Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. அமைதி பாஸ்... அமைதி.. வழக்கம் போல... அவசரப்படாதீங்க. அந்தம்மா.... விட்ட பொய்களில் லாஸ்ட் பொய்... சீமான் பேசீனார் என்று. சீமானே இன்று இல்லை என்று சொல்லீட்டார். உன்னிப்பா அவதானீப்போம். இடைவேளை தான்.. இன்னொரு பக்கம் துரைமுருகனை, ED தூக்கப்போகுதெண்டு மெகா சீரீயல் ஓடுது. ஸ்ராலின் காங்கிரசை வெட்டி விடாவிடில் அவருக்கு சிக்கலாமே. சரணாகதி!! 🥹🤣
  2. கந்தையர், டக்கியர் ஆதரவாளர் என்று புரிந்தது 🤣 அம்புட்டுத்தான்.
  3. பிரபாகரன் அறிக்கையில் சொன்னாரா என்று குழந்தை பிள்ளை போல கேட்க்கும் உங்களிடம் என்னத்தை பேசுவது? உங்கள் புரிதலுக்கும், எனது புரிதலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. தமிழக அரசியலுக்குள், ஈழத்தமிழர் அரசியலை கலந்து, கோக்கு மாக்கு பண்ணாமல், அதை அதன் போக்கிலேயே பாருங்கள். இல்லாவிடில் இப்படி குழப்பங்கள் வருவதை தவிர்க்க முடியாது. இலங்கையில், கர்நாடகத்தில், கேரளத்தில் தமிழர்கள் என்றால் சாதிய மனோநிலையில் மேலிருந்து கீழ் தாழ்வு பார்க்கும் போது, ஓர்மம் வருவது எங்கே, அடிக்கும் போது திருப்பி எதிர்த்து நிற்பது எங்கே? பிரபாகரன் சாதிய மறுப்பினை உருவாக்கி, இனமாக ஓர்மமாக சிங்களத்தினை எதிர்த்தார். அதனையே அவர் பெயரில் சீமான் செய்கிறார். நீங்கள் ஈழத்தில் சாதிய அவலத்தில் பாதிக்கப்படாத வரை, இது புரிய சந்தர்ப்பம் இல்லை.
  4. உத்தியோக பூர்வமாக யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை விளங்க நிணைக்கமாட்டீர்களா? பிரபாகரன் மலையாளி என்றார்களே, அதுவும் சரியா? புரிஞ்சு போச்சு!! இதுக்கா, இந்தக் குத்து முறிவு? 🥹😏
  5. ஈழத்தமிழர் போராட்டமே, தூய சிங்களவாதத்துக்கு எதிராக எழுந்த தூய ஈழத்தமிழ் வாதம். இத புரியாமல் அய்யா ஒருத்தர் வழக்கம் போல குழப்புறார்
  6. ரஞ்சித் ரொம்பவே குழம்பி இருக்கிறீர்கள். முதலாவது, சீமானை எமக்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் என்பதனையும், சூசை அதனை உறுதிப்படுத்தினார் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா? தமிழர்கள் அல்லாத, திராவிடர்களினால் கடைசி நேரத்தில், மருந்து, பெற்றோல், அத்தியாவசிய பொருட்களை திராவிடம், முக்கியமாக கலைஞர், காங்கிரசுடன் சேர்ந்து தடை செய்தது மட்டுமில்லாமல், எம்மை முட்டாள்களாக நினைத்து, உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி முடித்தாரா இல்லையா? எம்மையும், எமது போராட்டத்தினையும் அழித்து முடித்தாரா இல்லையா? இன்று வரை, பிரபாகரனின் பெயரை தமிழகம் எங்கும் கொண்டு சென்று, அவர் படத்தினையும் மக்களிடம் சேர்த்து, மாவீரர் தினத்தினை பெரியதாக நடாத்தி வரும் நிலையில், அப்படி, இலங்கையிலோ, புலம் பெயர் தேசத்திலோ செய்ய முடியுமா? திமுகவையும், காங்கிரசையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறாரா இல்லையா? ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் நிதி உதவி அளித்தார்கள் என்பது உண்மைதான். இன்று கட்சி தமிழகத்தில் வளர்ந்து உள்ளதால், அங்கேயே கட்சிக்கு தேவையான நிதி கிடைக்குமா இல்லையா? மேலும், இன்றய அரசியல் சூழலில், சீமானை, தமது கூட்டணிக்குள் கொண்டு வர, 500 கோடி, 1000 கோடி கொட்டிக்கொடுக்க வேறு பெரிய கட்சிகள் ரெடியா இல்லையா? ஈழத்தமிழர்கள் கட்சிக்கு முழுமையாக நிதி அளிக்கிறார்கள் என்பது இன்றய நிலையில் தவறான தகவல். நான் ஆதரவு கொடுத்தாலும், ஒரு சதம் கூட கொடுத்ததும் இல்லை, கொடுக்கப் போவதும் இல்லை. எனது டாக்டர் நண்பர் நிலையும் அதுவே. முக்கியமாக ஒரு சரித்திர விபரம். 