Everything posted by உடையார்
-
மேஜர் வில்வம்
மேஜர் வில்வம் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து விடுதலையின் விழுதெறிந்தவன்: புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் / ஜோன். நேற்றுத்தான் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களில் இன்ப துன்பங்களை பௌர்ணமி முழுநிலப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம் கூட அவருக்கென கிடைத்த பாக்கியம் தான். “அப்பா” இனிமையான தாழ்வான என் அழைப்பு. என் முகத்துக்கருகாக ‘கரிக்கன்’ விளக்கினை நீட்டியவர் “ மங்கிய பொழுதுகளில் படலையைத் திறந்து ‘அப்பா’ என என் மகன் அழைப்பதாய் ஞாபகம்” என்றவாறே கதைக்கத் தொடங்கினார். “எப்பையாவது ஒரு பொழுதில் வருவான். ஈரம் பட்டிருக்கும் ‘ரவை’களைத் துடைத்துத் தருமாறு கூறுவான். ஊறைப்பாய் இறைச்சியைச் சமயணை என தாயாரிடம் கூறுவான் எங்கிருந்தோ அவனது தொலைத் தொடர்பு சாதனத்துக்கு தகவல் வரும். சமைத்ததைச் சாப்பிடாமலேயே ஓடி விடுவான்…” “உவர் அவனையே நினைச்சு நினைச்சு தேய்ந்து போறார்” தேய்ந்து போயிருந்த அம்மா அப்பாவை ஆறுதல் படுத்தினார். அவனுடைய தமையனின் மகளும் அங்கிருந்தாள். அவளது சித்தப்பா இயக்கத்தில் இணைந்ததன் பின் பிறந்த அவள் சித்தப்பாவின் கதைகளை ஏக்கத்துடன் கேட்க – அந்தப் பிஞ்சு விழிகளின் தேடலின் ஊடாக அவனது வாழ்க்கையைப் பார்க்கிறேன். ‘முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம்’ தன் மகனின் புகழுடலுக்கு இறுதியாய் வணக்கம் செலுத்திட, கண்ணீருடன் காத்திருக்கும் தந்தையிடம், “ஐயா அழாதிங்கோ உங்கள் மகன் பிறந்ததே போராடத்தான் அவன் இன்னுமொரு பிறவி எடுப்பான்; கலங்காதீங்கோ” கலங்கியபடியே கூறிய பாதிரியாரின் உணர்வுகளுக்கூடாகவும் அவன் வாழ்வைப் பார்க்கிறேன். அது 1988, இன்னுமொரு அன்னிய ஆக்கிரமிப்பை தமிழர் தேசம் எதிர்த்து நின்ற நேரம், இந்தியப் படையினரின் போர்க் குற்றங்கள், கொடூரங்கள் அவனது விடுதலை உணர்வுக்கு நீரை வார்த்தன. 1988.09 ‘நிலா’ அவனது இயக்கப்பெயர். மாம்பழம், அம்மா, ஜோன், வில்வம் எனக் காலம் இன்னுமதிக பெயரினை அவனுக்கு வழங்கியது. மன்னார் – 09 படைப்பயிற்சி முகாமில், அவனது தமிழீழ விடுதலைப்போரின் வாழ்வு தொடங்கியது. பால் போன்ற பௌர்ணமி நிலவே தான் அவன் வதனம் – பெரியோர் சிறியோர் என்றில்லாது எல்லோருடனும் சரிக்குச்சரி அளவளாவும் சுட்டிப்பாங்கு. “டேய் பூநகரி தெரியுது” என்றால் சட்டென சிரிப்பை அடக்கி காவிப் பற்களை மறைத்துக் கொள்ளும் நாணம். கற்பிக்கப்படும் விடயங்களைக் காதுகொடுத்து ஆழமாய்க் கிரகித்து எழுதப்படும் வினா. அந்த ‘நிலா’வைப் பயிற்சி முகாமில் வேறுபடுத்தியே காட்டியது. “சுரேஸ்! இருபது முத்துக்களை உன் கையில் ஒப்படைக்கின்றேன். அவர்களை வைரக்கல் ஆக்குவதும் உப்புக்கல் ஆக்குவதும் உன் பொறுப்பு” அப்பொழுது மன்னார் மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்த சுரேஸிடம் கேணல் பானு அப்படித்தான் கூறினார். அந்த இருபது முத்துக்களில் (நிலா) ஒருவன். முதற்பணி ‘அரசியல்’. மன்னார் மாவட்டத்தில் வட்டக்கண்டல், பாலப்பெருமாள்கட்டு, குருவில்வான் என பெரியதொரு பிரதேசத்தின் அரசியல் பணி. இந்த இளம் போராளியின் கைகளில். இந்தியப் படையினரின் தேடுதல்சுற்றிவளைப்புக்களில் அகப்படாது. போர் புரிந்து கொண்டே மக்கள் மனங்களில் விடுதலை நெருப்பைப் பற்றவைப்பதும், சமூகக் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும்இ தட்டிக்கேட்பதும் சவால்கள் நிறைந்த பணிகள் தான். சவால்களை எதிர்கொண்டான். பாடசாலை நிகழ்வுகளில் இறுதி நன்றி உரையில் அவனது பெயர் பல தடவைகள் உச்சரிக்கப்படும். ‘முஸ்லிம் பள்ளி’ நண்பனின் ஈருருளியில் ‘பார்’ இல் (டியச) இருந்தபடியே விடுதலைப் போராட்டம் பற்றி விரிவுரை நடாத்துவான். யேசுவின் சிலுவை நிழலில், பாதிரியாருடன் சமூக மேம்பாடு திட்டமிடப்படும். இந்துக்கோவில் திருவிழாக்களில் ஓதப்படும் மந்திரத்தில் அவனது பெயரும் ஒலிக்கப்படும். வறிய மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காக அவனது பாதங்கள் கடைப்படிகளுக்கும், வீட்டு வாசலுக்கும் ஏறியிறங்கும். கட்டுக்கரைக் குளத்து வாய்க்கால்வழி நீர் பாய்ச்சுதலில் ஏற்படும் பிணக்குகளிலும் அவனது பிரசன்னம் இருக்கும். வில்வம் அந்த அழகிய கிராமங்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் பிள்ளை – இந்தியப் படையினருக்கு மட்டும் தொல்லை. 1989, மன்னார் குமாணாயங்குள இந்தியப் படையினருக்கு எதிரான பதுங்கிக் தாக்குதலில் அவனது அசாத்திய துணிச்சல், வேகம், நிதானம், சுரேசினால் அவதானிக்கப்பட்டது. 1989.09 மன்னார் அடம்பன் முகாமிலிருந்து நெடுங்கண்டல் நோக்கி காவல் உலா வந்த இந்தியப் படையினருக்கும், கைக்கூலிக்குழுவுக்கும் எதிரான பதுங்கித் தாக்குதலில் கைக்குண்டை நிதானமாக எறிந்து களத்தைத் தமக்கு சார்பாய் மாற்றிய போது அவனது சாதுரியம் இனங்காணப்பட்டது. அவனது பணியில் உயிரைப் பணயம் வைத்து மிகுந்த ஈடுபாட்டுடன்இ பொறுப்புணர்வுடன் செயற்பட்டாலும் இளவயது குறும்புத்தனங்கள் அப்பப்ப எட்டிப் பார்க்கத்தான் செய்தன. ஆதரவாளர் ஒருவரின் சாளி (chaly) உந்துருளியை எடுத்து அடம்பனிலிருந்து மாந்தைக்குச் செல்ல – அந்த வேகம் உந்துருளியைச் சேற்றுக் குளத்துக்குள் இறக்க ‘வில்வம்’ விழுந்திட்டான், எனத் தெரிஞ்ச சனம் எல்லாம் ஓடிவர, விசயத்தை விளங்கியவன் உந்துருளியைக் கழுவுவது போல் பாசாங்க செய்ய “தம்பி காலில இருக்கிற சூவை (shoo) கழட்டிப் போட்டு கழுவலாமே” சனம் விழுந்து விழுந்து சிரிக்க அவனாலும் சிரிக்கத்தான் முடிந்தது. தன் பணிகளை அறிக்கைப் படுத்தலில் அவனது புலனாய்வுப் பார்வை, விடயத்தை அலசி ஆராயும் போது இனங்காணப்படும் புலனாய்வுக் கண்ணோட்டம் என்பன, இந்தியப்படை எமது மண்ணை விட்டு அகற்றப்பட்டிருந்த 1990 களில் புலனாய்வுத் துறைக்குள் அவனை உள்வாங்கக் காரணமாக அமைந்தன. புலனாய்வுத் துறை அவனுக்குப் புதிது. “எந்தத் துறைக்குள் சென்றாலும் அங்கு முத்திரை பதிக்க வேணும்” என்ற அவனது ஈடுபாட்டிற்கு “புலனாய்வுக் கல்லூரி ஆரம்பிக்குதாம்” என்ற செய்தி காதில் விழுந்ததும் விரைவாகக் கடிதம் எழுதி அனுப்பி, புலனாய்வுப் பொறுப்பாளரிடம் இருந்து