Everything posted by குமாரசாமி
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இலங்கையில் நடந்த விடுதலை போர் உங்களுக்கு நியாயமாக தெரிந்ததா?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கொண்டாட்ட நிகழ்வுகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வர எனது குடும்பத்தை இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்.கூடி நின்று ஒரு குடும்பத்தினர்கள் போல் படங்கள் எடுத்துக்கொள்கின்றோம். நன்றிகளுடன் விடைபெறும் நேரத்தில் சிறித்தம்பியரிடம் கொஞ்ச பலகாரம் கட்டித்தரவா என கேட்டேன். இல்லை வேண்டாம் என்றார்.😂
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு தருணம் வர பாஞ்ச் ஐயா அவர்கள் சரி வெளிக்கிடுவம் என ஒரு சமிக்கையை காட்ட நானோ இருங்கள் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என சொல்லிவிட்டு பார்க்க அவர்களோ சம்பிரதாய தட்டுக்களுடன் வரிசையில் நின்றிருந்தார்கள். நிலமையை எடுத்துக்கூற அவர்களும் பொறுமையுடன் இருந்தார்கள். இருந்தாலும் பாஞ்ச் ஐயா அவர்களுக்கு ஏற்கனவே ஒரு நிகழ்ச்சி போகவேண்டி இருந்ததை நானும் உணரவில்லை.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன். ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம். இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நன்றியுணர்சியாளர்கள் அரசியல் கதைக்க வெளிக்கிட்டால் முதலில் சிங்கள அரசிற்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்.ஓசியில படிப்பு தந்து ஓசியில பிஸ்கட்டும் தந்து...ஓசியில அரிசி பருப்பும் தந்து....ஒசியில கூப்பன்மாவும் தந்து படிக்க வைச்சு ஆளாக்கி விட்ட சிங்கள மாத்தயாக்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நன்றியுணர்ச்சி வேறு. இவர்கள் செய்யும் போர் நடவடிக்கைகள் அனைத்திற்கும் கோயில் மாடு போல் தலையாட்டுவது வேறு. சுத்த ஜேர்மனியர்களும் போர் நடவடிக்களுக்கு எதிராகத்தான் நிற்கின்றார்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஜேர்மனிக்கும் நான் நன்றியுள்ளவன்.கடமைப்பட்டவன். 👈 நான் வேலை செய்கின்றேன் அதற்கு வரி கட்டுகின்றேன்.ஓய்வூதியத்திற்கு பணம் கட்டுகின்றேன். மருத்துவ காப்புறுதி கட்டுகின்றேன். இந்த நாட்டிலேயே பொருட்கள் வாங்குகின்றேன்.அதற்கு வரி கட்டுகின்றேன். கார் ஓடுகின்றேன். அதற்கு வரி கட்டுகின்றேன். வீதியில் கார் ஓடுகின்றேன் அதற்கும் வரி கட்டுகின்றேன்.பெற்றோல் அடிக்கின்றேன் அதற்கும் வரி கட்டுகின்றேன். வீடு வைத்திருக்கின்றேன். அதற்கும் வரி கட்டுகின்றேன்.மின்சாரம்,காஸ் எல்லாவற்றுக்கும் கட்டணமும் வரியும் கட்டுகின்றேன். தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகின்றேன்.அது வெளியில் போகவும் கட்டணமும் வரியும் சேர்த்து கட்டுகின்றேன். இரண்டு வேலை செய்கின்றேன். இரண்டாவது வேலைக்கு இரட்டிப்பு வரி கட்டுகின்றேன். கடைக்கு சாப்பிட போனால் வரி கட்டுகின்றேன். ஆக... மொத்தத்தில் எல்லாம் என்பணம்💪. அடைக்கலத்தை தவிர.... அது சரி விசுகர்! கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் தானே வாழ்கின்றோம்.இந்த நாட்டவர்களை போல் எமக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.இந்த நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்களை போல்....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பிடி ஆளுக்காள், நாட்டுக்கு நாடு சண்டை பிடிச்சிட்டால் கன பிரச்சனையள் குறையும் 😁
-
பங்களாதேசின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசுபெற்ற முகமட் யூனுஸ் - மாணவர்களின் வேண்டுகோள் ஏற்பு
ம்..க்ம்....😎 வேலைக்கு ஆக்களை வைச்சிட்டு பிறகு நான் தான் 24மணிநேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு திரியோணும் 😂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே🤣 விசுகர் ஞாபகம் வருதே😂 ஏறோபிளொட்ல ஏறி வந்த ஞாபகம் வருதே😄 மொஸ்கோவில தடக்குப்பட்ட ஞாபகம் வருதே😁 படை படையாய் ஏறோபிளொட்ல ஏறிவந்து..😅 ஜேர்மனிக்கு வந்த ஞாபகம் வருதே😀 விசுகர் ஞாபகம் வருதே😊 நன்றி மறந்ததேனோ விசுகர்?😒
-
பங்களாதேசின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசுபெற்ற முகமட் யூனுஸ் - மாணவர்களின் வேண்டுகோள் ஏற்பு
நித்தியர் வழி எண்டாலும் நம்ம வழி தனி வழி.... 😂
-
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!
