Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 ஆயனே என்னை மன்னியும் - 2 1. வலது கரத்தின் காயமே - 2 அழகு நிறைந்த இரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் 2. இடது கரத்தின் காயமே - 2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன்... 3. வலது பாதக் காயமே - 2 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன்... 4. இடது பாதக் காயமே - 2 திடம் மிகத் தரும் தேனமுதே அன்புடன்... 5. திருவிலாவின் காயமே - 2 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன்...
  2. கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2 ஏங்கியே நாடி வருகின்றது 1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2 இறைவா உன்னை என்று நான் காண்பேன் - 2 கண்ணீரே எந்தன் உணவானது 2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2 அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க - 2 என் உள்ளம் பாகாய் வடிகின்றது
  3. சரணா கதிஅருள் தரும் ஜெயமே... ஷாஹுல் ஹமீத் ஒலி நாயகமே || நெல்லை S.M.அபுல் பரக்காத் மாஷா அல்லாஹ்🙏 உயிரிருக்கும் வரை... உம்மை மறவேனே... || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி | ISLAMIC SONGS..
  4. பம்பை உடுக்கை மேலம் கேட்டு பவனி வருகிறாள்...
  5. வைரவர் பாடல் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் பாடல் வரிகள் -MVK குமணா தயாரிப்பு -சிவநேசன் கரன்
  6. லெப். கேணல் அக்பர் விடுதலை வீரியம்: லெப். கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் அக்பர் / வழுதி. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது. அவனுக்கு ஏதும் நடந்துவிட்டதா? அவனை எப்படித்தான் நாம் இழக்கமுடியும்? எல்லோரும் அவனைத் தேடினார்கள். அவன் எத்தனை பெறுமதிக்குரிய வீரன். களங்களில் அவன் சாதித்தவைகள்தான் எத்தனை. நாளைக்கும் அவன் வேண்டு மல்லவா? அவன் எங்கே போய்விட்டான்? அக்பர் பிறந்தது தவழ்ந்தது வளர்ந்தது எல்லாமே மட்டக்களப்பின் கதிரவெளியில்தான். போராட்டத்திற்கும் அவன் குடும்பத்திற்கும் நெருங்கிய ஒன்றிப்பிருந்தது. அண்ணன் அப்போது போராளியாய் இருந்தான். இந்திய படைகள் ஊருக்குள் நுழைந்து வீடுவீடாய் புகுந்து இளைஞர்களை வீதிக்கு இழுத்துச் துயரப்படுத்தின. இந்த அவலங்களுக்கு அக்பரும் விதிவிலக்காகவில்லை. அவனை வீட்டிற்குள் வந்து இழுத்து வெளியே தள்ளினார்கள். வண்டியில் ஏற்றி முகாமிற்குக் கொண்டு போய்க் கட்டிவைத்துச் சித்திரவதை செய்தார்கள். அண்ணன் போராளியாய் இருந்ததைச் சொல்லி அவனை கொடுமைப்படுத்தினார்கள். இந்தத் தாக்கங்கள்தான் அவனையும் போராளியாக்கியது. 1990ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்த அவன் அடிப்படைப் பயிற்சிகளை மணலாற்றில் பெற்றதோடு அவனின் நீண்ட போராட்டவாழ்வு முளைவிடுகின்றது. பல இரகசியப் பணிகளிலும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்ட அவன், சிறிய சிறிய சண்டைகளிலும் பங்குகொண்டு தன்னை ஒரு சிறந்த போர்வீரனாக வளர்த்துக்கொண் டான். அக்பரின் இந்த வளர்ச்சித்திறன் சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையின்போது முழுமையாய்த் தெரிந்தது. முன்னேறிவரும் எதிரியைத் தடுத்து நிறுத்தித் தாக்குதல் செய்வதற்கான வேவு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டான். அவன் பார்த்த வேவுகளின்படி தாக்குதல்களும் நடந்தது. ஒரு சாதாரண போராளியாய் சண்டைக் களங்களைச் சந்தித்த அவன், வேவு அணிகளை வழிநடத்தும் அணித் தலைவனாக வளர்ந்தான். இந்த நாட்களில்தான் முல்லைத்தீவிலிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது ஓயாத அலைகள் – 01 என்ற பெயரில் பாரிய படைநடவடிக்கையைத் தலைவர் அவர்கள் திட்டமிட்டுத் தயார்ப்படுத்தினார். இந்தத் தாக்குதலுக்கு இம்ரான் பாண்டியன் படையணியின் முறியடிப்பு அணியின் பற்றாலியன் உதவிக் கட்டளை அதிகாரியாக அக்பர் அமர்த்தப்பட்டான். எதிரி நினைத்திராத பொழுதில் முல்லைத்தீவுத் தளத்தில் அடிவிழுந்தபோது சிங்களம் திகைத்தது. யாழ்ப்பாண ஆக்கிரமிப்பிற்குப் பலமாய் நிற்கும் முல்லைத்தீவுத் தளத்தை இழக்க விரும்பாமல் கடைசிவரை அதைத் தக்கவைக்க கடும் முயற்சி செய்வார்கள் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். முல்லைத்தீவுப் படைகளைக் காப்பாற்ற சிங்களப்படை தரையிறக்கம் ஒன்றைச் செய்யும் என்பதை உய்த்தறிந்த தலைவர் அவர்கள், அணிகளைத் தயாராய் வைத்திருந்தார். எதிர்பார்த்தபடி அளம்பிலில் சிங்களப்படை வந்து தரையிறங்கியது. ஒரு தன்மானப்போர் அங்கே நடந்தது. கட்டளை வழங்கும் தளபதியாய் இருந்த அக்பர் சண்டை இறுக்கம் அடைந்த போது தானும் களத்திற்குள் புகுந்துவிட்டான். திறமையாய் அணியை வழிநடத்தினான். அளம்பில் மண்ணில் எதிரியைக் கொன்று போட்டான். முல்லைத்தீவுச் சமர் முடிந்து ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிவாகை சூடியபோது, அக்பர் ஒரு சிறந்த சண்டைக்காரனாக வெளிப்பட்டான். முல்லைத்தீவில் அடிவாங்கிய சிங்களப்படை, தங்கள் அவமானச் சின்னங்களை இல்லாமல் செய்வதற்காக ‘சத்ஜெய’ என்ற பெயரில் கிளிநொச்சியை வல்வளைப்பு படை நடவடிக்கையை தொடங்கியது. பரந்தனில் சிங்களப் படைகளை எதிர்கொண்ட புலி வீரர்கள் கடும் சமர்புரிந்தார்கள். சிங்களப்படை டாங்கிகளுடன் எங்கள் பகுதிகளுக்குள் புகுந்து கொண்டிருந்தது. சண்டை நடந்த இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த அக்பர், சண்டையின் இறுக்க நிலையைப் புரிந்து கொண்டு உடனே சண்டை நடந்த இடத்தை நோக்கி ஓடினான். உடனடியாக முடிவெடுத்து அங்கு நின்ற ஆர்.பி.