Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. கந்தையர் சொல்வதுக்கு ஆதாரமே, நான் சொன்ன visa on arrival . நீங்கள் அதை open visa என்கிறீர்கள்! 1985 ஏப்ரல் 30 திகதி அன்று visa on arrival கான்சலாகிறது என்று, இலங்கை, தமிழகம், பிரான்ஸ், ஜேர்மனியிலிருந்து இலங்கைக் கடவுச் சீட்டுக்காரர் பிரிட்டன் வந்தார்கள். கடவுச்சீட்டு இல்லாதோர் வரமுடியவில்லை. (கிழித்து விட்டு இறங்கியவர்கள்) முக்கியமாக இந்தியர்களுக்கு visa on arrival பல ஆண்டுகளுக்கு முன்பே கான்சல். இதனால்கள்ள இலங்கைப் பாஸ்போட்டுடன் இந்தக்காலப் பகுதியில் பல, தமிழக, மலையாள நபர்களும் வந்து சேர்ந்தனர். பிரபலமான ஒருவரின் பெயர் குறிபபிடலாம். வேண்டாமே! Millennium Academy யால் Working holiday visa வுடன் வந்த பலர் மொறட்டுவ என்ஜினீயர்கள். IT வேலை தொடர்பில் சந்தித்ததால் தெரியும். ஆங்கிலப் பிரச்சணையால் லைக்கா, லெபரா வேலைஎன்று திரிந்தோர் பலர். (அப்போது வேறு பெயரில் இருந்திருக்கலாம் - Vectone?) அவர்களில் ஒருவர் வேறு பெயரில் அகதிக் கோரிக்கை வைத்து பெனிபிற் எடுக்கிறார் என்று அடுத்தவர்கள் சொன்னார்கள். 🙂 இப்படி செய்யாதே, மாட்டினால் சிக்கலாகும் என அறிவுறுத்தினேன். இவர்களில் பலர் இரண்டு வருட முடிவில் அகதிகளாக கோரிக்கை வைத்தனர். Working holiday visa நிறுத்தியவர் அன்னாள் வெளிவிவகார செயலர் ரொபின் குக்.
  2. இல்லை! 1985 ஏப்ரல் 30ம் திகதி தான் இலங்கைக் கடவுச்சீட்டுக்கான visa on arrival கடைசி நாள். வசதி படைத்தோர், அந்த திகதிக்கு முன்பும், பின்பும் விசா எடுத்து வந்தார்கள். எனது உறவினர்கள் கிளம்பி ஓடி வந்தார்கள். அவர்களில் பலர் student visa கேட்டு பின்னர் அகதியானார்கள். 1983 ஆகஸ்ட் வந்து student visa வில் இருந்து மாத்த முடியாமல், ஊர் திரும்பி, பிடிக்காமல் வந்துவிட்டேன் என்று சொன்னவர் கொழும்பில் இருக்கிறார். சிலருக்கு விமான நிலையத்தில் விசா நிராகரிக்கப்பட, தடுப்பில் வைக்கப்பட்டு திருப்பி அனுப்ப முயல்கையில், ஆடைகளை களைந்து அண்டவேயருடன் போராடி, தப்பினர். 2000 ஆண்டளவில் மிலனியம் யூனி என்று 28 வயதுக்கு குறைந்த முக்கியமாக பட்டதாரிகள் வந்தார்கள். இது காமன்வெல்த் 2 வருட வேர்க் விசா. வந்தவர்கள் அகதிக் கோரிக்கை வைக்க, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டது.
  3. இங்கை தானே தாராமா இருந்ததே. தொழில் ரீதியாக: Dobbie Taylor Miller Carter Iron Smith Gold Smith Lock Smith இங்கிலீஸ்காரனுக்கு ஸ்கொட்டிஸ் தாழ்ந்தவன். ஸ்காட்டிஸ்காரனுக்கு வேல்ஸ்காரன் தாழ்ந்தவன். மூவருக்கும் ஐரிஸ் தாழ்ந்தவன். இன்றும் கூட ரைம் பத்திரிகையில் பெரிய குடும்பங்களின் அவர்களுக்கிடையேயான திருமண அழைப்புக்கள் வருகின்றன.
