Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5161
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by MEERA

  1. அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக செய்து முடிக்கலாம். தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
  2. அடுத்த தடவை நீங்கள் Wembley இல் உள்ள Ganapathy cash & carry க்கு செல்லும் போது கடையின் பின் பக்கம் மரக்கறிகள் வைத்திருக்கும் Cool Room வாசலுக்கு அண்மையில் இடது பக்கமாக பல brand களில் இந்த மஞ்சள் கடலை உள்ளது. வாங்கிப் பாருங்கள்.
  3. நிச்சயமாக இல்லை அண்ணா. அரசாங்கமே கொள்ளயடிக்கும் போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அதனால் தான் விலை கூட என்றாலும் நான் பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி விற்கும் கடைகளை நாடுவது. நாங்கள் என்னதான் வேட்டியைக் கட்டி வெறுங்காலுடன் போனாலும் எம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஏற்கனவே பலர் கூறியது போல் கடை வைத்திருக்கும் நண்பன் கூறியது …..,. எமது தோல், வாசனைத் திரவியங்கள், கைத் தொலைபேசி & Cover, நகைகள், கைப்பைகள் ( உள்ளூர் கைப்பைகள் ஏதாவது ஓரிடத்தில் தேய்ந்து கறுப்பாக ஏதாவது ஒட்டி அல்லது சிப் இற்கு அண்மையாக சிறிதளவு தூசி படித்து இருக்கும்) , உடுப்புகளின் தன்மை ( சாரமோ வேட்டியோ புதிதாக இருக்கும்) அதேபோல் காலணிகள் ( பாட்டா செருப்பு என்றாலும் புதிதாக இருக்கும்) மிக முக்கியம் Self hygiene சுய சுத்தம். இப்படி பல….
  4. இவ்வகையான தொலைக்கட்சிகள் 100% உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டு நிதி உதவின்றி வாங்கப்படுகின்றனவா?
  5. சிறீலங்காவில் அரசாங்கமே உள்ளூர் வாசிகளிக்கு ஓர் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு ஓர் கட்டணம் என்று நிர்ணயம் செய்யும் போது இது பெரிய விடயம் அல்ல. ஆனால் காவல்துறையும் நீதிமன்றும் தலையிடுகிறது என்றால் விடயம் சற்று பாரதூரமானது. ஆனால் பிரித்தானியாவில் நீங்கள் பின்லாந்துக்காரான் என்றாலும் பிரித்தானியக்காரன் என்றாலும் கட்டணம் ஒன்றே!
  6. கோசான் 6 மாதங்கள் - 180 days. 5 வருட இந்திய விசாவிற்கு $80 ஆனால் இவை $500 ஆம்.
  7. சிறீலங்காவிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் அளிக்கிறேன். ஆனால் Local Market Quality க்கும் Export Quality க்கும் வித்தியாசம் இருக்கும் என நினைக்கின்றேன். மேலும் வெளிநாட்டிற்கு என்றால் எந்த வியாபாரியும் விலையை கூட்டியே சொல்வார்கள்.
  8. மறுபடியுமா? 2022/2023 இல் இருந்து கட்டாயமாக்கி உள்ளார்கள். வெளிநாட்டில் ஏற்கனவே சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கே சிறீலங்காவில் மட்டும் செல்லுபடியாகும் வகையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.
  9. இந்த படங்களை வைத்து சிறீலங்காவின் பொருளாதார நிலையினை கணிக்கும் உங்களின் திறன் அற்புதம்.
  10. காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை. தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர். உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..
  11. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடை தூரத்திலேயே Hotel உள்ளது (பெயர் மறந்துவிட்டது - Restaurant சேர்ந்தே உள்ளது) திருச்செந்தூரில் Hotel Chitra Park ( Restaurant இல்லை) சில நிமிட நடை தூரம்.
  12. ஓர் சரக்கு கப்பல் ஓர் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வருகிறது என்றால் அந்த கப்பலில் உள்ள எல்லா கொள்கலன்களும் அங்குள்ள துறைமுகத்தில் இறக்கப்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் ஓர் பெரிய துறைமுகத்திலிருந்து அண்மையிலுள்ள துறைமுகங்களுக்கு சிறிய Feeders மூலம் கொண்டு செல்லப்படும்.
  13. ஏற்கனவே மேற்குலகின் செல்லப் பிள்ளையான ரணில் பிரதமர், மேற்குலகின் மறைமுக கரங்களின் பிடியில் மைத்திரி. அந்நிலையில் மேற்குலகு குண்டுத் தாக்குதலை செய்ய வேண்டிய காரணம் என்ன?
  14. நன்றி அண்ணா…. ஆனால் நாம் சிலதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… 2019 நவம்பரில் ஓர் பிரித்தானிய பவுண்ட்ஸ் 230/= இன்று 04/04/24 371/=. ஆனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு கூடியுள்ளன. கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்த பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் சில அத்தியாவசிய பொருட்கள். அதே போல் அங்குள்ள 50% மேற்பட்ட தமிழ் இளம் சமுதாயம் ஒற்றை சிறீலங்காவிற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.
  15. @Kapithan யாருக்கு சாதகம்? சிறீலங்கா தமிழ் கிறீஸ்தவர்களை அழிப்பதற்கு அனுமதித்த மேற்குலகை ஆதரிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?
  16. இன்றுடன் மயிலிட்டி பிரச்சனையை தீர்த்து வைத்தாச்சு….. மன்னிக்கணும் நூத்து வைத்தாச்சு
  17. சாதான்… கோசான் கூறுவதை பலர் ஆமோதிக்கிறார்களே? அதுவும் சிறீலங்கா பக்கம் அண்மையில் போகாதவர்கள்…. சென்றவருடம் போனவர்களின் கருத்துக்கள் கூட 2024 இன் நிலை என்று மறுதலிக்கப்படுகிறதே?
  18. எனக்கு தெரிந்த கடைக்காரர்களிடம் விசாரித்ததில் எள்ளுப்பாகு இங்கேயே தயாரிக்கப்படுகிறது. மேலும் கடைக்காரர்களின் இலாபம் 40% ற்கும் மேல். விற்பனை விலை £ 3.50 எனில் கொள்வனவு விலை ஆகக் குறைந்தது £ 2.50. மேலும் இங்கு 1kg எள்ளின் விலை £ 12.00 https://www.tesco.com/groceries/en-GB/products/259652136 மணித்தியாலத்திற்கு ஆகக்குறைந்தது £ 8 சம்பளம் என்று வைத்துக்கொண்டாலும் ஒருவரால் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை எள்ளுப் பாகினை தயாரிக்க முடியும்? அண்ணளவாக 50 எனின் ஓர் எள்ளுப் பாகினை தயாரிக்கும் செயவு 0.16p. இனி மின்சாரக் கட்டணம் தயாரிப்பு செய்பவரின் வரி உட்பட மற்றைய செலவுகளை கூட்டிப் பாருங்கள்.
  19. “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.