ஜி உந்து கணை செலுத்தி வைத்திருந்த மூன்று வீரர்களை ஒன்றாக்கி முன்னேறிவந்த டாங்கிகள் மீது ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டான். இந்தத் தாக்குதலில் இரண்டு டாங்கிகள் எரிந்து அழிந்தன. இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அக்பரின் விரைவானதும் நுட்பமானதுமான இந்தத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேறியது. அன்றைய நாளில் எதிரியின் முன்னேற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்தியதில் அக்பர் முக்கிய காரணமாய் இருந்தான். ஏ – 9 சாலையைப் பிடித்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழிப் பாதையைத் திறக்கும் பாரிய நில வல்வளைப்பிற்கு அப்போதைய சிறிலங்காவின் துணைப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தவின் பேரிகை முழக்கத்தோடு, தொடங்கப் போகும் ‘ஜயசிக்குறு’ படை நடவடிகையை முறியடிக்கும் திட்டத்தில் தலைவர் அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட்டார். டாங்கிகளை எதிரி அதிகம் பயன்படுத்துவான் என்பதையும் தலைவர் புரிந்துகொண்டார். இந்த டாங்கிகளைச் சிதைப்பதற்காக ஒரு படையணியை உருவாக்குதவற்கு முடிவெடுத்து அதற்கான கட்டளைத் தளபதியாக யாரைத் தெரிவு செய்யலாமெனத் தேடியபோது அதற்குப் பொருத்தமானவனாய் தலைவரின் கண்ணுக்குள் தோன்றியது அக்பரின் முகம்தான். சத்ஜெய முறியடிப்புச் சமரில் அக்பரின் திறமையினைத் தலைவர் அவர்கள் இனம் கண்டுகொண்டார். அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக உருவாகினர். இந்தப் படையணியில் நுழைந்த அனைவருக்கும் கடும் பயிற்சி. அக்பரில் தொடங்கி சாதாரண போராளி வரைக்கும் எல்லோரும் பயிற்சியெடுத்துத் தேர்வின்போது சித்தியெய்திய பின்னரே இந்த அணிக்குள் நுழைந்தனர். அக்பர் ஒரு கட்டளை அதிகாரியாய் இருந்தபோதும் ஒவ்வொரு போராளிக்குமுரிய எல்லாக் கடமையையும் தானும் நிறைவேற்றினான். ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் கவனமெடுத்தான். போராளிகளுக்கும் தனக்குமான இடைவெளியைக் குறைத்து ஒரு நெருக்கமான, இறுக்கமான உறவை ஏற்படுத்தினான். எல்லாக் கடினபயிற்சிகளிலும் தானும் ஈடுபட்டபடி மற்றப் போராளிகளையும் ஊக்கப்படுத்துவான். பயிற்சித் தேர்வின்போது எந்தப் போராளியும் சித்தியெய்தாமல் விடக்கூடாது என்பது அவனது நோக்கமாய் இருந்தது. அப்படித் தேர்வில் சித்தியெய்தத் தவறியவர்களை மீண்டும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்திச் சித்தியெய்த வைத்தான். பயிற்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் போராளிகளுக்கு உணவு கொடுப்பதைக்கூட தானே நேரில் நின்று உறுதிப்படுத்திக் கொள்வான். ஒருமுறை நண்பகல்வேளையில் போராளிகளுக்குக் கொடுக்கும் பசுப்பாலைக் காய்ச்சும்போது எரித்துவிட்டார்கள். அதன்பின், தான் நிற்கும் நேரங்களில் தானே பால் காய்ச்சி போராளிகளுக்குக் கொடுப்பான். போராளிகள் தவறிழைத்தால் அல்லது கவனமின்றிச் செயற்பட்டால் அவன் எடுக்கும் நடவடிக்கை போராளிகள் எதிர்காலத்தில் எந்தவேளையிலும் அத்தகைய தவறுகளை விடாதபடி படிப்பினை மிக்கதாய் இருக்கும். ஒருநாள் போராளிகள் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அக்பரும் குளிப்பதற்காக கிணற்றடிக்கு வந்தான். அந்தச் சூழலை அவன் மேலோட்டமாய்ப் பார்த்தபோது அன்று காலையில் கிணற்றடி சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய பொருட்களின் தடயங்கள் அப்படியே கிடந்தது. அக்பர் ஒன்றும் பேசவில்லை. யாரையும் குறைகூறவுமில்லை. தங்ககத்திற்குப்போய் விளக்குமாறினை எடுத்துக் கொண்டுவந்து தானே கிணற்றடியைச் தூமைப்படுத்தினான். போராளிகள் அப்பொழுதுதான் விழித்துக் கொண்டவர்களாய் விளக்குமாறினை வாங்கிச் தூய்மைப்படுத்த முனைந்தார்கள். அக்பர் யாரையும் அதற்கு இசையவில்லை. அன்றைய நாளில் அந்தப் பகுதியை முழுமையாய் தானே தூய்மைப்படுத்தினான். அதன் பின்புகூட அவன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் பேசவில்லை. அக்பரின் இந்தச் செயற்பாடு போராளிகளின் விழிகளைக் கசியச்செய்தது. அதன்பின் ஒரு போதும் அந்தத் தவறைப் போராளிகள் விட்டதில்லை. அக்பரின் இந்தப் பண்பும் தவறிழைத்தவர்களைக் கூட யாரிலும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்தி அதற்குத் தீர்வு காணும் திறனும் போராளிகளிடத்து ஒரு தந்தைக்குரிய நிலையை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது. அக்பர் விளக்குமாறு பிடிப்பதில் மட்டுமல்ல களத்திலே ஆயுதம் பிடித்துச் சுடுவதுவரை இதே முடிவைத்தான் கடைப்பிடித்தான். அக்பரின் உச்சமான வளர்ச்சிகளுக்கு இதுவே அடிநாதமாய் இருந்தது. நீண்ட எதிர்பார்ப்புகளோடு தலைவர் இந்த அணியை உருவாக்கினார். 1997ஆம் ஆண்டு மே திங்கள் 13ம் நாள். புத்தபிரான் முன் சூளுரை எடுத்துக்கொண்டு வன்னி மீது ‘ஜயசிக்குறு’ என்ற பெயரில் பாரிய படை நடவடிக்கையை சிங்களம் தொடங்கியது. தயாராய் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் களத்திலே எதிரியை நேருக்குநேர் எதிர்கொண்டனர். மனோபலத்திலே எங்களுக்குக் கீழே நின்ற எதிரி ஆயுதபலத்தில் எங்களுக்கு மேலே நின்றான். சண்டைகளின் போது டாங்கிகளை முன்னணிக்கு அனுப்பி டாங்கிகளின் சுடுகுழல்களால் எங்கள் காப்பரண்களைச் சல்லடை போட்டுக்கொண்டு அந்த இரும்புக் கவசங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி எங்கள் பகுதிகளுக்குள் நுழைந்தான். இந்தச் சூழலை எதிர்பார்த்து அதற்கென்றே தயாராய் இருந்த அக்பரின் அணி, களத்தை நேரடியாய் சந்தித்தது. எதிரி ஒவ்வொரு அடி நிலத்தையும் வல்வளைப்புச் செய்ய அதிகவிலை கொடுத்தான். 25.05.1997 மன்னகுளத்தில் ஒரு கடுமையான முறியடிப்புச் சமரை எங்களது படையணிகள் நடாத்தின. டாங்கிகள் பரவலாய் முன்நகர்ந்தன. அக்பர் கட்டளை வழங்கும் காப்பரணில் நின்றபடி ஆர்.பி.ஜி ஏந்திய தனது போராளிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். போராளிகள் எதிரியுடன் நெருங்கி நின்று சண்டை பிடித்தனர். சண்டை உச்சமடைந்து கைகலப்புச் சண்டையாக மாறியது. இந்த வேளையில்தான் ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரன் பாபு வீரச்சாவடைந்த செய்தி அக்பரின் காதிற்கு எட்டுகின்றது. அக்பரின் இரத்த நாளங்களில் துடிப்பு அதிகரிக்கின்றது. எத்தனை அன்பாய் அவன் வளர்த்த வீரர்கள் மடிந்துகொண்டிருந்த போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரே சண்டை நடந்த இடத்திற்கு ஓடினான். எதிரி மீதான அவனின் சினம் அங்கு வீழ்ந்துவெடிக்கும் எறிகணைகளின் தாக்கத்திலும் மேலானதாய் இருந்தது. ஒரு கட்டளை மேலாளரான அக்பர் களத்திலே தான் வளர்த்தவர்களின் அருகில் நின்றபடி, பாள்ளி வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானைப்போல் களத்திலே சீறியபடி செல்லும் ரவைகளுக்குள்ளும் நெருப்புத் துண்டங்களாய் உடலைக் கிழித்தெறியத் துடிக்கும் எறிகணைத் துண்டங்களையும் கவனத்திற்கொள்ளாது டாங்கிகளைச் சிதறடிக்கும் வழியைக் காட்டினான். இறம்பைக்குள மண் அதிர்ந்தது. அந்தப்பொழுதில் அக்பர் அவர்களுக்குள் ஒருவனாய் நின்று ஆடிப்பாடி வளர்த்த நான்கு இளம் போராளிகளை விலையாய்க் கொடுத்து இரு டாங்கிகளையும் ஒரு படைக்காவியையும் அழித்து இரு டாங்கி களைச் சேதமாக்கியும் எதிரியின் கவசப் படைக்கு வலுவான அடியைக்கொடுத்தான். இத்தாக்குதல் முறியடிப்பின் மூலம் களத்தை முழுமையாய் வழிநடத்தும் கட்டளைத் தளபதிகளுக்கு விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் செயற்பாட்டில் நேர்த்தியான செயற்திறன் மீதான நம்பிக்கையை அக்பர் ஏற்படுத்திக் கொடுத்தான். 