Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. தமிழகத்தில், டீம்காவிடம் பணம் வாங்கி, ஊடகம் நடத்துகிறார்கள் என்பது நிரூபணம் ஆன குற்ற சாட்டு. இதில் எங்கே பொறுப்பான ஊடகங்கள்? பிபிசி தமிழ் கூட, தவறான தலைப்பு, பாலியல் விவகாரம் என்று போடுகிறதே. இந்த பெண், பணம் பறிக்க, எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார் என்று எந்த படிக்காதவர்க்ளுக்கும் தெரிகிறதே. மூளை கிளீன் ஆனவர்கள், கிளீன் ஆகாதவர்களுக்காக வீடியோ ஒன்றை போடலாமே.... தயவு செய்து உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள். அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று கருதி கொண்டு அவர்களுக்கு புத்தி சொல்கிறேன் என்று வரவேண்டாமே... சாதாரணமாக கருத்தாடும் உறவுகளிடையே, தீடீரென வந்து, கொழுவி விட்டு, ஒதுங்கி கூத்து பார்த்து, இன்பமுறும் வேலை வேணாமே. 🤣
  2. எனெக்கெண்டா இது புரளிச்செய்தி போலவே படுகிறது. இந்த விசர்க் கெகிளையோட டீல் போட்டு பகிர, அல்லிக்கு என்ன விசரே? ஒரு படம் எடுத்தால் போதுமே.... வந்து நிப்பினமே. ஆகவே, இது சும்மா பம்மாத்து. ஆனால் வேற பிசினஸ் டீல் இருக்கலாம்.
  3. ஏன் அவ்வளவு தூரம், தமிழகத்தில், படித்துக்கொண்டிருந்த ஈழத்துப்பெண்ணே, நடிகர் விஜய்யின் மனைவி. தமிழகத்தில் இருவகை அகதிகள். ஒன்று அரசினை சார்ந்து, முகாம்களில் தங்கி இருப்போர். அடுத்து, தாமே வீடுகள் எடுத்து, தங்கி இருப்போர். களவுறவு நிழலியின் குடுமபத்தினர் கூட தமிழகத்தில் சென்னையில் உள்ளதாக சொன்ன நினைவு. எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் மகள்,தமிழகத்தில் தங்கி படித்து டாக்டர் ஆகி அங்கேயே ஒருவரை மணந்து கொண்டார். நான் சொல்ல வந்தது, கலியாணம் பேசி, (arranged marriage) மண உறவில் கலக்கும் நிலையில் இருபக்க தமிழ் சமூகம் இல்லை என்பதே. காரணம் இருபக்கமும் உள்ள சட்ட சிக்கல், கலாசார சிக்கல். சீமான் சொல்லி இருந்தால், அது அந்த நேரத்தில், பெண்கள் இராணுவத்தால் பலாத்காரமாக பாதிக்கப்பட்டார்கள் என்ற கழிவிரக்க உணர்வு என்று மட்டுமே சொல்ல முடியும்.
  4. ஆக மொத்தம், அண்ணன் இப்ப எல்லா மீடியாவிலும் கவர் பண்ணப் படுகிறார். லட்சுமி கடாச்சம்... 🤣
  5. அல்லி அந்த விசயத்தில கில்லி ஓணாண்டியார் வாயை கிண்டிணால் கொட்டுவர்
  6. தங்கச்சிகளும் நினைத்திருப்பர் அல்லவா? அதே கேள்விக்குறியுடனே எனது கருத்தும் அமைந்தது!! அப்பத்தானே, அண்ணீ கிளம்பீ, கையீல காசில்லாத, சிறையில கம்பி எண்ணும் கபோதி வேணாம் என்று பெங்களூரூ போனங்கண்ணா. குழம்பியிருப்பாரூ. நீங்க வேற!! 😜
  7. நீங்கள் நம்பினீர்களோ? அல்லது பொம்பிள ரெடியா வைச்சிரிந்தனியளோ எண்டு யாரும் கேக்கப் போகினமே! 😂
  8. இவரையும் விசாரிக்கவேண்டும். கடற்படையை சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர் ஆள் அட்மிரல்... எனக்கெண்டா இவரில சந்தேகம். புடிச்சு விசாரீயூங்க!! 🥱
  9. அது ஆர்வக்கோளாறில் ஒரு விருப்பமாக சொன்னார். சரி, அவரா இமிக்கிரேசன் ஓபீஸ் வைத்து விசா வழங்கிறார்? அப்படி சொல்லியிருந்தாலும், நம்மூர் பெட்டயள், கலியாணம் எண்டால் இந்தியாவுக்கு போவினமா, மேற்கே போகும் பிளேன் ஏறுவினமா? கழுவின மீனில, நழுவின மீன்கள் எல்லோ!!