  4. இந்தியர்களில் இருவிதம். ஒருவகையினர், TCS, Wipro, Infosys போன்ற கம்பெனிகளினூடாக வருவார்கள். அவர்கள் ஒருபகுதி நல்ல ஆங்கிலம் பேசுவர், ஆனால் தடிப்பு கூட. அடுத்த பகுதி, மாஞ்சு, மாஞ்சு வேலை செய்வர், ஆனால் ஆங்கில அறிவு குறைவு. இந்த வகையினர், கம்பனி காண்ட்ராக்ட் என்பதால் பிரச்சனை இல்லாமல் தப்பி வேலை செய்து திரும்புவர். கம்பெனி சம்பளம் குறைவு. அடுத்த வகை, நேராக work விசா போட்டு வருபவர்கள். அவர்கள், வெள்ளை முகாமைக்கு வேலை செய்யும் போது, கலாச்சார, மொழி சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். தாக்குப்பிடிக்க முடியாமல், ஒரு understanding கில் போய் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் spouses தமிழர் ஆயின், தமிழர் கடைகளிலும், ரெஸ்டூரண்ட்களிலும் இப்போது வேலை செய்கின்றனர். இந்த வேலைகளை அங்கே செய்யமாட்டார்கள். மாணவர்களாக வந்தால் பரவாயில்லை. இவர்கள் இங்கே குடியமரலாம் என்று வந்தவர்கள். ஒரு வித சந்தோசம் இல்லாமல், விரக்தியாக காணப்படுவார்கள். கனடாவில் உள்ள நண்பர் ஒருவரை கேட்டேன்: இவர்கள் டிம் ஹார்டன் போன்ற இடங்களில் தமிழர் வேலைகளை எடுத்துக் கொள்கிறார்களா என்று. அவர் சொன்னார், எடுத்தார்கள், ஆனால் அவர்கள் அந்த வேலைக்கு தம்மை தயாராக்கி வரவில்லை. ஆகவே வேண்டாவெறுப்பாக செய்கின்றனர். தமிழர்களின் வேகம் அவர்களிடம் இல்லை என்றார்.
  5. இன்றல்ல, அன்றும் கூட, யாழ்ப்பாணம் ஒரு money order economy தான். கல்வி தான் ஒரே மூலதனம் அதனை வைத்து, வெளியே வேலை. பணத்தினை ஊருக்கு அனுப்புதல். பிரிட்டிஷ் காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் கிளம்பிப்போனார்கள். (இன்று கல்வியை விடுத்தும் உடல் உழைப்பினை நம்பியும் பலர் கிளம்புகின்றனர்.) சிலர் தங்க, பலர் திரும்பினர். காரணம் இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னான யுத்தமில்லா அமைதியான சூழ்நிலை. ஓரளவு பொருளாதாரம் சேர்த்தவர்கள் ஊர் திரும்பி சில வேலைகள் செய்வதை பார்க்கிறோம். லைக்கா, லேபரா, ஊரில் சில வேலைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்கிறார்கள். ஐபிசி யின் கந்தையா பாஸ்கரன், மாஜிக் கிச்சினின் இந்திரன் பத்மநாதன் பல சமூக வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் திரும்பியதுக்கு காரணம் ஓரளவுக்கு யுத்தம் இல்லாத சூழ்நிலை. ஆக, திரைகடல் ஓடி, திரவியம் தேடிய பலர் திரும்புவார்கள். ஓரளவுக்கு ஒப்பீடு செய்யக்கூடியது, இஸ்ரேல். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒட்டு மொத்தமாக துரத்தி அடிக்கப்பட்ட பின்னும், பொருளாதார பலத்துடன் நாடு திரும்பியவர்களின் கதையே இஸ்ரேல். இது போலவே எமது மக்களும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் திரும்புவார்கள். இப்போது முயல்பவர்கள், களவாக, கப்பல்களில் போகலாம் என்று எடுபடவில்லை. அது நின்று விட்டது அல்லது, மிக, மிக குறைவு. இவர்கள், விசா எடுத்து போகலாமா என்று தான் முனைகிறார்கள். அது ஒரு நல்ல விடயமாகவே படுகிறது. இந்தியாவில் இருந்து, கனடா, பிரிட்டன் என்று வந்தவர்களில் பலர், சரியான வேலை கிடைக்கவில்லை என்று திரும்புகின்றனர். கனடா கதவை திறந்தது, low level வேலைக்கு. அடித்துப்பிடித்துக் கொண்டு வந்த பலர், தமது கல்விக்கு உரிய வேலை இல்லை என்றவுடன், ஏமாந்து திரும்புகின்றனர். வெளிநாட்டுக்கு போவதால், பிரயோசனம் இல்லை என்று சீக்கிரமே புரியும், புரியும் போது, கிளம்புவது குறையும். வந்தவர்கள், தமது அனுபவத்தினை, வரப்போவர்களுக்கு சொல்லும் போது தெளிவு பிறக்கும்.
