Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நல்லூர் உற்சவகாலம் 2013 ஐ முன்னிட்டு "திருப்பதி என்டடைன்மன்ட்" வழங்கும் சிறப்புப்பாடல்...............!!! பாடலாசிரியர் - தினேஸ் ஏகாம்பரம் இசை - சுதர்சன் பாடியவர்கள் - யோகேஸ் பானுகா தயாரிப்பு - தினேஸ் ஏகாம்பரம்.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து
- நந்தன்.jpg
- goshan_che.jpeg
-
ஈழத்தமிழர் அரசியல்
தமிழீழம் என்னும் இலக்கை அடைய வழிவகுக்கும் ஏழு கொள்கைகள் -சத்தியா சிவராமன் 84 Views ஓர் சுதந்திரமான, இறைமையுள்ள, பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் நாட்டை மீட்டெடுக்கின்ற தமிழீழ மக்களின் நீண்ட, கடினமான பயணம், தற்கால வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. எழுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையை விட்டு வெளியேற ஆயத்தமான பிரித்தானிய காலனீய அரசு, ஒன்றிணைக்கப்பட்ட சிறீலங்கா அரசிடம் தமிழீழ நாட்டைக் கையளித்த கணப்பொழுதிலிருந்து தமிழீழ மக்களின் விடுதலைக்கான இந்தப் பயணம் ஆரம்பமானது. அதன் பின்னர் கொழும்பை நடுவமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாதம் நிறைந்த, பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக தமிழ் மக்களின் நீதியும் மாண்பும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் வன்முறையற்ற, அமைதி வழிகளில் தமிழ் மக்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈற்றில் இப்போராட்டம் ஒரு முழு அளவிலான விடுதலைப் போராகப் பரிணமித்தது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நீடித்த இப்போர், 2009 மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையுடனும், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கொடூரமாக அழிக்கப்பட்ட நிகழ்வுகளுடனும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இக்காலப் பகுதியில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் சிறீலங்கா அரச படைகளினால் இழைக்கப்பட்டன. மிகவும் கொடூரமான முறையில் இழைக்கப்பட்ட இக்குற்றங்களுக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. போர் நிறைவுற்ற போது, ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் கைதுசெய்யப்பட்டு, ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான அப்பாவிப் பொதுமக்கள் தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் இழைக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று, ஒருபுறம் கொழும்பில் ஆட்சியில் இருப்போரின் ஆணவத்தையும் மறுபுறத்தில் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழப் பிரதேசங்களையும் அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அநீதிகளுக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்தவிதத்திலும் அக்கறை காட்டாத பன்னாட்டுச் சமூகத்தையும் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மனம் தளர்ந்து போவதும் நம்பிக்கையை இழப்பதும் இயல்பாகவே எதிர்பார்க்கக் கூடிய விடயங்கள் தான். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, ஊடகங்கள் கோலோச்சும் ஒரு காலப்பகுதியிலும் தொடர்பாடல் வசதிகள் உச்சக்கட்ட நிலையிலிருந்த ஒரு காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பன்னாட்டுச் சமூகம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை. மனித உரிமைகள் பற்றியும் சனநாயகம் தொடர்பாகவும் ஓயாமல் கோசமெழுப்புகின்ற வல்லரசுகள், இந்த இனப்படுகொலையைப் புரிந்து விட்டு இன்றும் சிறீலங்காவின் ஆட்சிக் கதிரையில் இருக்கும் பாசிசவாதிகளைத் தண்டிப்பது தொடர்பாக எந்தவித சலனமும் இன்றி இருப்பதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. சிறீலங்காவை உற்று