அக்கல்லூரியில் இணைவதற்கான அனுமதியையும் பெற்றிருந்தான். படிப்புக்கள் முடிந்ததும் புலனாய்வுப் பணியில் நளனின் உதவிப் பொறுப்பாளராக மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழ்மக்கள் பெருவாரியாக தங்கியிருந்த மடுப் பிரதேசம் உள்ளிட்ட, மன்னார் பெருநிலப்பரப்பில் தேசத்துக்கெதிரான சவால்களை எதிர்கொள்வதும் காவல்துறையின் செயற்பாடுகள் விரிவாக்கப்படாத நிலையில் சமூகக் குற்றங்களை, சீரழிவுகளைத் தடுப்பதும் புலனாய்வுப் பணியில் முக்கியமான இலக்குகள். அவனது செயற்பாடுகளை நளன் அவர்கள் விபரிக்கையில் “நான் இல்லாத சமயங்களில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய எதிரியின் புலனாய்வுச் சவால்களையும், சமூகக் குற்றங்களையும் பகுப்பாய்ந்து அதன் ஆழங்கண்டு, அதன் சரியான இறுதி வடிவத்தை இனங்கண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடியவன் என்ற நம்பிக்கை எனக்கெப்போதும் அவன்மீது இருந்தது” என்றிருந்தார். 1994இ இப்படித்தான் ஒருநாள் வன்னி, யாழ் தொடர்புப் பாதையாகக் கிளாலி ஏரி இருந்த காலம். யாழ்ப்பாணத்தில் எமது கண்காணிப்பிலிருந்த படை உளவாளி ஒருவன் கண்காணிப்பிலிருந்து விடுபட்டு வன்னிக்குப் படகேறியிருந்த செய்தி தெரியவர, மன்னார் பெரியமடுவிலிருந்த வில்வத்திடம் அவசரமாய் இத் தகவலினைப் பரிமாற, சனத்திடம் இரவல் உந்துருளியைப் பெற்று சுமார் எழுபத்தைந்து கிலோமீற்றர் ஓடி கிளாலிக் கரையிலிருந்து படகு நல்லூர்க் கரையை வந்தடைய முன் நல்லூர்க் கரையில் நின்று உளவாளியை வரவேற்றான்…. புலனாய்வுப் பணியில் மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் பிணைத்துக் கொள்ளும் அவனது செயல் அலாதியானது. பாடசாலையை விட்டு வீடுகளுக்கு வரும் சிறுவர்கள் பலர் அவனது உந்துருளியிலேயே வீட்டு வாசலில் இறங்குவர். அவனிடம் கைவசம் இருக்கும் இனிப்பு வகைகளை சிறுவர்களை ஒன்றுகூட்டி வழங்கி மகிழ்விப்பான். முன்பின் அறிமுகமில்லா வீடுகளுக்குள் ஏற்கனவே நன்கு அறிமுகமாகிப் பரிச்சயமான உறவாய் உள்நுழைவான். சமையல் அறைக்குள் நின்று அடுப்படியில் உணவினைத் தானே போட்டுப் பரிமாறும் வரை உறவு நீளும். காலம் அவர்களின் உறவுகளில் ஒருவனாய் அவனை மாற்றிவிடும். அவனது இவ்வகையான அணுகுமுறை அரசியல் பணி ஆற்றிய தளத்திலிருந்து எழுந்தவை. இந்த உறவுகளை ஆதரவாளராக, முகவர்களாக, படகோட்டிகளாக இணைத்தமை அவனது வெற்றிக்கு அமைந்தது போல ஆதரவாளரின் வீட்டில் கோழிக்கறி உண்பதற்காய், தன் கைத்துப்பாக்கியால் கோழியைச் சுட்ட போது – அந்த ரவை இலக்குத்தவறி அயல்வீட்டுச் சிறுமியைக் காயப்படுத்தியமை. ஆதனால் கண்டிக்கப்பட்டமை, மற்றும், மக்களுடனான உறவில் அவனது அதீத ஈடுபாடு – பழக்கம், பண்பான அணுகுமுறை என்பன, விடுதலை உணர்வு சார்ந்தும், புலனாய்வு நோக்கம் கருதி இருந்தும்; அவை காதல் விடயமாக சமூகத்தில் சிலரால் பார்க்கப்பட்டமை, ‘உறவு நிலையில் அவதானம் கொண்டிருக்க வேண்டும்’ என்ற படிப்பினையை உணர்த்தி நின்ற இன்னுமொரு பக்கத்தினையும் தோற்றுவித்ததெனலாம். முக்கிய இலக்கொன்றை அழிப்பதன் தேவை கருதி, அவனது திறமையைக் கருத்திற் கொண்டு, அவனது புலனாய்வுப் பணி மன்னார் பகுதியை மையப்படுத்தியதாக மாறியது. ‘தீவு’ என்றாலே போக்குவரத்துக்கான வழி கடல்வழியாகத்தான் இருக்கும். மன்னார்த்தீவு என்பது சில கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட சிங்களப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவர்களின் படைத்தளமாகவே விளங்கும் தீவாகும். தீவினைச் சூழவுள்ள கடல் பிரதேசங்கள் எங்கும் படையினரின் பிரசன்னங்கள், பாதுகாப்பு வேலிகள், காவலரண்கள் தீவிற்குள் தரையிறங்குவதற்கான பயணமே உயிரைப் பணயம் வைத்ததுதான். 1996, அக்காலப் பகுதியில் தான் அவனது பயணமும், பணியும் தம்முடைய மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. அமாவாசை இரவில் கடல் கொந்தளிப்பின் நடுவே சிறுபடகுகளின் துணையுடன், படையினரின் இரு காவலரண்களுக்கிடையே அவனும் அவன் சக தோழன் கணேசும் இன்னும் பலரும் தரையிறங்குவார்கள். அன்றும் அப்படித்தான், தரையிறங்கிய சில மணிப் பொழுதில் படையினரின் துப்பாக்கிகள் சடசடக்கத் தொடங்க, படகினை ஓட்டிய ஓட்டி சுந்தரமணி ரவை பட்டு துடிப்பை இழக்க, தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் பொருட்படுத்தாது, நாட்டுப் பற்றாளரான ஓட்டியின் உடலை நீருக்குள் இழுத்துச் சென்று ‘களங்கட்டியினுள்’ பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்து இரவு புலர்வதற்கு முன் படகேறிய இடத்திற்கே எடுத்து வந்தமை அவனது துணிச்சலுக்கப்பால், விடுதலையை நேசித்து, தாமும் களத்தில் நேரடியாய்ப் பங்கெடுக்க முன்வரும் ‘ஆதரவாளர்’ மீதான அவனது மதிப்பையே புலப்படுத்தியது. தன் தேசவிடுதலையை நேசிக்கும், இன்னுமொரு நாட்டுப்பற்றாளன்இ அந்த இளம் வீரர்களை இன்னுமொரு கடற்பகுதியில், மன்னார்த்தீவில் தரையிறக்கத் தொடங்கினார். மன்னார் பட்டணத்துள் மக்களுடன் மக்களாய் அவர்கள் உறுமாறியிருந்த புலனாய்வுச் செயற்பாட்டில் ஓர் நாள்…. தேநீர்க் கடையொன்றினுள் தன் பொறுப்பாளர் விநாயகத்துடன், தேநீர் அருந்திக் கொண்டிருக்க, தற்செயலாக படைப் புலனாய்வாளன் ஒருவன் திடீரென உள்நுழைந்து – அவர்களது இருக்கைக்கருகில் ‘சிகரெட்’டினை ஊதித் தள்ளிக்கொண்டிருக்க “எடுத்துக் குடுப்பமா?” (கைத்துப்பாக்கியால் சுடுதல்) எனத் தன் பொறுப்பாளரிடம் பம்பலாய் அவன் கேட்க, அவர்களை நன்கு அறிந்திருந்த, கடைக்கார அம்மாவுக்கு முழி வெளியே வராத குறை அம்மா இன்னும் அதனை மறக்க முடியாதவராய், அவனது துணிச்சல் ‘வெறும் துணிச்சல் அல்ல’ விவேகத்துடன் கூடியதாகவே வளர்ந்திருந்தது. அன்று மன்னார்ப் பட்டணத்தில் ‘நகர்’ சுறுசுறுப்படைந்திருந்த பட்டப்பகற் பொழுதில், சிங்களப்படை முகாம்களிற்கிடையே, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ‘சாராயக்கடை’ ஒன்றிற்கு இரண்டு சிங்களக் காவல்துறையினர் (police) துப்பாக்கிகளுடன் ஜீப் (jeep) ஒன்றில் வந்திருந்தனர். அதில், ஒருவன் மது அருந்துவதற்காகக் கடைக்குள் செல்ல மற்றையவன், கடை முகப்பில் காவலுக்கு நின்றான். ஈருருளியில் வந்த அவன், அதனை நிதானமாக நிறுத்தி, இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பதற்றமின்றி