Everything posted by உடையார்
- யாழ்கள ஆஸ்தான மருத்துவர் நில்மினி.gif
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செந்தமிழின் சந்தங்களை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தலையெழுத்தை மாற்றிவிடும்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாயயான மண்ணில் பிறந்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி வருகிறேன் பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... I கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... II உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு.........
-
கப்டன் ஈழமாறன்
பூநகரியில் புதுவீரம் படைத்த புயல் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து பூநகரியில் புதுவீரம் படைத்த புயல்: கப்டன் ஈழமாறன்/ தினேஸ் இந்தப் போராட்டத்தில் இணையும்போதே இந்த மண்ணில் வாழும் எம் இனத்தின் உண்மையான வாழ்வுக்காக தமது உயிர்களை தியாகம் செய்வதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்பவர்கள் தான் விடுதலைப்போராளிகள். போராளிகளாகிய எமக்கு ஒன்றுமட்டும் தெரியும், இந்த மண்ணில் மக்களுக்காக மரணிக்கப் போகின்றவர்கள் என்று. ஒரு சண்டைக்கு களம்நோக்கி நாம் செல்லும்போது இதில் வருபவர்கள் யாரோ வீரச்சாவைத் தழுவப் போகின்றோம், ஆனால் யார் என்பதுதான் தெரியாது. ஒவ்வொரு போராளியும் மனத்துள் நினைப்பான் அது நானாகத்தான் இருக்கவேண்டும் என்று. எமது விடுதலைப் போராட்டம் எமது போராளிகளின் உயிர்த்தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும் வளர்க்கப்பட்டு வருகின்றது. எம்மோடு ஒன்றாக இணைந்து வாழ்ந்த எம் சக தோழர்களை சண்டை முடிந்து வரும் போது, அவர்களது உயிர் அற்ற உடலை தோளிலும் அவர்களது இலட்சியக் கனவை மனதிலும் சுமந்து கொண்டு வருவோம். இது எம் விடுதலைப்போராட்ட வரலாற்றில் வழமையான நிகழ்வுதான். ஒரு சில போராளிகளின் வீரச்சாவு மிகவும் மனதைக் கசக்கிப் பிழிவதுண்டு. அந்த வகையில் என் மனதை வாட்டிய இலட்சியத்தில் மேலும் உறுதியேற்றிய வீரச்சாவுகளில் கப்டன் தினேசின் வீரச்சாவுச் செய்தியும் ஒன்றாகும். அந்தளவிற்கு இவனில் வீரமும் தியாக உணர்வும் விடுதலைப் பற்றும் ஆழமாக வேரூன்றிக் காணப்பட்டன. தனது பயிற்சியை முடித்து வலிகாமக் கோட்டத்திலே பலாலி இராணுவ முகாமில் இருந்து வெளியேறும் இராணுவத்தினருடனான சண்டைகளில் பங்குகொண்டவன். எம் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்த காவல் அரண்களில் கண்விழித்தக் காவல் காத்தவன். காவல் அரண்களில் நிற்கும்போதுகூட வேறு இடங்களிலும் இராணுவம் வெளியேறும்போது தனது குழுவுடன் சென்று அங்கு வெளியேறமுனையும் இராணுவத்தினரோடு சமராடியவன். இவனது சண்டைக்களங்கள் பல. ஆனையிறவு வரலாற்று யுத்தம் (ஆ.க.வெ), பலவேகய-02 என இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை, மணலாற்றில் நடந்த பல தாக்குதல் நிகழ்வுகளிலும் பங்கு கொண்டவன். இச்சண்டைகளில் எல்லாம் இவனிடம் இருந்த வீரமும், யுத்த தந்திரங்களும் இவனை ஒரு நம்பிக்கைக்குரிய போராளியாக மாற்றியது. இதனால் இவனிடம் பல போராளிகளை வழிநடத்தி சண்டைகளை வழிநடத்தும் ஆற்றலும் இருந்தது. இதனால் இவன் பெரிய ஒரு குழுவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். பூநகரி இராணுவ கடற்படை கூட்டுத்தளம் மீது தாக்குதல் நடத்த எம் தலைவர் தீர்மானித்தார். அதற்கான ஆயத்தவேலைகளுக்கான பணிப்புரைகள் எமக்கு வழங்கப்பட்டன. நாம் போராளிகளை ஒன்று திரட்டி சண்டைக்கான பயிற்சிகளில் ஈடுபட்டோம். இவன் ஒரு மினிமுகாமைக் கைப்பற்றும் குழுவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். ஒரு நாள் இவன் கடலில் நீந்தும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது திருக்கைமீன் முள்ளு ஒன்று இவனின் காலில் குத்திவிட்டது. இதனால் இவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். வைத்தியசாலையில் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் இவனைப் பார்வையிட நிற்கும் போராளிகளிடம், “என்னை பயிற்சி எடுக்கும் இடத்திற்கு கொண்டு போய்விடுங்கோ. என்ர பொடியள் என்ன பாடோ தெரியாது(தனது குழு) எனக்கு ஒர பிரச்சினையும் இல்லை” என்று அடம்பிடிப்பான். இவனது தொல்லை தாங்கமாட்டாமல் வைத்தியரிடம் கேட்டால், வைத்தியர் “இவர் இன்னும் ஒரு கிழமை வரையில் வைத்தியசாலையில் இருக்க வேண்டும். விசம் இன்னும் இருக்கு. சிலபேர் இறந்துகூட இருக்கினம். விடவேண்டாம்” என்று கூறுவார்கள். இப்படியே இரண்டொரு நாட்கள் கழிந்தன. ஒருநாள் காலையில் ஒரு பொதுமகனின் சைக்கிளில் வைத்தியசாலையில் எவருக்கும் சொல்லாமல் வந்துவிட்டான். பின் இவனை திருப்பி அனுப்பி வைத்தியசாலையில் பதிந்துவிட்டு வரும்படி அனுப்பி பதிந்துவிட்டு வந்து தனது இயலாத காலுடன் தனது குழுவுடன் சேர்ந்து சண்டைக்கான பயிற்சியை எடுத்தான். எப்போது பார்த்தாலும் பயிற்சி இல்லாத நேரங்களில் தனது போராளிகளை ஒன்றாக வைத்து தனது முகாம் பற்றியும் பல சண்டை அனுபவங்கள் பற்றியும் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் கதைத்துக் கொண்டிருப்பான். எம்மைக் கண்டால் கதை நின்றுவிடும். அதனால் இவனது குட்டிக் கதாப்பிரசங்கத்தை நாம் ஒளிந்து இருந்து கேட்போம். அந்த நேரங்களில் எல்லாம் இவனது கடமையில் – தனது இலக்கில் – கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றான் என்பதை உணர்ந்துகொண்டேன். இவ்வாறான காலகட்டத்தில் தான் ‘யாழ்தேவி’ என்ற பெயரில் ஒரு படையெடுப்பு நடக்கிறது. இந்தச் சண்டையிலும் தனது குழுவை வழி நடாத்தி இலங்கை இராணுவத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் பெரிய ஒரு தோல்வியை – இழப்பை எற்படுத்திய வரலாற்றுச் சமரில் தனது கடமையைத் திறம்படச் செய்தவன். இந்த வெற்றியில் இவனுக்குப் பெரியதொரு பங்குண்டு. தனது குழுவில் பலரை இழந்துவிட்ட நிலையிலும் ஓர் இரு போராளிகளோடு நின்று இறுதிவரை களத்தில் சமராடினான். தனது ஆயுதத்தின் ரவைகள் தீர்ந்ததும் வீரச்சாவடைந்த போராளியின் ஏ.கே இலகு இயந்திரத் துப்பாக்கியுடன் நின்று எதிரி மீது தாக்குதல் தொடுத்து பல எதிரிகளை எம் மண்ணில் சாய்த்தான். இந்தச் சண்டையில் இவனது திறமையையும் வீரத்தையும் கண்முன்னே காட்டியபோது இவன் நிச்சயமாக இவனுக்குக் கொடுக்கப்பட்ட மினி முகாமை (பூநகரியில் உள்ள முகாம்) கைப்பற்றுவான் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை என் மனதில் இருந்தது. நம்பிக்கையின் நட்சத்திரமாக இவன் விளங்கினான். பூநகரிச் சண்டைக்கான நகர்வுகளுக்கான ஆயத்த வேலைகளைச் செய்யும்போது ஒவ்வொரு போராளிகளினதும் சகல உடமைகளையும் தானே பார்வையிட்டு ஒழுங்குபடுத்திச் சரிசெய்து கொண்டு இருந்தான். சூரியன் தன்னை மறைத்துக் கொள்கிறது. இயற்கையும் எமக்கு பூமழை தூவி வழியனுப்புகின்றது. அந்த மழையில் நனைந்தபடி இரவோடு இரவாக இராணுவப் பிரதேசத்துக்குள்ளால் பல மணி நேர நடையின் பிற்பாடு எமக்குரிய முகாமில் இருந்து 1 கி.