1498 ல் கேரளா வந்த போர்த்துகேயர்கள் தென் இந்தியாவினை பிடிக்க முடியாமைக்கு காரணம், 1520 களில் கீழ் நோக்கி படை எடுத்து வந்த தெலுங்கு விஜய நகர பேரரசு. அந்த நிலை வரை யாழ்ப்பாண ராஜ்ஜியத்துக்கு உதவிக்கொண்டிருந்த தென் இந்திய தமிழர் அரசுகள், விஜய நகர பேரரசின் காலத்தின் பின்னர், போர்த்துகேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தினை பிடித்த போது, கண்டுகொள்ளவில்லை. ஆக, விஜய நகர பேரரசின் வழி தோன்றல்கள், திராவிடம் என்னும் பெயரில் ஆளும் போது, தமிழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலன்றி, எமக்கு விடிவு இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம். அது சீமானாக இருக்க வேண்டியதில்லை. தமிழனாக இருக்கலாமே. போர் நடக்கும் காலத்தில், இன்று தமிழகத்தில் வாழும், திருநாவுக்கரசு என்னும், பத்திரிக்கையாளர் எமது விடுதலையின் சாவி, தமிழகத்தில் உள்ளது என்று நிதர்சனம் தொலைக்காட்ச்சியில் சொன்னார். அப்போது தலைவரும் இருந்தார், பார்த்தும் இருப்பார். பங்களாதேஸ் விடுதலையில், மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கரேயின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே தமிழகத்தின் பங்கினைக் குறைத்து மதிப்படலாகாது. பிரபாகரன், சீமானை அழைத்து, இந்த வரலாறை தெளிவு படுத்திய காரணமாகவே, அவரது உழைப்பாய், தமிழ் தேசியம் எழுந்து உள்ளது. ஈழத்தமிழர்களில் மலையாள கலப்பு என்று, மேலே சொல்லப்பட்ட விடயத்தினை யாரும், கேரளாவில் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலாக, ஈழவர் என்பது அங்கே தாழ்த்தப்பட மக்கள், அவர்கள் தான் ஈழத்தில் சென்று குடியேறியவர்கள் அல்லது, அங்கிருந்து வந்தர்வர்கள் என்றே முடிப்பார்கள் என்பதால், அதுவும் நமக்கு தேவையில்லாத ஆணி. ஆகவே, நான் சொல்லவருவது, தலைவர் பிரபாகரன் என்ன நோக்கத்துக்காக சீமானை சந்தித்து, பேசி அனுப்பி வைத்தாரோ, அந்த வரையறைக்குள் இயங்கும் வரை, அவரை ஆதரிப்பதா, இல்லையா என்று எமது முடிவும் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை. *** இருந்தாலும், முக்கியமாக, நான் ஒரு நிலைப்பாட்டில் இப்போது உறுதியாக உள்ளேன். எமது பிரச்சனை, இந்தியாவை தாண்டி, சீனா, அமெரிக்கா என்று போய் விட்டது. இந்தியா பெரிதாக செய்யும் நிலையில் இப்போது இல்லை. அவர்கள் ஆணி பிடுங்கியது போதும். இனி பிடுங்க எதுவும் இல்லை. இன்னுமொரு முக்கிய விடயம். தமிழகத்தில் சாதிய பிரிவினை வாதத்தினால், தமிழர்கள் அல்லாத, பிறமொழியாளர்கள் ஆண்டார்கள், ஆள முனைகிறார்கள். சீமான் இல்லாவிடில், ரஜனி அரசியலுக்கு வந்திருப்பார். நாடார் என்று தன்னை சாதிய ரீதியில் புறக்கணிப்பு செய்வார்கள் என்றே, வெளிநாட்டவராயினும் தமிழரான பிரபாகரனை தலைவர் என்று சொல்லி, சாதியத்துக்கு வெளியே நின்று இன்றுவரை அரசியல் செய்கிறார். அதனால் தான் சொல்கிறேன், எமது அரசியல் ஊடாக தமிழக அரசியலை பார்க்காமல், அதனை அதன் போக்கிலேயே பார்ப்போம்.