  6. ஆளை விட்டால், வெள்ளைமாளிகையில் புத்தர் புக்கை திண்டார். அங்கே விகாரை கட்ட வேணும் எண்டு அடம் பிடிப்பார் எண்டு அமேரிக்கன்ஸ் பயந்திட்டாங்கள் போல! பார்தீங்களா, தலைட தில்ல!! 😎👍
  7. அப்ப என்னத்துக்கு, கிறிஸ்தவராயினும் பதவியை பெற்றுக்கொண்ட பின்னும், அவர் சாதியவாதத்துக்கு உள்ளானாரே என்று அழுது வடித்தீர்கள்? சகல இடங்களிலும் இருக்குது என்ற நிதர்சனம் இருக்கும் போது, கிறிஸ்தவருக்கு எதிராக மட்டும் பிறர் சாதியம் பேசுகிறார்கள் என்பது தவறு என்றே அந்தத் திரியில் எனது நிலைப்பாடு. தவறா?
  8. இலங்கை மண்ணின் சாபம் - பேனைகளை துப்பாக்கிகள் சந்தித்த பல நிகழ்வுகள்.... சில... "என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கி விடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாறினை பகிர்ந்து கொள்ளும், இச் சமூகத்தில் வாழும், பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால், ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாகவே இருக்கும்." - ராஜனி ராஜசிங்கம் ( 1954 - 1987 ) தனது நண்பரொருவருக்கு கடைசியாக எழுதிய கடிதம். "இறுதியாக நான் கொல்லப்படும்போது, என்னைக் கொலை செய்தது ஆளும் அரசாகவே இருக்கும்." லசந்த விக்கிரமதுங்க. ஆசிரியர் சண்டே லீடர்.
  9. சாப்பாட்டுப் பிரச்சனைக்குள் சாதியை கொண்டு வந்து மடை மாத்தியது நீங்கள் தான். காரணம் அதிபர் கிறிஸ்தவர். அதுவரை யாருமே அதுகுறித்து கவலை கொள்ளவில்லை. உங்கள் நோக்கம், எல்லோருக்கும் தெளிவானது. இந்த சில்லெடுப்பு வேலை வேணாமே.
  10. ஐலண்ட் ப்ரோ! தெளிவாகி வாருங்கள்!! பேசலாம்!!! சீதைக்கு ராவணன் என்ன முறை கதை வேண்டாமே!!!
  11. அது 20 September இது இரண்டு நாளுக்கு முன். அதாவது 21 September ! எங்கிருந்து, எங்கு copy and paste? உன்னிப்பாக அவதானிக்கவும் 🙂
  12. சமூக பிரச்சணைகளை பேசிக் கொண்டு கிளம்பி வருவது யார் எண்டு பார்க்க மாட்டீர்களா? இணைக்கப்பட்ட செய்தி வந்தது இஸ்லாமிய பத்திரிகையில். பாடசாலை சைவச்சாப்பாடு மட்டும் என்று சொன்னது அதன் கிறிஸ்தவ அதிபர். அதில் பிரச்சணை இல்லையே. மும்மரமாக திசை திருப்ப முயன்றவரும் சைவர் அல்ல. அவரது பிரச்சணை, அந்த கிறிஸ்தவர் அங்கே அதிபராக பட்ட பாடு பெரும் பாடு என்று கவலைப்படுகிறார். அதிபர் தரம் ஒன்று உள்ளவர் மட்டுமே தகுதியானவர் என்று வரிசைப்படுத்தப்பட்ட பாடசாலை. இப்போதுள்ளவர் மட்டுமே தரம் ஒன்றுள்ள விண்ணப்பதாரி. இவர் தெரிவாவார் என்பது தெளிவு. தகுதி இல்லாத அடுத்த தரமுள்ளோர், அரசியல்வாதிகளை நாடுவதும், சாதியம், கிறிஸ்தவர், போன்ற பிறவற்றை பேசுவதும் எதிர்பார்க்கக் கூடியது தான். அவர்கள் எப்படி தான் கும்பகர்ணம் அடித்தாலும், தரம் ஒன்று இல்லாவிடில் வேலைக்காகாது. கோட்டிலும் வெல்லாது. இருப்பினும், பாடசாலை, தரம் ஒன்று அதிபரை பெற்றதுடன் கதை முடிந்தது. ஆனால், அவர் கிறிஸ்தவர் எண்டதால.... சாதிய தூக்கினார்கள் என்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், நின்று