  10. அந்த தமிழச்சியின் இயற்பெயர் ஆனந்தி நாயுடு என்கிறார்கள். இது பழைய பதிவு என்று நிணைக்கிறேன்.
  11. 12 இலட்சம் பேச்சு! இப்ப டிமாண்ட் ஒரு கோடி! வீரலட்சுமிக்கு தனியா கொடுத்திரனுமாம். அந்த கண்டிசணில் தான் மீள்ளிணைவு. கூப்பிட்டவர்கள் போதுமடா சாமி என்று தலய பிச்சுகிறார்களாம். இடைல, திமுக தன்னை சீமான் எதிர் அரசியலுக்கு பயன்படுத்த கூடாது என்று ஒரு வீடியோ ஓடுது. ஆக காசு தான் குறி. இதுல டீம்கா எமகாதகர்கள் என்றாலும் பெங்களூரு லட்சுமீ, மகா அலேட் பேர்வழி. கைல காசு, வாயில தோசை ரைப். நம்மாளுக்கும் போலீசீல ஆளுங்க இருப்பாங்க தானே. என்ன ஒடீட்டு இருக்கு என்று புல் அப்டேட்டு. ஆக.... உன்னிப்பாக அவதானிப்போம்!! 🥸
  12. தேரவாத பெளத்தம??? ம்... டொன் அல்வின் ராஜபக்சேவின் மகன்களுக்கு அதனுடன் என்ன தொடர்பு. போலிப் பெளத்தர்கள்.
  13. பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஜோலா தனது கடைசி நாவலை 'வெரைட்' [உண்மை] என்று தலைப்பிட்டு இந்த அழியாத வார்த்தைகளை எழுதினார். "உண்மை நிலத்தடியில் புதைக்கப்படும் போது அது வளரும், அது மூச்சுத் திணறும், அது ஒரு வெடிக்கும் சக்தியை சேகரிக்கிறது, அது வெடிக்கும் நாளில், அது எல்லாவற்றையும் வெடிக்கச் செய்கிறது." வரலாற்றிலிருந்து மக்களும் அரசாங்கங்களும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று ஹெகல் தனது வரலாற்றுத் தத்துவத்தில் குறிப்பிட்டார். இந்த அவதானிப்பு நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. சேனல் 4 வீடியோ அதன் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது ஈஸ்டர் ஞாயிறு படுகொலை பற்றிய புதிய விசாரணையைத் தூண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகள் தொடர்பில் சனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்தியமை தொடர்பில் சர்வதேச உதவியுடன் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதிலை வாத நுணுக்கத்துடன் தலைப்பிட்டுள்ளார். அவர் அதை "இலங்கையில் சமீபத்திய சேனல் 4 படம்" என்று அழைக்கிறார். அவரது பதில், சனல் 4 இன் ஈஸ்டர் ஞாயிறு கதையின் முன்னுரையில் புத்திசாலித்தனமாக பிணைக்கப்பட்ட ‘லசந்த விக்கிரமதுங்கவின் கொடூரமான படுகொலையை இன்னும் தீர்க்கப்படாத பட்டப்பகலில் கொலை செய்ததை புறக்கணிக்கிறது. அவரது செய்திக்குறிப்பு, சனல் 4 குற்றச்சாட்டுகளை 'புனைவுகள்' மற்றும் 'வெற்று முட்டாள்தனம்' என்று நிராகரிக்க முற்படுகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்பினை விசாரணை செய்த, CID இன் உயர்மட்ட புலனாய்வாளரின் வருந்தத்தக்க மற்றும் அவமானகரமான இடமாற்றம் அவரது ஜனாதிபதி என்ற ஆளுமையின் உரிமையினால் கட்டளையிடப்பட்ட கட்டாயம், (வழக்கினை சிறப்பாக விசாரிக்க) என்று அவர் விளக்குகிறார். சணல் 4 ஊடக அறிக்கையின்படி யாரும் யாரையும் ‘நாய்’ என்று அழைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் ஆவேசமான ஆதரவில் இருக்கும் ஒரு 