10.06.1997அன்று தாண்டிக்குளத்தில் தளம் அமைத்திருந்த ஜயசிக்குறு படைமீது ஒரு வலிந்த தாக்குதலை எமது படையணிகள் மேற்கொண்டன. இந்தக் களத்திலும் எதிரியின் டாங்கிகளின் நகர்வை முறியடிக்க ஒரு பிளாட்டூன் போராளிகளுடன் அக்பர் களமிறங்கினான். சண்டை கடுமையாய் நடந்தது. எதிரியை நெருங்கி மேற்கொண்ட இத்தாக்குதலின் ஒரு கட்டத்தில் அக்பர் விழுப்புண் அடைகின்றான். விழுப்புண்ணின் வலி அவன் உடலை வருத்தியதை விட எதிரி எங்கள் நாட்டின்மீது மேற்கொள்ளும் வல்வளைப்பின் வலி அதிகமாய் இருந்தது. விழுப்புண்ணிற்கு இரத்தத்தடுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு தொடர்ந்தும் தன் அணியை வழிநடத்திச் சண்டையிட்டான். இச் சண்டையில் இரு டாங்கிகளைத் தாக்கி அழித்து ஒரு படைக்காவியைச் சேதமாக்கி தாக்குதல் ஓய்விற்கு வந்த பின்னரே அக்பர் தளம் திரும்பினான். அக்பர் களங்களில் சாதித்த வெற்றிகளுக்கு அவன் வளர்த்த அணித் தலைவர்களும் காரணமாயிருந்தனர். தன்னிடமிருந்த நற்பண்புகளை அவர்களுக்கும் ஊட்டி வளர்த்தான். தனித்து முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய நேரங்களில் அதற்கும் வாய்ப்புக் கொடுத்தான். கட்டம் கட்டமாய்ப் பாரிய இழப்புக்களைச் சந்தித்தபடி முன்னேறிய எதிரிப்படையைப் புளியங்குளத்தில் வைத்து ஒரு வலிமையான தடுப்பு அரண் அமைத்துச் சண்டையிட்டன எமது படையணிகள். 19.08.1997 அன்று காலைப்பொழுது. பேரிரைச்சலைக் கிளப்பியவாறு வேகமாய் வந்த டாங்கிகளும் துருப்புக்காவியும் எங்களது காப்பரண்களை ஏறிக்கடந்து புளியங்குளம் சந்தியை மூலப்படுத்தியிருந்த எமது தளத்திற்குள் நுழைந்தன. நிலைமையைப் புரிந்து கொண்டு விழித்துக்கொண்ட எமது அணிகள் முகாமிற்குள் எதிரியைச் சல்லடை போட்டார்கள். ஆர்.பி.ஜி கொமாண்டோப் போராளிகளுக்கு மேஜர் காவேரிநாடன் கட்டளை வழங்கி வழி நடத்த முகாமிற்குள் நுழைந்த எதிரியுடன் பதட்டமில்லாமல் சமரிட்டு இரண்டு டாங்கிகளை அழித்தும் ஒரு துருப்புக்காவியைக் கைப்பற்றியும் சிலவற்றைச் சேதமாக்கியும் எதிரியின் கனவைச் சிதைத்து ஓட ஓட விரட்டியடித்தனர். இந்தச் சண்டையின்போது அக்பர் களத்தில் இல்லாபோதும் அவன் வளர்த்த அணித் தலைவர்களும் போராளிகளும் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியின் பெயரை நிலை நிறுத்தினர். இப்படி ஜயசிக்குறு களத்தில் அக்பர் பல சண்டைகளை எதிர்கொண்டான். ஒவ்வொரு சண்டைகளிலும் எதிரியின் டாங்கிப் படைக்கு நெடுக்குவரியைக் கண்டால் குலை நடுங்கும்படி உருவாக்கினான். எப்போதாவது டாங்கிகள் பேசுமாயின் தாங்கள் நடுங்கிப்பயந்து ஒடுங்கிப்போனது பற்றி அவைகூடச் சொல்லும். ஏனென்றால் அக்பர் தன் போராளிகளை வைத்து களங்களில் அப்படித்தான் சாதித்தான். ஓயாத அலைகள் – 02 நடவடிக்கை தலைவர் அவர்களால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி நகரையும் பரந்தனையும் ஊடறுத்து எதிரியை இரண்டாகப் பிரித்துத் தாக்கும் அணிகளுடன் விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் இணைக்கப்பட்டது. சண்டை தொடங்கியதும் ஊடறுப்பு அணிகள் உள்நுழைந்தன. கிளிநொச்சிப் படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது. வயல் வெளிகளுக்குள் இரண்டு பகுதியாலும் முன்னேற முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் களச் செயற்பாட்டில் அணிகள் ஈடுபட்டன. கிளிநொச்சித் தளம் மீது பலமுனைகளில் அழுத்தம் கொடுத்துத் தாக்குதல் தொடுக்க முற்பட்டபோது கிளிநொச்சியைத் தம்முடன் இணைப்பதற்காக பரந்தனில் இருந்து டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். இவர்களை வழிமறித்த ஏனைய படையணிப் போராளிகளும் விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளும் கடும் சமர்புரிந்தனர். அவ்வேளையில் நிலைகளைப் பார்த்து உறுதிப்படுத்தியபடி வந்துகொண்டிருந்த அக்பரும் ஏ – 9 பிரதான சாலையை அண்மித்திருந்தான். முன்னேறிய டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் பொறுப்பை மணிவண்ணனிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் நின்ற பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த துருப்புக்காவி ஒன்றினை அருகில் நின்ற கொமாண்டோ வீரனின் ஆர்.பி.ஜியை வாங்கித் தானே தாக்கியழித்தான். இந்தத் தாக்குதலில்தான் லெப். கேணல் மணிவண்ணனும் ஒரு டாங்கியைத் தாக்கியழித்தான். தங்களது கவசங்கள் உடைந்ததால் எதிரியின் உளவுரனும் உடைந்தது. பரந்தனையும் கிளிநொச்சியையும் இணைக்கும் அவர்களின் கனவு கைகூடாமல் போனது. கிலிகொண்ட சிங்களப்படை கிளிநொச்சியைவிட்டுத் தப்பியோடியது. இதேபோன்றுதான் 26.06.1999 பள்ளமடுப் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட ரணகோச நடவடிக்கை மீதும் அக்பரின் படையணி முத்திரை பதித்தது. இந்தச் சண்டையில் எதிரி டாங்கிகளைக் கூடுதலாகப் பயன்படுத்தி டாங்கி நகர்வாகவே மேற்கொண்டான். ஆர்.பி.ஜி அணிக்கு இது ஒரு சவாலான சண்டையாக இருந்தது. டாங்கிகள் உந்துகணைகளை அந்த நிலம் முழுவதும் விதைத்தது. காப்பு மறைப்புக்கள் பெரிதாக இல்லாத அந்த நிலத்தில் நின்றபடி அக்பர் தெளிவாகக் கட்டளைகளை வழங்கினான். அக்பரின் கட்டளைக்கேற்ப நிலைகுலையா வலிமைகொண்ட போராளிகள் கடும் சமர்புரிந்தனர். இந்தச் சண்டையின் முடிவில் ஏழு போராளிகள் உயிர்களைத் தாயக விடுதலைக்காய் கொடுத்து ஆறு டாங்கி களை எரித்தழித்திருந்தனர். எதிரியின் கவசப் படையின் பலத்தை விக்ரர் சிறப்பு கவச எதிர்ப்பு அணி நிலைகுலையச் செய்தது. இப்படித்தான் ஜயசிக்குறுப் படை மூக்கை நுழைத்த திசையெல்லாம் அக்பர் செயலால் தன்னை வெளிப்படுத்தினான். அக்பரின் குறியீட்டுப்பெயர் ‘அல்பா – 1’. களத்திலே ‘அல்பா – 1’ வந்துவிட்டால் எல்லாப் போராளிகளுக்கும் உடலில் புது இரத்தம் ஓடும். களத்தில் ‘அல்பா – 1’ இன் ஆட்கள் வந்தால் எதிரிப்படைக்கு வியர்த்து ஓடும். அப்படித்தான் அக்பர் சாதித்தான். அக்பர் எந்தச் சூழ்நிலையிலும் எந்தவேளையிலும் தனித்து முடிவெடுத்துச் செயற்படுத்தும் திறன்வாய்ந்தவன். ஒட்டிசுட்டான் பகுதியை