மடை மாத்துவது சரியா? தேவையானதா? கத்தோலிக்க பாடசாலைகளில், வேறு ஒருவர் வரமுடியாது என்பது விதிமுறையாம்? அப்படி என்றால் கடந்து போயிருக்க வேண்டாமா? “கோவிந்த கிருஷ்ண பஞ்சாபிஷேக சர்மா" அடுத்தவர்களுக்கு நையாண்டியா இராதா என்ற சிந்தணை அறவே இல்லை ! பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை. இப்போது பாடசாலையின் சைவ சாப்பாடு மட்டுமே அறிவிப்பு குறித்து பத்திரிகையின் கவலை ஏன் என்று புரிகிறதா? சாதீயத்தை, வேறு விடயங்களில் கலந்து குழப்பவதை அனுமதிக்க கூடாது. சரத் வீரசேகர, விமல்வீரவன்ச போன்றோர், தமிழர்களின் சாதீயம் காரணமாக அதிகார பகிர்வுத் தீர்வு கொடாமல் அதிகாரம் சிங்களவரிடம் தான் இருக்க வேண்டுமாம். சாதீயம் இருக்கிறது தான். அதை பிறர், எங்கே லாவகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.
  13. பக்கத்து வீட்டுக்காரன், தன்வீட்டு பிரச்சணையை பாயைப் போட்டு மூடிவிட்டு, அடுத்த வீட்டுக்குள்ள நியாயம் பிளக்க வாறது தானே நியாயமில்லை எண்டுறன். என்ற வீடு, என்ற மனிசீ, நீர் கிளம்பும் என்று தானே சொல்லுவினம். மணைவியை அடிப்பதெல்லாம் பழைய கதை. இபப கதையே வேற!! ****
  14. எல்லாம் சரிதான். செல்லும், செல்லாததுக்கு செட்டியார் என்பது போல.... அதாவுல்லா, ரிசாத்.... எல்லா காக்காமாரும் பிள்ளையானை போட்டுத் தாக்கினம். இஸ்லாத்தில் தற்கொலையே இல்லையாமே, அத்தாவுல்லா சொல்லாறு!! சகரான் கோஸ்டிகள் சொர்கத்திலோ???
  15. நந்தர் பெற்றோல் கானோட வரப் போறார், கொழுத்த !!
  16. ஓம், கோவில் இருப்பதே நாரந்தணை தான். இதுக்கு முன்னால போற ரோட் தான் போர்டர். அநேகமா, சங்கக்கடை பக்கமா இருக்கும்!
  17. மேற்குப்பக்கம் வயல். வடக்குப் பக்கமும் வீடுகள் இருக்கே! 🤔😁 சுருவில் பக்கத்தில், யோகம்மா என்ற பெரும் பணக்கார அம்மா வீட்டில் வேலைக்கிருந்த மலையக தமிழர்கள், வேறு வீடுகளில் வேலைக்கிருந்தவர்களை கலியாணம் செய்து, அப்படியே வெறுமையாக உள்ள வீடுகளில் உரிமையாளர் அனுமதியுடன் குடியிருக்கின்றனர். அப்படி ஒரு பத்து குடும்பங்கள் உள்ளன. மலையகத்தில் இருந்து வந்து குடியேறினாலும் நல்லது தான்.
  18. இதில் ஒரு மடை மாற்றமும் இல்லை, spin டாக்டர் வேலையும் இல்லை. பாடசாலை சைவம் மட்டுமே சாப்பிடலாம் என்று அதன் கிறித்தவ அதிபர் அறிவித்ததில் பிரச்சனை இல்லையே. அந்த கிறித்தவ அதிபர், அங்கே நுழைய எவ்வளவு பாடுபட்டார் என்று, ஒரு கிறிஸ்தவர் தேவையில்லாமல், திசை திருப்பும் போது, அப்படி, ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் வேறு மதத்தவர் வர முடியுமா என்று கேட்டால், அங்க எழுதின விதி, அப்படி வேறு யாரும் வரமுடியாது என்கிறீர்கள்.. அதவும் மாத்தப்படவேண்டும், ஏற்றுகொள்ள முடியாது, அங்கே ஒரு இஸ்லாமியரும் அதிபராக வேண்டும் என்று சொல்வதே, நடுநிலைமை. இன்னும் தெளிவாக சொல்வதானால், உங்களுக்கு என்றால், ரத்தம், அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி சோஸ் அப்படித்தானே?
