-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
பாதிரியார் ஆசீர்வாதம்.... -
நில்மினியின் மருத்துவ ஆலோசனைகள்
Nathamuni replied to nilmini's topic in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
நல்லெண்ணெய், எள்ளு எண்ணெய் இரண்டும் ஒண்டு தானே...? -
இதை முந்தி எப்பவோ, எங்கண்ட குமாரசாமியார், கூப்பன் தோசை மாவிலை, பிளேன் சோடா ஊத்தி பிசைந்து, செய்யிறதெண்டு ஓர் செய்முறை போட்டதை நினைவு.... வெள்ளை மா தோசை, குழாய் தோசை எண்டு செய்வினம் வீட்டில... குழாய் தோசை எண்டு, சுட்ட தோசை நடுவில தேங்கைப்பூ, சீனி அல்லது சர்க்கரை கலந்து வைச்சு தோசையை மசாலா தோசை உருட்டுற மாதிரி வைச்சு தருவினம்.
-
வேப்பம்பூ வடகம், வாழைக்காய் பொரியல் விட்டுவிட்டீர்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அதுவந்து சிறியர், மகன் அவசரப்பட்டுக்கொண்டடெல்லே நிண்டவர். பிறகு, தேப்பனுக்கு உதவினது, மாப்பிளையின்ற தம்பி தானே. கலியாணம் நடந்த அண்டைக்கே கொலை... பொம்பிள, பயத்தில செத்திருப்பா... -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
சரி... முதலிரவு நடந்ததா, இல்லையா? மகனின் அவசரம் தெரியாத தேப்பன்.... அவசரமா போட்டார்... -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
இதைத்தான் சொல்லுவினம், தடியை கையில தந்து, அடியை வாங்கிக் கொண்டோடுறதெண்டு...😂 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஏன்(டா) ஏன்? முடியல.. -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
யாராவது, அக்காவை டீ என்னு சொல்லிட்டு ஒரு எட்டு போகேலுமா...? (விட்டுறுவமா) போனபிறகுதானே.... வீட்ட வாறதும், தேத்தண்ணி குடிக்கிறதும்.... அட (டி) பாவி என்னடா(டி) நடக்குது வீட்டுக்குள்ள? -
இலங்கை சமையலை போலவே தேங்காய்ப்பாலில் செய்யும் 'முத்துப் பேட்டை இறால் சோறு'. தொட்டுக்கொள்ள தேங்காய் சம்பல் (துவையல் என்கிறார்கள்). பிரியாணி என்ற அரேபிய சொல்லை சொல்லாமல், இறால் சோறு என்பது, யாழ், வல்வை பக்கத்து, கோழி சோறு, இறால் சோறு நினைவுக்கு வருகிறது. இந்த வீடியோவில் பாதிக்கு மேல், டுபாயில் உள்ள உணவகம் ஒன்றின் விபரம் உள்ளது. நம்ம வன்னியருக்கு... (5 DHS க்கு buffet)
-
-
அப்படி இல்லை அண்ணர்... நான் பார்த்த மாதிரிக்கு, இங்க உள்ள பிள்ளைகள் கூட, இந்த வெந்தயக்குழப்புக்கு அடிமை.
-
கிச்சினுக்குல ரகசியமா cctv கேமராவை பொருத்தி வைச்சு விசயத்தை பிடிக்கோணும் புங்கையர், விடப்படாது.
-
பனங்காய் பணியாரம் | பனங்காய்ப் பணியாரம் செய்வது எப்படி? பயத்தம் பணியாரம் | Payatham Urundai |பயத்தம் உருண்டை | Spiced Green Gram Snacks | Moong Dal Ladoo
-
சுவையாய் இருந்தால், மிச்சம், மீதி இருக்காதே...👍
-
இது தான் உண்மையில் வெந்தய குழம்பு வைக்கும் முறை. எனது அம்மம்மா வைக்கும் இந்த குழப்பின் சுவைக்கு வேறு ஒன்றுமே ஈடாகாது. கடைசியாக, தண்ணீர் விடுகிறார், ஆனால் தேங்காய்ப்பால் தான் அம்மம்மா சேர்ப்பார்.
-
சாப்பாட்டுக்கே வழியில்லாமல், தவித்து, இன்று முதல் தரத்தில் இருக்கும், நபர் village food factory யின் டாடி. இவருக்கு 3.1 மில்லியன் subcribers. Village food factory வருமானத்தினை நீங்களே பார்க்கலாம். இன்றய தேதிக்கு, தமிழக youtube கதாநாயகர். ஆனால் இவருக்கு சமைக்க மட்டுமே தெரியும். மிகுதி மகன் பார்க்கிறார். சமைத்து முடித்து டாடி, சாப்பிட்டு, ருசியை பற்றி சொல்லும் அழகுக்கே ரசிகர்கள் பலர். சமைத்து, அனாதை பிள்ளைகளுக்கு கொடுப்பார் டாடி. இவரது பெரும் வெற்றியினை தொடர்ந்து, வலைப்பேச்சு, touring talkies போன்ற பல சினிமா சனெல்கள் வருகின்றன. TV vs Youtube போரில், youtube 16%ல் இருந்து 28% வரை டிவி பார்ப்பவர்களை இழுத்து விட்டது. போகிற போக்கில், நாடகங்கள், சினிமாக்கள், சீரியல்கள் எல்லாம் youtube பக்கம் போகும்.