வல்வளைப்புச் செய்யும் நோக்கோடு இரகசிய நகர்வின்மூலம் எதிரி எமது பகுதிக்குள் நுழைந்த செய்தி அக்பரின் காதுக்கு எட்டிய உடனேயே தனது போராளி களின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளை வாங்கிக்கொண்டு அவர்களின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அணியினைத் தயார்ப்படுத்தும்படி கூறிவிட்டு எதிரி முன்நகர்ந்த இடங்களைக் கண்டறிவதற்கு அக்பர் விரைந்தான். அப்போது அக்பரின் முகாம் அந்த இடத்திற்கு நெருங்கிய பகுதியில்தான் அமைந்திருந்தது. முன்னேறிய எதிரியை நகர விடாமல் உடனடியாகவே ஒரு தடுப்பு நிலையை உருவாக்கி நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து ஏனைய தாக்குதல் அணிகள் அந்த இடத்தைப் பொறுப்பேற்கும் வரை அவனே அந்த நிலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான். ஆனையிறவை வீழ்த்துவதற்காக இத்தாவிலில் ஒரு தரையிறக்கத்தினைச் செய்து ஒருமாத காலம் சமர் புரிந்தபோது அக்பரும் அவன் போராளிகளும் எதிரியின் கவசப்படையின் முன்னேற்ற முயற்சிகள் அனைத்தையும் முறியடித்துப் பல கவசங்களைச் சிதைத்தனர். இத்தாவிலில் சிங்களம் சந்தித்த தோல்விக்கும் ஆனையிறவை வீழ்த்தி விடுதலைப்புலிகள் வெற்றிவாகை சூடியதற்கும் அக்பரிற்கும் அவன் படையணிக்கும் பெரும் பங்கிருந்தது. விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்ட ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கோடு ‘தீச்சுவாலை’ என்ற பாரிய இராணுவ நடவடிக் ஷகையை எதிரி மேற்கொண்டபோது டாங்கிகளை அவன் முந்நிலைப்படுத்தவில்லை. ‘ஜயசிக்குறு’ களச் சமர்களின்போது இஸ்ரேல் தயாரிப்பில் உருவான டாங்கிகளையும் படைக்காவிகளையும் அக்பர் நொருக்கி அழித்தான். அவற்றின் சுழல்மேடையினையும் சுடுகலங்களையும் தன் காலடிக்குள் பணியவைத்தான். ஒட்டு மொத்தமாய் களத்தில் டாங்கிகளின் செயற்திறனை இல்லாநிலைக்கு கொண்டுவந்தான். தலைவர் அவர்கள் எப்படி எண்ணி இந்த விக்ரர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியை உருவாக்கினாரோ, அந்தக் கனவில் சிறிதும் பிழை இல்லாமல் நினைத்ததை அப்படியே தனது அணியை வைத்து அக்பர் செய்து முடித்தான். இரும்புக் கவசத்தின் வலிமையைச் சிதைத்து விடுதலைப் போராளிகளின் வலிமையை உலகிற்குக் காண்பித்தான். அக்பர் இப்படிப்பல பணிகளைப் புரிந்தான். பின்னாளில் பல அணிகளை இணைத்தும், பல புதுமையான ஆயுதங்களை உள்ளடக்கியதுமான அணிகளையும் அக்பர் வழிநடத்தினான். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் மட்டக்களப்பின் ஆண்டாங்குளப் பொறுப்பாளராகத் தலைவரின் சிறப்புப் பணிப்பின் பேரில் சென்று பணிபுரிந்தான். களப்பணியையும் மக்கள் பணியையும் ஒன்றாகச் செய்தான். தூர இடங்களுக்குக்கூட கால்நடையாகச் சென்று வேவுபார்த்துத் தாக்குதல்கள் மேற்கொள்வது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது என அவன் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தான். ஒரு தளபதியாய் இருந்தபோதும் ஒரு இயல்பான போராளியாகவே தன்னை கருதிக் கொள்வதும் ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரையும் மதித்து நடப்பதும் பண்பான சொற்களைப் பயன்டுத்தி உரையாடுவதும், புன்சிரிப்பை மெல்லியதாய் பரவவிடுவதும் அவனுடன் கூடப்பிறந்த குண இயல்புகள். இந்த வீரன் 23.05.2005இல் தமிழீழத் தேசியத் துணைப்படையின் வடபோர்முனைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். அன்றிலிருந்து முன்னணி நிலைகளுள் அவர்களுடன் வாழ்ந்து ஒரு சிறந்த படையாக அதை உருவாக்கினான். 11.08.2006இல் முகமாலையில் எதிரி முன்னேறியபோதும், தொடர்ந்துவந்த சண்டைகளிலும் தேசியத் துணைப்படை எதிர்பார்த்ததிலும் அதிகமாய் அல்லது எதிர்பார்க்காத வகையில் சண்டையிட்டதாயின் அதன் ஆணிவேராய் இருந்தது அக்பர்தான். அக்பர் கட்டளை வழங்கினால் அவர்கள் சாதிப்பார்கள், அல்லது சாதனைக்காய் மடிவார்கள். அக்பர் அப்படித்தான் வாழ்ந்தான். இந்த வீரன்தானே எதிரியின் எறிகணை வீச்சில் எங்களை விட்டுப்பிரிந்து போனான். அவனுடன் கூடப்போன சாதுரியனும் அன்று மடிந்தான். அக்பரின் பிரிவு தளபதிகளில் இருந்து போராளிகள் வரை எல்லோரின் இதயத்தையும் ஒருமுறை உலுப்பி விழிகசிய வைத்தது. அக்பர் என்ற பெயருக்கு களத்தில் ஒரு வலிமை இருந்தது. ஒவ்வொரு ஆர்.பி.ஜி கொமாண்டோ வீரனின் வலிமையும் அக்பர்தான். அந்த வீரனின் நினைவுகளைச் சிறப்புத் தளபதிகளுடன் பகிர்ந்துகொண்டபோது அவன் ஒரு களஞ்சியமாய்த் தோன்றினான். அக்பர் ஒரு பண்பான போராளி, பெருந்தன்மையில்லாது பெரிய சாதனைகளைப் படைத்த தூயவீரன். தலைவன் நினைத்ததைச் செய்துமுடித்தவன், எந்த வேளையிலும் எந்த வளப்பற்றாக்குறையிலும் பெரிய வேலைகளையும் அமைதியாய் செய்து முடிப்பவன். சொல்வதைச் செய்வான், செய்வதைச் சொல்ல மாட்டான். இரும்பின் வலிமையை மிஞ்சிய தந்திரசாலி. எல்லாவற்றிற்கும் மேலாய் அக்பர் எங்களின் படையச் சொத்து. இத்தனை செயற்திறன் மிக்க வீரன் எங்களுக்குள் சத்தமில்லாமல் நடமாடித்திரிந்தான். களத்திலே இப்போதும் அவன் நிறையச் செய்யத்துடித்தான். உறங்குநிலையில் இருந்த ஆர்.பி.ஜி அணியை மீண்டும் இயங்குநிலைக்குக் கொண்டுவந்து பாரிய நடவடிக்கை ஒன்றினை முறியடிக்கும் முன்னேற்பாட்டுபோது அவன் மடிந்துபோனான். ஆயினும் அந்தப் பெயரின் வலிமை இப்போதும் இருக்கிறது. அக்பர் வீழ்ந்தபின்னும் அவன் வளர்த்த போராளிகள் எதிரியின் டாங்கிகளை நொருக்கினார்கள். ”தலைமைத்துவத்தின் பண்பு என்பது அவன் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, அவன் வீழ்ந்துவிட்ட பின்பும் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவது தான் அவன் தேடிவைத்த சொத்து” அக்பர் இந்தச் சொத்தை அதிகம் தேடிவைத்திருக்கிறான். கடைசியில், அக்பருக்கு ஒரு ஆசையும் ஆதங்கமும் இருந்தது. அக்பர் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான போராளி. அவன் களங்களிலேயே அதிகம் வாழ்ந்தவன். தன் குழந்தைகளோடு கொஞ்சிவிளையாட அவனுக்கு நேரம் கிடைத்தது குறைவு. எங்காவது ஒரு பொழுதில் வீட்டிற்குச் சென்றாலும் தங்கி நிற்கமாட்டான். துணைவி மறிப்பாள். அவளின் வேண்டுகை அவனுக்குப் புரியும். அவளைத் தலைவரின் படத்திற்கு முன் கூட்டிவருவான். தலைவரின் படத்தைக்காட்டி, ”அண்ணை நிறைய எதிர்பார்க்கிறார். அண்ணையைப்போல நாங்களும் செயற்படவேணும். பட்ட கஸ்ரங்களோடை சேர்ந்து எல்லாரும் உழைத்தால் விரைவில் விடிவு கிடைக்கும். விடிவு கிடைச்சா என்ர குழந்தைகளோட செல்லங்கொஞ்சி அவையள நான் வடிவா வளர்ப்பன்தானே” என்று கூறி விட்டுப் போய்விடுவான். அப்படியே அவன் போய்விட்டான். தனக்கென்று வாழாத இந்த உன்னத வீரனின் கடைசி ஆசைப்படி அவனின் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை நாம்தானே போராடிப் பரிசளிக்க வேண்டும். நினைவுபகிர்வு: ச.புரட்சிமாறன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2006). https://thesakkatru.com/lt-col-victor-anti-tank-regiment-special-commander-lieutenant-colonel-akbar/