'வியத்மக' தலைவர் தொலைக்காட்சியில், ஒரு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஜனாதிபதியாக வேறொருவரை வெற்றிபெறச் செய்ய தங்களைத் தாங்களே வெடிவைத்து அழித்துக் கொள்ளும் எண்ணம் வெறுமனே அபத்தமானது, மற்றும் சிந்திக்க முடியாதது என்று கூறினார். அது உண்மையில் சரியான கருத்து. ஆனால் இங்குதான் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கான நமது இயலாமை பற்றிய ஹெகலின் கருத்து விளையாடுகிறது. வேலுப்பிள்ளை பிரபாகரன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு வழி வகுப்பார் என்று யார் நினைத்திருக்க முடியாது. எனவே, வரலாறு ஏதேனும் உதவியாக இருந்தால், நிஜமாகவே நினைத்துப் பார்க்க முடியாததும், சொல்ல முடியாததும் நடக்கும். சனல் 4 காணொளியானது, ‘பெருமை’ மற்றும் ‘தேசபக்தியை’ ஆயுதமாக்க இராஜபக்ஷ வம்சத்தின் வெட்கக்கேடான முயற்சியை கேலி செய்யும் ஒளிப்பதிவு ஆகும். அதன் நோக்கங்கள் மற்றும் நேரத்தைப் பற்றி ஒருவர் உடன்படலாம் அல்லது உடன்படாமல் இருக்கலாம். எளிமையான உண்மை வெளிப்படையானது. நீண்ட காலமாக நாங்கள் அமைதியாக அல்லது உதவியற்ற நிலையில் உலகளவில் கடைபிடிக்கப்பட்ட நீதியின் நெறிமுறைகளை சீர்குலைப்பதைப் பார்த்து வருகிறோம், ஏற்றுக்கொண்டோம் . வன்முறை மிக்க பிரிவினைவாதத்தின் இராணுவ தோல்வியானது சிறுபான்மையினரை களங்கப்படுத்த பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிந்தைய இராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் பிரதான ஊடகங்கள் மிதமான அல்லது அளவீடு செய்யப்பட்ட கருத்துகளுக்கு வற்புறுத்தப்பட்டன. ஆளும் வர்க்கத்தால் அநீதி இழைக்கப்படும்போது மன்னிப்புக் கேட்க ஏராளமான, ஆனால் வீணடிக்கப்பட்ட, சந்தர்ப்பங்கள் இருந்தன. மனிதர்களால் நீதி வழங்கப்படுகிறது. மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ராபர்ட் ஜாக்சன் பிரபலமாக கூறினார், "நாங்கள் தவறு செய்ய முடியாதவர்கள் என்பதால் நாங்கள் இறுதி இல்லை, ஆனால் நாங்கள் இறுதியானவர்கள் என்பதால் மட்டுமே நாங்கள் தவறற்றவர்கள்." சமூகத்தில், மருத்துவர்கள் தவறு செய்வது போலவே, நீதிபதிகள், நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்கள் தவறு செய்யலாம். ஆனால் சனல் 4 கதை பிழையைப் பற்றியது அல்ல, ஆனால் பிழை, திரித்தல் அல்லது இரண்டிற்கும் வருவதற்கான வேண்டுமென்றே திசை திருப்பும் தீர்மானம். E.C என, ஹியூஸ் சமூகவியலில் தனது உன்னதமான வர்ணனையில் குறிப்பிடுகிறார் 'ஆண்களும் அவர்களின் வேலையும்' எந்த மனித முயற்சியும் பிழையிலிருந்து முற்றிலும் விடுபடாது. முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த கட்டுக்கதை மகிந்த ராஜபக்சவை தவறு செய்ய முடியாதவராக ஆக்கியது. அவர் நாட்டின் ‘அப்பாச்சி’ ஆகினார். ‘அப்பாச்சி’ அனைவரும் தேசபக்தர்கள், நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் இல்லை என்று முடிவு செய்தார். நிகழ்காலத்தை உருவாக்குதல்: வரலாறு பாரம்பரியமாக இலங்கையில் போருக்குப் பிந்தைய