மீற்றர் தூரத்தில் நிற்கின்றோம். வேறு ஓர் இடத்தில் சண்டை தொடங்கிவிட்டது. உடனடியாக எமது இலக்குகளை நோக்கி வேகமாக நகரத்தொடங்குகின்றோம். குழுக்கள் பிரிந்து செல்லும் இடத்தில் வைத்து அந்த அந்த இலக்குகளுக்கு குழுக்கள் பிரிந்து நகருகின்றன. இவைகள் அனைத்தும் ஒரு குறுகிய நிமிட நேரத்துக்குள் நடைபெறுகின்றன. முன்னே சென்று கொண்டிருந்த தினேஸ் திரும்பி வந்து எனது கையைப் பிடித்து சத்தியம் செய்கிறான். அவனது சத்திய வாக்குக்குக் கட்டுப்பட்டு வோக்கியில் அவனைத் தொடர்பு கொண்டு நிலமையைக் கேட்டபோது அவனிடம் இருந்து கடைசியாக கிடைத்த பதில், “இன்னும் ஒரு நிமிடத்துக்குள் பிடித்துவிட்டு உங்களுடன் கதைக்கிறன்” என்ற வசனம் மட்டுமே. பெரிய வெடியோசைகள், எங்கு திரும்பினாலும் ஒரே பரா வெளிச்சக்குண்டுகள், இராணுவத்தினரின் லேசர் ரவைகள் தணல் தணலாகப் பறந்தன. ஒரு வாண வேடிக்கையே நடந்தது. பலமான துப்பாக்கிச் சண்டை ஒருவரை ஒருவர் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வைத்து நடக்கிறது. இவனை தொலைத் தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொள்கிறேன். தொடர்பு இல்லை. சிறிது நேரத்தில் போராளி அறிவிக்கின்றான். முகாம் எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதையும் தினேஸ் வீர்ச்சாவு என்ற செய்தியும் வருகின்றது. இவனோடு சேர்ந்து இன்னும் பல போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர். இவன் கடைசியாக வோக்கியில் சொன்ன வசனம் இன்னும் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பெரிய ஒரு வரலாற்றுச் சமரிலே இந்த மக்களுக்காக தன்னை அழித்ததன் மூலம் இன்று இதே மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். இவன் எம் இனம் வாழும்வரை வாழப்போகின்றான். இவனது… வீரச்சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டதே தவிர எம் மனங்களில் மக்களின் மனங்களில் இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. நினைவுப்பகிர்வு: வ.செல்வராசா, யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். நன்றி களத்தில் இதழ் (25.02.1994). https://thesakkatru.com/captain-eelamaran-is-a-new-storm-in-poonakary/
-
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம் பெயர்ந்தது. இந்த இடப்பெயர்வுதான் இவளுள் போராட்ட உணர்வை விதைத்தது. வீட்டிலே மூத்தவள் இவள். பின்னால் ஆறு பேர். குடும்பப்பொறுப்பு அவளை இழுத்துப் பிடித்தாலும், வீட்டார்மேல் அவளுக்கிருந்த பாசமே நாளடைவில் அவளைப் போராடத் தூண்டியது. 1992இல் கடற்புலிகள் மகளிர் படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமில் இன்னிசைக்கும் பாரதிக்கும் இடையில்தான் பயிற்சியில் போட்டி. இருவரும் நல்ல நண்பிகள். ஆனால் எதிலும் போட்டிதான். பயிற்சி முடிந்ததும் மருத்துவப் போராளியாகக் கடமையாற்றிய போதே நீச்சற் பயிற்சியையும் எடுத்தாள். எந்த நேரமும் சண்டைக்குப் போகக்கூடிய தயார் நிலையில் தன்னை வைத்திருந்தாள். மருத்துவ முகாமிலே மருந்துகளை விட இன்னிசையின் கதைதான் காயங்களை, நோயை விரைவில் ஆற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும். கரும்புலியாகப் போகும் தன்விருப்பத்தைத் தெரிவித்து, நளாயினி படையணிக்கு வந்ததும் பாரதியை மீண்டும் சந்தித்தாள். இடையிலே பிரிந்த தோழிகள் தமது இலக்கினால் மீண்டும் ஒன்றாகினார்கள். தனது படகைத் தானே கழுவுவாள். தன் வேலைகள் எல்லாவற்றையும் தானே செய்து கொள்வாள். தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு எது தெரியாதோ, அதைச் சொல்லிக் கொடுப்பாள். தன்னைப் போலவே எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்று விரும்புவாள். இரவு நேரங்களில் தென்னை மரங்களில் ஏறி, தேங்காய் திருடி இளநீர் குடிப்பதைப்போல் அவளுக்கு சுவாரசியமான விடயம் வேறொன்றுமில்லை. கரும்புலியாகப் போகும் போது, ஒரு பெண் போராளியுடன் போவதுதான் தனது விருப்பம் என்று பொறுப்பாளரிடம் அடிக்கடி சொல்வாள். வெடிமருந்தேற்றிய படகுடன் கடலில் அலைந்து விட்டு, இலக்குக் கிடைக்காமல் திரும்பும்போது தோழிகளின் அபாரமான அறுவைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ”இந்தமாதிரி இழுபடுகிறாய். இனி உனக்குத் தொண்ணூற்றி ஏழில்தான் சான்ஸ்” 1996-07-19 ஓயாத அலைகள் தாக்குதலின் இரண்டாம் நாள், மிதுபாலனையும் இன்னிசையையும் சுமந்த கரும்புலிப் படகு ‘ரணவிரு’வுடன் மோதியது.ஏதோ பிசகி விட்டது. படகு வெடிக்கவில்லை. ‘ரணவிரு’வின் எதிர்த்தாக்குதலால் இன்னிசை காயமுற்றாள். தவிர்க்கமுடியாமல் இருவரும் கரை திரும்ப நேரிட்டது. இன்னிசை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, 1996-07-24 அன்று மிதுபாலன், சயந்தனுடன் போய் மற்றொரு தரையிறங்கு கப்பலைத் தாக்கி காவியம் படைக்க, தனக்கு அந்த வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற கவலை அவளை வாட்டியது. இன்னிசைக்கும் பாரதிக்கும் இலக்குக் கொடுக்கப்பட்டபின்னர், அவள் தன் வீட்டுக்கு விடுமுறைக்குப் போனாள். நோயால் வாடியிருந்த தாய் மகளை வீட்டுக்கு வந்து குடும்பப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டாள். இன்னிசை மெல்லச் சிரித்தாள். ”கொஞ்ச நாளில வருவன் அம்மா” நீண்ட கால அலைச்சலின் பலன் 1996-11-11 அன்று அதிகாலை இன்னிசைக்குக் கிட்டியது. காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகுமீது இன்னிசையையும் பாரதியையும் சுமந்த படகு பாய்ந்தது. தன் மகள் கடைசியாகத் தனக்குச் சொன்ன வரிகளின் பொருள் அப்போதுதான் அந்தத் தாய்க்குப் புரிந்தது. இன்னிசை தன் குடும்பத்தினருக்கு எழுதிய கடைசிக் கடிதத்திலிருந்து ஒரு கவிதை: நீலக்கடல் வற்றினாலும் என் மழலைச் சகோதரர்களின் முகங்கள் என் மனதில் அலை மோதுகின்றது நிலவு வந்து ஒளிபரப்புகின்ற நேரத்தில் என் பெற்றோர் அரவணைத்த பாசப் பிணைப்பு நெஞ்சத்தில் ததும்புகின்றது. நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பிலிருந்து… நன்றி: களத்தில் இதழ் (12.02.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-innisai/
-
கடற்கரும்புலி மேஜர் பாரதி
கடற்கரும்புலி மேஜர் பாரதி நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து பெண்களதும் ஆண்களதும் கலகலவென்ற கதம்ப ஒலியால் அந்தச் சிறிய ஒன்றுகூடல் மண்டபம் அதிர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் கரிய உடைகள் அணிந்தவர்களாக இருந்தாலும், முகங்களெல்லாம் ஆயிரம் வோல்ற் மின்விளக்குகளைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மண்டபத்தில் இருந்த ஒலி – ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளெல்லாம் அவர்களை விழுங்கிக் கொண்டிருந்தன. கலகலப்பை மீறி, இடையிடையே வாசலைப் பார்ப்பதும் பின்னர் கதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தனர். அவர்கள் கரும்புலிகள்.தமக்கு எல்லாமுமாக இருந்து நெறிப்படுத்தி அன்பு காட்டி அரவணைத்த அந்தப் பெரும் தலைவனை இறுதியாகச் சந்திப்பதற்கு காத்திருந்தார்கள். கலகலத்த மண்டபமும் ‘சட்’டென அமைதியானது. கண்களில் பெருமிதமும் வேதனையும் போட்டியிட கம்பீரமான சின்னப் புன்னகையுடன் தலைவர் வந்தார். விழிகளில் ஒளியோடு நின்ற அந்த நெருப்புகளை நோக்கி வணக்கம் என்றார். மீண்டும் கலகலப்பு. மகிழ்ச்சிப் பெருக்கு. கதைக்கிடையில் யாரோ பாரதியை ‘சாண்டோ’ என்று கூப்பிட, தலைவர் ஏன் என்று வினவினார். பாரதியின் மேல் படகுகள் ஏற்றப் பயன்படுத்தும் பாரவண்டி படகுடன் தவறுதலாக ஏறியதை எல்லோரும் கதைகதையாக அவருக்குச் சொல்ல, அவர் சிரித்தவாறு பாரதியை ‘சாண்டோ’ என்று தானும் கூப்பிட்டார். பாரதி புன்னகைத்தாள். வீட்டில் கடைக்குட்டி. செல்லப்பிள்ளை. கதையும் செல்லக்கதைதான். இயக்கத்திலும் அவள் அப்படியே கதைப்பதால், தோழிகள் அவளை ‘நயினா’ என்றுதான் கூப்பிடுவார்கள். தாயும் மகளும் சரியான நெருக்கம். வெளியே போன பாரதி வரக் கொஞ்சம் தாமதமானாலும் தேடித் போய்விடுவார் அம்மா. ஒருநாள் பாரதி வீட்டுக்கு வரவேயில்லை. தேடித்தேடி கடைசியாக முகாமிற்குப் போய் அழுத அம்மாவிடம், ”நீங்க அழவே கூடாது அம்மா.