  7. லெப். கேணல் நிரோஜன் கடலில் அவனது காவியம்: கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்றுக் கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும் போது அந்த நீருக்குள்ளும் இந்த நிறோஜனின் கதை இருக்கும். 1990 இல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992 இல் ஆரம்பிக்கின்றது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்த தமிழீழ கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்து கொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்ட கால அனுபவமுள்ளவனைப் போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்திருந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டுவந்த அந்தத் தாக்குதல் நடைபெற்றது. அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிறோஜனின் கடல்வழி விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிறோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இருளின் நடுவில் சடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்னசெய்வதென்றே புரியாத போதிலும் நிறோஜன் நிதானமாகப் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதை தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டோறாப் படகின் ஆயுதபலமும் நிறோஜனின் அந்தச் சிறிய படகின் ஆயுதபலமும் ஒப்பிட முடியாதது. ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில சிங்களப் படையை கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரை சேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு ஆரம்பமாய் இருந்தது அந்தத் தாக்குதல்தான். அதன் பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்நித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை. 1996ம் ஆண்டு ஒக்டோபரில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது. சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்கு வானூர்திகளும்இ கடற்கலங்களும் நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும்இ சிறிலங்காவின் தரைஇ கடற்படைகளுக்குமிடையே சண்டை மூண்டது. அந்தத் தாக்குதலை திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல. சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக்கொண்டது. ஆனாலும் அது நிறோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரி மீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடி வரும் அளவிற்கு சிங்களம் துணிந்தமை அவனுக்கச் சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். சிங்களம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடி வந்தது. இப்போது சிங்களத்தின் குகையை நோக்கி புலி சென்றுகொண்டிருந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி கட்டளைப் படகில் நிறோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக்கொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்குத் துணையாகப் படகுகளும்இ கரும்புலிப் படகுகளும் சென்றுகொண்டிருந்தன. அது திருனோணமலைத் துறைமுகத்தின் வாசல்; அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமைத்துக்கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது. நிறோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றிமாற்றிச் சண்டை பிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவன் இப்போது அந்தப் கரும்புலிப்படகை டோறா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல்நீரின் மேல் செயலற்று நின்றது. நிறோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும் நிறோஜன் அந்த டோறாவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சுடுகலனான 20 மி. மீ கனரக ஆயுதத்தை துரிதமாக கழற்ற முற்பட்டான் நிறோஜன். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது. நிறோஜனுக்கு அந்த ஆயுதத்தைக் கையாண்ட பயிற்சி இல்லாத போதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றி விட வேகமாக இயங்கினான். அந்தக் கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதே நேரம் மற்றொரு டோறாப்படகு செயலிழந்த டோறாவைக் குறிவைக்க நிறோஜனின் கட்டளைப்படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்கஇ நிறோஜன் அந்தக் கனமாக சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான். அதன் சுமை அவன் உடலை கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதைக் கைவிடாது நீந்திப் படகேறினான் சிங்கத்தை அதன் குகையில் சந்நித்துத் தாக்கிய திருப்தியுடன் புலி தளம் திரும்பிக்கொண்டிருந்தது. இப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத்தளபதி அவன். அந்தப் பணியை பொறுப்பேற்றதிலிருந்தே தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும்இ கடல் மூலமான விநியோகப் பணிகளை மேற்கொள்வதும் தான் அவனது நோக்கமாக இருந்தது. அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள் தான் அதன் பின் அதிகமாக இருந்தது. கடலில் விநியோகப்பணியை மேற்கொள்ளும் போது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்து வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிறோஜன். இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் விநியோகப் பணிகளை மேற்கொண்ட படகுடன் சிங்களக் கடற்படையின் படகுகள்; தாக்குதலிற்குள்ளான போது 50 கடல்மைல்களிலிருந்து நிறோஜனின் இரு படகுகள் அந்தக் கடற்கலத்தை நோக்கி விரைகின்றன. இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிறோஜன் அந்தக் கடற் சூழலுக்கேற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகிறான். ‘மயூரன்’ படகு நான்கு டோறாக்களை எதிர்கொள்ளத் ‘தேன்மொழி’ படகு மூன்று டோறாக்களை எதிர்கொள்கிறது. அங்கே அந்தச் சிறிய