ஊரிலை பெரிய உத்தியோகத்தில இருக்கிற பலருக்கு அரசாங்க வாகன வசதிகள் இருக்கு. அவையள்.... சந்தைக்கு சாமான் சக்கட்டையள் வாங்கப்போறதும் அதிலைதான். தங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விடுறதும் அதிலை தான் அப்பப்ப கோயில் விசேசங்களுக்கும் அதிலை தான்... எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் அந்த வாகன றைவர் அரசாங்கத்தாலை நியமிக்கப்பட்டவர்தான்.இருந்தாலும் அந்த பெரிய கவுண்மேந்து உத்தியோகத்தர் வீட்டுக்கு அவர் ஒரு குட்டி வீட்டுவேலைகாரர் மாதிரி இருப்பார். 😁
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நானும் போர் ஆதரவாளன் இல்லை தான்..ஆனால் உக்ரேனுக்கு வந்தால் இரத்தம் மற்ற நாட்டு போர்கள் நடந்து மக்கள் அழிந்தால் தக்காளி சட்னி என்கிறார்கள் பாருங்கோ அங்கதான் நான் முரண்படுகின்றன் தம்பி...
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உதெல்லாம் பெரிய விசயமில்லை. ரஷ்யா தனக்கு தேவையானதை பிடிச்சு வைச்சிருக்கு. அதுவே காணும்.செலென்ஸ்கி இப்ப அடிச்சது சின்ன கிராமம் எண்டால் அடுத்தது உக்ரேன்ர பெரிய சிற்றிகள் கவனம் தம்பி... 🤣
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
ஆசியாவைப்பற்றி சொல்லத்தெரியேல்லை. ஆனால் ஐரோப்பாவுக்குள்ள நடந்த போரில அமெரிக்காவுக்கு பயங்கர வெற்றி. அவைக்கொரு யூனியன்...அதுக்கொரு யூரோ 😁
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பங்களாதேஷ்ல பாக்கிஸ்தான் 53 வருசம் கழிச்சு தன்ரை வேலைய காட்டியிருக்கு எண்டு கதைக்கினம் 😄
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பிறகென்ன......இனி ரஷ்யா துலைஞ்சான். புட்டின் இரானுக்கு ஓட வேண்டி வரப்போகுது 🤣
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
சீனாவும் இந்தியாவும் என்ன வெள்ளி பார்க்கினமே? 😂
-
பங்களாதேசின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசுபெற்ற முகமட் யூனுஸ் - மாணவர்களின் வேண்டுகோள் ஏற்பு
சட்டுப்புட்டுடெண்டு ஒரு முடிவுக்கு வாங்க.....நமக்கும் ஆசா பாசங்கள் இருக்கத்தானே செய்யும் 😄
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
இவர் கோத்தபாயவின்ர ஆள் எண்டு நினைக்கிறன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ரை செல்லம்....
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
அமெரிக்க அரசும் அதன் அடிப்படை அரசியல் கொள்கைவாதிகளும் இனி வரும் காலங்களில் இந்திய கொள்கையை எதிர்க்கப்போவதுமில்லை.எதிர்த்து நிற்கப்போவதுமில்லை.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சம்பந்தன் வரலாறு முடிந்த பின்னர் ஏனைய அரசியல்வாதிகளை எதிர்க்க வேண்டியதில்லை.அடுத்த ஓரிரு வருடங்களில் என்ன நடக்கின்றது என பார்க்கலாம். அடுத்த இரண்டு வருட காலங்களில் குடி மூழ்கிவிடப்போவதில்லை.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
இலங்கை அரச வைத்தியசாலைகளில் தாதிமார்கள்/வைத்தியர்களின் துர்ஷ்பிரயோகங்கள் இல்லையென்றால் தான் உலக அதிசயம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதன் தோல் நிறம் என்ன? எந்த கண்டத்தை சேர்ந்தது? எந்த நாட்டை சேர்ந்தது? இதன் மொழி என்ன? இது என்ன மதம்? இதன் சாதி என்ன? இது ஆணா பெண்ணா? இதன் வரலாறை சொல்ல முடியுமா?