நான் உங்களிடம் வரவேணுமெண்டால் நீங்க அழக்கூடாது” என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டாள். பயிற்சி எடுக்க முன், சிலகாலம் அவள் இடம்பெயர்ந்த தீவக மக்களிடையே அரசியல் வேலை செய்தாள். இடப்பெயர்வு வாழ்வின் அவலங்களை அங்கே அவள் கண்டாள். அந்த மக்களின் கண்ணீர்தான் அவளைக் கரும்புலி ஆக்கியிருக்க வேண்டும். பயிற்சி ஆசிரியர் ஒருமுறை, இவளின் அணியினரை ‘சோம்பேறிகள்’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் அன்றிலிருந்து எதிலுமே பாரதியின் அணிதான் முன்னின்றது. ”பாரதியக்கா இல்லாவிட்டால் நாங்கள் இப்பவும் சோம்பேறியாத்தான் இருந்திருப்பம்” என்று நினைவு கூர்ந்தார் அந்தநேரத்தில் பாரதியின் அணியிலிருந்த ஆரணி. ஆரம்பப் பயிற்சி முடிந்ததும் வெடி மருந்துப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டாள். அதுமுடிய நீச்சல், படகோட்டம் என்பவற்றில் ஈடுபட்ட பாரதி ஒரு கலைஞராகவும் இருந்தார். நிகழ்ச்சிகளைத் தயாரிப்பாள். கவிதை எழுதுவதிலும் பெரும் ஆர்வம் இருந்தது. ”நாங்க ஒரு சண்டை செய்ய வேணும். அதுக்கு ‘அலைவேகத் தாக்குதல்’ எண்டு பெயர் வைக்க வேணும்” என்று அடிக்கடி சொல்வாள். கிளாலியில் மக்கள் பாதுகாப்புச் சேவையில் ஈடுபட்டபோது, பாரதியின் A.K.L.M.G பல தடைவைகள் முழங்கியிருக்கின்றது. சுகன்யா படையணியின் பொறுப்பாளராக இருந்து மண்டைதீவுச் சண்டைக்கு ஓட்டியாகச் செயற்பட்டாள். பூநகரி மீதான தவளைத் தாக்குதலின் போது, இவளது படகையும் அருகில் வந்த இன்னொரு படகையும் உலங்கு வானூர்தி தாக்க, எல்லோருமே கடலுக்குள் குதித்து நீந்தத் தொடங்கினார்கள். ஒரு போராளி நீரில் மூழ்கித் தத்தளித்தபடி, ”என்னைக் காப்பாற்றக்கா” என்று கத்த, திரும்பி நீந்திய பாரதி அவனின் தலையில் ஒரு குத்துவிட்டு, மயங்கியதும் கரைக்கு இழுத்தவாறு நீந்தினாள். பின்னர், கடலில் ஐந்து கடல் மைல் நீச்சல் முடிந்ததும் அவனின் செய்தி பாரதியை வந்தடைந்தது. “அக்கா உன்னாலதான் நான் இண்டைக்கு இப்படியொரு நிலைக்கு வந்திருக்கிறன்”. பின்னர் அவன் முல்லைத்தீவில், ‘ஓயாத அலைகள்” தாக்குதலில் வீரச்சாவடைந்தது பாரதியை உலுக்கிவிட்டது. 1996இல் நளாயினி படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பாரதி ‘ஓயாத அலைகளுக்கு’ ஓட்டியாகச் செயற்பட்டாள். படகு ஏற்றும் பாரவண்டி படகுடன் ஏறி உடல் பலவீனமாக இருந்தபோதும், தனக்குரிய வெடிமருந்துப் படகை பிடிவாதமாகக் கேட்டு வாங்கினாள். “படகை நான்தான் ஓட்டுவன். என்னோட ஒரு பெண் போராளி வரட்டும்” என்று பொறுப்பாளரைக் கேட்டாள். அவளின் விருப்பப்படியே, மேஜர் மங்கைக்கு அடுத்ததாக, வெடிமருந்துப் படகை ஓட்டிய பாரதி, 1996.11.11 அன்று அதிகாலை காரைநகர் கடற்படைத்தளமருகே அதிவேக டோரா பீரங்கிப் படகு மீது மோதினாள். கூடவே இன்னிசையும். நெஞ்சம் மறப்பதில்லை தொகுப்பிலிருந்து… நன்றி: களத்தில் இதழ் (12.02.1997). https://thesakkatru.com/black-sea-tiger-mejor-bharathi/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வானில் தவழும் வெண்ணிலவே
-
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன்
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் நவம்பர் 12, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கனவை நனவாக்கியவன் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். 1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச் சென்றான். இவன் பிறந்த இடம் கூடலும் கடல் சார்ந்த நிலமுமான ஒரு நெய்தல் நிலமுமான ஒரு நெய்தல் கிராமமாகும். உடுத்துறைக் கடல் அலையின் நுரை சிதறிக் காய்ந்த பெரும் மணல் வெளியில், காலைக் கதிரவன் கண் விழிக்கும் வேளையில், நவரத்தினம் தம்பதிகளின் புதல்வனாய் 1975ம் ஆண்டு ஆவணி மாதம் 24 ம் திகதி தமிழீழ மண்ணில் வந்துதித்தான். தாய் தந்தையர் இவனுக்கிட்ட பெயர் நேசகுலேந்திரன். வீட்டில் செல்லமாக வசந்தன் என அழைக்கப்படுவான். இவனது குடும்பமோ ஒரு வறிய குடும்பமாக இருந்தது. 1981ம் ஆண்டு உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தான். இவன் படிப்பில் மிகவும் அக்கறையாகவும், விளையாட்டில் சுறுசுறுப்பாகவும் இருந்தான். சமூக வேளைகளிலும் முன்னின்று செயற்படுவான். பள்ளியில் படிக்கும் போது வீட்டு வறுமையின் காரணத்தால், தனது அண்ணனுடன் கடற்தொழிலுக்குப் போய் வருவான். ஆனாலும் இவன் தனது படிப்பை கைவிடவில்லை. வசந்தனின் அண்ணன் எமது இயக்கத்திற்குப் படகோட்டியாகச் செல்வார். ஒரு நாள் ஒட்டியாகச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. என்ன நடந்தது என்று இன்றுவரையும் தெரியவில்லை. தாய், தனது மகனைக் கடற்கரையில் வழிமேல் விழிவைத்துப் பார்த்தவாறு சிலநாட்கள் காத்திருந்தாள்; ஆனால் இன்னமும் தான் வரவில்லை. அதன் பின்னர் அவன் தனியாகவே கடற்தொழிக்குச் சென்றுவருவான். ஒருநாள் வசந்தன் கடற்தொழிலுக்குச் செல்லும்போது தாய் மறித்தார் “நீ தனியாகக் கடலுக்குப் போகவேண்டாம்” என்றார். அப்போது அவன் அம்மாவுக்குச் சொன்னார். “நேவி வந்தால் நான் நீந்தி வந்துவிடுவன் நீங்கள் கொஞ்சம் பேசாமல் இருங்கோ” இவ்வாறு கூறிவிட்டு அவன் வழமைபோல் கடலுக்குச் சென்று வருவான். அந்தவேளையில் தான் இந்திய ஆக்கரமிப்புப்படை எமது மண்ணில் காலடி வைத்தது இந்திய தமிழீழப்போர் ஆரம்பமாகியது. அவ்வேளையில் அவனது குடும்பத்தினர் எமது இயக்கத்தின் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். எமது இயக்கத்தின் வெடி மருந்தகளை வீட்டு வளவினுள் பதுக்கிவைத்துப் பாதுகாத்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் இந்திய இராணுவமும், தேசத் துரோகிகளும், உடுத்தறைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். அன்று வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்து, அவனது தகப்பனை “எல்.ரி.ரி.