படகுகள் இரண்டும் அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி முன்னேறிக்கொண்டிருந்தன. இறுதியாக அந்த விநியோகப் படகுகளை மீட்டுக் கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள். இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவான போதும் நிறோஜனின் நிதானமானதும்இ சாதுரியமானதும்இ உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறடிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது. இந்த நாட்களில் தான் சிறிலங்காவின் அமைச்சரொருவர் “யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான விநியோகமே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிறோஜனின் காதுகளுக்கெட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒரு நாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கப்பற் கொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பற் தொகுதி முல்லைக் கடற்பரப்பை தாண்டிக் கொண்டிருக்கும் போது நிறோஜனின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிப் படகுகள் களமிறங்கின. மூன்று சண்டைப் படகுகளும் இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல் நோக்கிச் சென்று அந்தக் கப்பற் தொகுதியை மேவி வந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளின் பலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்களும்இ நான்கு படகுகளும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும்இ பபதாக்கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்றுகொண்டிருந்தது. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுத பலமும்இ கடற்கலங்களின் பலமும் இருந்தபோதும் அசாத்தியமான துணிச்சலும்இ சண்டையை வழிநடத்தலும் தளபதியின் திட்மிடலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது. இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்குவைத்து பின் தொடர்ந்தன கடற்புலிப்படகுகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்த போதும் அவை சண்டை பிடிக்கப் பயந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தன. நிறோஜன் கட்டளைகளை வழங்க அந்தக் கப்பல்களை நோக்கிப் படகுகள் நெருங்கிச் சௌ;றன. எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கேற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற் தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடக்கி வைத்தனர். அவை அப்போதும் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றதும்இ எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்ற கடற்புலிகளின் படகுகள் பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்ட தூரம் சென்று விட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்படஇ களத்தில் நின்ற படியே சண்டையை வழிநடத்தினான் நிறோஜன். உயர்ந்து எழுந்து விழும் அலைகளுக்குள் நிதானமாக நிற்க முடியாத படகிற்குள் நின்று கொண்டும்இ சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தும்இ நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று படகுகளுள் ஒன்றுள் நின்றான் நிறோஜன். அன்று எதிரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சமரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக எதிரியின் சுற்றிலிருந்த பாதுகாப்புக் கலங்களை ஊடறுத்து ‘பபதா’ கப்பல் மீதும்இ ‘வலம்புரி’ கப்பல் மீதும் கரும்புலிப் படகுகள் மோதி வெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் திரும்பின கடற்புலிப் படகுகள். இந்தத் தாக்குதல் முடிந்தபின் மீண்டும் விநியோகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள். அந்தப் படகுகளை வழிமறித்து டோறாப் படகுகள் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியதும் கரையிலிருந்த படகுடன் விரைந்தான் நிறோஜன். “பிரச்சினையில்லை நான் கிட்ட வந்திட்டன்இ நீங்கள் வடிவாச் சண்டை பிடியுங்கோ” தொலைத் தொடர்புக் கருவியில் நிறோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்களத்தில் சமர் புரிந்து கொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினர். நிறோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை விநியோகப் படகிலிருந்து பிரித்துத் தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றகைக்குள் இருந்தன எமது படகுகள். இப்போது நிறோஜனின் முற்றகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள். நேரம் கடந்துகொண்டிருக்க சண்டை நிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க அது செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிறோஜனுடன் சேர்ந்து கடல் நடுவே உரக்கக் கூச்சலிட்டனர். ஆமாம் அன்று தான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித்தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச் சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிறோஜன் அந்த டோறாவைக் கடலில் கைவிடவில்லை. ஏனைய டோறாப் படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிறந்த டோறாவைக் எங்களது படகில் கட்டி இழுத்து வந்தான். அது இடையில் தானாவே கடலில் மூழ்க ஆரம்பிக்க அதிலிருந்த இராணுவ உபகரணங்கள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமைகள் மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது. நிறோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும்இ நுட்பமான திட்டங்களாலும்இ நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன். கடலில் சண்டை மூழும் போது கரையில் நின்ற கட்டளை வழங்கும் போது அவர்கள் அவனின் திறமை மீது கொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதல்கள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்து கொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெஐப்பாகச் சீறும் அந்த நிறோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதும் அல்ல. அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகில் இருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போது எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவனை ஒரு கடற்படைத்தளபதியாகப் பார்க்க முடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருப்பதை விட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம். அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும் போது சாதாரண போராளிக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமிற்குச் சென்றால் நிச்சயமாக அவனை நீங்கள் பிரித்தறிய முடியாது. போராளிகள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது. விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின் போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைப் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது. தொடர்ச்சியாக இரவுபகலாக பணிகள் நடந்து கொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவன் அந்தப் போட்டிகளின் போது நீச்சல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான். அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல. ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளனாகஇ ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலித் துணைத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்டவன். ஆனாலும் இந்த இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத்தளபதி ஒருவனை விட பன்மடங்கு உயர்ந்தவன். ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தை துணையாக்கி தனது நுட்பமான திட்டமிட்ட தாக்குதலினால் மட்டுமே அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்டையில் அவன் வென்றிருக்கவே முடியாது. அன்றைய தினம் 07.01.1999 அன்றும் விநியோகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிகளின் இருபடகுகள். அவற்றில் ஒன்றில் நிறோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றகையிடுகின்றன. சண்டை மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தது. மாலை மங்கிய பொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்த போதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன்படகுகளைப் பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்து போக அந்தப் படகை நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்துப் புகுந்து தனது எரிபொருளில் பாதியை அந்தப் படகுக்கு வழங்கிச் சேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக்காட்டி கரை சேர்ப்பித்தான். அதனால் தான் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடும் போது “எந்தச் சிக்கலான சண்டையெண்டாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்கிற பொறுப்பை விட்டிடுவன். ஏனெண்டா என்னை விட அவன் சிக்கலான சண்டையள்ள கூட தானும் பதட்டப்படாமல் போராளினளையும் பதட்டமடையாமல் வைச்சு சண்டைபிடிச்சு வெற்றி கொள்ளிறதில திறமையானவன். இதில அவனுக்கு நிகர் அவனே தான்” என்றார். இந்தத் திறமையான தளபதி தான் 07.10.1999 அன்றும் விநியோகப் பணியல் ஈடுபட்டுக் கொண்டிருந்த விநியோகப் படகுகளை நடுக்கடலில் டோறாப் படகுகள் வழிமறித்த போது கரையிலிருந்து தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுகளையும் அழைத்துக் கொண்டு கடற்களத்தில் இறங்கினான். இன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடும் இருள் கடல்வெளியினையே மறைத்துக் கொண்டிருந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக் குழப்பத்தால் தங்களது பணியைச் செய்ய மறுத்துக் கொண்டிருந்தன. நிறோஜன் தன் நீண்டகால கடல் அனுபவத்தினை மட்டுமே வைத்துப் படகினை நகர்த்தினான். விநியோகப் படகிற்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற உறுதியடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப் படகுகள் இரண்டும் இயந்திரக் கோளாறினால் மெதுமெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப் படைக்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவும் சண்டை பிடிக்கவேண்டியதாயிருந்தது. அவன் எங்களின் விநியோகப் படகுகளை நெருங்குகின்றான். அங்கே எங்களது ஒரு படகைக் காணவில்லை. அது டோறாவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களுக்குச் சேதமில்லை. அவை பத்தரமாக ஒரு படகில் இருந்தன. அவன் அந்தத் திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான். கடல் இப்போதும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் டோறாவின் நிலைகள் அவன் கண்களுக்குள் தெரியவில்லை. விநியோகப்படகு பத்திரமாய் கரைதிரும்பிக் கொண்டிருந்தது. இப்போது நிறோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்று கொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்கள் மௌனமாய்க் கிடந்தன. எப்போதும் எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்றுமட்டும் “என்ர படகுக்குச் சேதம் முடிஞ்சா உதவி செய்யுங்கோ இல்லாட்டி பிரச்சினையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத்தொடர்புக் கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுகள் இரண்டுமே தங்களால் இயன்ற மட்டும் முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிறோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தொய்ந்து போனது. கண்களால் வழிந்த நீரரும்புகள் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டைபிடித்து தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்து கொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான். நினைவுப்பகிர்வு: மாரீசமைந்தன் நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை 2002). https://thesakkatru.com/deputy-commander-of-sea-tigers-lt-col-nirojan/
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
  9. ஆல்ப்ஸ் மலை அடிவாரம் அழகான தமிழ் வேலன் அருளாட்ச்சி செய்கின்றான் தரிசனமே
  10. சம்மதமே இறைவா சம்மதமே தலைவா உன் மாலையிலே ஒரு மலராகவும் பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே - இறைவா மாறிட சம்மதமே சம்மதமே இறைவா தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் - 2 கருவாக எனைப் படைத்து - உயர் கண்மனியாய் எனை வளர்த்து - 2 கரமதிலே உருபதித்து கருத்துடனே எனைக் காக்கின்றாய்
  11. நீயே எமது வழி நீயே எமது ஒளி நீயே எமது வாழ்வு இயேசய்யா
  12. பெரியார் பிலால் மாஷா அல்லாஹ்🙏