வைத்த குறியில் காவலுக்கு நின்றவன் சரிந்து விழ, அவனது சாவினை உறுதிப்படுத்தி விட்டு, சாராயக்கடைக்குள் புகுந்து அங்கு மதுக்கோப்பையுடன் தள்ளாடிய மற்றவனையும் சுட்டுவிட்டு சிங்களப் படையினரின் பாதுகாப்பு வியூகத்துக்கு ‘தண்ணி’ காட்டி, அவன் வெளியேறியிருந்தமை, மக்கள் மத்தியில் அவனைக் கதாநாயகனாகவும், படைப் புலனாய்வாளர் மத்தியில் ‘எனது கடமை முடிய இன்னும் சில மாதங்கள் தான் இருக்கு – என்னை ஒன்றும் செய்ய வேண்டாம்’ என்று கூறிவிடப்பட்ட அளவுக்கு பயப்பீதியையும் ஏற்படுத்தியிருந்தன. மன்னார்த் தீவில், படையினரின் தொலைத்தொடர்புக் கோபுரம் தகர்ப்பு என அவனது தாக்குதல் நடவடிக்கைகள் நீழுகையில், அதிமுக்கிய புலனாய்வு இலக்கொன்றை வெற்றி பெறுவதற்காகவும் ‘அந்தச் செயற்பாட்டிற்காக அவனது பொறுப்பாளர் விநாயகமும் படையினரால் முழுமையான ஆக்கிரமிப்பினுள் உள்ளாகியிருந்த மன்னார்த் தீவினுள் சென்று செயற்பட வேண்டிய தேவையின்பால் செயற்பட்டுக் கொண்டிருந்தமையினாலும், தேவை கருதியும், பாதுகாப்புக் கருதியும் வலிந்த தாக்குதல்களை தவிர்க்கும்படி கட்டளைப் பீடம் கட்டளை வழங்கியிருந்தது. அந்தப் புலனாய்வு இலக்கினை எட்டுவதற்காக – அவனது பணியில் எல்லா மதத்தவர்இ சமூகத்தவர் மத்தியிலும் களம் அமைத்தான். ஆதரவாளன் ஒருவன் கூறியது போல “சிலர் விடுதலைப் போராட்டத்திற்கு உதவி புரியாது விட்டாலும் ‘காட்டிக் கொடுப்பாளர்’களாக மாறிவிடாதபடி பார்த்திருந்தான்” அந்த நிலைதான் அவனது நிறைந்த செயற்பாட்டுக்கான பலவழிகளைத் திறந்திருந்தன. அவனது புலனாய்வுக் கட்டமைப்பினுள், உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் நிறைவானவை, பெறுமதியானவை, மறைவானவை. எதிரியால் கைது செய்யப்பட்டும், தான் கொண்டிருந்த மறைப்பினை அதி இரகசியத்தை வெளிப்படுத்தாத ‘சிற்றிசன்’ எனப்படும் முகவர் ‘எந்தச் சூழ்நிவையிலும் பிறழாத’ அவனது முகவர் கட்டமைப்புக்கான சான்று. அந்தக் குடும்பம் படையினரின் முழுமையான ஆக்கிரமிப்புப் பிரதேசத்தினுள் வாழும் மிகவும் ‘வசதியான’ குடும்பம். ‘முகவர்’ கட்டமைப்பினுள் வராத அவனது ‘ஆதரவாளர்’ பட்டியலுள் அக்குடும்பமும் ஒன்று. அதிமுக்கிய புலனாய்வுப் பணிக்காக ‘குடும்பத்தையே பணயம் வைக்கும்’ உதவி ஒன்றிற்காக அவர்களை, அவன் நாடிச் செல்ல, “தம்பி விடுதலைக்காக உங்களைக் கூட இழக்கத் தயாராய் நீங்கள் பணி செய்யிறியள்… இதைக் கூட நாங்க செய்யாட்டி… உங்களுக்கு எப்போ தேவைப்படுகிறதோ அப்ப வந்து இதை எடுக்கலாம்” – அந்த ஆதரவாளரின் முடிவு; ‘முகவர்’ கட்டமைப்பினுள் வராத, விடுதலையை உளப்பூர்வமாக நேசிப்பவரை அவன் அடையாளம் கண்டிருந்தானா? உருவாக்கியிருந்தானா? என்ற கேள்விகளைத் தந்திருக்கின்றன. அவனது புலனாய்வுப் பணியில், மேல்மட்டம், கீழ்மட்டம், தொழில், மதம் என்பவற்றுக்கப்பால் விடுதலையின் தேடல் வீச்சைப் பெற்றிருந்தமைக்கு அவனால் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகள் சாட்சி. அவனது புலனாய்வுப் பணியில் போலி ஆவணங்களின் தேவை எத்துணை முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்திருந்தான் – அதனால் பாதுகாக்கப்பட்ட முகவர்கள் ஆதரவாளர்களை அறிந்திருந்தான். பல மட்டங்களில் இருந்தும், அவனால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களினால் எட்டப்பட்ட புலனாய்வு வெற்றிகள் அதிகம். அவனதும் அவன் தோழன் கணேஸ் உள்ளிட்ட பல போராளிகளின் பலவருட அர்ப்பணிப்புமிக்க உழைப்பினால்; அவர்களால் திட்டமிடப்பட்ட ‘புலனாய்வு இலக்கு’ வெற்றிகொள்வதற்கான தருணம் வந்த போது “பொதுமக்களின் இருப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன” என்ற கட்டளைப்பீடத்தின் மறுப்பின் காரணமாக திட்டம் கைவிடப்பட, தொடக்கப் புள்ளியிலிருந்தே மீண்டும் உழைக்க வேண்டிய தேவை. அதற்காக உழைத்த கைகளினுள் மீண்டும் அவனும் ஒருவனாய்… 11.12.1998 அன்றைய புலனாய்வுப் பணிகளை நிறைவு செய்து மன்னார் செபஸ்தியார் கோவிலுக்கருகில் ஒரு வீட்டில் தங்கியிருக்கையில் ‘சனி விலேஜ்’ (shanny village) சிங்களப் படைமுகாம் பொறுப்பதிகாரி அர்ஜுன் வீரசிங்க தலைமையில் வந்த படையணி ஒன்றினால் வீடு சுற்றிவளைக்கப்பட ‘எங்கோ தவறு நடந்திருந்தமை தெரியவர’ அவனும், அவன் தோழன் கப்டன் கணேசும் படுத்திருந்த அறையினுள் முதலில் உட்புகுந்த அர்ஜூன் ‘ரோச்’சை அடிக்க, வெளிச்சத்தை முந்திப் பாய்ந்த அவனது கைத்துப்பாக்கியின் ரவை அர்ஜூனவின் முழங்கால் சிரட்டையை உடைத்து அவன் கீழே சரிய, கைக்குண்டொன்று அந்த அறைக்குள் வெடிக்கின்றது. அவனது முதுகுக்கு பின்னால் படுத்திருந்த கணேஸ் மட்டும் எழும்பி வெளியே வரக்கூடிய நிலையில் காயப்பட்டிருந்தான். “மச்சான் நீ தப்பிப்போ என்னால் வர முடியவில்லை” என்ற அவனது இறுதி மூச்சின் முன் அவனது கைத்துப்பாக்கியின் வெடி அதிர்வொன்றும் கேட்டது. அவனது அசாத்திய துணிச்சல் படைப்பிரதேசத்தினுள் வாழ்ந்த பரிச்சயம், அசட்டை அவனை இழக்கக் காரணமாகியதா? காயங்களுடன் கணேசைக் கண்டதும் ‘வில்வம்’ தப்பிவரவில்லையா? என்ற ஆதரவாளரின் துடிப்பிலும், “தம்பி அவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் அவனுக்கும் சேர்த்து புதுவருசத்துக்கு உடுப்பு எடுத்திற்றன்” அவன் இன்னும் வாழ்கிறான் என்ற முகவரின், மறக்க முடியாத நினைவிலும், “அன்று அவன் இல்லையெண்டதும் கோயிலில் தவற விட்ட பிள்ளை போல் ஆனேன்” என்ற அவனது பொறுப்பாளர் விநியாகம் அவர்களதுஇ அவன் மீதான நம்பிக்கையிலும், “கோபப்படாமல், அதிகாரம் செலுத்தாமல், அன்பாக மக்கள் மனதை வெல்லும் அவனது பண்பு ஒட்டுமொத்த புலனாய்வுச் செயற்பாட்டாளர்களுக்கான முன்னுதாரணம். இவ்வாறான பண்பாளரிடம் இயல்பாகவே அதிக துணிச்சல் இருப்பது அரிது – விதிவிலக்காக இவனிடம் அந்தத் துணிச்சலுமிருந்தது. மறுபக்கத்தில் எதிர்கால புலனாய்வுச் செயற்பாடு கருதி தன் செயற்பாட்டை அறிக்கைப்படுத்துவதிலும், ஆவணப்படுத்துவதிலும் – மற்றும் திட்டமிட்ட நிர்வாக ஒழுங்கமைப்பிற்குள் போராளிகளை வழிப்படுத்தலிலும் காணப்பட்ட முதிர்ச்சியின்மை, அவனது குறைகளெனலாம்” என்ற புலனாய்வுப் பொறுப்பாளரின் பார்வையிலும், “எமது தாய்நாடு விடுதலை பெற வேண்டும். எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின், நாம் போராடித்தான் ஆகவேண்டும். குருதி சிந்தித்தான் ஆகவேண்டும்” என்ற தலைவரின் சிந்தனையிலும், பின்னொரு நாளில் அவன் தேடிய இலக்கினை வெற்றிகொண்ட தியாகிகளின் அர்ப்பணிப்பிலும் அவனது வாழ்வு உன்னதமானது. நினைவுப்பகிர்வு: சி.மாதுளா. நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மாசி 2004). https://thesakkatru.com/mejor-vilvam-joan/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