நோக்கும் போது, இராஜபக்சாக்களை தலைமையாகக் கொண்ட கொழும்பு அரசு, முழுத் தீவையுமே சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கிறது. பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களைச் சிஙகளமயமாக்கும் செயற்பாடு, ஈடுசெய்யப்பட முடியாத வகையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல மொழிகளையும், பல சமயங்களையும், பல இனங்களையும் தன்னகத்தே கொண்ட சிறீலங்கா, ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக மாறுவதாயின், தமக்குரிய தனிநாடான தமிழ் ஈழத்துக்காகப் தொடர்ந்து போராடுவதைத் தவிர தமிழ்ஈழத் தமிழ்மக்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை. உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்து வாழுகின்ற புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடாக, அமைதியான வழிகளிலும், முற்று முழுதாகச் சனநாயக வழிமுறைகளிலும், தமிழ் மக்களுக்கான மாண்பையும், நீதியையும், விடுதலையையும் அடைந்து கொள்ளும் தூரநோக்குடன் இன்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனப்படுகொலையை மேற்கொண்டவர்களுடன் சமரசம் செய்வதென்ற கேள்விக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்பது மட்டுமன்றி தற்கால சனநாயகத்தின் அடிப்படைகள் பற்றியோ, மனித நாகரிகக் கொள்கைகள் பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லாதவர்கள் நடுவில் சிறுபான்மை மக்களாகக் ஈழத்தமிழ் மக்கள் காலாதிகாலம் வாழ்வதையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்தில், நாம் கைக்கொள்கின்ற தந்திரோபாயங்களை மட்டுமல்ல நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பாகவும், அந்த இலக்கை அடைவதற்குரிய வழிவகைகள் தொடர்பாகவும் இருக்கின்ற அடிப்படைக் கொள்கைகளையும், அனுமானங்களையும் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாகும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட எந்தவொரு மக்களினத்தின் விடுதலையை நோக்கும் பொழுதும், அவர்கள் அந்த விடுதலைக்காக எப்படிப்பட்ட ஈகத்தைச் செய்திருந்தாலும், அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டுத் தளங்களில் பூகோள ரீதியாக எவ்விடயங்கள் இன்று முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன என்ற தெளிவு இன்றி இவை எதுவுமே சாத்தியமாகாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். முதலாவதாக, நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு தூரநோக்குப் பார்வையை (vision) நாம் கொண்டிருப்பதோடு, அந்த இலக்குத் தொடர்பான விபரங்கள் வெளிப்படைத்தன்மையோடு வரையறை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தை முற்றுமுழுதாக எதிர்காலத்தின் கைகளிலே விடுவதும், உணர்ச்சிவசப்பட்டு தெளிவற்ற நிலையில் இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்களாகும். நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு முழுமையான வரைபு தொடர்பாக இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஆனால் நாம் உருவாக்க விரும்புகின்ற நாட்டுக்கான கட்டமைப்பு, கொள்கைகள், நிறுவனங்கள், சட்டவிதிமுறைகள் என்பவை தொடர்பான முன்குறிப்புகளைப் பற்றியே இங்கு நாம் பேசுகின்றோம். இரண்டாவதாக, சமகாலத் தாயகம், பூகோள அரசியல் நிலைமை, கடந்த கால வரலாறு, எதிர்காலத்தில் முன்னுரிமை பெறக்கூடிய விடயங்கள் என்பவற்றைக் கவனத்தில் எடுத்து வரையப்படும் எமது நோக்கங்களை அடைவதற்கான ஒரு நல்ல வழிவரைபு (road map) எமக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு வழிவரைபை உருவாக்கும் பயணத்தில் உதவக்கூடிய சில கொள்கைகள் கீழே தரப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் மேலும் ஆய்வுசெய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொள்கைகள் ஆலோசனைகளாக