தேசபக்தி” என்ற கட்டுரையை போர் முடிவுக்கு வந்த உடனேயே பேராசிரியர் நீரா விக்கிரமசிங்க எழுதினார். பாரம்பரியத்திற்குத் திரும்புதல் என்ற போர்வையில் பழங்குடியினரின் காட்டுமிராண்டித்தன வழிபாட்டு முறைக்கு பின்னோக்கி செல்வது பற்றிய அவரது புத்திசாலித்தனமான மற்றும் தீர்க்கதரிசன வாசிப்பை மறுபரிசீலனை செய்ய வாசகர்களை நான் அழைக்கிறேன். குறைபாடுள்ள விசாரணை எங்களுக்கு பயனுள்ள நீதியை வழங்காது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நமது இறையாண்மைக் கடனை மறுசீரமைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். IMF இன் உத்தரவின் பேரில், நாங்கள் ஆளுகை தணிக்கையை மேற்கொண்டுள்ளோம். ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் விசாரணை செயல்முறையின் புதிய விசாரணையினை அப்பச்சியின் மாண்புமிகு கார்டினல் விரும்புகிறார். ஜனநாயகத்தில் அதிகாரம் பெற்ற முடிவெடுப்பவர்கள், சமூகத்தில் உள்ள அனைவரின் சார்பாகவும் எப்படி முக்கியமான முடிவுகளை எடுத்தார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு சமூகமாக நாம் அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமையை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. வீதிக்கு வரும் போராட்டகாரர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். அதுதான் வரலாறு சொல்லும் பாடம். தடுப்புகளுக்குப் பின்னால் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுபவர்கள் உள்ளனர். வரலாற்றில் இருந்து பாடம் கற்க மறுக்கிறார்கள். எமிலி ஜோலா தனது புகழ்பெற்ற ‘ஜே அக்யூஸ்’ என்ற துண்டுப்பிரதியை பின்வருமாறு முடித்தார், அதில் 19 ஆம் நூற்றாண்டின் பிரான்சின் அதிகாரம் இந்த வார்த்தைகளால் ஒரு பெரும் அநீதியை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டினார். "இவ்வளவு துன்பங்களை அனுபவித்த, மகிழ்ச்சிக்கான உரிமையைக் கொண்ட மனிதகுலத்தின் பெயரில் எனக்கு ஒரே ஒரு பேரார்வம் மட்டுமே உள்ளது, அந்த ஒளி. எனது உக்கிரமான எதிர்ப்பு என் ஆன்மாவின் அழுகை மட்டுமே. எனவே, தைரியமாக என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள், விசாரணையை நடத்துங்கள்! நான் காத்திருக்கிறேன்." பிள்ளையானும் மௌலானாவும் ஒரு கண்காணிப்பு அரசால் வளர்க்கப்பட்ட இருண்ட உலகில் நடனமாடும் நிழற்படங்கள். ஒரு நாடாக, உடைந்திருந்தாலும், திவாலாகிவிட்டாலும், நாம் இன்னும் கொஞ்சம் நல்லறிவைத் தக்க வைத்துக் கொள்கிறோம். நாங்கள் ஒளியைக் கோருகிறோம்! by By Sarath de Alwis
  14. நிலாம்டீன், என்னும் ஆய்வாளர் சொல்கிறார், பிள்ளையான், சட்டப்படி, நான் சிறையில் இருந்தேன் எனக்கு எப்படி தொடர்பு இருக்க முடியும் என்று வாதாடுவார். உண்மையான இலக்கு, பிள்ளையான் அல்ல ராஜபக்சேக்கள் தான் என்பதனை புரிந்து, புலம் பெயர் அமைப்புக்களும் அது தொடர்பில் இயங்குவதே நல்லது என்கிறார். அது சரி என்றே படுகிறது.
  15. இல்லை, லசந்தா தற்கொலை செய்தார். அப்பாவி கோத்தா!