- புலோலியூரான் ரவீ..ன்.jpg
- நீர்வேலியான்.jpg
-
மாவீரர் புகழ் பாடுவோம்
கல்லறை பாடிடும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
2015 மாசி மாதம் செல்லச்சந்நிதி கோவில் சென்று இவ்இறுவெட்டு வெளியிட்டதில் மிகுந்த சந்தோசம்! சதீசுக்கும்.பாடகர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினர்கும் நன்றி...!பாடல்...star சிறி..சதீஸ்..பற்றீசியா.. அட்சரா..ஆரபி.... ஆக்கம் இசை....star sri parisமுருகன் பாடல் ..குரல்...! starசிறி..சதீஸ்..பற்றீசியா அட்சரா..ஆரபி... ..இசை ஆக்கம்..star sri paris..2015
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் கல்லறை திருவிழா பல்லவி : கொட்டும் பனியில் குளிர்நிலா மண்ணில் வந்த பாலகனே உனை தொட்டு தழுவி அணைக்க எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2 அன்னை மடி மீது நீயும் தவழ கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர் மாட்டுத் தொழுவமாய் எந்தன் உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார் எந்தன் நண்பனாய் அன்பனாய் நீயும் மாறிட எந்தன் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன் - 2 சரணம் : வானின் நீளம் ஓடும் நீரும் உம் அன்பை அறிந்ததே பாவியான எந்தன் உள்ளம் உம்மை மறந்ததே சாதி மதம் தேடல் இங்கே அன்பை அழித்ததே உண்மையான அன்பிற்காக எங்கியே நின்றதே ஒரு தாயை தேடும் பிள்ளை போல அன்பை தேடி நின்றேன் இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே உம்மை கண்டுக்கொண்டேன் இருள் யாவும் மறைந்திடும் ஒளி எங்கும் பரவிடும் இதை யாவரும் காணவே உம் வருகை உணர்த்திடும் என்னை வீழ்த்திட தாழ்த்திட யார் யார் நினைப்பினும் உந்தன் பார்வையில் பாதையில் என் தேடல் வேண்டுமே - 2
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 வள்ளல் இமாம் பூஸ்ரி வாழ்ந்த கதை சொல்லவா ? வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவை இல்லை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
- colomban.jpg
- கவிப்புயல் இனியவன்.jpg
-
மாவீரர் புகழ் பாடுவோம்
பாடும் பறைவைகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு சந்நிதி முருகன் ஆலய 2014ம் ஆண்டிற்கான மகோற்சவத்தை முன்னிட்டு DD தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட காணொளிப் பாடல். பாடல் வரிகள் :- வெற்றிவேல் துஷ்யந்தன் இசை :- C. சுதர்சன் இயக்கம் :- க. சிவதுஸ்யந்தன் தயாரிப்பு :- DDTV பாடியவர் :- பஞ்சமூர்த்தி குமரன் ஒளிப்பதிவு :- ஜெயேந்திரா, சிவதுஸ்யந்தன், மயூரதன் படத்தொகுப்பு :- ஜெயேந்திரா நடனம் :- ஹிமாலயா நடனக்குழு செல்வச்சந்நிதி பாட்டு பாதிமதி சூடி வரும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஒவ்வொரு நாளும் தேவனே நான் உமதண்டையில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 ஏர்வாடி தப்ஸ்: நினைவு யாவும் உங்கள் குன்ஹு தாத்திலே இரகசிய பொருளே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஈழத்தமிழர் அரசியல்
2000 களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்கான எழுச்சி வந்து ஒரு தவிர்க்கப்பட முடியாததாக வந்து விட்டது. பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு இனங்களும் சமம், இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் வைத்துத் தான் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலைமை ஒன்று அன்று இருந்தது. நாங்கள் அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் தீவிரமாக வேலை செய்திருந்தோம். அந்த நேரம் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த சொல்ஹெய்ம் எங்களைச் சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் அவருக்கு சொன்னது என்னவென்றால், இலங்கைத்தீவில் தமிழ் சிங்களம் என்ற இரண்டு தேசிய இனங்களும் சமத்துவமானவை. எண்ணிக்கையில் பெரிது சின்னனாக இருக்கலாம். ஆனால், சமத்துவமானவை. இரண்டு தேசிய இனங்களும் சமமானவை என்ற அடிப்படையில் வைத்து அந்த இரண்டு இனங்களின் தலைமைகளும் சமமானவை என்ற அடிப்படையில் வைத்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். என நான் கூறினேன். அப்போது சொல்ஹெய்ம் எனக்கு கூறியது என்னவென்றால் நீங்கள் இதனை பெரிய நாடுகளுக்கு சொல்ல வேண்டும். பெரிய நாடுகள் இதனை ஒரு சிறுபான்மை பிரச்சினை என்று தான் பார்க்கின்றன. தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனம். அந்த இனத்துக்கு கலாச்சார உரிமைகள் இருக்கின்றன. அதனை கொடுத்தால் போதும், என்று தான் பார்க்கின்றார்கள். தமிழ்மக்களும் ஒரு தேசிய இனம் இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்று அவர்கள் பார்ப்பதில்லை. நீங்கள் அந்த லொபி வேலையை பெரிய நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால்,அதற்கு பிறகு எல்லா நிலைமைகளும் மாறி விட்டன. தனிய சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல. உலக ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இந்த இனவழிப்பை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கிறார்கள். இயக்கத்துக்கு கட்சிகள் மேலே நம்பிக்கை இருக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் இருக்கும் சிவில் அமைப்புக்களையும் இணைந்து தான் கூட்டமைப்பை பூரணப்படுத்துகிறார்கள். ஆனால், பின்பு நடந்ததோ வேறு.... இன்று மக்களை பிரித்து, கூறுபோட்டு, அரசியலில் வெறுப்படைய வைக்கும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன. இனி மக்களை ஒற்றுமையாக்கும் வேலையை அடியிலிருந்து தொடங்க வேண்டும். முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள்....
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- Birds.jpg
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- விவசாயி விக்.png
- Paanch.jpg
- கடற்கரும்புலி கப்டன் மாலிகா
கடற்கரும்புலி கப்டன் மாலிகா டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து நெஞ்சில் பூத்த மலர்கள் கடற்கரும்புலி கப்டன் மாலிகா. கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ. நான் வருகிறேன்’ என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாளோ! அதன்பிறகு அவளிடம் நீண்ட எதிர்பார்ப்பு. தனக்கு இலக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அவளிடம் இருந்த துடிப்பு, அதுவே அவளது கனவும் நினைவுமாக இருந்தது. மாலிகா, சிறந்த நீச்சற்காரியாக ஆரம்ப நீச்சற் பயிற்சியின்போதே இனங்காணப்பட்டவள். ஆரம்பப் பயிற்சியின் பின் சிறிதுகாலம் தொலைத்தொடர்பு வேலையில் நின்றபோது, தான் ஒரு கரும்புலியாக வேண்டும் என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்தது. சுலோஜன் நீரடிநீச்சற் பிரிவுக்குச் சென்றவள், அங்கு தனது திறமைகளாலும் பண்புகளாலும் எல்லோரையும் கவர்ந்தாள். வேகமாக நீந்துவாள். அதிகவலுவுள்ள எந்தப் படகையும் ஒட்டக்கூடிய திறமையை அவள் பெற்றிருந்தாள். மைல் கணக்காக நீந்தி, திறமையாகச் சுழியோடி, தன் குழுவிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் நீச்சல் பழக்கி, படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து அவள் செய்தவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயரக்கிளம்பும் இராட்சத அலைகளுக்குக் கீழால் நீந்துவது கடினம்தான். அந்த அலைகளை ஊடுருவி நீந்துவதற்குச் சிரமப்படும் பிள்ளைகளையும் நீந்திக்கொண்டே இழுத்து நீந்தப் பழக்கி………… அலைகள் அவளிடம் பணிந்துவிடும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவளது குழு எல்லாவற்றுக்கும் முன் நிற்கும். எந்தக் கடுமையான பயிற்சியையும் இலகுவாக்கி சிரித்தபடி செய்து முடிப்பதில் மாலிகா கெட்டிக்காரி. பெரிய பழுவுள்ள இயந்திரங்களையும், வலுவுள்ள பொருட்களையும், தூக்கி தோளில் அடித்து, அவளது உடல் வலுவானதில் வியப்பில்லை. தசைகள் இறுகித் தெரியும். அவளது கம்பீரத் தோற்றத்தால் தோழிகள் அவளைச் செல்லமாகக் ‘கட்ஸ்’ என்று அழைப்பதுண்டு. அந்தச் சம்பவம் அவளது உறுதியை நினைக்கத் தோன்றும். அவள் பயிற்சி முடித்தவுடன் இருபது கடல்மைல் நீந்துவதற்காக அவளின் குழு கடலில் இறக்கியது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி காலை எட்டு மணிக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. மாலிகாவின் வாயிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவளை கரையேறுமாறு பணிக்கப்பட்டது. மாலிகாதான் நீந்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். முழுவதும் நீந்தி முடித்த பின்னரே அவள் கரை ஏறினாள். எந்த நோய்வந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்த பின்னரே ஓய்வாள். அவளது கடற்சண்டைக் களங்களைக் கூறிக்கொண்டே போகலாம். கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் பூநகரி மீதான தவளைத் தாக்குதலிலும் அவளது படகு கடலில் இறங்கியது. கரும்புலியாய் இருளில் அவள் இலக்குத்தேடி அலைந்த நாட்கள் மெய்சிலிர்க்க வைப்பாள். இறுதியாக அங்கையற்கண்ணி நீராடி நீச்சற் பிரிவிலிருந்துதான் திருமலைத் துறைமுகத்துக்குப் போனாள். அவள் தனது இலக்கை அண்மிப்பதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பாதை முழுவதும் சேறு. காலடிகளை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதபடி முழங்காலளவு சேறு இருந்தது. அட்டைக் கடிக்குள்ளால் சிலிண்டரையும் தோளில் சுமந்தபடி செல்வது சாதரணமாக நினைத்துப்பார்க்க முடியாதது. கரும்புலிக்கேயுரிய அசத்திய துணிவும், தன்னம்பிக்கையும்தான் எல்லாவற்றையும் செய்யக்கூடிய வலுவை நிறையவே தந்தன. கூட வழியனுப்பச் சென்ற தோழிகள் அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள். “கடைசியா எங்களுக்கெல்லாம் சாப்பாடு குழைச்சுத் தந்தாள். அடிபட்டுச் சந்தோசமாய்ச் சாப்பிட்டம்.” இறுதியாக வழியனுப்பிய அந்தத்தோழியின் கன்னத்தில் தட்டி, “நான் போய் வெடிக்கிறபோதுதான் இந்த நோ மாறும்” என்று கூறிவிட்டுச் சென்றாள். கூடவே வந்த வேவு எடுத்துக்கொடுத்த கடற்புலித் தோழர்களிடம் இருநூறு மீற்றரிலேயே விடைபெற்றுப் போனாள். இலக்குப் பெரியது. சாதனையும் பெரியதுதான். நகர்ந்து கொண்டிருந்த கடற்படையினரின் டோறா அவளது இலக்கானது. 1996.12.08 அன்று அந்த இலக்கினோடு, துறைமுகத்தினுள் புகுந்து மாலிகாவும் இல்லாமற்போனாள். அவளுக்குப் பணிந்த அந்த அசுர அலைகள் அவளை அள்ளிச் சென்றிருக்கக் கூடும். நாங்கள் இக்கரையில் நின்றிருந்தோம். அலைகள் மட்டும் திரும்பி வந்தன. நன்றி: களத்தில் இதழ் (04.06.1997). https://thesakkatru.com/black-sea-tiger-captain-maliga/- இறைவனிடம் கையேந்துங்கள்
- மேஜர் சுமி
மேஜர் சுமி டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து வரலாற்று நாயகி மேஜர் சுமி / இசையரசி நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது; ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில், உபமெடிசின் (sub medicine) நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை. வவுனியாவிலிருந்து புறப்பட்ட வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படையினர் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் 60 நாட்கள் முயன்றும் 20 KM தூரத்தை பிடிக்கமுடியாமல் முடங்கிக் கிடந்தனர் என்பது வரலாறு. அந்த அவமானத்தை திசை திருப்பும் நோக்குடன் புளியங்குளத்தை பலமான தளமாக அமைத்து வைத்திருந்த புலிகளின் படையணிகளுடன் நேருக்கு நேர் மோத முடியாத இலங்கை அரசு தமது இராணுவ பலத்தை பக்கவாட்டாக பரப்பியது. “இராணுவ பலத்தில் எதிரி மலையாகவும் நாம் மடு “வாகவும் நின்று வெற்றி கொண்ட சமர் என்று தமிழீழ தேசியத் தலைவர் போராளிகளின் மனவுறுதியைப்பற்றி பெருமையாக கூறும் தாக்குதல் களம் அது. அந்தத் தாக்குதலை முறியடிக்க புலிகளின் படையணிகளும் வியூகம் அமைத்தனர். மாலதி படையணியின் அணி ஒன்று ஆனந்தி அக்காவுடன் முன்னரங்கிற்கு செல்ல அவர்களிற்கான submedicine நிலை ஒன்றை அமைப்பதற்காக புளியங்குளம் பிரதான மருத்துவமனையில் நின்றவர்களில் நாம் இருவரும் தெரிவு செய்யப்பட்டு சுமி அக்காவுடன் களமருத்துவ பொறுப்பாளர் மேஜர் எஸ்தர் அக்கா வால் அனுப்பப்பட்டோம். நாளை அல்லது மறுநாள் இராணுவம் முன்னேறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னரே அந்த இடத்தில் வேறு தேவைக்காக பயன்படுத்திய பதுங்குகுழி ஒன்றிருந்தது. அதனைச் செப்பமிட்டு மருத்துவப் பொருட்களை சிறு வெளிச்சம் கூட இன்றி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தோம். எங்களிற்கு மிக அருகில் எறிகணைகள் தொடர்ச்சியாக விழுந்து வெடிக்கத் தொடங்கியது. அரை குறையாக வெட்டிய அந்த பதுங்கு குழியில் எங்களை தலைதெரியாமல் புதைந்து கொள்ளச்சொல்லி ஒரு தாய்ப் பறவையாய் அந்தரித்துப் போகின்றாள் .”எனக்கெண்டா இந்த இடம் மெடிசினுக்கு சரி வராது போல” என்று கூறிக்கொண்டு மெல்ல இருளில் எழும்பி ஊலாவுகின்றாள். ஆரம்பப் பயிற்சியை மாணலாற்று காட்டிற்குள் பயின்றவளுக்கு காடு மிகவும் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.