  7. அதில்ல என்ன விசயம் எண்டால் ஏராளன்.... அதை கூர்ப்பு எண்டு சொல்லலாம். கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று அல்லது ரெண்டு தான் வெல்லும். மிகுதி செத்துப்போகும். அதாலை, இயற்கையாக குறைஞ்சு போகுது போலை இருக்குது. 👍
  8. 51 வயதில், தீடீரென, திருமதி வோங், வீதியில் தினமும் ஓடத்தொடங்கினார். வீதியால் போவோர், எதுக்கு இந்த மாதிரி உடலை வருத்தி ஓடுகிறார் என்று பேசினார்கள். தினமும் ஓடி, நாளைடைவில் 20 கிலோமீட்டர் ஓடினார். இந்த பெண் எதுக்கு இப்படி உடலை வருத்தி, எடையினை குறைக்கிறார். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது எதுக்கு?. கணவன் இல்லாதால், புதிதாக யாரையும் பிடிக்க முயல்கிறாரோ என்று நினைத்தனர், பேசினர். மூன்று மாதத்தின் பின்னர், டாக்டரிடம் போய் நின்றார் அவர். அவரது எடையினை அளந்து, ஆகா 20 கிலோ குறைத்து விட்டீர்கள். நாளையே அறுவைச்சிகிச்சையினை வைத்துக் கொள்ளலாம். நான்கு மாதங்கள், மட்டுமே வாழ முடியும் என்று சொல்லப் பட்ட மகனுக்கு, சிறுநீரக தானம் செய்ய முன்வந்த தாயிடம், 20 கிலோ குறைத்தால் தான் அம்மா, முடியும் என்று டாக்டர் சொல்ல, மகனை காக்க, அந்த தாய் எடுத்த முடிவு தான், ஓட்டம். மகனை காக்க, இதுவும் செய்யாவிடில், நான் என்ன தாய், என்கிறார் அந்த தாய். தாயன்பு ! 🙏
  9. அப்படித்தான் நானும் இருந்தன். ஒரு நாள் ஆப்பிள் பெட்டையை காட்டிப் போட்டாங்கள். அப்படியே மாண்டுபோனன்.... என்னத்தை சொல்ல 😍 🥰
  10. மச்சான் சின்னையா, எங்கட சிநேகிதம் தெரியாம, உவன் பேரின்பம் பெட்டிசம் போட்டு இருக்கிறான். போனகிழமை, உன்னோடே, சிரிச்சு, சிரிச்சு டீயும், வடையும், கந்தையரிண்ட கடையில திண்டு, குடிச்சுப் போட்டு, உந்த வேலை செய்திருக்கிறான். பயப்படாத, நான் என்னத்தை செய்யப்போறன். ஆனால் ஆளை கண்டால், கடதாசி கிடைச்சது, அலுவல் நடக்குது. இருந்து பாருமன் விளையாட்டை என்று சொல்லி விடுவன். ஆள், கட்டைதான்... முதுகிளை குத்துற வேலை செய்யுது. அதுசரி, உன்ட பெடியள் ஒண்டுட்டை சொல்லி எண்ட இரண்டாவது பெடிய கனடாவுக்கு எடுத்து விடேலுமா என்று விசாரிச்சு சொல்லுமன். உங்க அவன்ட சிநேகிதப் பொடி, குமாரசாமி ஜேர்மன் போய் இறங்கினோன்ன, தானும் வெளிக்கிடோணும் எண்டு ஒத்தக்காலில நிக்கிறான். அதோடை இன்னொரு விசயம், எண்ட கடைசி பெட்டைக்கு சம்பந்தம் ஒண்டு பேசவேணும். தெரின்ச ஆட்கள் தாரும் இருந்தால் பாருமன். கனடா, லண்டன் எண்டாலும் ஒகே. இப்படிக்கு வினாசித்தம்பி
  11. அதில தானே டில்லிக்காரன் தெறமை!! 😁🤣 அடிப்படையில் மாலைதீவு ஒரு இஸ்லாமிய நாடு. மிகுதி யாருக்கும் புரியும். அதே காரணமே, பெளத்தம் பெரும்பான்மையான இலங்கையும்.
  12. விளங்க நிணைப்பதை, கொஞ்சம் பொது அறிவுடன் பாராமல், நேரத்தை விரயம் செய்வதில் பயன் இல்லை! சீமானை இன்றைய நிலையில் ஐநூறு, ஆயிரம் கோடிக்கு விலைபேசி வாங்கி, கூட்டுச்சேர்க்க அதிமுக + பிஜேபி ரெடி. அப்படியிருக்கும் போது, திமுகவுடன் கூட்டு தேவையில்லையே. சொன்னது, 15ம் திகதிக்கு முன் 36 இஸ்லாமியரை விடுதலை செய்தால், மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், அதற்கு எதிராக திமுக தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினால், அந்த தொகுதியில் மட்டும் ஆதரவு. வழக்கம் போல வெட்டி ஒட்டி.... கதை விடுகிறார்கள், டீம்கா வினர்.
  13. கணம் அய்யாவுக்கு, புலிகளும் பிடியாது, பிரபாகரனும் பிடியாது. அவர் பெயரை தூக்கிப்பிடிப்போரையும் பிடியாது. ஆக... 😊
  14. உங்கள் ஓவியத்திறமையை இப்படியா வீணடிக்க வேண்டும்? தவிர உங்களிடம் அபார எழுத்துத் திறமை உள்ளது.
  15. எம்ஜியார், கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண்ணை, கணவணை பயமுறுத்தி திரத்திவிட்டு கலியாணம் கட்டிக் கொண்டார். கட்டுமரம், இன்னொரு நடிகர் மணைவியை துணைவியாக்கினார்.... லிஸ்ட் இப்படியே போகும்... விடுங்கப்பா... அது தமிழ்நாடு...
  16. அந்த பெண்மணியின் விடீயோக்களை பார்த்தால், முழுவதும் பணத்தினை குறிவைத்தே நடக்கிறது. எமோஷனல் பிளாக்மெயில் மூலம் பணத்தினை வாங்கி, அது நின்றவுடன், லீகல் பிளாக்மெயில். இருந்த கொஞ்ச அனுதாபமும் இல்லாமல் போகிறது. நாதகவில் இருந்து பிரிந்து சென்ற, இருவரில் திமுக சென்ற ராஜிவ் காந்தியே இந்த விடயங்களுக்கு பொறுப்பு என்று தெரிய வருகிறது.
  17. அண்ணனுக்கு முதலாவதோ அல்லது அண்ணிக்கு மூணாவதோ அல்ல பிரச்சனை. பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சனையினை, அரசியல் நோக்கத்துக்காக, பயன் படுத்துவதே. அதுவே தான் நாம் அக்கறை கொள்ளும் தவறு.
  18. இப்ப பிரச்சனை என்னவெண்டால், சீமான் மீது பழி போட, திராவிடர்களால், விஜயலட்சுமி உயிருக்கு ஆபத்து என்று கதை ஓடுது. அவர் சீமானுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, அலப்பறை பண்ணிக்கொண்டே, அடுத்தவர்களுக்கு அட்வைஸ் மழை அருள் புரிகிறார். நடுநிலையான ஆள் என்றாலும் பரவாயில்லை. என்னத்தை சொல்ல?
  19. உங்கள் அதி அறிவு மேதமையை என்னென்பது? சீமான், விஜயலக்சுமியை வைத்திருந்தால் என்ன, விட்டால் என்ன? நமக்கு டைம் பாசிங்க்கு வந்து அலப்பறை பன்னுறம். நீங்கள் இதை சீரியஸ் எண்டு நினைச்சு, வேலை மினக்கெட்டு, அறிவுறை தர, தாரோ எழுதின புத்தகத்தோடை வந்து நிண்டு அலம்பறை பண்ணுறியள். இந்த புத்தகத்தை எறிஞ்சு போட்டு, மழையில் நனைந்து கொண்டிருந்த குரங்குக்கு, அறிவுரை சொன்ன, குருவி கதை புத்தகம் இருக்கு, தேடிப் படியுங்கோ. புத்தி வரும். 🤣
  20. இப்படி பரந்த அறிவு கொண்ட நீங்களும், லூசு லட்சுமி மாட்டருக்குள பூந்து எங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறியள் எண்டு நினைக்க, புல்லரிக்குது... 🙏
  21. இது என்ன கோதரியப்பா இந்த ஆளோட... 🤦‍♂️ புத்திமதி வேணாம் எண்டால், விடுகுதில்லை... கோசன், ஏராளன் இணைப்பது, அவர்களது கருத்து சுதந்திரம். நான் இணைப்பது எனது கருத்து சுதந்திரம். நீங்கள் நடுநிலையாக இல்லாதவரை, எனக்கு அறிவுரை சொல்வது அபத்தமானது. புரிந்தால் நன்றி.
  22. அப்படி பொறுப்பான ஊடக, விடீயோக்களை இணையுங்கோ, யார் வேண்டாம் என்றது. அடுத்தவர்களுக்கு உங்கள் புத்திமதி மழை தேவை இல்லை அய்யா.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.