Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 ஆது மகன் ஸத்தாது... குலவலிமை பெருவாழ்வு உலகம் இறைவனின் சந்தை மடம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என் அப்பனே என்னையனே கந்தனும் வருவான் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குளிர் கால காற்றே கொஞ்சம் மெதுவாக சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன்
-
மேஜர் செங்கோல்
மேஜர் செங்கோல் டிசம்பர் 24, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற தனது பெயரைக் காப்பாற்றிய ஒரு காவியம் இன்று எங்களுடன் இல்லை. மணலாற்றில் களவரலாற்றில் இவனது நிதிப்பணியை நினைத்துப் பார்க்கிறேன்…. நிதிப்பொறுப்பாளனாய், தோளில் பணப்பையைத் தொங்கவிட்டபடி ஓடி ஓடிக் கடமையைச் சரிவரச் செய்த நாட்கள் தான் எத்தனை.? நிதி இருக்குமிடத்தில் நீதியிருப்பதில்லை. நீதியிருக்குமிடத்தில் நிதியிருப்பதில்லை. ஆனால் செங்கோலிடம் நிதியும், நீதியும் இணைந்திருந்தன. செங்கோலுக்கு என்றும் கண்கள் இரத்தம் போல் சிவந்திருக்கும். அவன் கண்கள் ஏன் சிவந்து கிடந்தன என்பதை இப்போதுதான் சிந்தித்துப் பார்க்கிறேன். தூங்குவதற்கு இவனுக்கு நேரம் கிடைத்ததில்லை. நாம் படுக்கும் போது விளக்கும் கணக்குமாய் இருப்பதைப் பார்க்கிறோம். விழிக்கும் போதும் அதே மேசையில்…. அதே இருக்கையில்…. அவன் எப்போது தூங்குகின்றானென்பதை இறுதிவரை என்னால் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ‘கப்டன் சங்கிலி’ ஓயாமல் வாகனமோட்டித் தியாகியாகிப் போனவனின் பெயர் தாங்கிய லொறிவண்டி. செங்கோலைத் தவிர மற்றவர்கள் அதனை ஓட்டுவது கடினமானது. சிங்கள அரசின் பொருளாதாரத் தடையை உணர்ந்து எங்கள் போராட்டத்தை வளர்க்கவேண்டுமென ஓடிய லொறிவண்டி அது. மணலாற்றுச் சண்டைக் களங்களுக்கெல்லாம் அந்த லொறி வண்டியில் தான் பொருள்களை ஏற்றி இறக்குவான் செங்கோல். பணத்தை அளவோடு செலவிட வேண்டுமென்பதற்காக, தானே சென்று கொள்வனவு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். இயக்கத்தின் வளர்ச்சியை நெருக்கடியான காலத்தில் எவ்வாறு எடுத்துச் செல்ல N வண்டுமென்பதைச் சரியாகப் புரிந்து நிதிப்பணி புரிந்தான். சில நாட்களாக ஓடுவாரற்று நிற்கும் ‘கப்படன் சங்கிலி’ லொறிவண்டியைப் பார்க்கும் போது நெஞ்சில் வேதனை முட்டிக் கொள்கிறது. மணலாற்றில் நடக்கும் ஒவ்வொரு சண்டையிலும் களைப்புடன், பசியுடன் இருக்கும் எம் வீரர்கள், ‘செங்கோலண்ணனுடைய இடத்திற்குப் போய் வருவம் மச்சான்’ என்று கூறிக்கொண்டு ஓடிவருவார்கள். செங்கோல் ஏதாவது நல்ல சாப்பாட்டுப் பொருள்களைக் குறைவின்றி வாங்கி வைத்திருப்பான். வயிராற, ஆசைதீரத் தன் தோழர்கள் சாப்பிடும்போது தனக்குள் மகிழ்வையும், நிறைவினையும் கண்டு கொண்டான். இன்றோ, நாளையோ மண்ணுக்காய் உதிரப்போகும் அவர்களை மகிழ வைப்பதையே தன் மகிழ்வாகக் கருதியவன், கண்மூடிக் கிடந்த போது அவன் முன்னே பேசுவதற்கு வார்த்தைகளின்றித் தலை குனிந்து நின்ற வீரர்களை நினைத்துப் பார்க்கும்போது…. செங்கோல் மக்களுடன் கொண்டிருந்த உறவு வித்தியாசமானது. அவன் யாருடைய வீட்டிற்கும் சென்றது கிடையாது. அப்படிச் செல்வதை அவன் விரும்பியதில்லை. விரும்பினாலு; நேரம் கிடைப்பதில்லை. ஆனால் செங்கோலைத் தெரியாதவர்களில்லை. அவன் மீது பற்றும் பாசமும் வைக்காதவர்களில்லை. மக்கள் மனம் நோகாமல் பேசிக் காரியத்தைக் சாதுரியமாக முடித்துக்கொள்வான். செங்கோலின் வீர உடல் கல்லறைக்குச் செல்லும் போது மக்கள் வாய்விட்டு அழுதபோது நான் வியப்படைந்தேன். மரணத்தில்தான், மக்கள் அவன் மீது கொண்ட ஆழமான நேசத்தை அறியமுடிந்தது. செங்கோல் புரிந்துணர்வுள்ள போராளி, அன்று ஊரியான் பாதையில் சேற்றில் கால் புதைய, சாரத்தை உயர்த்திச் சண்டிக்கட்டுக் கட்டிக் கொண்டு முக்கியமான பொருள்களைச் சுமந்து, சுமந்தே கரை சேர்த்ததை நினைத்துப் பார்க்கிறேன்… சாவிற்கு முன் இவன் கிளாலிப் பாதையில் அனுபவித்த துன்பங்கள்…. கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் சொல்லிலோ, செயலிலோ தளர்வு காட்டாதவன். அன்பான ஆனால் அனவான பேச்சு. அளவிற்கு மிஞ்சினால் கோபத்தில் கண்கள் சிவந்து விடும். உயர்ந்த தோற்றமும், சிவந்த கண்களும், அளவான அமைதியான பேச்சும் இவன் மீது மற்றவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும். பழகி உள்ளம் புரிந்தோர்க்கு மரியாதையும், அன்பும் கொண்ட இவனின் தந்தை கூட ஒரு விசித்திரமான பிறவி. 1988 இல் தமிழீழ விடுதலைப்போருக்குக் கொள்ளி செருக முற்பட்ட தேசவிரோதக் கும்பல்கள், செங்கோலின் அண்ணனை பளையில் வைத்துக் கண்டதுண்டாக வெட்டிக் கொன்றனர். மகனை வெட்டிக் கொன்ற செயல் பொன்னுத்துரையின் இருதயத்தை வெடிக்கச்செய்தது. அந்த நாள்தான் செங்கோலின் விடுதலை வாழ்வுக்கு வழியமைக்கிறது. பொன்னுத்துறை தன் மகனைத் தானே களத்துக்கு அனுப்பிவைக்கின்றார். மணலாற்றுக் காட்டில் பயிற்சி முடித்த செங்கோலின் திறமை அளவிடப்பட்டது. அதனால் பயிற்சி ஆசிரியனாக நியமிக்கப்பட்டான். தொடர்ச்சியாக மூன்று பயிற்சிப்பாசறைகளை நிறைவாக முடித்தான். கடமை வீரனாய் நின்ற செங்கோல், பொறுப்பாளர்களின் கருத்தில் நிறைந்தான். அதன் விளைவு அவனின் வளர்ச்சிப் படியானது. நிதிப்பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. சிக்கலும், பொறுப்பும்மிக்க இந்தப் பணியில் செங்கோலின் கோல் தளம்பலின்றி நின்றது. செங்கோலின் நிதானமான வளர்ச்சி முல்லைத்தீவுக் கோட்டத்தின் சிறப்புப் பொறுப்பாளனாக அவனை உயர்த்தியது. பொறுப்பேற்று இரண்டு வாரம் இருக்கும், எங்காவது பெருமளவு இராணுவத்தை கொல்ல வேண்டும், ஆயுதங்களை அள்ள வேண்டும் என்ற உணர்வு தலையெடுத்து நின்றது. சாதனை மிக்க வரலாறு எழுதப்படுவதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நாளின் அவன் தந்தையின் உணர்வுகளை அசைபோட்டுப் பார்க்கின்றேன். செங்கோலின் பிறந்த மண் இயக்கச்சிக் கிராமம். இன்று சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்குள்குள் விழுங்கப்பட்டுக் கிடக்கின்றது. பளையினை அண்டிய பகுதியில் அவனது தாய் தந்தையர் வாழ்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணம் சென்றுவந்த போது அவனது தந்தையைக் கண்டு கதைத்தேன். ‘செங்கோல் முன்பு போல இனி இங்கே வரமாட்டான், அவனுக்குப் பொறுப்பு அதிகரிச்சிருக்கு’ என்று கூறியபோது, ‘அவன் இஞ்சை வரவேண்டாம் தம்பி, அவன் விடுகிற பிழையளை வந்து நீங்கள் சொல்லுங்கோ. நான் வாறபோது அவனிடம் சொல்லி அவனைத் திருத்த உதவியாய் இருக்கும்’ என்று சொன்னார். மீண்டும் அவரிடம் செல்லும் முன்…. பிழைவிட்டால்தானே அவரிடம் சொல்ல வேண்டும். பிழையற்ற அவன் வீரத்தைச் சொல்ல விரைந்தபோது…. செங்கோலின் தாய் சாதாரணமானவளல்ல, தியாகத்தின் இருப்பிடம். செங்கோலின் வீரச்சாவை எப்படித் தெரிவிப்பது என்ற தயக்கத்தோடு வீட்டு வாசலுக்குள் நுழையும் போதே…. ‘தம்பி! என்ரை பிள்ளையின்ரை வீரத்தை நான் அறிந்துவிட்டேன். என்ர பிள்ளை இயக்கத்திற்குச் செய்ததைவிட என்ர பிள்ளைக்கு இயக்கம் அதிகமாய் செய்திட்டுது’ என்று கூறி நின்ற அவனது வீரத்தாயை நினைக்கிறேன். செங்கோல் தன் வீர அத்தியாயத்தின் முடிவுவரிகளை எழுதிக் கொண்ட நாளை நினைத்துப்பார்க்கின்றேன். தாக்குதலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருந்தன. நாடியில் கைஊன்றியபடி இருந்தான் செங்கோல். ‘என்ன மச்சான் யோசிக்கிறாய், உன்ர பெடியளுக்கு தாக்கும் முறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிரு’ என்று சொல்லியபோது சிரித்தவாறே எழுந்து சென்றான். அன்றிரவு முழுவதும் செங்கோல் தூங்கவில்லை. நிலைகளைச் சரிபார்ப்பதும், புத்திமதிகள் கூறுவதுமாய் இருந்தான். 1992ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 24ம் நாள் சூரியனின் பகல் கொடுமை தணிந்து கொண்டிருந்தது. 4.30 மணியிருக்கும் இராணுவத்தினர் முகாமிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் செங்கோலின் அணி தாக்குதலை தொடங்கும் அபாய அமைதி. செங்கோலின் குரல் வோக்கிடோக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த செங்கோலின் குரல்?….. நின்று விட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொன்று ஆயுதங்களை அள்ளிய வீர இறுமாப்புடன் கண்மூடிக்கிடந்தான் செங்கோல். செங்கோல் சரிந்துவிட்டது…. செங்கோலுக்காய் எழுத என் பேனாவுக்கு வல்லமையில்லை. அது நின்று கொள்கிறது. மை முடிந்ததாலல்ல, மீண்டும் மீண்டும் என் சிந்தனை கனப்பதால்…. எழுத்துக்கள் நனைகின்றன. மழையல்ல, பொங்கிய கண்ணீரால்…. நினைவுப்பகிர்வு: பாண்டியன். நன்றி – களத்தில் இதழ் (19.03.1993). https://thesakkatru.com/mejor-sengol/
-
லெப். கேணல் அப்பையா அண்ணா
லெப்டினன்ட் கேணல் அப்பையா டிசம்பர் 24, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து மூத்த உறுப்பினர் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணா. எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர். அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார். 1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார். 1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். ”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார். அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார். 1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும். நன்றி: சூரியப் புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/lieutenant-colonel-appaiya/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 யாழ் கள உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
விடுதலை எவரும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முருகா முருகா முருகா ஆடு மயிலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல் அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய் உன்னத தேவன் வந்துதித்தார் ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல் வல்லமை உள்ளவர் இம்மானுவேல் நித்திய பிதா சமாதான பிரபு நீதியின் தேவன் வந்துதித்தார் தாவீதின் மைந்தர் இம்மானுவேல் தாழ்மை உள்ளவர் இம்மானுவேல் அன்பின் தேவனாம் இயேசு பாலகன் பாவங்கள் போக்க வந்துதித்தார் வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2 நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2 தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2 தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது - 2 - வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2 அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும் இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2 நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல... கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2 முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான், பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2 இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கரும்புலி மாமகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா தாயே நயினை நாகபூஷணியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மீட்பர் பிறந்துள்ளார் அவரே மெசியா மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் -2 நம் மீட்ப்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே - 2 இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே மீட்பர் பிறந்துள்ளார் அவரே மெசியா மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் சரணம் - 1 ஆண்டவர் இயேசு அன்பைத் தர வந்தார் மண்மீது தவழ்ந்திட மாட டையில் பிறந்தார் அருளைப் பொழிந்திட அக இருளை அகற்றிட மானுடன் பாவத்தை போக்கவே வந்தார் - 2 மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை சரணம்-2 வாழ்வளிக்கும் வள்ளதேவன் வார்த்தையாக வந்தார் வையகம் எல்லாம் வாழ்த்த விடியலாக வந்தார் உன்னதர் இயேசு உலகிற்கு வந்தார் தந்தையின் அன்பை தரணிக்கு தந்தர் மகிழவோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில் தெய்வ சுதனாய் அன்னை மடியில் தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிட மாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் பாவம் போக்கிட ஏழையின் கோலம் எடுத்திட்டார் தேவலோகம் துறந்த இயேசு கன்னியின் மைந்தனாகினார் விண்ணொளி வானத்தில் தோன்றிட தூதர்கள் நற்செய்தி உரைத்தனர் மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் அவர் முகம் காண விரைந்தனர் பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி துதித்தனர்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
-
ஈழத்தமிழர் அரசியல்
எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இரட்டை வேடமும் இம்முறை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெலோவும் எதிர்த்து வாக்களித்து இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிக்காமல் நழுவிச் சென்றிருந்தனர். இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நழுவிச் சென்றமை பெரிய ஆச்சரியத்தினை தரவில்லை. அவர்கள் மரபு ரீதியாக இதனைத் தான் செய்து வருகின்றார்கள். முழுமையான நேர்காணலை காணொளியில் காணலாம்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
மாவீரர் புகழ் பாடுவோம்
- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஏங்குகிறேன் இயேசுவே.- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 அல்லாஹ் | வானிலும் பூவிலும் தேனிலும் சுவையிலும்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- மாவீரர் புகழ் பாடுவோம்
எங்கள் தேசம் பிரபாகரன் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.