ஈ இங்கு வந்ததா?” எனக்கட்கும் போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தேசத்துரோகி, “இவங்கள் இயக்கத்திற்கு ஆதரவு; இவங்களை விடாதையுங்கோ” என்று சொன்னான். ஆத்திரமடைந்த இந்திய இராணுவத்தான் ஒருவன் வசந்தன் தகப்பனுக்க அடித்தான். உடனே வசந்தன் “அப்பாவுக்கு அடியாதையுங்கோ” என்று கத்தியபடி தகப்பனைக் கட்டிப்பிடித்தான். அதன் பின் இந்திய இராணுவம் அவனது வீட்டை விட்டு வெளியே சென்றது. அதன் பின்னும் அவனது குடும்பத்தினர் இயக்கத்திற்கு உதவிகள் பல செய்துவந்தனர். இப்படித்தான் ஒருநாள் வசந்தன் ஆடு மேய்க்கச் செல்லும்போது, வசந்தனின் கிராமத்து கோயிலுக்குச் அருகிலுள்ள பற்றை ஊடாக ஒரு போராளி ஓடி வந்தான். அப்போது வசந்தன் அந்தப்போராளியைப் பார்த்த, “என்ன அண்ணை ஓடி வாறியள்? என்ன நடந்தது?” எனக் கேட்டான். அதற்கு அந்த போராளி, “என்னை ஆமி கலைச்சுவாறான்” என்று கூறவே, உடனே வசந்தன் அந்தப் போராளியைத் தனது வீட்டுக்குச் கூட்டிச் சென்று, வீட்டின் மூலையில் இருக்கவிட்டு, வலையினால் மூடிவிடுகிறான். அப்போது இந்திய இராணுவம், தேசத்துரோகிகளும் காலடிகளைப் பார்த்து வசந்தனின் வீட்டிற்கு வந்தனர். வசந்தனின் வீட்டிற்கு இராணுவம் வந்ததும் வீட்டைச் சோதனையிட்டார்கள். அப்போது ஒரு தேசத்துரோகி வசந்ததைப் பிடித்து, “முலையில் ஏனடா வலையைக் குவித்து வைத்திருக்கிறாய்? வலைக்கள் என்னடா இருக்காது?” என்று அதட்டிக் கேட்டான். அதற்கு வசந்தன் “வலைக்குள் ஒண்டும் இல்லை… அப்படியெண்டால் நீங்கள் எடுத்துப்பாருங்கோ” எனத் தளராது பதில் கூறினான். அதன் பின் தேசத்துரோகி வசந்தனின் தாயாரிடம், “இஞ்சை இயக்கம் வாறது என்று அறிஞ்சனாங்கள்; உங்களைக் கவனிக்கிறம்” என்று சொல்லிவிட்டு சென்றான். அதன் பின் 1990ம் ஆண்டு முற்பகுதியில், இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேறியது. எமது மக்கள்பட்ட இன்னல்களைக் கண்டு வசந்தனின் உள்ளம் குமுறியது. துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தினிலே தூய விடுதலைக்காய் துப்பாக்கியினைத் தோளில் ஏந்தத் துணிந்துவிட்டான். அந்த வகையில்தான் 1990ம் ஆண்டு பங்குனி மாதம், எமது இயக்கத்தில் தன்னை முழுநேர உறுப்பினாராக இணைத்துக்கொள்கிறான். சத்தருக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டு, பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பயிற்சி பாசறையில் சிறுவனாக இருந்தாலும், எந்தப் பயிற்சியினையும் ஓர்மத்துடனும் சலிப்பிலாமலும் எடுத்து முடித்தான். பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்ததும், இவனும் இன்னும் சில போராளிகளும் ஒரு முகாமில் இருந்தார்கள். பின்னர் இவனுடைய திறமையைக் கண்ட பொறுப்பாளர், இவனைப் பலாலி காவலரணுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே இவன் இருக்கும்போது, எமது கண்ணிவெடிப் பிரிவினர் கண்ணிவெடி வைக்க போகும்போது அவர்களுடன் சென்று கண்ணிவெடிகள் வைப்பான். கண்ணிவெடிகளைப் பற்றி அறியும் ஆர்வத்தில் மற்றைய போராளிகளிடம் கேட்டு அறிவான். 1991 ஆம் ஆண்டு 12 ம் மாதம் பலாலி இராணுவம் வளலாய்ப் பகுதியை நோக்கிய ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தச் சண்டையில் திறமையடன் சண்டை செய்தான் சத்துருக்கன். அதன் பின் ஒரு காவலரனுக்கு தலைமை தாங்கி, அங்கு ஒரு சில மாதங்கள் இருந்தான். அதன் பின்னர் வடமராட்சிக் கிழக்கு பகுதி காவலரணுக்கு அழைத்த செல்லப்பட்டு, வெற்றிலைக்கேணி காவலரண் பகுதியில் இடம் தெரியாத போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தான். அவன் எல்லாப் போராளிகளிடமும் அன்பாக பேசிப் பழகுவான். போராளிகளுடன் சேர்ந்து சிரிப்பூட்டும் பகிடிகளும் விடுவான். அங்கே போராளர்களுக்கு இடங்களைக் காட்டியபின், 1992ம் ஆண்டு 7ஆம் மாதமளவில், வடமராட்சி கோட்ட பொறுப்பாளர் மேஜர் பிறேமநாத் அண்ணாவால் இவனும் இன்னும் சில செய்யப்பட்டு வேவுப் பயிற்சி அளிக்கப்பட்டு வளலாய்க் காவலரணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவன், தனக்குக் கொடுக்கப்பட்ட வேவுப்பணியில் மிகவும் திறமையடன் செயற்பட்டான். இவன் வேவுக்குச் சென்று எதிரியின் காவலரணுக்கு முன்னுள்ள கம்பிவேலிக்கு உட்பகுதியில் எதிரி புதைத்து வைத்த மிதிவெடிகளை எடுத்து வருவான். வேவுக்கு சென்று எதிரியின் நடமாட்டத்தை அவதனிக்கும் போது இராணுவம் சத்தம் போட்டுக் கதைத்தால், மற்றைய போராளிகளுக்குச் சொல்லுவான். “இப்ப கதைக்கிறார்; இன்னும் கொஞ்ச நாளிலை தெரியும் எங்கட விளையாட்டு” என்று. இவன் வேவுக்குச் செல்லும் போது பல நாட்கள் சாவின் விளிம்பில் ஏறி நடந்தான். ஊருறங்கும் நேரத்தில் எதிரியின் பாசறையில் தகவல் பெற்றிட சிறந்த வேவு வீரனாக இவன் திகழ்ந்தான். வேவுக்குச் செல்லும் போது பல தடைவைகள் மரணம் இவளோடு மல்லுக்கட்டியது; வெல்ல முடியவில்லையே என்று வேதனைப்பட்டது சத்துருக்கனின் ஆசை போல், பலாலி கிழக்கு வளலாய்ப் பகுதியில் 150 காவலரண்கள் எம்மவர்களால் தாக்கி அழிக்கப்பட்டன. அந்தச் சண்டை முடிந்தவுடன் தனது பொறுப்பாளரிடம் சென்று, “நான் கரும்புலிக்குப் போகபோறன்” என்று கேட்டு, அவன் கரும்புலிக்குச் சென்றான். கரும்புலிகளுக்கான பயிற்சியினை முடித்துவிட்டு கரும்புலி அணியின் ஒரு குழுத் தலைவானக தொண்டமனாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அவர்களது இலக்கு பலாலி விமான நிலையத்தை ஊடுருவித் தாக்கி அழிப்பதே! சத்துருக்கன் என்னை இறுதியாக தொண்டமனாற்றில் வைத்துச் சந்தித்ததான். அப்போது என்னுடன் கதைக்கும் போது “இனி எங்கட மக்கள் சுதந்திரமாக வாழப்போகிறார்கள். தமிழன் தலைநிமிர்ந்து நடக்கப் போகிறான். அதற்கு நாங்கள்தான் வழிகாட்டியாக இருக்கப்போகிறோம் “ என்று சொன்னான். அன்று மாலை; கடல் அலைகள் ஓய்வ எடுத்தக்கொண்டிருந்தன. ஆனால் கரும்புலிகள் ஓய்வெடுக்கவில்லை; தமது இலக்கை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டனர். என்னவோ கடலன்னைக்கு பொறுக்கவில்லை போலும். திடிரென நீரோட்டம் அதிகமா இருந்தது. ஆனாலும் கரும்புலிகள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. விடியற் காலை 4.00 மணியிருக்கும் ஈ கூட நுழையமாட்டாது எனக் கூறிக்கொண்டிருந்த அந்தச் சிங்கத்தின் குகைக்குள், சிறுத்தைக் கூட்டம் நுழைந்து கொண்டிருந்தது. இவர்கள் தாக்குதலுக்கச் சென்ற நேரம் தவறிவிட்டது. இவர்களின் தாக்குதல் திட்டமும் மாறிவிட்டது. மறுநாள் காலை 9 மணி இவர்கள் விமான நிலையத்தில் இருந்து சற்றுத் தொலைவில் எதிரியை அவதானித்தபடி இருந்தார்கள். அப்போது ஒரு நாய் அவர்களை நோக்கி வந்தகொண்டிருந்தது. அதன் பின்னால் ஒரு இராணுவம் சிப்பாயும் வந்துகொண்டிருந்தான். அதன் பின்னால் ஒரு இராணுவச் சிப்பாயும் வந்து கொண்டிருந்தான். இவர்களைக் கண்டுகொண்டான். அவன் இவர்களைக் காணாது மாதிரி பின்னுக்குச் சென்று பின்னர் பல இராணுவத்தினரை கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்தான். தங்கள் கிளையோடு கிளம்பிய அவர்கள், ஆயிரம் ஆயிரம் கைகளில் ஆயுதங்களைப் பிடித்தபடி, ஆகாயத் ‘தும்பிகளின்’ துணையோடு அந்த இடத்திற்கு வந்தனர். அப்போதுதான் போர் மூண்டது. சத்துருக்கனின் அணியினர் தாக்குதலை தொடுத்தனர். அந்த இடத்திலேயே பல இராணுவத்தினர் கொல்லபப்பட்டனர். அப்போது எதிரி தாக்கிய 40 எம் எம் பிஸ்டல் குண்டு ஒன்று சத்துரக்கனின் இரு கால்களையும் பதம் பார்த்து உடனே மற்றைய போராளிகளுக்கு சத்துருக்கன் கட்டளையிட்டான். “எனது இரண்டு கால்களும் போய்விட்டன. நான் குப்பி கடிக்கப் போகிறேன். நீங்கள் மூவ் பண்ணுங்கோ.” சாவையே குப்பியில் அடைத்த – மரணத்தையே கழுத்தினில் மாலையாக சுமத்தி – சரித்திரம் படைத்துவிட்டான். சாவை முறியடிக்க சிலர் சாத்திரம் பார்க்கும் நேரம், சாவையே முதுகிலேந்தி பாலாலி மண்ணில் சரித்திரம் படைத்தவிட்டான் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். சாவு அவனைச் சந்தித்த போதும் கூட எமது தாய் நாட்டையும், தலைவனையும் தான் அவன் நினைத்திருப்பான்! நன்றி: எரிமலை இதழ் (மாசி, 1996). https://thesakkatru.com/black-tiger-lieutenant-kannan/
-
கப்டன் ஈழமாறன்
கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறி பொதுமகன் ஒருவனின் சைக்கிளில் ஏறி, பயிற்சி நடக்கும் இடம் வந்துவிட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்கவிட்டவாறு மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்லநேர்ந்துவிட்டது. கால் நோ மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் பயிற்சிப்பாசறை வந்து, தனது பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டான். இவ்வாறு மனஇயல்பினைக் கொண்டவன் இவன் ஆம்… இப்பயிற்சியானது சிங்களப்பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்… ஆணவத்தைச் சிதைப்பதற்காய்… தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்துவதற்காய்…. சுமூகமான ஒரு பாதைதனைத் திறப்பதற்காய்… பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்காய், ஆண் – பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாக, குழுவின் தலைவனாக ஈழமாறனும்…. மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும் – ஆழத்துடன் அழகும் கொண்ட – கடற்கரைதனை அணையாகப் பெற்ற மாதகல்தனைத் தனது தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம்மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான்: தாயக தாகத்தைத் தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகைதனை முகத்தில் படரவிட்டிருப்பான். துடிதுடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனத்தையும் கவர்ந்துவிடுவான். “வெளிநாடு வா” என மூத்த உடன்பிறப்பு அழைத்தும் கூட, இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. “அண்ணா. நீ தாய்க்காக உழைத்துவிடு@ நான் தாய்நாட்டுக்காக உழைக்கப்போகிறேன்” எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான். ஆரம்பக் கல்விதனை மாதகல் ‘சென்.ஜோசப் பாடசாலை’யில் பயின்ற பின்னர், 1984 ஆம் ஆண்டு, தெல்லிப்பழை ‘மகாஜனாக் கல்லூரி’யில் தனது கல்வியைத் தொடர்ந்தான் படிப்பில் மட்டுமல்லாது. விளையாட்டுத் துறையிலும் தி;றமையாகச் செயற்பட்டு, கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்றுத் தனது பாடசாலைக்குப் பெருமைத்தேடிக் கொடுத்தவன். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன், தனது சேவை இந்நாட்டுக்கு உடனடித் தேவையெனப் புரிந்து. 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டான்: பயிற்சிக் காலத்தின்போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றான். பயிற்சி தவிர்ந்த ஏனைய நேரங்களில், சக போராளிகளை அருகில் இருத்தி, விடுதலைப் போராட்டங்கள் பற்றி விளங்க வைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடுவான். ஆகையினால், மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள். பயிற்சி முடிந்தவேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ‘யாழ்.கோட்டைச் சண்டை’யில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட உடனேயே காரைநகர் சண்டைக்களம் அவனை அழைத்தது. அதன் பின்னர், மன்னார் பரப்புக்கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும் சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது. மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த தினேஷ் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்…. எதிரியின் தாக்குதலால் காலிலும் கையிலும் காயமடைந்த இவனைத் தக்க முறையில் வைத்தியப்பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள். காயம் மாறி முகாம் வந்தவேளை, அவனுக்கு எல்.எம்.ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான் தனது வெள்ளைப் பற்களைப்போல…. இவனுடன் பழகிய நாட்களை அசைபோட்டுப் பார்க்கிறேன். அவை மறக்க முடியாதவை@ மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றுறொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை. குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ்வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் ‘செவிடுபட வைக்கும்’ அதிர்வோடு. அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும்போது, தினேஷ் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான். “தலை போகப்போகுது பதியடா தலையை” எனக்கூறினால், “டேய் தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து, கொட்டி எழும்பு என்ற தலையில் பிடித்துத் தூக்குவான்” என்பான். இக்கட்டான நேரங்களிலும் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான்@ இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத்தோட்டம் கண்முன்னாலே தெரியும்… இன்றைக்கு எல்லாவற்றையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்…. எமக்குப் பசியெடுக்கும் நேரம் எல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை தினேசைக் காணவில்லை. “பரவாயில்லை@ நாம் போய்வருவோம்” எனக்கூறி எமது அணி முன்னேறியது – பழம் பிடுங்குவதற்காய். மரத்தில் ஏறியாகிவிட்டது. பழங்களைப் பறித்துக் காற்சட்டைப் பையினுள் போட்டுக்கொண்டிருந்த வேளை… சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகிலே எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும் நாம் மெதுவாக – சத்தம் செய்யாது மரத்திலிருந்து இறங்கிப் பதுங்கி நின்றோம்…. வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது. … இந்த வேளையில் சண்டை பிடிப்பது எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் என்பதை மனதிற்கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்து நின்று கொண்டு தாக்குதலுக்குத் தயாரானோம். தினேசும், லெப்டினன்ட் சிந்துவும் சிரித்தபடி எமது செருப்புக்களை எடுத்துக் கொண்டு…. சிங்களம் கதைத்து எம்மை வெட்கப்படவைத்துவிட்டான். நிலைமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள, அசடு வழிந்தபடி அவனுடன் சேர்ந்து சிரித்தோம். இப்படி அவனது குறும்புத்தனங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஆறுமாதப் பிணைப்பால் ஒன்றுபட்டு எமது பணி தொடர்ந்தவேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது… எமது சோகங்களைப் பகிர்ந்துகொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும் வரை கைகளை அசைத்து விடைகொடுத்தோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்துவிட முடியாது, பிரிந்துசென்ற அவன் ‘மின்னல்’ தாக்குதலில் ஏ.கே.எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குநராகச் சென்றான். மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனது முப்படைகளினதும் உதவியுடன் மிக மூர்க்கத்தனமாகத் தாக்கினான்…. ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்கமுடியாத உறுதி பக்கபலமாக இருந்தது. இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக்கொள்கின்றது… அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறைசாற்றி நிற்கும்…. அவனது குருதியை எததனை முறை இம்மண் மாதா ஏந்தியிருப்பாள்… நினைத்துப் பார்க்கிறேன்…. காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய் எனக் கூறியது…. அன்பாகவும், பண்பாகவும், அதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்க்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் காலம் கிட்டியது. பாசறைதனில் பயிற்சி வழங்கப்பட்டது…. மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்;பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்துவிட்டான் தினேஷ்@ இவனுடன் யசி என்ற போராளியும்தான்….! “நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில” – பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்றுவிடவில்லை. சிரித்த படியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழ நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச்செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான. இவ்வாறு தான் செய்யும் சிறிய தவறுகளுக்காயினும் பெற்று தண்டனைகளை மகிழ்வுடன் எற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். நாம் அனைவரும் அவனைச் செல்லமாக “சம்மாட்டி” என்று தான் அழைப்போம். அதற்கு அவன் ஒரு நாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன்சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித்துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகின்றது. கொதித்தெழுந்த அவன்….. கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. “என்ர கடைசித் தங்கைக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா@ அவள்தாண்டா என்ர உயிர்” எனத் தங்கைமீதுள்ள பாசத்தின் ஆழத்தைத் தனது சக நண்பனிடம் கூறிவைப்பான். அடுத்த மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் – மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் – எதிரியானவன் ‘பலவேகய -2’ எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் உழைத்தான் தினேஷ், இரண்டாம் நாட்சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்துதான். “என்ரா மச்சான் அடிக்கயில்லை?” எனக் கேட்ட நண்பனிடம், “இயக்கம் படுற கஷ்டத்தில கண்ட மாதிரி அடிக்கக்கூடாது… ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஸ்ரப்படுது தெரியுமா?” என, தனது சொற்பொழிவைத் தொடங்கிவிட்டான். ஆம்… எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான்;: கிலிகொண்டு அடிப்பான் ஏனென்றால் அவனுக்குத் தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில்கூட நிதானமாகச் செயற்பட்டு, எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி எவ்வளவு அவனிடமிருந்து எடுக்கமுடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டுதான் வாருவார்கள். “இலட்சியம் ஒன்று தான் எங்களின் உயிர்… அதற்காக எம் உயிர் போவதுகூட எமக்கு கவலையை தராது…..” சண்டை முடிந்தது. சோகங்களை மனதில் தாங்கியவாறு, சக தோழர்களின் சில உடல்களைத் தோளில் சுமந்தவாறு மீளுகின்றோம். பழையபடி முகாம் களைகட்டுகின்றது. “இனிப்பு செய்வோமடா” ஒரு நண்பன் கேட்க, “ஒம் நான் நல்லாச் செய்வன். தேவையானதைக் கொண்டுவாங்கோ” எனக்கூறியபடி அடுப்பு வேலைக்கு ஆயத்தமானான் தினேஷ். சீனி, தேங்காய், மா எனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்து, சட்டியில் பாணியைக் கிண்டிவிட்டுக்கொண்டிருந்தான் அவன். காதை செவிடுபடுத்தும்படியாக எங்கிருந்தோ ஒரு ஷெல் வந்து வீழ்ந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அவனைக் கேலிபண்ண ஆரம்பித்துவிட்டார்கள். “டேய் எனக்கென்ன செய்யத் தெரியாதே….? கொண்டு வா, உங்களுக்க இனிப்புத் தந்தாச் சரிதானே….?” மீண்டும் வேலைகள் ஆரம்பமாக, சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும், எதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தனது கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது. அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் – பல மாத வேவுப் பணியின் பின்னர் – தாக்குதல் தீட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கின்றது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடிபாய்கிறது. கடலில் பாயும் கோழையவன் கடற்புலிகளால் மடிகின்றான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது, கடலில் கொட்டுகின்றது. விமான எதிர்ப்பு ஒரு புறம் முழங்க, கரும் பச்சைப் பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தாறு நிலத்திலே ஓடிக் கடலிலே கலக்கிறது…. தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடலங்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது…. சடுகுடு விளையாடுவதைப் போல மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது. “அண்ணை எனக்குக் குறிப்பிட்ட இடத்தைப் – பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன்; இது சத்தியம்” – உறுதியாக தளபதியின் கையில் அடித்து விட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகின்றான். குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கின்றான். அங்கே…. அங்கே… கடைசியாகத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ்மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, பூநகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்…. அவனது தொலைதொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக்கொண்டிந்தது. “அண்ணை எனக்குத் தந்ததைப் பிடிக்காமல் திரும்பிவரமாட்டன்” – அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது. அன்றொரு நாள் எனது டயறியில், “ என்ர நினைவாக இதை எழுதுகிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைச்சிரு என்ன?” என்றபடி எழுத ஆரம்பிக்கிறான். “நாம் அனைவருமே பலகொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையாகச் சேர்ந்தவர்கள். பிரிவு நம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது.” இப்படிக்கு, தினேஷ். அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ‘ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது….!’ நினைவுப்பகிர்வு: த.பாரதி நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி 1994). https://thesakkatru.com/captain-eezhamaran/
-
கப்டன் துளசிராம்
கப்டன் துளசிராம் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கப்டன் துளசிரா! மீண்டும் உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய… இருள் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நுளம்புச் சனியன் கை, கால் மூஞ்சி…… ஆ… ச்சீ குத்திக்குத்தி மனுசற்றை உயிரை எடுக்கும். கை அடிக்க…… பற்கள் குளிரில் கிட்டிக் கொள்ளும். வயிற்றுக்குள் குளிர் பந்தாகச் சுருட்டி உள்ளுறுப்புகள் நடுங்கும் குளிர். ஆனால்……? ஆ……ச்…… ஐயோ தும்மல் வாய்பிளந்து மூக்குளைஞ்சு…… ஆ… ச்… தும்மக்கூடாது; இல்லை நிச்சயம் அடிக்கியபடி…… பாம்பு ஒன்று நொளுநொளெண்டு வளுவளுத்தபடி முதுகாலை வழிய…… ஆட்டி விழுத்தலாம்……? உடல்கூசி…… ஐயோ அசையக்கூடாதே! அசைஞ்சா? ஆசையக்கூடாது அவ்வளவுதான்! பசியோடு தாகம்…… விழி நித்திரைக்கு யாசிக்கும். விழித்திரு…… விழித்திரு உனக்கு நிறைய விடயம் தேவை நிறையப் பொறுமை தேவை. அந்த இருளில் நிழலோடு நிழலாய்…… கருமையோடு கருமையாய் ஓ! எங்கள் துளசிராவும் அதில் பச்சையாய் – அந்தப் பெண் வேவுப்புலி