மட்டுமே தரப்படுகின்றன. விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுகின்ற அனைவரதும் பங்களிப்புடன் இக்கருப்பொருட்களின் அடிப்படையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு கொள்கைகள் இறுதிசெய்யப்படலாம். கொள்கை ஒன்று: ஓர் உறுதியான பூகோளப்பார்வையைக் கொண்டிருத்தல் தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நாம் பார்க்க முடியாது. மாறாக இப்போராட்டம், பல்வேறு சக்திகளுக்கு இடையேயான ஒரு பூகோள அரசியல் யுத்தமாகவே நோக்கப்பட வேண்டும். இரண்டாயிரத்து ஒன்பதில் நடைபெற்று முடிந்த போரில், மிகவும் வல்லமைமிக்க பன்னாட்டு மற்றும் பிராந்திய சக்திகளின் கூட்டணியே தமிழ் மக்கள் மேலும் விடுதலை இயக்கத்தின் மேலும் ஒரு இனப்படுகொலைத் தாக்குதலை சிறீலங்கா அரசு மேற்கொள்ள நேரடியாக உதவிசெய்ததை நாம் போரின் இறுதிக்கட்டங்களில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆகவே தான் தமிழ் ஈழத்தை அடைவதற்கான போராட்டத்தில் எமது கண்ணோக்கு, சிறீலங்காவின் வரையறைகளைக் கடந்ததாகவும் பூகோள ரீதியாக நிலவுகின்ற சூழலையும் நாம் செய்ய வேண்டிய வேலைகளையும் உள்ளடக்குவதாகவும் அமைவது இன்றியமையாததாகும். இந்தக் கொள்கையை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு, தன் (சுய)நிர்ணய உரிமை, நீதி, மனித உரிமைகள், சனநாயகம் போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற நாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய பன்னாட்டுக் கூட்டணிகளையும் நட்பு நாடுகளையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு வழியில் சொல்வதென்றால் தமிழ் ஈழத்தை அடைவதற்கான செயற்பாடுகள் மிகவும் உறுதியான பூகோளப் பரப்பிலும், பன்னாட்டுக் கண்ணோட்டத்திலும் வடிவமைக்கப்பட வேண்டுமேயோழிய, அந்த முயற்சிகள் பிராந்தியக் கட்டமைப்புகளுக்குள்ளேயோ அல்லது உப பிராந்திய மட்டங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. கொள்கை இரண்டு: தற்கால நாடிய அரசுகளைக் (nation states) கட்டமைக்கும் காரணிகளைப் புரிந்து கொள்ளல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடத்துக்கிடம் மாறிக்கொண்டிருக்கும் நிதி, மனித வளம், அறிவு என்பவற்றின் மூலதனம், மிக அதிக வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் மனித அறிவு, விரைவாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய இவை அனைத்துமே இப்பூகோளத்தையும் நாடிய எல்லைகளையும் ஏன் ‘நாடிய அரசு” என்ற எண்ணக்கருவையுமே புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன. கடந்து சென்ற நூற்றாண்டுகளில் தொடர்வண்டிப் பாதைகளும் வீதி வலைப்பின்னல்களும் எவ்வாறாக முன்னைய அரசுகளை முற்று முழுதாக மாற்றியமைத்தனவோ, அதே போலத் தொடர்பாடலும் நிதி வலைப்பின்னல்களும் இன்று புதிய அடையாளங்களையும் உறவுகளையும் சமூகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய பெருநிறுவனங்கள், நாடுகளை விடவும் பலம் வாய்ந்தவையாக விளங்குவதுடன் நாடிய அரசுகள் இன்று பன்னாட்டு மூலதனங்களுக்கு வழிவிட்டுக்கொண்டிருக்கின்றன. முன்னைய நாடிய அரசு என்ற எண்ணக்கரு தொடர்பாகப் பூகோள ரீதியாக பொருண்மிய முன்னுரிமைகள் இன்று எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி மிக விரைவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது இன்று அவசியமாகியிருக்கிறது. பூகோள ரீதியிலான மூலதனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம் மாறும் தன்மை, நாடுகளின் எல்லைகளையே மாற்றியமைத்து, அரசியல் இறைமை, ஏன் சுதந்திரம் தொடர்பான எண்ணங்களுக்கே புதிய பொருளைக் கொடுத்திருக்கிறது. இவ்வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்களைக் கொண்டு இலக்குகள் கட்டமைக்கப்பட்டு கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களைத் துணையாகக் கொண்டும் எதிர்காலத்தில் வலுவாகக் கால் பதித்தவாறும் தமிழ் ஈழத்துக்கான தூரநோக்கு (vision) வடிவமைக்கப்பட வேண்டும். கொள்கை மூன்று: தமிழ் ஈழம் ஏன் அவசியமானது என்பதை முற்றிலும் புதிய முறையில் உலகுக்கு எடுத்துரைத்தல் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது முற்றிலும் நியாயமான ஒரு போராட்டமாகும். ஆனால் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் வெற்றிகரமாக மேற்கொண்ட தவறான பரப்புரைகளின் காரணமாக உலகம் எமது போராட்டத்தை ஒரு நியாயமான போராட்டமாகப் பார்ப்பதில்லை. உண்மையில் சொல்லப் போனால் எமது போராட்டம் தொடர்பாக உலகின் பெரும் பகுதிக்கு எதுவுமே தெரியாது. இந்த விடயம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். எமது போராட்டம் பற்றிய உண்மை, முழு உலகுக்கும் சொல்லப்படும் வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் அதற்குத் தேவையான பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை. தமது சொந்த எதிர்பார்ப்புகளையும் விடுதலைக்கான விருப்பையும் கடந்து தமிழ் ஈழத்துக்கான தமது போராட்டம் இன்று வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டது என்பதை ஈழத்தமிழ் மக்கள் புரிந்துகொள்வது மிக மிக அவசியமானதொன்றாகும். வெறுமனே ஒரு நாட்டின் விடுதலைக்காக மட்டும் முன்னெடுக்கப்படும் போராட்டம் அல்ல எமது போராட்டம். ஜேர்மனி நாட்டின் நாற்சிகள் (Nazi) கைக்கொண்டது போன்ற ஒரு மிக மோசமான பாசிசவாதத்துக் (Fascism) கெதிரான ஒரு போராட்டமாகும். ஒரு காலத்தில் இராஜபக்ச அரசை வெற்றிகொள்வது என்பது ஒரு சிறிய தீவுக்குள்ளே நடைபெறும் யுத்தமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ அந்த நிலை முற்றிலும் மாறி, நன்மைக்கும் தீமைக்கும் எதிரான ஒரு பூகோளச் சமராக இது மாறிவிட்டதுடன் மனித குலத்தையே தன்நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு போராட்டமாகவும் மாறிவிட்டது. தமிழ் ஈழம் ஈழத்தமிழ் மக்களின் இலட்சியமாக மட்டும் இனிமேல் இருக்க முடியாது. இந்தப் பூகோளப் பந்தில் இருக்கும் மனச்சான்று இருக்கின்ற ஒவ்வொரு மனிதப்பிறவியும் “இப்போது நாங்கள் எல்லோருமே ஈழத்தமிழர்கள் தான்” என்று பறைசாற்றும் நேரம் வந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாறு இனிமேல் தனியே தமிழ் ஈழ மக்களின் கதையாக மட்டும் இருக்காது. அதற்கு மாறாக அது முழு மனித குலத்தினதும் கதையாகவும் மனிதகுலம் முழுவதற்கும் பொதுவாக அமையக்கூடிய விழுமியங்களுக்கான கதையாகவும் விளங்கப்போகிறது. கொள்கை நான்கு: ஏனைய சமூகங்களோடு இணைந்து பன்னாட்டுக் கூட்டுறவைக் கட்டியெழுப்புதல் இன்றைய சூழ்நிலையில் தங்களைப் போன்ற நிலையிலே இருக்கின்ற ஏனைய சமூகங்களுடன் இணைந்து கொள்ளாமல் எந்தவொரு குழுவோ, சமூகமோ, நாடோ தாங்கள் விரும்பியதை அடைந்துவிட முடியாது. தமக்காக மட்டுமே போராடுபவர்கள் உலகளாவிய வகையில் ஏனையோரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது. தங்களைப் போன்ற தேவைகளைக் கொண்டிருக்கின்ற ஏனைய மக்களுடன் ஒத்துணர்வுடன் (empathy) இணைந்து செயற்படுபவர்கள் நிச்சயமாக முழு உலகத்தாலும் போற்றப்படுவார்கள். ஆகவே, தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது, உலகிலே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற ஏனைய சமூகங்களுடனும் கைகோர்த்துப் போராடுவதிலேயே தங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒற்றுமையைக் காட்டுவதும், கட்டியெழுப்புவதும் உலகளாவிய வகையில் மட்டுமல்ல; சிறீலங்காவினுள்ளும் குறிப்பாக நீதி, அமைதி, சனநாயகம் போன்ற பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த உலகத்தைப் படைக்க விரும்புகின்ற சிங்கள மக்களையும் உள்ளடக்க வேண்டும். கொள்கை ