-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
மனைவியை ஒய்ஃப் என்றோம். வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம். அவள் மகளை ஸ்வீட்டி என்றோம். கடமையை டுயூட்டி என்றோம். காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம். ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம். மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்தோம்! அமைதியை சைலன்ஸ் என்றோம். சண்டையை வயலன்ஸ் என்றோம். தரத்தை ஒரிஜினல் என்றோம். தாய் மொழியை முழுதும் கொன்றோம்.. * வாட்சப்பில் வந்ததில் ரசித்தபின் சுட்டது 😎
- 1 reply
-
- 3
-
கலவரத்திற்கு முன் எம் இனத்திலும் இருந்தது. மனிதன் மூன்னோக்கி சிந்தித்த படியால் தான் நாடுகள் முன்னேறியுள்ளன. கிழக்கிந்திய கொம்பனி சென்னையில் வாங்கிய சொத்து 5 ஏக்கரில் அதன் பெயரில் அவர்கள் காலத்திலேயே பதியப்பட்டு இருந்தது. இப்போது 500 கோடி பெறுமதியான அதனை யாரோ ஆட்டையை போடுகிறார்களாம். அந்த கொம்பனி இப்ப இருந்தால், போய் நிண்டு இருக்கலாம். *** திரைகடல் ஓடி திரவியம் தேட சென்றவர்களும், மகா தத்துவம் அடித்து விடுகிறார்கள். இவர்கள் பேசாமல் ஊரில் இருந்து இருக்கலாமே என்று தோன்றுகிறது. 🤣😁
-
இல்லையே, எதையும் சாதிக்காதவன் மட்டுமே, பிறந்தேன், வாழ்ந்தேன், கிளம்பிறேன் என்று புலம்பிச்சாவான். சாதித்தவன், மனநிறைவோடு போவான். வென்றவனையே உலகம் போற்றும், பேசும். தோற்றுப் போனவனை உலகம் கண்டுகொள்ளவதில்லை. சாதாரண வாழ்வு வாழ்ந்தவனை, நிழலி சொன்னது போல, அவனது குடும்பமே, அதுவும் சொத்து பத்து வைக்காமல் போனால், அந்தியேட்டியே வைக்காது. நிறைவான வாழ்வு வாழ்ந்தவனை சமூகம் காலாகாலத்துக்கும் போற்றும். திருவள்ளுவனை 2000 ஆண்டு கடந்தும் போற்றும் சமூகத்துக்கு அவனது தந்தை, தாய் யாரென்றோ, பெண் கொடுத்த, மாமன், மாமி யாரென்றோ, அன்று ஆண்ட மன்னன் யாரென்றோ தெரியாதே. அவனால் அவனது மனைவி வாசுகியும் எமக்கு தெரிகின்றார். இது புதிய தத்துவமா என்ன? இது அதிகமாக புரிந்தவன் கலியாணமே வேண்டாம் என்று சன்னாசி ஆகிறான். கலியாணம் கட்டியவனோ, போதுமடா சாமி என்று (உடான்ஸ்சு ) சாமியாகிறார். மிக, மிக அதிகமாக புரிந்து கொண்டவனோ, (நிழலியானந்தா) நித்தியானந்தா ஆகிறார். இதை புரிந்து கொண்டவன் பிழைத்துக் கொள்கிறான்.. அவ்வளவுதான் வாழ்கை.🤣
-
UK யில் inheritance tax என்று ஒரு கோதாரி இழவு இருக்கிறது. நீங்கள் வரி கட்டி மிஞ்சின காசுல மோர்ட்கேஜ் கட்டி முடிச்சு, பிள்ளைகளுக்கு எழுதி, பிறகு ஏழு வருசம் உயிரோடே இருந்தால், அவர்களுக்கு வரி இல்லை. 7 வருசத்துக்குள்ள மண்டையை போட்டால், அவர்கள் அந்த வீட்டினை வித்து அல்லது அதன் மீது ஈடு எடுத்து, அரசுக்கு 40% கட்டித் தொலைக்க வேண்டும். அதாலை 70/75 தாண்டி கொடுத்தியல் எண்டால், ஒரு ஏழு வருசத்துக்கு, உங்களை வடிவா பார்ப்பினம். இல்லாட்டில் care home தான். ஏழு வருசத்துக்கு முன்னம் care home போனாலும், வீட்டினை வித்து, அந்த காசில் care செலவுகளை பாருங்கோ எண்டுவான்கள்.
-
அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த சீன சுற்றுலாப்பயணி ஒருவரின் பணப்பையை அபயகிரி சேத்தியா அருகே குரங்கு ஒன்று எடுத்துச் சென்ற போது அவருக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. 50,000 ரூபா பணம் மற்றும் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் அந்த பையினுள் இருந்தன. 48 வயதான சீன சுற்றுலாப் பயணி யுவான் ஷுவாய் மேலும் இருவருடன் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டார். பையை அபயகிரி கோவில் வாசலில் வைத்துவிட்டு சிறிது நேரத்தில் சேத்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிய போது பையை காணவில்லை. இது தொடர்பில் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்த பின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். குரங்கு ஒன்று பையை எடுத்துச் சென்று மரத்தில் மேலேறி கடிப்பதைக் கண்டதாக பக்தர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். எனினும், சேத்தவனாராம உத்தியோகபூர்வ குடியிருப்பில் வசிக்கும் ஊழியர் ஒருவர், நேற்று காலை மரத்தடியில் கிடந்த பையை கண்டுபிடித்து, சுற்றுலாப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ் அத்தபத்துவிடம் ஒப்படைத்துள்ளார். பையில் ரூ.50,000 ரொக்கம், பாஸ்போர்ட், விமான டிக்கெட், கிரெடிட் கார்டு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சொந்தமான பல ஆவணங்கள் இருந்தன. பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். புலம்பெயர் தமிழர்கள், அதிகமாக போகும் இடம் என்பதால், கவனமாக இருங்கள்.
-
பிள்ளைகளுக்காக கடினமாக உழைக்கும், ஊருக்கும் உதவும் அப்பா விசுகர் போல... 🙏
-
வங்கி பெட்டகத்தில் வைத்திருந்த பணத்தை அரித்த கரையான்!
Nathamuni replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
இது கள்ள நோட்டா எண்டு செக் பண்ண வேணுமே... கருணாநிதியின் சர்க்கரை ஊழல் விளையாட்டு போல இருக்குது... 🤣 -
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது
Nathamuni replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
கிரிக்கெற் எண்டு நாடு, நாடா போய் என்ன வெளாட்டு காட்டுவார் எண்டு வெட்ட வெளிச்சமா தெரிவதால், உடான்ஸ் சாமியார் சொல்லுறார்: ஓய், கிரிக்கெற் வெளாடினது போதும். அவசரமா கலியாணத்தை செய்யும். நம்ம நல் ஆசிகள் கிடைக்கும்! 🤣😂 @goshan_che -
யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
யாழில், ஆட்டோக்காரர் கேட்பது கொள்ளை. வெளிநாட்டில் இருந்து வந்தால், கேட்டதை தர வேண்டியது தானே என்று நினைக்கிறார்கள். தம்பி எவ்விடம், ஸ்காபோரோவா... அட அப்ப, டூட்டிங்கோ என்று கேட்க்கிற விபரம்... நண்பர் ஒருவர், வேலணைக்கு போக ஆட்டோ பேரம் பேசினார். போக 3,500 வர 3,500 அப்புறம் வெயிட்டிங் என்று இழுக்க. அரண்டு போய், பஸ்சில் போனாராம். 120 ரூபா. வர 120 ரூபா. 240 உடன் கதை முடிந்தார். மீட்டர் போட்டால், கெஞ்ச ஆரம்பிப்பார்கள். -
விசுகண்ண, நாம் இங்கே இவ்வளவு கஸ்டப்பட்டு வந்தது, நாலு காசு பார்க்க! இனக்கலவரத்தின் பின்னும், யத்தத்தின் பின்னும் தமிழர்கள் அங்கே வாழுகிறார்கள். ஆகவே நாமும் இருந்திருக்க முடியும். தமிழகத்தில் அகதியாக சென்று, ஒரு மகளை மருத்துவராக்கி, ஒரு மகனை பட்டதாரியாக்கி கனடாவுக்கும், படிக்காத ஒரு மகனை பிரான்சுக்கும் அனுப்பினார் தெரிந்த ஒருவர். லா சப்பலில் குடித்து வீதியில் விழுந்து படுத்து தூஙகும் படத்தை தந்தைக்கு நண்பர்கள் அனுப்பி, இவரை திருப்பிக் கூப்பிடுங்க என்றால் தகப்பன் என்னதான் செய்வது? குடிக்காக வாழ்பவர்களைப் பார்க்கும் போது இவர்கள் இங்கே ஏன் வந்தார்கள் என எரிச்சல் வருகிறது. நான் இன்னொருவருக்கு வேலை செய்ய மாட்டேன். தொழில் செய்ய தேவையான முதல் சேர்க்கிறன் எண்டு, கடந்த 26 வருசமா ரக்சி ஓட்டுபவரையும் பார்க்கிறேன். தம்மையே ஏமாத்துவோர். பக்கத்து வீட்டானைப் பார்த்து நீயும் வாழ்க்கையை தொலைக்கிறோம் என்று சொல்கிறீர்கள். வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே ஒட்டம் தானே. தாயின் கருவை, பக்கத்தில் வருபவனிலும் வேகமாக ஓடி அடைந்ததால் உருவாகியவரே, சகலரும். அவனல்லோ பிள்ளை, முதலாம் பிள்ள, நீ 12 எனும் போதே போட்டி தானே! ஒருவர் நல்லவேலையில் இருக்கிறார். தீடீரென்று மூன்று, நாலு மாதம் வீக் எண்ட் வேலை செய்வார். பாட்டிக்கு வந்தால், வேலை என்று நேரத்துக்கு கிளம்புவார். கேட்டால், ஊருக்கு கொலிடே போக காசு சேர்கிறாராம். ஏன் என்றால், உழைத்து செலவழிக்க சந்தர்ப்பம் உள்ள போது அப்படி செய்யலாமே என்கிறார். கடன் வாங்கி, மட்டை போட்டு கொலிடே தேவையா என்கிறார். நான் சொல்ல வருவது, சராசரி வாழ்வுக்கும், வசதியான வாழ்வுக்கும் வித்தியாசம் உழைப்பு. வாழும் வாழ்க்கை முறையில் திருப்தி இல்லாத போதே, அதை மாத்த தீர்மானம் எடுக்கிறோம். உழைப்பை தருகிறோம். சரி இந்த வாழ்வே ஓகே எனும் போது மேலதிக உழைப்பை போடாமல் தவிர்க்கிறோம். கடின உழைப்பாளியான உங்களுக்கு இது புரியும்! நீங்கள் உங்கள் ஊருக்கு உதவுகிறீர்கள் என்றால், உங்கள் குடும்பத்துக்காக உழைப்பதில் இருந்தல்ல, சில மணி கூடுதலாக வேலை செய்தே! சொல்லவருவது, சட்டத்துக்கு உட்பட்டு, ஓடி, ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கனும். ஆடிப்பாடி மகிழனும், அன்பை நாளும் வளர்க்கனும்! 🙏
-
அய்யா, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணுமையா!! 🥹 நான் கண்டதைதான் எழுதுகிறேன். கற்பனையாக அல்ல. 🤣😂 சும்மா பகுடிக்கு. நீங்கள் சொல்வது சரி. நான் என்னத்தை உழைத்தாலும், வரி கட்டி மாளுதில்ல. உங்க ஒருத்தர் டிரைவிங் இன்ஸ்ரக்டர். கையில காசு. 22வீடுகள். என்னத்த உழைக்கிறியள் எண்டு நக்கல். பத்தாததுக்கு, கார் மைலேய பின்னுக்கு சுத்துவார். ரக்ஸ் காரருக்கு போனவருச MOT mileage இது, இந்த வருசம் இது. இவ்வளவு மைலேய் தான் லெசன்ஸ் எண்டு வரிகாரணை அழப்பண்ணிப் போடுவார். 🤣
-
அது புரிகிறது. அவரவர் தனி விருப்பம். ஆனால், நாம் பெரும் வசதியானவர்கள் அல்ல என்று அலுத்துக்கொள்வது நேர் முரணானது என்று சொல்ல வந்தேன். அதாவது நீங்கள் அதை சொல்லாமல் இருந்ததிருக்கலாமோ என்று தோன்றியது. ஒத்துக் கொள்கிறேன். அவரவர் பார்வை. அதேவேளை காலத்தே பயிர் செய்வதும் முக்கியமானது !! தலைவர் ரஜனி பாட்டு: 8, 8 ஆக வாழக்கூடிய காலத்தை பிரித்து, எந்த எட்டில் இருக்கிறோம் என்று, அதற்கேற்ப.... Earn and save for the rainy days!! 😎 பிறகு நீங்கள் சொல்லும் அணைத்தையும் ரென்சன் இல்லாமல் செய்யலாம் என்பது எனது பார்வை!
-
இங்கே ஒரு முரண் தெரிகிறது நிழலி! கடின உழைப்புக்கு பலன், சிறப்பான வாழ்வு. 35 மணி நேர வேலையின் பலன் : பெரிய வசதி கொண்டவர்கள் இல்லை!! ஆகவே, உடலில்வலு இருக்கும் போது உழைப்போம். இல்லானை, இல்லாலும் வேண்டாள்!! வாரம் 168 மணி. அதில் 35 மணி உழைப்பு காணாது. குடும்பத்துக்கு தினம் 2 மணி நேரம். 14 சரி 20 மணி. மொத்தம் 55 மணி போக, நித்திரை 8 மணி படி 56 மணி. மொத்ம்: 111. 168 - 111 மிகுதி 57??? Wasting?? எப்பவுமே வேலை செய்யும் நேரம் விரயம் செய்வதிலும் அதிகமாக இருக்கவேண்டும்.
-
போன ஆடி மாசம் அமெரிக்காவில ஒரு செத்த வீட்டுக்கு போயிருந்தேன். கடைசீல, கொள்ளி வைக்கிறேன் எண்டு மகன், கற்பூரம் கொண்டு போக, அதெல்லாம் போடஏலாது எண்டு நிக்குது வெள்ளை. அட, அதுக்குள்ள தானே நெருப்பு உடலை எரிக்கப்போகுது எண்டு சொல்ல, அது எலக்ட்ரிக் எண்டு அலம்பினார். ஒரு $100 டாலர் பில்லை ஒருத்தர் கையுக்கை வைத்து அமத்த, ஆள், திகைச்சு போய், நெய் மாதிரி உருகி, கவலைப்பட்டு நின்ற மகனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அகன்றார்.
-
ஆனால் இங்கே ஆங்காங்கே fire exit என்பது, சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தேன், போகும் வழியே, வெளியேறும் வழி. எப்படி அனுமதிக்கிறார்கள் என்று யோசித்தேன். யாழில், நண்பர் கட்டிய வீட்டில், சமையல் அறைக்கு பக்கத்தில் வெளியே போக இரண்டாவது கதவு போட ஆலோசனை சொன்னேன். அவரகள் கட்டும் இரண்டு அறை வீட்டுக்கு, முன்கதவு மட்டுமே. செலவு மற்றும் திருடர்கள் உள்ளே வரலாம் என்று யோசித்தாக சொன்னார். யன்னல் முழுவதும் கொசுவுக்கு நெட் அடித்து வைத்திருக்கிறீர்கள். முன்கதவு திறக்கவில்லை, அல்லது தீ... எப்படி வெளியேறுவீர்கள் என்று கேட்க, யோசித்து, சரிதான் என்றார். இங்கு, மெல்லிய நெருப்பு, அய்யோரோட அல்லக்கை ஒருவர், fire extinguisher உடன் ரெடி என்று கதை விட்டு, அனுமதி வாங்கி விடுகின்றனர்.