கண்கள் சுழல…… காதுகள் தீட்டியபடி எதை எதைப் பார்க்கும்? எதிரியின் நகர்வு, ஆயுதம்…… எல்லாமே தேவை அவளுக்கு. அது முக்கியமானதும்கூட. மீண்டும் ஊர்ந்து…… அட எப்படி முடிந்தது இவளால் இவ்வளவு துரிதமாய்……? ஆச்சரியம் தரும் பெண் துளசிரா. ஆழ்ந்து சதா சிந்திக்கும் கண்கள். சற்றுக் கோபத்தைப் பூசிய விடுக்கான முகம். அன்பு இதயத்தில் இருந்தும் வார்த்தைகளில் கடுமை பூசி அனுப்பும் துளசி, எதையோ எழுதியபடி…… எதையோ தோழிகளுடன் பகிர்ந்தபடி…… எதையோ வாசித்த…… எதையோ அல்ல, வீரமும் தியாகமும் நிறைந்த கியூபாப் புரட்சி வீரன் ‘சேகுவேரா’ பற்றியோ அல்லது கரிபால்டி லெனின்…… இந்த வரிசையில் அமைந்த புத்தகங்களில் வரும் மனதைத் தொடும் சம்பவங்கள், வாக்கியங்கள்…… சகதோழியருடன் பகிர்ந்தபடி…… ஓ! அது எங்கள் துளசிராவால் முடியும். அது அவளேதான். “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியின் ஒலியில் நனைந்தபடி நீ ஆசானாய் அபிநயித்தபடி…… உன் தோழியர் ஆர்வத்துடன் பழகியபடி…… “இவளது இன்பங்கள் தொலைந்தது யாரால்?” – கவிதை முழங்கும். திரும்பிப் பார்த்தால், அட…… நம்மடை துளசிரா. “பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர்……?” கேள்விகள் தொடர்வது அதுவும் எங்கட துளசிராதான். வேவு நேரத்தில், “மூதேவி மாதிரிக் கிட்டவாரான் அசையாதை” எனக்கூறி, தனியாக தான் மட்டும் முன்னால் ஊர்ந்து ஊர்ந்து…… தோழியின் காதில் கிசுகிசுப்பாய் கூறியவள் முன்பக்கம் கிடப்பாள். ஒரு நாள் சாப்பாடு சரியாக வராததால் அவர்கள் அனைவரும் சோர்ந்தபடி…… “என்ன விசரப்பா மனுசனுக்குப் பசிக்குது” சிணுங்கிய அந்தச் சிறியவளை துளசி அழைத்து பசிக்குதா? பசியை நினைக்காதையுங்கோ…… வேவுப் புலிகள் இப்படிச் சோரக்கூடாது. மனசைத் தைரியப்படுத்துங்கோ. அண்ணாவை நினையுங்கோ. எவ்வளவு கஸ்டம் துன்பம்……” தொடரும் அவளது வார்த்தைகள் பசியை மட்டுமல்ல சோர்வையும் விரட்டும் தன்மைவாய்ந்தவை. துளசி, உன்னால் எப்படி முடிந்தது? நீ வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கண்டவள் போல்…… இனி யார்? இப்படி அவர்களுடன் கதைச்சு……? கரிபால்டியையும், கீயூபாப் புரட்சியின் ஆன்மார்த்த உணர்வைத் தட்டும் சம்பவங்களையும் கோர்வையாய்க் கண்கள் மின்ன மின்னச் சொல்லும் துளசிரா நீயா……? சோர்ந்து போகும் தருணம் விழி ஏங்கி…… முகம் வானம் பார்த்து…… ஓ துளசி! நீ நினைப்பது…… “அம்மா, என்ரை குஞ்சம்மர் என்னை மன்னி, நீ சீவியத்துக்கு என்ன செய்வாய்? எனக்குத் தெரியும் உன் கஸ்டம். ஆனால்……” …… கண்கள் பனித்து பெருமூச்செறிவாய். மீண்டும் உன் நினைவு தொடரும்…… “நிமிர்ந்திரு அம்மா, உன் பிள்ளைகள் இருவர் போராட்டத்தில்…… என்னை மன்னிப்பாயா?” மானசீக உரையாடல் அது. நட்சத்திரம் இவளை அமைதியாயப் பார்த்துக் கண் வெட்டும். ஆறுதல் அளிக்கும் – இவள் கவிஞை என்பதால்…… துளசிரா எனும் தாமரைச் செல்வியை (இயற்பெயர்) கால்கொஞ்சி அரவணைத்து மகிழ்ந்திருக்க, 1974.08.17 அன்று அவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்த சின்னமணி தவமணி மலைத்து நின்ற நாளாய், அவள் பிறந்தாள். செங்கதிரவன் முகம் பார்க்கும்போது சீண்டும் கடலையும், வானத்து நீலத்தைப் பார்த்தபடி நிமிர்ந்த பனைகளும், மணல்திடல் அராபியப் பிரமைதரும் அந்த வடமராட்சியின் கிழக்குப் பிரதேசமான வல்லிபுரக்குறிச்சி கிராமம் இவளை புதுப் பிரஜையாகச் சோர்த்துக்கொண்டது. சிறிது காலத்தின் பின், பசுமை படுத்திருந்து சிரிக்கும் கிளிநொச்சியின் 3ஆம் வாய்க்காலில் உன் சிறிய குடும்பம் குடியேறியது. உன்னுடன் ஓடிப்பிடித்து விளையாடி குதூகலித்திருக்க இரு தங்கை ஒரு தம்பி…… என்ன இனிமையானவை இந்த நாட்கள்! அப்பாவின் தோள்களில் தூங்கி…… அப்பாவுடன் நொடு நொடுத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு…… அம்மாவின் குங்குமமும் அவர்கள் சந்தோசம் அத்தனையும் வழித்தெடுத்தபடி, அவள் அப்பா 1989 இல் காலமானார். அப்பாவைத் தழுவி மாலை போட்டு சந்தனம் சாத்தி…… அம்மா, அவள்தான் அவ்வளவு துன்பத்தையும் தாங்கியவள். “என்னை, தன்ரை கஸ்டத்தின் விடிவெள்ளியாய் நினைத்து கனவு நிறைச்சு ஏங்கியபடி……” என கலங்கி உரைத்து மௌனித்தழும் துளசிரா. “அப்ப துளசி ஏன் இயக்கத்துக்கு நீங்கள்……?” என வினவினால் “சீ அது எனது கடமை. எனக்கு வீட்டுக் கஸ்டத்தைவிட நாடு……” தொடரும் அவளது உறுதி. “ஆனா தங்கைச்சியும் என்னைப்போலவே…… அதனால் சந்தோசம் அவள் இறுதிவரை போராட வேணும் இது என்ரை விருப்பம்…… ஏன் கடைசி விருப்பமும்கூட” எனக் கூறும் துளசிரா…… தங்கைக்கு உணர்வும் அனுபவமும் பகிரும் கடிதங்கள்…… ஓ துளசி, நீ வித்தியாசமானவள் தான். அந்த மௌனத்தில் எத்தனை அர்த்தங்கள் அம்மா! துளசிராவையும் புதுப்போராளியாக மாற்றியது அந்தக் காடு. 13ஆவது பயிற்சி முகாம் அது. அவள் படுத்திருந்து ‘நிலை’ எடுத்த மரம், பதுங்கித் தாக்குதலுக்காய் படுத்திருந்த அந்தப் புல்வெளி…… அவள் படுத்தபடி நிமிர்ந்து பார்த்து கற்பனையில் மிதக்கும் அந்தச் சிறு குடில்…… மரங்களின் இடையில் சிரிக்கும் அந்த நட்சத்திரம்…… எல்லாம் அவளுக்கு அடிக்கடி கியூபாப் போராட்டத்தை நினைவுபடுத்துவதாய்…… முழுப் போராளியாய் திறமையும் ஊக்கமுமாகஇ துளசி எதிரியுடன் யுத்தமாட ஆரம்பித்தாள். மாங்களம் எம்மவர் கைகளில் வீழ்ந்த பின் அதைப் பாதுகாக்கும் குழுவுடன் இவளும்…… ஆ. க. வெ. தாக்குதலில் எதிரியின் அங்குல நகர்வுக்கும் பதிலடி கொடுத்த பெண்புலி அணியில், இவளும் மிகவும் மூர்க்கமாக…… ‘மின்னல்’ – எங்கள் இதயபூமியில் தாண்டவமாடிய எதிரி நடவடிக்கையில் எதிரியைக் காலொடித்து விரட்டியவர்களில் இவளும் முன்னணியில்…… எதில் நீ உன் திறமையைக் காட்டவில்லை? ‘மின்னலில்’ காலில் காயமுற்று நீ சிறுகால ஓய்வுக்குப்பின்; வேவுப்புலியாய், அப்பப்பா இவளுக்கு எத்தனை அனுபவங்கள்…… மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து…… இருளில் இருளாக…… இலையாகி சருகாகி…… கட்டையாகி…… ஏதோ ஏதோவெல்லாம் இவர்களால் எப்படி? ஓ, இவர்கள் வேவுப்புலிகள். எத்தனை சகிப்புத்தன்மை வேண்டும் இவற்றுக்கு. துளசி, உன்னிடம் அது நிறைந்திருந்தது. உன் விழிச்சிவப்பு அது கூறும். இரவு தரும் தனிமை. அந்த மௌனம் தரும் பயங்கரம். கட்டைகள் எதிரியாகி உருவகிக்கும், பயம் தரும் உருவமாக…… திக்கென்று இதயம் அடித்துக்கொள்ளும். இதயம் சுழன்றுபோல்…… அந்த சரசரச் சத்தம். ஒருவேளை அந்த இழவுவிழுவானோ? கிட்டகிட்ட அண்மிக்கும் அந்தச் சத்தம். ‘சடார்’…… இதயம் லப்டப் லப்ட… ப்… நின்றுவிடும்போல் உதறிக்கொள்ளும். அந்த ‘அரியண்ட’ உணர்வு. இது சாதாரணமாய் ஏற்படும் அனுபவம். இதை இவளும் இவள் தோழிகளும் நிதானமுடனும் மிகுந்த சகிப்புத்தன்மையுடனும் பிரித்தறிந்து, அலுக்காமல் இருக்கும் உறுதி. துளசி, நீ இதில் ஊறியவள். குளித்து பலநாள் கூட இருக்கலாம். எத்தனை இரவுகள் நித்திரை இழந்து சிவந்துபோன கண்கள். அலுப்பற்ற தொடர் பயணம். ஊர்ந்து…… நடந்து…… கிடந்து…… மறைந்து…… அவன் ‘அசிங்கங்களின்’ மேல் படுத்தபடி கூட எடுத்த தகவல்கள். பகலில் அவற்றின் சாயல் கூட இன்றி துறுதுறுத்தபடி துளசி…… உன்னால் எப்படி இவற்றைத் தாங்க முடிந்தது? அதுவும் அறுவையும் சிரிப்புமாக…… எம் துளசியே உன்னை இழந்துவிட்டோமா நாம்? ஏக்கம் இதயத்தில் வந்தமர்ந்தது. எத்தனை தடவை துளசியும் குழுவும் அதிர்ச்சியான சம்பவங்களை அலுக்காமல் அனுபவித்து வரும்! நீண்ட நாள் எதிரியின் எல்லையுள்…… இரவில் தம்வீட்டு முற்றத்தில் திரியும் இரவுப்பிசாசுகள் போல்…… கண்கள் சுழன்று…… காதுகள் திரும்பி ஒலி சேகரிக்கும். இரவில் எதையோ தேடும்…… அது தடயமாக…… எதிரியின் நடவடிக்கையாய்…… அவனின் ஆயு…… மொத்தத்தில் எல்லாமே உனக்குத் தேவை. உன் தகவல் சேகரிப்பும் துணிவும் உன்னை சண்டைக்கான சிறந்த வழிகாட்டியாக்கியது உண்மை. அதனால்தான் உன்னை பத்தமேனிச் சண்டையில், உன் நகர்வு…… மிகவும் நுணுக்கமான உன் போர்த் தந்திரம்…… பொறுமை, கண்ணில் காயமுற்ற போதும் நீ மற்றவர்களுக்கு உதவிய உன் பண்பு, தாங்கும் தன்மை…… நீ வேவுப்புலிதான் அதுவும் பெண்புலி. கம்பிவேலி தாண்டும் இவர்கள் பாதங்களில் ஒன்றை எதிரி கண்ணிவெடி பதம் பார்க்கும். இழுத்தபடி…… அல்லது உயிரைத் தியாகம் செய்யும் அந்தப் புனித யுவதிகளாய்…… கண்ணும் மனமும் பலநாள் பார்த்திருக்கும். எதிர்பாராமல் அது நடந்தது. ‘அட விசரன் மாதிரி ‘போக்கஸ்’ அடிக்கிறான்.’ கிட்டக் கிட்ட இவர்களுக்கு அண்மையில் அவன் அட! பத்து யார் இருக்குமா? இல்லை மூன்று நாலு யார்…… அசையாமல் இறுகியபடி…… அப்பாடி! அங்காலை? ‘அசிங்கம்’ பண்ணியவன் மீண்டபோது இதயமும் மூச்சும் இயங்கும். ஒருவேளை அவன் கண்டால் சிதறும் உடல், சிவந்த தசைத் துகள்களாக்கித் கொள்ளும் தியாகம். துளசிரா நீ எத்தனை இரவை இப்படிச் சந்தித்திருப்பாய்! இவை உன்னைப் பாதிப்பதில்லை. நீ ஓர் திறமையான வேவுப்புலி; அதிலும் பெண்களில் தன்மானம் கூடியவள் நீ. இவர்கள் மாயப்பிசாசுகள் போல் திரிவது எதிரியின் கண்ணிவெடி விதைத்த வயல்களுக்குள்தான். அதில் பாதை அமைத்து மரணத்தை இருமருங்கிலும் ஒதுக்கிச் செல்லும் துணிவு மிக்கவர்கள். இவ்வளவும், இவளை பூநகரிக்கு வேவுப் பணிக்கு அமர்த்தக் காரணமாய் அமைந்தன. கால்கள் நடந்தன் கண்கள் துருவின் கைகள் ஸ்பரிசித்தன் காதுகள் கேட்டன. இருளிலும் தேடிய மறைந்து கிடந்த எதிரியின் அத்தனை விடயமும் தகவல்களாக…… அவை சண்டையாக உருவகம் பெற்று நிமிர்ந்து நின்றது துளசிபோல். “அங்கை பார் இந்த ‘போக்கஸ் லைற்’ சண்டை முடிந்து திரும்ப நாம் வரும்போது மானமிழந்து விடும்.” எத்தனை கனவடி உன் கண்களில். ஏன் திரும்பி அதை நீ பார்க்காமலே…… உனை நாம் இழந்துவிட்டோமே துளசிரா. பூநகரியில் – அந்த ஜில்லித்துப்போன பனித்த இரவு. படையணிகள் பல அணிகளாய் நகர்வதில்…… ஒரு அணிக்கு இவள் பாதைகாட்டி நகர்ந்தாள். உறுதியான உன் நகர்வும் உன் நாவு சொன்னதுபோல் சரியான வெளி. அவ்விடத்தை அடைந்தது அணி. கம்பிக்கட்டுக்கு நீ வைத்த ‘டோபிடோ’ காலைவாரியதால் ஒன்றும் பிசகி நிற்கவில்லை; மாறாய்இ மாற்றுவழி தேடியது உன் கூர்மதி. கைகளால் அத்தனை துரிதமாய், வேகமான பெண்ணாய் இயங்கிய உன் யுத்த அறிவு, அத்தனை ‘பொயின்’றும் கிளியர் பண்ணியது உனது கிரனேற்றுக்கள், பாதையமைத்து விரைந்தாய்; சுழன்றாடினாய்; களம் உன்னைப் பார்த்துத் திகைத்தது. உன் திறமையை நெடுக நெடுக உரைத்து நிமிரும் உன் தோழியர் கண் சிவந்தது எதனால் துளசி? உனை இழந்தோமே…… அதனால். உன் கண்களுக்கு தமிழீழத்தைப் பார்க்க ஆசை. ஆனால் நீ இறந்த பின் போராளிக்கு அவற்றை அளிக்கச் சொன்ன உன் நிமிர்வு, அண்ணாவை நினைவுகூர்ந்து பளபளக்கும் அந்தக் கண்கள், வீட்டின் வறுமையில் வாடிச்சிவந்த அந்தக் கண்கள், அறிவினில் ஜொலித்திருக்கும் உன் கண்கள். துளசி, நீ நிறையதான் கனவு சுமந்து நடந்தாய் பூநகரிக்கு. நினைவு இழந்து உயிரிழந்த உன் உடல்…… அதே நிமிர்வுடன் தான் துளசி இருந்தது. ‘போக்கஸ் லைற்’ இல்லை. உன் நினைவு போல் பூநகரி வீழ்ந்தது. எத்தனை உறுதியுடன் கூறிநின்றாய் துளசி! இறுதிக் கணத்திலும் உன் இனிய இதயம் அந்தப் பாடலை ஏன் கேட்டது? காற்றே நீயும்தானே பார்த்தாய் அவள் அழுததை. ஏன்…… ஏன் அழுதாள்? சாவுக்கு நீயே தேதி குறித்தாயா? அல்லது சாவு உனக்குத் தேதி குறித்ததா? “தாயக மண்ணின் காற்றே நீயும் மூசம்மா, நான் சாகும் நேரம் கடலே நீயும் மூசம்மா” பாடிய தோழி இங்கு குலுங்கிக் குலுங்கி அழுதாள் துளசி. இந்தப் பாடல்வரியில் நீ இனி அடிக்கடி வந்துவந்து போவாய். சாகும்போது சாதனைதான் படைத்தாய். உனக்கு அன்று ஓய்வும்கூட. நீ இழந்துபோன அத்தனை நித்திரையையும் வெறியுடன் அனுபவிப்பவள் போல் எத்தனை அழகாய்த் தூங்கினாய் துளசி! இப்போதெல்லாம்…… “தித் தெய்தாம் தித் தெய்தாம்” என்ற ஜதியில் நீ தெரிவாய். வேவு நேரத்தில், அந்த மௌனித்த இருளில் காற்றோடு உன் குரல், “ஏய் கவனம் அசையாதை……” என்பதுபோல கிசுகிசுத்து நிற்கும். சிவந்துபோன உன் தோழியர் கண்களில், உனைக் காண்போம் அதை உன் கண்களாய்…… மௌனித்த தோழியில் நீயாக…… ஓ…… அந்த அன்னையின் விசும்பலில் தெறிக்கும் உன் பிரிவுத் துயர்…… அந்த போராளித் தங்கையை இறுகவைத்திருக்கும் உன் இழப்பு…… உன் சின்னத் தம்பி தங்கையின் விழிநீர்த்தரையில் உன் முகமாய்…… உன் அன்னைக்காய், உன் சகோதரர்க்காய் உன் மௌனித்தழும் உன் தோழியர்க்காய்…… நிமிர்வதற்காய்…… காற்றிலே நுழைந்து கவிஞையாய், நடிகையாய், நடன ஆசிரியையாய், சுழன்ற டும் வேவுப் புலியாய், “தத் தெய்தாம் தித் தெய்தாம்” ஜதியில் வந்து போகமாட்டாயா எமக்காய் ஓர் தடவை? அந்த இருளை ஸ்பரிசித்து, நீயாக நினைத்தது மனம். உன்னுடன் பகிர்வதற்காய் நிறைய நிறைய விடயங்கள் துளசி மீண்டும் நீ வா ஒரு தடவை எமக்காய்……! நினைவுப்பகிர்வு: சீத்தா. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 1994). https://thesakkatru.com/capatin-thulasiram/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 அஹ்மது நபி ﷺ அவர்களின் அழகிய திருநாமங்கள் | அஸ்மாவுன் நபி ﷺ
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தீபாவளிக்கு 5 விதமான முறுக்கு ரொம்ப ஈஸியா இதுபோல செய்ங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பேரீச்சம்பழ பலகாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: ரவை 300g பேரீச்சம்பழம் 200g தேங்காய்ப்பூ 50g சீனி 50g பயறு 50g வேர்கடலை(கச்சான்) 25g முந்திரி பருப்பு (கஜு) 25g ஏலக்காய் தூள் 1தே.க நெய் 21/2மே.க உப்பு தேவையான அளவு கோதுமை மாவு 3மே.க மஞ்சள்த்தூள் 1/2தே.க உப்பு தேவையான அளவு
-
'டைட்டானிக்' பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி.
பரிதாப உயிரிழப்பு - படம் பிடிப்பவர்களின் தொல்லைக்கு அளவேயில்லை, தங்களின் வியாபார நோக்கத்திற்கு, நல்ல இடங்கள் தெரியு செய்கின்றோமென்று அடிக்கும் அலப்பறைகளுக்கு அளவு கணக்கில்லை, இது இப்ப இலங்கையில் இன்னும் மோசமாக இருக்கு,
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தளராத துணிவோடு
-
மாவீரர் புகழ் பாடுவோம்
ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி கதிரவனின் கதிராகவும்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
நடு கடலில் மழை அடிக்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேரடியில் கலையிலே நான் அழுத வேளையிலே நீ திரும்பி பார்க்கவில்லை முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆனைமுகனே அரனார் திருமகனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சுட்டிபுரம் வாழும் சிவ சுந்தரியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விநாயகனே வினை தீர்ப்பவனே