காட்டின் அசைவுகளை இலகுவில் இனம் கண்டுவிடுகிறாள். எங்கு நிற்கின்றோம் எப்படி வந்தோம் என்றே திசையை கணிக்க முடியவில்லை, அப்படியிருக்க மேஜர் திவாகரின் குரல் வோக்கி டோக்கியில் ஒலிக்கிறது . சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியும் வலது புறம் பக்கவாட்டாக நகர்வதால் எங்களிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் களமருத்துவ போராளிகளான சங்கரும், ஈழமும் நிற்கும் இடம் இரு பகுதிக்கும் பொருத்தமாக அமையும் அங்கு செல்லுமாறு பணிக்கின்றார் மீண்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு நடக்கின்றோம் சுமி அக்கா மெதுவாக குசுகுசுக்கிறா “என்னை தொட்டுக்கொண்டு “பின்னால் வாங்கோ….. செல் அடிச்சா விழுந்துபடுக்கவேணும் சாகிறதுக்கு எங்களுக்கு பயமில்லைதான் ஆனால் எங்கள நம்பி முன்னுக்கு நிக்கிற ஆக்களை காப்பாற்ற வேண்டும் அது தான் எங்களுக்கு தரப்பட்ட பணி” என்று மீண்டும் நினைவுபடுத்தினாள். நட்சத்திரங்கள் அற்ற வானத்துடன் காட்டு மரங்களை ஊடறுத்து பயணம் தொடர்ந்தது . புதிய இடத்தில் எமக்கான இடங்களை ஒழுங்கு படுத்தி முடித்தபோது காற்று பலமாக வீசியது, மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிய சத்தத்தை மேவி யுத்த ராங்கிகளின் கொடூரமான இரைச்சல் காதைப் பிய்த்தது. நள்ளிரவை தாண்டியிருக்க வேண்டும் “நான் முதல் சென்றி பார்க்கிறன் நீங்கள் கொஞ்சம் படுங்கோ “ என்று எங்களை அனுப்பிய போதே அவளுக்குத் தெரியும் தான் இன்று தூங்கப்போவதில்லை என்று, அவ்வாறே ஒரு மணித்தியாலம் கழிவதற்குள் எங்களை வந்து எழுப்பி “காயம் வரப்போகுது ஆயத்தப்படுத்துங்கள்” என்றவுடன் காவு தடியை எடுத்து ஆயத்தமானோம். பாதையே காணமுடியாத பற்றைக்காட்டுப் பகுதிக்குள் பாதையெடுத்து மிக வேகத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ அணியிடம் சேர்க்கும் பொறுப்பு வாகனப் பகுதி போராளிகளினது. களமுனையில் காயமடைந்து காக்கப்படும் ஒவ்வொரு உயிர் மீட்புப் பணியிலும் வாகனப்பகுதி போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் அதி உன்னதமானது, அவர்களது வேகமான செயற்பாட்டால் பாரிய காயமடைந்தவர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. அன்றும் அப்படித்தான் கண்மூடித்தனமான எறிகணைவீச்சால் பாதைகளை மூடி விழுந்து கிடக்கும் காட்டுமரங்களின் ஊடாகவும், கந்தகப்புகைக்குள் விழுந்து வெடிக்கும் எறிகணைச் சிதறல்களை ஊடறுத்தும் வாகனப்பகுதி லிண்டன் அண்ணா வின் மொட்டை ஜீப் வந்து நின்றது . “உடன இறக்குங்கோ தங்கச்சி வயிற்றுக் காயம்,,,,, என்று எம்மை விரைவு படுத்தினார். அவள் வேவு அணிப்போராளி உடனடி சிகிச்சை அளித்து பிரதான மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தோம். அப்போது சுமி அக்கா “லிண்டனும் ,வன்னியனும் போர்களத்தில் வாகனம் ஓடுவதில் பேய் கெட்டிக்காரர், சூரியக்கதிர் சண்டை மூட்டம் நாங்கள் அவயளுக்கு காயக்காறர்களை இடமாற்றம் செய்யும் போது எந்த காயத்திற்கு எந்த நிலையில் படுக்கவைத்திருக்கவேண்டும் அதனால் நன்மை, தீமை என்றெல்லாம் படிப்பித்திருக்கின்றோம் அவர்களும் ஆர்வமாக கேட்டுதெரிந்துவைச்சிருக்கினம் அதனால் வடிவா கொண்டு போய்ச்சேர்திடுவான்” என்றாள் நம்பிக்கையுடன் முன்னரங்கில் உக்கிர சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதுவரை தூரத்தே கேட்ட இயந்திரங்களின் உறுமலும் துப்பாக்கி வேட்டுக்களும் மிக நெருக்கமாக கேட்கத்தொடங்கியது. எல்லாக் களமுனைகளைப்போலவும் ஜெயசிக்குறு களத்தில் முன்னுக்கு காவலரணில் போராளிகளின் அணி நிக்கின்றது என்று நாம் அசண்டயீனமாக மருத்துவப் பணியைமட்டும் செய்ய முடியாது. அமெரிக்காவின் கிறீன்பரே சிறப்பு அணியினரால் களத்தில் நின்றே பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை இராணுவ கொமொண்டோ அணிகள் காடுமுழுவதும் பரப்பிவிடப்பட்டிருந்து .எங்கு இடைவெளி கிடக்கின்றதோ அதனூடாக புகுந்து பின் தளப்பகுதியிலும் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது எனவே மருத்துவப் பையுடன் துப்பாக்கிகளும் உசார்நிலையில் தான் வைக்கப்பட்டிருந்தது. இந்த நாட்களில் தான் சுமி அக்காவுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது. வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ற ஆளுமைக் குணங்கள் அவளிடம் கொட்டிக்கிடந்தது. எப்போதும் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் தமிழீழத் தேசியத்தலைவரைத்தான் தன் நேரடி வழிகாட்டியாக எண்ணுபவள். தனக்கு மேலானவர்கள் பிழைவிடும் நேரத்தில் கூட அதனை தட்டிக்கேட்டு விடும் துணிச்சல் காரி என்று சொல்லாம். இயல்பாகவே அமைந்துவிட்ட நற்குணங்கள் எளிதில் அனைவருக்கும் அவளை பிடித்து விடும். இயக்க விதிமுறைகளை மீறி எந்த ஒரு சிறு அசைவையும் செய்யமாட்டாள். “நான் அண்ணாக்கு தூரோகம் செய்யமாட்டன்” என்ற வார்த்தையில் தன்னை தானே வழிநடத்திக் கொள்வாள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போ தெல்லாம் கதை கதையாய் சொல்லுவாள். அவளது சொந்தக் கள மருத்துவ அனுபவங்களைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கின்றேன். அவள் இந்த மண்ணில் வீழும் வரை நடந்த அநேக போர்க்களங்களிற்கு மருத்துவப்போராளியாக உயிர்காக்கும் பணிக்காகச் சென்றிருக்கின்றாள். அவளது தந்தை கந்தையா மாஸ்ரர் முப்பத்தி ஒன்பது ஆண்டுகளாக ஆசிரியப்பணியில் சேவைசெய்தவர். தெல்லிப்பளை மகாஜனாகல்லூரியில் அதிபராகவும் இருந்து ஊர்போற்றும் பல கல்விமான்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கிவிட்டவர்.வலிகாம இடப்பெயர்வின் பின் வன்னி மண்ணிற்கு வந்து தன் ஆசிரியர் சேவையை காந்தறூபன் அறிவுச்சோலை மாணவர்களிற்கு வழங்கினார் ஆங்கில ஆசானாகவும் சிறந்த அதிபராகவும் இருந்து அம் மாணவர்களின் வளர்ச்சியில் விசேட கவனம் செலுத்தினார். அந்ந நற் சேவையின் பயனாக தமிழீழத் தேசியத்தலைவரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார். அத்துடன் போராட்டத்தின் விரிவாக்கம் பெருகப்பெருக பாரிய தொழில்நுட்பத் திறனையும் போராளிகளிடம் வளர்க்க வேண்டியிருந்ததால் ஏனைய துறை பொறுப்பாளர்களும் கந்தையா மாஸ்ரரின் சிறந்த ஆங்கில வளத்தை போராளிகள் கற்பதற்காக பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு பல பிரிவுப் போராளிகளிற்கும் ஆங்கில கல்வியை ஊட்டினார். ஒரு நாள் சூரியன் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்த பகற்பொழுதில் மல்லாவி வடகாடு என்னும் இடத்தில் இருந்த அவளது தற்காலிக வீட்டிற்கு சுமி அக்காவுடன் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. சுமி அக்காவின் தந்தைதான் குளிர் நீரில் தோடம்பழம் கரைத்து கொண்டு வந்து தந்தார். தாயினதும் அவளது மூத்த சகோதரனதும் படங்கள் மாலையுடன் தொங்கின; என் கண்கள் பதிந்த திசையைவிட்டு அகலாது விக்கித்து நின்றது. இலங்கைத்தீவின் யாழ்குடாநாட்டிலுள்ள நகரங்களில் ஒன்று சுண்ணாகம் இங்கு வேளாண் உற்பத்திச்சந்தை பிரதான அம்சமாகும். இதன் மேற்கே அமைந்துள்ள கந்தரோடையானது யாழ்பாண இராச்சியத்தில் பழமை வாய்ந்தது என்று அகழ்வாராய்ச்சி தகவல்களும் நிறுவியுள்ளன. அதைவிட காலணித்துவ ஆட்சியில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட குமாரசாமி புலவரின் பூட்டபிள்ளையாகிய மனோன்மணிக்கும் கந்தையாவுக்கும் 12.07.1968 மூண்றாவது பெண் பிள்ளையாக பிறந்தவள்தான் உமாவல்லி என்ற இயற்பெயர் கொண்ட மேஜர் சுமி. ஒரே அண்ணனுடன் இரு அக்காக்களும் இரு தங்கையுடன் சிறந்த ஒரு குடும்பம் பல்கலைகழகம் என்ற கூற்றை மெய்ப்பிப்பதைபோல் பாசப்பினைப்பில் வளர்ந்து வந்தார்கள். தந்தையான கந்தையா, அதிபராக தெல்லிப்பளை மகாஜனாகல்லூரியில் கற்பித்ததால் பிள்ளைகளையும் அங்கேயே படிக்கவைத்தார். யாரும் குறை சொல்லமுடியாதவாறு பிள்ளைகள் கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் சிறந்து மிளிர்ந்தனர். செல்வச்செழிப்புடன் வாழ்ந்த அவர்களிற்கு வீட்டில் கஷ்ரம் என்று எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் தமிழ்மக்களிற்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இலங்கை அரசின் வஞ்சனைப் போக்கை கண்டு உள்ளுக்குள் கொதித்துப்போன அண்ணன் வேலாயுதகுமரன் அரசிற்கு எதிராக்கத் தீவீர எதிர்பை மாணவர்அமைப்புடன் இணைந்து வெளிப்படுத்தினான். பின்நாளில் விடுதலைப் புலிகளின் முழு ஆதரவாளனாகி முழுமூச்சாக செயற்பட்டான். 1984 ஆண்டு காலப்பகுதியில் உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கற்றுக்கொண்டிருந்தும் பரீட்சை எழுதமுடியவில்லை. அதே நேரத்தில் தன் அண்ணனைப் போலவே உமாவல்லியும் அடக்கு முறைக்கு எதிராக கொதித்தெழுந்தாள் சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப்பெற்று வர்த்தகப் பிரிவை தேர்ந்தெடுத்து படித்துக்கொண்டே மாணவர் அமைப்பில் இணைந்து பணியாற்றினாள் . அண்ணாவும் தங்கையுமாய் பல பொது வேலைகளில் ஒன்றாகவே ஈடுபட்டனர். கூட்டங்களிற்கும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை பிள்ளைகள் கல்வியை குழப்புவதாக எண்ணி வருந்தினார் . “அப்பா நாங்கள் படிச்ச படிப்பு எங்களிற்கு பயன்படவேண்டும் என்றால் இலங்கை அரசின் அடக்கு முறையில் இருந்து விடுபடவேண்டும்” என்று தந்தைக்கு இருவரும் சேர்ந்தே விளக்க உரை நடத்தினார்கள். யதார்த்தங்களை புரிந்து கொண்ட தந்தை அவர்களின் சேவைகளிற்கு பெரும் கட்டுப்பாடு விதிக்கவில்லை. பின்பான நாட்களில் எமது சமூக அமைப்பில் புரைபோடப்பட்டிருந்த பிற்போக்கான பழமைவாத சிந்தனைகளை உடைத்தெறிந்து திலீபன் அண்ணாவால் நடத்தப்பட்ட சுதந்திரப் பறவைகள் அமைப்புடன் ஒன்றித்து யாழ்பாண சமூகத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்திய பெண்கள் வரிசையில் உமாவல்லியும் இவ் அமைப்பில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டாள். இவர்களிற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் முதலுதவிக் கல்வி வழங்கப்பட்டது. அதன் பின் கிராமம்தோறும் சமூக விழிப்புணர்வுக் கூட்டங்களிற்கும் அடிக்கடி சென்றுவந்தாள். ஆனாலும் இலங்கை இந்திய இராணுவம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்ட கொடூரமான செயல்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற தனது இந்த பணி காணாது, ஆயுதப்பயிற்சி எடுக்கவேண்டும் என்று திடமான முடிவுடன் 1989 ம் ஆண்டு தை மாதம் பாசறை நோக்கிப் புறப்பட்டு சுமி என்ற வரலாற்று நாமத்தை தனதாக்கிக் கொண்டாள். தமிழீழத்தின் இதயபூமி என அழைக்கப்படும் மணலாற்றின் காட்டில் பெண்களிற்கான 4 ஆவது பயிற்சி முகாமில் 59 பெண்போராளிற்கு தலைமை பயிற்சி ஆசிரியர் சுகி மற்றும் டெல்ரா, ஜெசி, அவர்களின் பொறுப்பில் தன்சாணியா முகாமில் படையியல் பயிற்சிகள் நடைபெற்றது அருகில் தமிழிழத்தேசியத்தலைவரின் முகாமும் இருந்தால் அவரது நேரடி கண்காணிப்பும் கருத்துரைகளிற்கும் பஞ்சமிருக்கவில்லை .அது மட்டுமன்றி கிட்டு அண்ணாவின் அரசியல் வகுப்பும் பூரணதெளிவை அவர்களிற்குள் விதைத்தது. கடின பயிற்சியையும் மன உறுதியையும் அள்ளிக் கொடுக்கும் அந்த காட்டுப்பாசறை சிறந்த போராளியாக சுமியையும் இனம் காட்டியது. மூத்த மருத்துவப்போராளி மேஜர் சோதியா அக்கா தான் பயிற்சி பாசறையின் மருத்துவ கடமையில் இருந்தாள். அவளின் சிறந்த தேடலிற்குள் சுமியும் சிக்கிவிட அவளை ஒரு மருத்துவப் போராளியாக்கிவிட எண்ணினாள் தூரநோக்கான சிந்தனையில் புதிய பெண் மருத்துவ போராளிகளை உருவாக்கும் திட்டத்தில் 4 ஆவது பாசறையில் இருந்து பிரிகேடியர் துர்க்கா மேஜர் சுமி மற்றும் கெங்கா ,மைதிலி போன்றோருடன் வேறு பெண்போராளிகளுமாய் பத்து பேர் ஆரம்ப மருத்துவ கற்கையை வைத்தியர் அஜந்தனிடம் மணலாற்று காட்டிலே கற்றனர். பரம்பரையாகவே சைவ உணவு உண்ணும் குடும்பத்தில் இருந்து வந்தமையால் அசைவ உணவை உண்ணப் பழகிவிடுவது மேஜர்சுமிக்கு இலகுவாக அமையவில்லை. மணலாற்று காட்டிற்குள் சாதாரண உணவிற்கும் நீருக்குமே பல மைல்கள் நடக்க வேண்டும். ஒரு விடுதலைப் போராளி கிடைக்கும் உணவை உண்ணப் பழகவேண்டும் என்று அடிக்கடி நினைத்தாலும் ஆரம்பத்தில் முயற்கொம்பாய் அமைந்துவிட வெறும் சோற்றை உண்டேனும் பசியாறிக்கொள்வாள்.ஆனால் அவள் கொண்ட கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு மழை நாளில் ஓய்வாகவிருந்து தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தவளிடம் மழைநீரோடு அவளது கண்ணீரும் கலந்து விடப்போகும் இந்த சோகச் செய்தியை சொல்லத் திராணியற்று விக்கித்து நின்றார்கள் மூத்த பெண் போராளிகள். அந்த நாளில் வெளிவரும் களத்தில் பேப்பரும் இந்த செய்தி பிரசுரமாகியிருந்தது. அந்த கரிய நாள்… யூலை 23, 1989 அவளது ஆசை அண்ணாவை நீண்ட நாட்களாக குறிவைத்து தேடிய இந்திய இராணுவம் யாழ் பல்கலைக்கழக வீதியில் சுற்றிவளைத்துப் பிடித்து கைதாக்கி சித்திரவதை செய்தது. செய்தி அறிந்து தந்தை அவ்விடம் செல்வதற்கு முன்னரே கொடூரமாக கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவில் வீதியில் வைத்தே சுட்டுகொன்றது. இந்தச் செய்தி பேரிடியாய் இறங்கியது, ஐந்து பெண்பிள்ளைகளின் ஒரே ஆண் மகன் அவன். ஒன்றாக வாழ்ந்த இறந்த காலத்தின் இனிய நினைவுகள் தீயாய்சுட்டது. மரணச்சடங்கிலும் தன்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதை விட தாய், தந்தை, சகோதரிகள் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகின்றார்கள் என்ற துயர் நெஞ்சை பிழிந்தது. இறப்பின் துக்கத்தை கூட உறவினர்கள், ஊரார் சேர்ந்து வெளிப்படுத்த முடியாத காலம் அது. இந்திய இராணுவத்துடனான சண்டைக் களங்களிற்கு செல்ல கால்கள் எத்தணித்தன நெஞ்சில் புதுவீரம் குடைந்தது, வேதனையில் உதடுகள் துடித்தது அந்த நாளை எண்ணிக்காத்திருந்தாள் சுமி. அந்த நாட்களில் விடுதலைப் புலிகளை இலகுவில் அழித்து விடலாம் என்று கற்பனையில் மிதந்திருந்த இந்தியப்படை தமது தோல்விகளை மறைக்க மக்களை கொடூரப்படுத்தி, படுகொலைகளையும் கூட நடத்தியது . அப்படித்தான் விடுதலைப்புலிகளிற்கு மருத்துவம் செய்தார் என்று குற்றம் சாட்டி இந்திய இராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட வைத்தியர் பத்மலோஜினி நாட்டைவிட்டு வெளியேறி தமிழ் நாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார். அந்த நாட்களில் மேலதிக மருத்துவ சிகிச்சை க்கா போராளிகள் தமிழகம் அனுப்பபடுவது வழமை . அப்படித்தான் ஒரு நாள் ஒரு போராளி நோயாளியுடன் சுமியும் அங்கு சென்றடைந்தவள் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புக்கு அமைய மருத்துவர் பத்மலோஜினி அவரிற்கு உதவியாக சேலத்தில் தங்கிவிடுகின்றாள். அங்கிருந்த போது மேலதிக மருத்துவக் கற்கைகளையும் சுமி ஆர்வத்துடன் கற்றாள். பின்னர் சில மாதங்களில் இந்தியா இராணுவம் நாட்டை விட்டு வெளியேறியவுடன் பத்மலோஜினி அன்ரியுடன் மீண்டும் 1990 ஏப்பிரல் ஈழத்தில் கால் பதித்தார். அவருடனே சிறிது காலம் தன் சேவையைத் தொடர்ந்தாள். அந்த காலப்பகுதியில் மாவட்டரீதியான மருத்துவ வீடுகள் அமைத்து காயமடைந்த போராளிகள் பராமரிக்கப்பட்டனர் அவர்களை சென்று பார்ப்பது காயங்களிற்கு மருந்து கட்டுவது போன்ற பணிகளை தொடர்ந்து கொண்டு மருத்துவத்தின் மேலதிக கற்கையும் கற்றுக்கொண்டிருந்தாள். 