வெள்ளத்திலே பிள்ளைகள்போல் முல்லை விளையாடும் எடுக்கவோ தொடுக்கவோ கொடுக்கவோ முடிக்கவோ பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால் போதாதோ போதாதோ போதாதோ (பூங்கொடியே)..
  6. இஸ்கூல் புள்ளிங்கள அப்பவ கவர் செய்திருக்கினம் ..👍
  7. " இப்போ கண் நல்லா தெரியுது ரோக்குத்தர் .! " ☺️..😊 1960 களிலேய இப்படி..👌
  8. ஸ்ரெமப்புகள் பறந்த, உடைந்த தருணம்கள் :: பகுதி -1 ..👌
  9. யாழ்ப்பாணம் 1930 - 1940 http://www.noolaham.org/wiki/index.php/மலரும்_நினைவுகள் இலவசமாக தரவிறக்கி அக்காலத்திற்கு செல்ல ..👍
  10. படம் : தாலி பாக்கியம்(1966) இசை: K.V மகா தேவன் வரிகள்: வாலி பாடியோர் : TMS & சுசீலா கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை (கண்) அந்திப் பொழுது போக போக ஆசை வந்தது – அது முதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது.........(கண்) இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ – இல்லை பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா - அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா..........(கண்) நல்ல கோடைக்கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் – உடல் குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன் இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன – உன் பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன.............(கண்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.