-
புரட்சி.... பேசாம... நம்பளே ஆரம்பிக்கலாமே... 🤑 அண்மையில் வந்து, மிக வேகமா வளர்ந்து வரும் தமிழக சேனல் KATRATHU KAIALAVU. எனக்கு மிகவும் பிடிக்கும் சேனல். இவர்களது கெட்டித்தனம்.... பசுமையான வயல்வெளிகளில், பனைமரக்காடுகளில், கடற்கரை ஓரங்களில், தீவுகள் நடுவில் என்று... அமர்க்களமாக சமைத்து... அசத்துகிறார்கள். போனவாரம்... யாழ்ப்பாண கூழ் என்று அதிரவைத்தார்கள். நான் UK யில் இருந்து சேர்ச் பண்ணுவதால், GBP £ ல் தரவுள்ளது. B TOTAL GRADE 43,711th SUBSCRIBER RANK 135,286th VIDEO VIEW RANK 43,164th SOCIAL BLADE RANK 3,057,360 13.2% VIEWS FOR THE LAST 30 DAYS 20,168 27.9% SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS £497 - £7.9K ESTIMATED MONTHLY EARNINGS £6K - £95.4K
-
ஆம், இல்லை. ஆம்... பணம் வருகிறது. இல்லை.... பணம் கொடுப்பதை நிறுத்தவில்லை. ஆனால்.... வரம்பினை உயர்த்தி உள்ளனர். அதாவது, subscribers எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவு தாண்டிய பின்னரே பணம் கிடைக்க தொடங்கும். அதன் பின்னர், ஒவ்வொரு 1000 பார்வைகளுக்கு அண்ணளவாக $2 பணம் கிடைக்கும். இது விளம்பரம் செய்பவர்களால் வரும் பணத்தில் 50%. மிகுதி youtube எடுக்கும்.. இந்தியா, இலங்கையில் உள்ளவர்களுக்கு, மாதம் $100 - $400 கிடைத்தாலே பெரிய பணம். ஆகவே, அங்கிருந்து இந்த மாதிரி வீடியோக்கள் பல வருகின்றன. www.socialblade.com என்று ஒரு தளம் உண்டு. நாம் பார்க்கும் வீடியோ சேனல் பெயர்களை இந்த தளத்தில் போட்டால், அண்ணளவாக எவ்வளவு மாதத்துக்கு, வருசத்துக்கு உழைக்கிறார்கள் என்று தெரியவரும். தமிழகத்தில் இருந்து ஒரு பெண்மணி Hema's Kitchen என்ற சேனல் பெயரில் நடத்துகிறார். subscribers 665,715 இவரது விபரத்தினை இந்த தளத்தின், சேர்ச்சில் போட்டு பார்த்தால், இவரது மாத வருமானம், நீங்கள் இங்கெ odd jobs மூலம் உழைக்க கூடியதிலும் அதிகம். சொல்ல வருவது என்னெவெனில், இதில் கவனம் செலுத்துங்கள், பொறுமையாக இருந்தால், பலன் கிடைக்கும். B TOTAL GRADE 21,643rd SUBSCRIBER RANK 48,446th VIDEO VIEW RANK 40,883rd SOCIAL BLADE RANK 4,248,000 25.6% VIEWS FOR THE LAST 30 DAYS 32,865 9.7% SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS £690 - £11K ESTIMATED MONTHLY EARNINGS £8.3K - £132.5K ESTIMATED YEARLY EARNINGS தமிழகத்தில் இருந்து வேறு ஒரு பெண்மணி Amma Samayal videos என்ற சேனல் பெயரில் நடத்துகிறார். subscribers 1.1M B TOTAL GRADE 12,810th SUBSCRIBER RANK 38,410th VIDEO VIEW RANK 16,966th SOCIAL BLADE RANK 8,347,320 0.8% VIEWS FOR THE LAST 30 DAYS 68,797 22.3% SUBSCRIBERS FOR THE LAST 30 DAYS £1.4K - £21.7K ESTIMATED MONTHLY EARNINGS £16.3K - £260.4K ESTIMATED YEARLY EARNINGS
-
அக்கா, ஒரு விசயம் கவனித்தீர்களா? கடை, கண்ணி என்று வைத்திருந்தீர்கள் என்ற படியால, 'Business lady' என்கிற வகையில் கேக்கிறன். இவர்கள் இந்த சமையல் வீடியோக்கள் மினக்கட்டு போடுவதன் காரணம் என்ன? நிச்சயமாக நாம் ரசிக்க வேண்டும் என்கிற காரணம் (மட்டும்) இல்லை. அதோட நீங்களும் வடை சுட்டு, இங்கே போட்டீர்கள் தானே. சரி, சொல்லுங்க பாப்போம்...
-
அப்ப நீங்கள் தமிழரில்லை... என்னெண்டு சொன்னியல்... பின்ன...! முட்டைய உடைச்சூத்திப் பொரிக்க, இரண்டு மணித்தியாலம் தேவையாமே.🤭