  13. வான்மழை போல் ஈந்த... வள்ளல் சீதக்காதி புகழ் மாலை || முகவை முரசு - ஹாஜி S.A.சீனி முஹம்மது | ISLAMIC. முகவை முரசு ஹாஜி S.A.சீனி முஹம்மது அவர்கள் பாடிய வள்ளல் சீதக்காதியின் சிறப்பைக் கூறும் பாடல் .. _________________________________________________________________________________________________ சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' என்பதாகும். இவர் பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும். இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'சய்யிது அகமது நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர் மரபில் வந்தவர்கள், அதாவது கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; செல்வம் மிக்கவர்கள்; ஊரின் தலைமைக்காரராக விளங்கியவர்கள். சீதக்காதியின் தாயைப்பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்தநாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
  14. திருவேங்கடேசா உன் திரு நாமம் போற்றி திருமேவும் ஓரேழு மாமலைகள் போற்றி திருத்தலத்தில் சுரக்கின்ற தீர்த்தங்கள் போற்றி திருமார்பில் திகழ் லக்ஷ்மி பதம் போற்றி போற்றி திருப்பதியை நாடி வரும் அடியார்கள் போற்றி திருக்கோவில் வைபவங்கள் ஒவ்வொன்றும் போற்றி திருமாலே வேங்கடவா பெருமாளே போற்றி திருமேனி திருப்பாத மலர் போற்றி போற்றி நன்னாளைத் தொடங்கி வைக்கும் சுப்ரபாதம் போற்றி நல்லார்கள் ஆழ்வார்கள் பாசுரங்கள் போற்றி கருவறையில் விஸ்வரூப தரிசனமும் போற்றி கண்ணாரக் கண்டோம் உன் எழில் போற்றி போற்றி தொடர்கின்ற அபிஷேகம் வேதம் ஒலி போற்றி தோமாலை சேவையெனும் ஆதமலர் போற்றி கொற்றவைகள் படைக்கின்ற பஞ்சாமிர்தம் போற்றி கோவிந்தன் அருளாட்சி திறம் போற்றி போற்றி சஹஸ்ரநாமாவளியின் சங்கீதம் போற்றி சந்நிதியில் ஒலிக்கின்ற அர்ச்சனைகள் போற்றி இரவினிலே பள்ளியறை தாலாட்டு போற்றி ஏகாந்த சேவையதன் இசை போற்றி போற்றி வியாழனில் திருநேத்ர திருக்காட்சி போற்றி விழி காண விழி காட்டும் எழில் வண்ணம் போற்றி மறை நான்கின் கருவான மாயோனே போற்றி மலராடை அணிகின்ற மால் போற்றி போற்றி வெள்ளிதனில் நீயாடும் திருமஞ்சனம் போற்றி வேண்டுகின்ற பெரியாழ்வார் பாசுரங்கள் போற்றி அறுபத்து நான்கென்னும் உபசாரம் போற்றி அணிவிக்கும் சோலைகளின் வகை போற்றி போற்றி கல்யாணாமூர்த்தி நின் அலங்காரம் போற்றி கலசாபிஷேகங்கள் ப்ரமோற்சவம் போற்றி நிகமாந்த தேசிகனாம் கண்டாமணி போற்றி நித்திய கல்யாணம் நிகழ் தலம் போற்றி போற்றி அன்னமாச்சார்யார் ஸ்தோத்திரங்கள் போற்றி ஆதிசங்கரர் தந்த அஷ்டகம் போற்றி தேனான தியாகராஜர் கீர்த்தனைகள் போற்றி திருமலையின் புகழ் நூல்கள் தொகை போற்றி போற்றி நாராயண உபநிஷத்தின் நலன் யாவும் போற்றி நாமாவளி காயத்ரி மந்திரங்கள் போற்றி பாலாஜி புகழ் சேர்க்கும் இலக்கியங்கள் போற்றி பரந்தாமன் திகழ் நல்ல பதி போற்றி போற்றி அலர்மேலு மங்கை திகழ் திருச்சானூர் போற்றி த்வாதக திருமலை ஸ்ரீ வேங்கடேசா போற்றி பங்காரு திருப்பதியின் கோவில்கள் போற்றி பாதார விந்தங்கள் சரண் போற்றி போற்றி புதுடில்லி ராமகிருஷ்ணபுரத்தோனே போற்றி பம்பாயின் பனஸ்வாடி தலத்தோனே போற்றி வங்கத்தில் வைகுந்த நாதனே போற்றி வகுள மாளிகை வளர்த்த சுடர் போற்றி போற்றி ஒப்பில்லா உப்பிலியப்பா உன் மேன்மை போற்றி உயர் நெல்லை கருங்குளத்தில் தெய்வம் நீ போற்றி மலைவையாயூர் பிரசன்ன வேங்கடேசா போற்றி மறவாத பக்தர்க்கு உன் துணை போற்றி போற்றி திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே போற்றி தினம் தொழுவார் மனம் உறையும் பெருமாளே போற்றி திருவரங்க பள்ளிகொண்ட ஸ்ரீரங்கா போற்றி அருள்மேவும் அவதார பயன் போற்றி போற்றி மாதத்தில் உன் மாதம் புரட்டாசி போற்றி வாரத்தில் உன் வாரம் சனி வாரம் போற்றி யுகம் நான்கில் உனது யுகம் கலியுகமே போற்றி கலிதீர்க்கும் பாலானே கழல் போற்றி போற்றி ஆமுக்தமால்யதா ஆண்டாளும் போற்றி அவள் மாலை ஆண்டுதொறும் பெறுவாய் நீ போற்றி அனந்தாழ்வார் ஆண்பிள்ளை பரம்பரையும் போற்றி அலர்மேலு மணவாளன் அருள் போற்றி போற்றி தேடிவரும் திருப்பதி குடை ஓராறும் போற்றி கூடவரும் அழகுமிகும் பட்டாடை போற்றி ஈடில்லா ஆலயத்தின் பண்டிகைகள் போற்றி ஏழுமலை ஆண்டவனே தாள் போற்றி போற்றி மலையாக திகழ் ஆதி சேஷன் புகழ் போற்றி மணிமார்பில் திகழும் இரு மங்கையரும் போற்றி நிலையாக வளம் கூட்டும் இறைவனே போற்றி நின்றபடி வரவேற்கும் நிலை போற்றி போற்றி ஆகாச ராஜன் அவன் அருளாட்சி போற்றி அவர் வளர்த்த அருளன்னை பத்மாவதி போற்றி காதலித்து கைப்பிடித்த கோவிந்தா போற்றி கற்பூர சந்தனத்தின் சுவை போற்றி போற்றி நரசிம்ம வடிவான அவதாரம் போற்றி ஒரு யுகத்தில் ராமன் எனும் திருத்தோற்றம் போற்றி மறு யுகத்தில் கண்ணன் என வந்தாய் நீ போற்றி கலியுகத்தின் கோவிந்தா சீர் போற்றி போற்றி ஆகமத்தின் விதிகாக்கும் வழிபாடு போற்றி அமைத்திட்ட ராமானுஜர் திருப்பெயரும் போற்றி ஊழி முதல் நீயே ஸ்ரீ கோவிந்தா போற்றி உவமையில்லா பெருமாள் உன் ஊர் போற்றி போற்றி காணிக்கை சேர்த்துவைத்து தருவார்கள் போற்றி கைமாறாய் பல வளங்கள் பெறுவார்கள் போற்றி கோரிக்கை நிறைவேற்றும் குலதெய்வம் போற்றி கோவிந்தா கோவிந்தா பேர் போற்றி போற்றி சனிக்கிழமை விரதத்தில் இருப்பார்கள் போற்றி சத்தியமும் தர்மங்களும் காப்பார்கள் போற்றி வினைதீர்க்கும் பெருமாளே அருளாளா போற்றி வேண்டுதலை தந்தருளும் குணம் போற்றி போற்றி ஸ்ரீநிவாசன் உனது திருநாமம் போற்றி ஸ்ரீபாதரேணு எனும் ப்ரசாதம் போற்றி மானிடர்க்கும் வானவர்க்கும் கதி நீயே போற்றி மலை போற்றி மனம் போற்றி அருள் போற்றி போற்றி
  15. லிங்கபைரவி அஷ்டகம் || சுதா ரகுநாதன் || லிங்கபைரவி
  16. ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி சுகஸ்வரூபிணி மதுரவாணி சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி பாண்டிய குமாரி பவானி அம்பா சிவசங்கரி பரமேஸ்வரி வேண்டும் வரம்தர இன்னும் மனம் இல்லையோ வேதவேதாந்த நாத ஸ்வரூபிணி ஜகத் ஜனனி
  17. ஆண்டவன் அன்பே சக்தி தரும் ஆண்டவன் அன்பே சித்தி தரும் ஆண்டவன் அன்பே புத்தி தரும் ஆண்டவன் அன்பே முக்தி தரும்
  18. மயில் வாஹனா! வள்ளி மனமோஹனா! மா (மயில்) சரவண பவ! வரமருள்வாய்! வா! மா (மயில்) கயிலாயம் முதல் மலைகளில் எல்லாம் களித்து விளையாடும் பன்னிரு கையா! முருகையா! (மயில்) பூர்ண சந்திரன் போலும் அறுமுகா! புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா! ஆரணப் பொருளே! அடிமை எனை ஆள வா வா வா! இராமதாசன் பணி குஹா! இராகம்: மோஹனம் இயற்றியர்: பாபநாசம் சிவன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.