Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13571
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. 15 hours ago, ஈழப்பிரியன் said:

    நாளை நாளை என்றால்

    இல்லை இல்லை என்றே அர்த்தம்.

    பொதுவேட்பாளர் பற்றி ஆராய்கிறோம் என்பது இது தான்.

    ஐயா கதைக்க பேசவே மாட்டார்.

    தனது முடிவை எப்படி சுமந்திரனிடம் சொன்னார்?

    ஏன் சுமந்திரனின் காதுக்குள் மட்டும் சொன்னார்?

    அப்போ யாருக்கு ஆதரவு வழங்க போகிறார்?

    அந்தக் காலத்தில் பொட்டர் நடராசா என்று ஒருவர் இருந்தார். இவர் தந்தை செல்வா உரத்துப் பேச முடியாத போது அவரது பேச்சை உரத்துச் சொல்லும் வேலை பார்த்தவர்..! தந்தை ஒன்று சொல்ல இவர் வேறொன்று சொல்வார். சரித்திரம் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது.

    • Haha 1
  2. நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குள் மேற்சட்டையுடன் போக விட மாட்டார்கள். எனினும் விஹாரைக்கு வரும் ஆமிக்காரர் யூனிபோமுடன் உட் செல்வார்கள். ஐயரும் அவர்களுக்கு வரிசையை விலக்கி முன்னுரிமை அளிப்பதைக் கவனித்தேன். ஆனால் சப்பாத்து அணியவில்லை.

    • Thanks 1
  3. 1 hour ago, விசுகு said:

    இவை அனைத்தையும் விட அதிக விலையானது சிறி லிங்கன் விமான பயண ரிக்கற். அப்படியானால் எப்படி???

    சிறிலங்கனின் முக்கிய பிரச்சனை குத்தகைக்கு விமானங்களை எடுத்து ஓடுவது...!

    மூல தனம் இல்லாதது தான் முக்கிய பிரச்சனை போல உள்ளது...!

    பாலைக் கறக்கும் போது...கண்டுக்கும் கொஞ்சமாவது விட வேணும் தானே!

    • Haha 1
  4. அவுஸ் விமான நிறுவனத்தின் வரியின் பின்னான நிகர இலாபம் $1.74 பில்லியன் (2023).

    பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் $3.8 பில்லியன்.

    எயர் பிரான்ஸ் $1.1 பில்லியன்.

    சிறி லங்கன் ????

    • Thanks 1
  5. 11 hours ago, Kadancha said:

    இது நான் நினைகிறேன், இயற்கையானா நீர் தேக்கத்தில் ஒரு பகுதியை வலை மூலம் பிரித்து, அடிப்பபரப்பையும் வலை மூலம் பிரித்து கட்டப்பட்ட மிக ஆழம் குறைந்த செயற்கை  நீர் தேக்கம்.

    (படத்தில் உள்ளவரால் எப்படி நிற்க முடிகிறது?)
     

    அநேகமாக  எல்லா மேற்றப்பரப்பு, நீந்தும் (ஆழ் நீர்) மீன்களுக்கு நீந்தும் காற்றுப் பை (swim bladder) இருக்கிறது. (இப்படி இல்லாதது சுறாவும், திருக்கையும், ஆனால், அவற்றின் ஈரலில் உள்ள எண்ணெய் மிதத்தலுக்கு உதவுகிறது).

    எனவே, (மேற்பரப்பு) சூழலில் ஏதும் மாற்றம் என்றால், விரைவாக ஆழத்துக்கு செல்லும், குடியகலும் (schooling, ஆங்கிலத்தில், ஒரே திசையில் செல்லும் மீன் குழு) தன்மை கொண்டவை.     

    (அடைக்கப்படாமல் இருந்தால் இவை அநேகமாக தப்பி இருக்கும்)   

    வணக்கம், கடஞ்சா!

    இது போல அவுஸ் நீர்த்தேங்கங்களிலிம் இவ்வாறு நிகழ்வதுண்டு. நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால், நீரில் கரைந்திருக்கும் பிராணவாயுவின் அளவு குறைவடையும். இது மீன்கள் இறக்கக் காரணமாக அமைகின்றது.

    • Thanks 1
  6. எனக்கென்னவோ ‘அடானி’ வாசம் வருகின்றது…! இந்தியாவிலிருந்து ஒரு நல்லதும் உலகத்துக்குக் கிடைக்காது…!

  7. நன்றி பிரபா...! மூனி மூனி மிகவும் பிடித்த இடம்..! வியட்னாமியர்களும், சீனர்களும் ஒரு சீசனுக்கு சீனத் தொப்பிகளுடன் நின்று றால் பிடிப்பதைக் கண்டுள்ளேன்..! எவ்வளவு இனங்கள் இணக்கமாக வாழும் நாடு என்று அவுஸ்திரேலியா நினைத்துப் பெருமைப்படுவது உண்டு! இந்தத் தீவைப் பற்றி உங்கள் மூலம் தான் அறிந்தேன்! ஒரு முறை போகத்தான் என்னும் ஆவலை, உங்கள் எழுத்துக்களும் படங்களும் ஏற்படுத்தி விட்டன! எனக்கும் தனிமை பிடிக்கும்!

    • Thanks 1
  8. ‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..! 

    இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..!

    மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!

    • Like 1
    • Thanks 1
  9. சலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..!

    ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…!

    வாழ்த்துக்கள், சுவியர்…!

     

     

    • Like 1
  10. 13 hours ago, விசுகு said:

    எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம். 

    விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!

    • Like 2
    • Sad 1
  11. இப்படியானவர்களின் நெற்றிகளில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக சூடாக்கிய இரும்பினால் ஒரு விசேட குறி சுட்டு விடலாம்..! இது கட்டாயம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்..!

  12. தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...!

    நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...!

    நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..!  நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!

    • Like 5
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.