  16. புலம் பெயர் தமிழர்களும், மத தீவிரவாதிகளும் சணல் 4 நிகழ்ச்சிக்கு பின்னால் - பிள்ளையான். ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மேல் கண்டவாறு திருவாய் மலர்ந்து அருளினார். மொவ்லானா நான் புலிகளுடன் இருக்கும் போது எம்முடன் இல்லை. நான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது வந்து சேர்ந்தார். குடும்பத்தில் பிரச்சனைகள் என்று சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி, போன வருடம் நாட்டினை விட்டு வெளியேறி, இப்போது ஒரு நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார். 2018 உள்ளுராட்சி தேர்தலிகளிலேயே SLPP மக்கள் ஆதரவினை உறுதிப்படுத்தி இருந்தது. ஆகவே, 2019 ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்தி இருந்தாலும் வெல்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே இப்படி ஒரு சதியினை செய்து தான் வென்றார் என்பது, மேலை நாடுகளின் சதி திட்டமாகும். சிறையில் இருந்த நான் எப்படி இந்த சதியில் பங்கு கொண்டிருக்க முடியும். பாராளுமன்றில் எனது பெயரை சொல்லி, குப்பை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் இதை விடுத்து, நாட்டின் பாதுகாப்பினை, அபிவிருத்தியினை குறித்து பேச வேண்டும். ஒரு யுத்தத்தில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டார்கள். இப்படி குற்றசாட்டுகளை விசாரித்து, உண்மைகளை அறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். https://www.dailymirror.lk/opinion/Tamil-Diaspora-backed-by-other-religious-extremists-behind-Channel-4-Pillayan/231-266868
  17. நீங்கள் வேற... கோவிலுக்கு, அடுத்த தலைமுறை வருவதாய் இல்லை. இருக்கிற சந்ததியோட, இழுத்து மூட வேண்டியதுதான் என்கிறார், கோவில் நிர்வாகி. கோவில் மூலத்தானத்தை சுத்தி சாமி தூக்கிற ஆட்களில் பலர் நரை கோஸ்ட்டிகள். பெடியள், பெட்டயல் டிக்ட்க், இன்ஸ்டாவில் அலுவலை முடிக்கேக்கை, கோவிலுக்கு ஏன் வரோணும்?
  18. அய்யர் காலை தொட்டு கும்புடுவது தமிழகத்தில் உள்ள ஒரு பழக்கம். இங்கேயும் அதனை, தமிழக, தெலுங்கு, மலையாள மக்கள் கொண்டு வந்து விட்டார்கள். அதனை பார்த்தே நமது மக்களும் புது பழக்கமாக கொண்டு வந்து விட்டார்கள். அவர்களுக்கு என்று கோவில்கள் இல்லாததால், நமது கோவில்களுக்கு வரும்போது, இந்த பழக்கத்தினை கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அதேபோல, புது விழா பழக்கம் சில தொத்திக்கொண்டு வருகிறது: ஒன்று வளைகாப்பு அடுத்தது, மெந்தி விழாவாம். இது என்னடா என்றால், தமது வட இந்திய தோழிகள் விழாக்களுக்கு சென்று, அதனையே கொப்பி அடிக்கிறார்கள். எதுக்கு இந்த மாதிரி குடும்பத்தினை அலற வைக்கிறீர்கள். சத்தியம் வாங்கி பீதியினை கிளப்பாமல், விருப்பத்தினை எழுதி வையுங்கள் மரண சாசனமாக. 🙏
  19. திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான். வன்னியில், ஒட்டு மொத்த சிங்களமும் சேர்ந்து அழிக்கப்பட்டது பயங்கரவாதிகள் என்று நிற்க, இப்போது, மாத்தளைப் புதைகுழி, லசந்தா, ஈஸ்டர் என்று கிளம்ப, செய்வதறியாது திகைக்கிறார்கள். இதில் நம்பிக்கை தரும் ஒரே விடயம், கிட்டததட்ட 10 மேற்குலக குடிமக்கள் இறந்ததும், மேலும் சிலர் காயமடைந்ததும். சணல் 4 நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே சொல்லியிருந்ததை கவனித்தருப்பீர்கள், மேற்கு நாட்டு புலனாய்வு அமைப்புகள்இது தொடர்பில்விசாரணை செய்தன என்று. விசாரித்தவர்கள் சும்மாவா இருப்பார்கள். ஈஸ்டர் குண்டு வரை கோத்தா, அமெரிக்கர் என்பது முக்கியமானது.
  20. சர்வதேச நீதீமன்றுக்கும் இலங்கைக்கும் தொடர்பில்லை. அதேவேளை, இலங்கைக்கு ஒரு சர்ஜரியும் தேவை. அது தமிழருக்கு மட்டுமல்ல, சிங்களவருக்கும், நாட்டுக்கும் நல்லது. ரணில் இரண்டாண்டு பதவியில் இருப்பதே அவருக்கு போதும். அமெரிக்க சொல் பேச்சு கேட்காவிடில், அவரும் வீழ்வார். ஊர் பரியாரியாக, தலைமறைவாக இருந்த யுத்த குற்றவாளி, Butcher of Balkan அந்த நாட்டு அரசாலேயே சர்வதேச விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டார். பிச்சைக்கார இலங்கை எம்மாத்திரம்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.