  19. ஒரு 50 வயது பெண்ணுக்கு வயிற்றில் புற்று, ஆப்பிரேசன் செய்ய நாள் குறித்து போய், இன்னுமோர் ஸகான் பண்ண, பிள்ளை துடிக்குது. அதாவது, வயித்தில் வளர்ந்த பிள்ளையை கட்டி என்று சொல்லி விட்டிருக்கிறார்கள். தியேட்டரால வெளீல வந்த அந்தப் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியா, நிம்மதியா என்று புரியாத கொடுமை!!
  20. அப்படியே விட்டுட்டு, பக்கத்தில, ஆழ் குழாய்க்கிணறு அடியுங்கோ!
  21. அதில்ல பிரச்சினை ஓணாண்டியார். உங்கள் பிள்ளைக்கு, எலும்புகளை எங்க கொண்டு போய் போடவேணும் எண்டு சொல்லியும் விடுவியள். அதை சொல்லாமல் விட்டால், திண்டுபோட்டு, எலும்புகளை வெளியால எறி எண்டு சொல்லி அனுப்பினால், என்ன செய்வதாம். இங்கே, பள்ளிக்கூடமொன்றில் பார்க்கிங் பிரச்சனை. நேரத்தோட உள்ளே வந்து இடம் பிடிக்க தாய், தகப்பன் அடிபிடி. இவ்வளவுக்கும், இரண்டு நிமிச drop off. ஆனால், பார்க்கிங் பிரச்சனையால், அரைமணி, முக்கால் மணி முன்னாலே வந்து, இடம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். பாடசாலை சொல்லிச், சொல்லிப் பார்த்தது. கடைசியில், பிள்ளைகளை கூப்பிட்டு, காரை அரைமைலுக்கு அப்பால்நிறுத்தி, பாடசாலைக்கு நடந்து வந்தால், ஸ்டிக்கர் வழக்கப்படும் என்றார்கள். அவ்வளவு தான். அன்று முதல், கார்பார்க்கில் காத்து வாங்கியது.
  22. ** எனது அனுபவம் அல்ல. வாட்ஸ் அப்பில் வந்த செய்தி யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம். கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்தருணம் எனது பரிசோதனை முடிவினை பார்வையிட்ட எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஆம் அந்த முடிவில் சாதாரணமாக வளர்ந்த சுகதேகியான ஆண் ஒருவருக்கு 0.8 தொடக்கம் 1.3 mg/dl இருக்கவேண்டிய Creatinine இன் அளவு எனது பரிசோதனை முடிவில் 4.4 mg/dl ஆக காணப்பட்டது. இந்த அளவானது இரண்டு சிறுநீரகங்களும் தீவிரமான பாதிபைக்கொண்டுள்ளது என்பதனை தெரிவித்தது. 31வயதுடைய ஆண்மகன் ஒருவருக்கு இவ்வாறான பாதிப்பு என அறிவிக்கப்பட்டால் அந்த ஆண்மகனின் மனநிலை அல்லது உளநிலை என்னவாக இருந்திருக்க முடியும் என்பதை அனைவரும் உணர்வீர்கள். அந்த மனமுடைந்த மனோநிலையில் பணிப்பாளரை மாலை 6.15 மணியளவில் சந்தித்தபோது அவர் கூறியது இவ் பரிசோதனை முடிவு தொடர்பாக நான் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்க பரிந்துரைக்கப்பட்டதுடன் மீண்டும் RFT (Renal Function Test) எனப்படும் முழுமையான சிறுநீரக பரிசோதனைக்கும் பணிக்கப்பட்டு அதற்கான குருதி மாதிரியை வழங்கச் சென்றிருந்தபோது PRO அவர்களினால் தனியாக மாதிரி தேவையில்லை எனவும் காலையில் serum creatinine பரிசோதனைக்கு வழங்கிய குருதி மாதிரியில் RFT பரிசோதனையினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு மறுநாள் மாலை 6.00 மணிக்கு சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் ஒருவருக்கும் என்னால் முற்பதிவு செய்யப்பட்டது. மறுநாள் 13.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு RFT பரிசோதனை முடிவினை பெற்று பார்த்தபோது அதிலும் serum creatinine அளவு எவ்வித மாற்றமும் இன்றி 4.4 mg/dl ஆகவே இருந்தது. மனமுடைந்த நிலையில் மாலை சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரின் ஆறுதல் தரும் வார்த்தை எதையாவது கேட்கமுடியாதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்து மாலை 7.00 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரை சந்தித்தபோது என்னை