1990 களில் யாழ்பாண வீதிகளில் சீருடையணிந்த பெண் போராளிகள் அணி அணியாக வலம் வருவதைக்கண்ட பொது மக்களின் மனங்களில் புது தெம்பும் ஒரு வித தன்னம்பிக்கையையும், வீரமும் எழுந்தது; சமூகத்தில் பெரும் மாற்றம் நடைபெற்று வருவதை கண்ணூடு கண்டார்கள் . அந்த மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களில் சுமியும் ஒருத்தி தான். இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது; 21.11.1990 அன்று மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்த சமர்க்களத்திற்கு களமருத்துவப் போராளியாகச் சென்று பல நூறு போராளிகளின் உயிரை காப்பாற்றினாள். இதுவே இவரது முதல் மருத்துவக் களமுமாகி வலுச் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து “ஆகாயக் கடல் வெளி” தாக்குதல் என களங்கள் நீண்டன. அடுத்து இன்னோர் இடி சுமியின் குடும்பத்தில் விழுகின்றது. ஒரே மகனை சுட்டுப் போட்டதை எந்த தாய் தான் ஏற்பாள்… அது ஒருபுறம் மகளின் பிரிவு மறு புறமென மாறி மாறி வந்த கவலைகளால் சுமியின் தாய் நோயாளியாகி பாயிலே விழுந்தாள். எத்தனை முயன்றும் காப்பாற்ற முடியாமல் 1991 ஆண்டு அன்பு தாயார் இறைவனடி சேர்ந்தார். விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களிற்கு பெயர் சொல்லித் தெரியும் அளவு நெருக்கமானவராக கந்தையா மாஸ்ரர் இருந்ததால் தாயின் மரணச்செய்தி பற்றி தலைவருக்கு கடிதம் அனுப்பினார் அடுத்த நாளே ஒரு மாதவிடுமுறையில் அனுப்பப்படுகின்றார் சுமி; ஆறுதல் சொல்ல வழியின்றி நின்ற குடும்பத்தை ஆற்றுப்படுத்தி, விடுமுறை கழித்து பாசறை திரும்புகின்றாள். அதன்பின்னான பணிகள் மருத்துவம் சார்ந்தே வழங்கப்பட்டது. துடிப்பான போராளியாக உற்சாகத்துடன் இயங்கிக்கொண்டிருப்பாள். 1992ம் ஆண்டு போராளி மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு தெரிவாகின்றாள். சிறந்த ஆங்கில அறிவும், நிர்வாகத்திறமையும், பக்குவமும் கொண்ட சுமி அந்த கல்லூரியில் படிப்பதற்காக மட்டுமல்ல சமநேரத்தில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பெண்கள் அணிக்கு பொறுப்பாளராகவும் தமிழீழ தேசியத்தலைவரால் நியமிக்கப்படுகின்றாள். நல்லொழுக்கத்துடனும் தலைமைத்துவப் பண்புடனும் தனக்கு வழங்கப்பட்ட பணியை திறம்படச் செய்துகொண்டிருந்தாள். பல புதிய போராளிகளை பல்முகத் திறமையானவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் ஆர்வமாகவே இருந்தாள். அந்தக் கல்லூரியின் பயின்ற போராளிகளின் மூத்த சகோதரியாகவும் எல்லோராலும் விரும்பப்பட்டாள் தங்களது பிரச்சனைகளை மனம் விட்டு அவளுடன் பேசித்தீர்த்தார்கள். அன்பும் கருணையும் அவள் கண்களில் வழிந்தாலும், இயக்க கட்டுப்பாடுகளில் கடுமையான நடைமுறைகளை விதிப்பவளாகத்தான் எல்லோராலும் பார்க்கப்பட்டாள். அந்தக் கல்லூரியில் படிப்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததால் பின்னொரு நாளில் பெண் வைத்தியர்கள் பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண் தளபதிகளிடம் தானாகவே கேட்டு படிப்பதற்கு தகுதியான போராளிகளை உள்வாங்கி எண்ணிக்கையை சமநிலைப் படுத்தினாள். அவளது சிந்தனையோட்டம் எப்போதுமே நீண்டதாகவே இருக்கும்; அங்கு எல்லோரும் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்க இவளுக்கு நிர்வாக வேலைகள் இருந்தும் படிப்பதில் எந்த தடங்கலும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட பணிகளை நேர்த்தியாக செய்துகாட்டினாள். கல்லூரியில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் மற்றவர்களையும் ஈடுபடுத்தி தானும் விருப்புடன் பங்கு பற்றுவாள். அப்படியான நிகழ்வுகளிற்கான தயார்படுத்தல்களிற்கு வெளியில் இருந்து துறைசார்ந்த வர்களை அழைத்துவருவாள் . ஒரு போது ஆங்கில பேச்சுகளை பயிற்று விப்பதற்காக தன் தந்தையும் மருத்துவகல்லூரி வரை அழைத்து வந்ததாக ஒன்றாக பயின்றவர்கள் கூறினார்கள். மருத்துவ கல்லூரி ஆரம்பித்தபோது பலர் மருத்துவத் துறைக்கு புதியவராகவே சேர்ந்திருந்தனர். சுமி களமருத்துவ அனுபவம் வாய்ந்த போராளியாக இருந்ததால் படித்துக் கொண்டிருக்கும் போதே சமர்க்களங்களிற்கு மருத்துவ அணியுடன் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தாள். ஈரூடக தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்ட பூநகரி தவளைத்தாக்குதல் மற்றும் 1995.07.28 அன்று கொக்குத்தொடுவாயில் நடைபெற்ற தாக்குதலிலும், சூரியக்கதிர், புலிப்பாய்ச்சல், இடிமுழக்கம் என்று ஒவ்வொரு களங்களிலும் உயிர்த்தோழர் உயிர்காக்க ஓடி யோடி உழைத்தாள் எங்கள் சுமி. பின்னர் யாழ் இடப்பெயர்வின் பின் எல்லாத்திசைகளிலும் போர்க்களங்கள் விரிய விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறை தனியான மருத்துவமனைகளையும் சத்திரசிகிச்சைக் கூடங்களையும் களமுனைக்கு ஏற்ப பல இடங்களிற்கு பரவலாக்கியது. மருத்துவக் கல்லூரியின் கல்வி நடவடிக்கையும் சில காலம் தடைப்பட்டு பின்னர் அந்தந்த இடங்களில் நடைபெற்றது; எப்போதும் சமர்களிலே தாய்ச்சமர் என வர்ணிக்கப்பட்ட ஜெயசிக்குறு, சத்ஜெய போன்ற களமுனைகளில் மருத்துவராகவும் பின்னணி சத்திரசிகிச்சைக் கூடங்களிலும் செயற்படத் தொடங்கினாள். ஆனால், அதன் பின்னரான நாட்களில்… அவள் தனது பாசறைத் தோழியாக இருந்து பெரும் படையணியை வழிநடத்தும் சோதியா படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களால் அந்த படையணிக்குள் உள் வாங்கப்பட்டு தன் கடமையைத் தொடர்ந்தாள். அங்கு மருத்துவம் மட்டுமன்றி சிறப்பு தளபதியின் நம்பிக்கைக்கு உரியவராக அவரது உதவியாளராக பல வேலைகளை செய்தாள். உலகின் கவனத்தை ஈர்த்து விடுதலைப்புலிகளின் உச்சகட்ட போரிடும் ஆற்றலை வெளிப்படுத்தியது இத்தாவில் சமர்களம். இத்தாக்குதலுக்காக கடல்வழியாக தரையிறங்கிய புலிகளின் படையணிகள் இராணுவ வலயத்தை ஊடுருவித் தமது நிலைகளை அமைத்திருந்தன. தொடர்ந்து முப்பத்து நான்கு நாட்கள் கடுஞ்சமரின் பின் ஆனையிறவுப் படைத்தளம் விடுதலைப்புலிகளால் கைப்பற்பட்டது. இந்த வரலாற்றுச் சமரில் சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்கா அவர்களின் பிரதான உதவியாளராக சுமியும் உடனிருக்கின்றாள். எல்லாத் திசைகளிலும் இருந்து உக்கிரமாக தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ஆட்லறி தாக்குதல்கள் மழையாய் பொழிந்தன. அந்த வீரம் செறிந்த சமர்க் களத்தில் 2000.04.11 அன்று இந்த வெற்றிச் சமருக்கு வித்திட்ட வேங்கைகளின் வரிசையில் மேஜர் சுமியும் வரலாற்று நாயகி என்ற வீரம் நிறைந்த பெண்புலிகளின் காவியத்தில் புகுந்துகொள்கின்றாள். விழுப்புண்ணடைந்த ஆயிரம் ஆயிரம் வீரர்களை காப்பாற்ற உழைத்த அவளது கரங்கள் அன்று அமைதியாய் கிடந்தன; விடுதலைப் பாதைக்கு உரம் இட்டவர்களின் வரிசையில் மேஜர் சுமியும் இணைந்து கொண்டாள். இந்த சரித்திர நாயகர்களின் உடல் பிரிந்தாலும் அவர்களின் தியாகங்களை இன்றும், என்றும் பேசிக்கொண்டேயிருப்போம்.. நினைவுப்பகிர்வு: மிதயா கானவி. https://thesakkatru.com/mejor-sumi/- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
Important Information
By using this site, you agree to our Terms of Use.