-
எங்குமே சுத்துமாத்து நடப்பதால், இங்கே மக்களை நம்ப வைப்பது கடினம். சில ஆண்டுகளுக்கு முன்னர், £15 ஒரு மாதத்துக்கு, ஊரில் ஒரு பிள்ளை பராமரிப்புக்கு கொடுங்கள் என்று சில கோவில்களில் விளம்பரம் செய்தார்கள். கொடுத்த காசுக்கு, எந்த பிள்ளைக்கு பராமரிப்பு நடந்தது என்று விபரமோ, இருவரையும் தொடர்பு படுத்தலோ நடக்காததால், பலர் கழன்று கொண்டார்கள். அதுக்கும் முன்னர், கிரிஸ் என்பவர், கூகிளுக்கே சவால் விட்டு, மென்பொருள் எழுதி இருப்பதாகவும், கூகிள் தன்னிடம் அதை பெரும் தொகைக்கு வாங்கும் என்று கதை விட்டு, முதல் வேண்டும் என கேட்க, தமிழர்களும் அள்ளிக்கொடுக்க மில்லியன் கணக்கில் அடித்துக்கொண்டு ஊரில் போய் செட்டில் ஆகி விட்டார். இவரது விளம்பரங்களுக்கு ஐபிசி தான் பொறுப்பு. நான் முன்னர் சொன்னது போலவே, பணத்தினை நம்பி யாருக்கும் கொடாமல், அவர்களை லோக்கல் வங்கிகளை நாட சொல்ல வேண்டும். வியாபார திட்டத்தினை வங்கி அலசி, மாதாமாதா தவணையை வாங்கி, வியாபாரத்தினையும் கண்காணித்து, வேண்டிய மேலதிக உதவிகளை செய்யும். இவைகளை நாம் செய்ய முடியாது. செய்யக்கூடிய ஒன்று, அதே வங்கியில் எமது பணத்தினை சேமிப்பு கணக்கில் போட்டு, அந்த வியாபார முயல்வுக்கான கடனுதவிக்கு, guarantee ஆக எமது சேமிப்பினை வைத்துக் கொள்ள சொல்லலாம். இல்லாவிடில், கொடுக்கும் பணத்துடன் ஆள், agency காரர் பின்னால் நிற்பார்.
-
எனக்கு தெரிந்து, ஜெர்மனியில் நிராகரிக்கப்பட்ட ஒருவரை, உடனடியாக, அவர்கள் அனுப்பு முன்னர், தானாக நாடு திரும்ப வைத்து, chef ஆக, கொத்து ரொட்டி போடுவதாக, இருவாரத்தில் மனைவி, பிள்ளைகளுடன் லண்டனுக்கு இறக்கினார்கள். அந்த இறக்கிய, சவுத்ஹால் ரெஸ்டூரண்ட் தமிழ் தம்பதிகள், அடடா, இப்படி நல்லா உழைக்கலாம் போல என்று, 75 கேஸ் செய்து, பிடிபட்டு உள்ளே போனார்கள். வந்தவர்கள், asylum அடித்து, தப்பிக்கொண்டார்கள். இன்னொருவர், ஏ/ல் காரர் பஹ்ரேனில் வேலை செய்து கொண்டிருந்தார். இலங்கையில் இருந்து ஏதோ டிப்ளோமா சேர்டிபிகேட் வாங்கி, பஹ்ரேனில் இருந்து, அதை வைத்து, இங்கே ஒரு தமிழ் நிறுவனத்தை பிடித்துக் கொண்டு விசா எடுத்து, குடும்பத்துடன் வந்தார். உண்மையில் இந்த work permit system தவறாக பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்படுகிறது.