முழுமையாக அன்பாக சிறுநீரக பாதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் குணங்குறிகளை பார்த்தும் கேட்டும் ஓர் முடிவிற்கு வந்த வைத்திய நிபுணர் அவர்கள் இந்த Serum Creatinine மற்றும் RFT பரிசோதனை முடிவில் தனக்கு திருப்தி இல்லை எனவும் தான் பரிந்துரைக்கும் வேறு ஒரு தனியார் ஆய்வுகூடத்தில் 8 விதமான பரிசோதனைக்கு பரிந்துரைத்துவிட்டு அவர் கூறிய வார்த்தை "இங்கு (அவ் வைத்தியசாலையில்) நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசோதனை முடிவானது பிழையான முடிவாகவே இருந்துவிடவேண்டும்" என்றாகும். அவரது வார்த்தையில் இருந்து இது எந்தளவு பாரதூரமான நிலை என்பதை என் போன்றே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அதன்பின் மறுநாள் காலை 14.09.2023 காலை 8.30 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்தமைக்கமைய அந்த தனியார் ஆய்வுகூடத்தில் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளை வழங்கிவிட்டு சிறந்த சாதகமான முடிவிற்காக காத்திருந்து அன்றைய தினம் மாலை முடிவுகளை பெற்று பார்தவுடன் மீண்டும் உயிர்பெற்றது போன்ற ஒரு உணர்வினை அனுபவித்தேன். ஆம் அந்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சரியான சாதாரண அளவுகளையே காண்பித்தன. அதன் பின் நேற்றய தினம் (19.09.2023) மீண்டும் அதே தனியார் வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் இன்றைய தினம் (20.09.2023) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணருக்கு முற்பதிவினை மேற்கொண்டு பரிசோதனை முடிவினை காண்பித்தபோது அனைத்தும் சரியாக உள்ளது என்றும் தவறான Serum Creatinine பரிசோதனை முடிவினால் ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அவ் வைத்தியசாலையின் PRO மற்றும் அவர் முன்னிலையில் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தரும் (MLT) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் இவ்வாறான தவறு அங்கு இடம்பெறுவது இது 2ஆம் தடவை எனவும் முதல் தடவை ஏற்பட்ட தவறின்போது வைத்திய நிபுணர் அவர்களால் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தருக்கு பரிசோதனை செய்யும் இயந்திரம் சரியான பிரமாணத்திற்கமைய( Calibration) ஒழுங்கு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டும் அது இன்றுவரை சரிப்படுத்தப்படவில்லை என எச்சரிக்கப்பட்டனர். ஓர் முதலுதவி போதனாசிரியர் என்றவகையில் எனக்கிருக்கும் மருத்துவ அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்டையில் வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவு தவறானது என என்னால் ஊகித்துக்கொள்ள முடிந்தபோதும் 12.09.2023-14.09.2023 வரை( சரியான பரிசோதனை முடிவு வரும்வரை) மனதளவில் தளர்ந்த நிலையினையே உணரமுடிந்தது. மருத்துவ அறிவுள்ள எனக்கே இவ்வாறான ஒரு நிலை என்றால் சாதாரணமாக மருத்துவ அறிவில்லாத ஒருவருக்கு இவ் நிலை ஏற்பட்டிருந்தால் அவரது மனோவியல் நிலை என்ன? இவ்வாறான ஒருவர் மீண்டும் வைத்திய நிபுணரிடம் பரிசோதனை முடிவினை காண்பிக்கும்வரை அவர் எவ்வாறான ஒரு மனவுளைச்சலுக்குள்ளாகி இருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்... குறிப்பு : அவ் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண்பிள்ளைகளின் வாழ்வாதார நிலையின் நல்லெண்ணம் கருதி வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை... ** Via What's Up message
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.