இடியாப்ப மாவு சரியான முறையில் தயாராவதில்லை.
முக்கியமாக, அரிசியை ஊறவைத்து, கழுவி, காயவைத்து, அரைத்து, வறுப்பார்கள். இது செலவு கூட.
லண்டன் முதலாளிகள், இந்தியாவுக்கு சப் காண்ட்ராக்ட் கொடுப்பதால், அவர்கள், அரிசியினை நேரடியாக, மெஷினில் போட்டு அரைத்து, அனுப்பி விடுவார்கள்.
இது மாவின் தரத்தினை குறைப்பதால், அது, மா போல, ஒன்றுடன் ஒன்று சேராமல், மண் போல தனி தனியே இருக்கும்.
இதனால், எண்ணெய் ஊத்தி, வேறு பொருட்களை கலந்து, ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் வகையில் செய்கிறார்கள்.
விலை கூடினாலும், தரமான மாவை தேடி வாங்குவது சிறந்தது. இலங்கையில் இருந்து கூட, வருகின்றன.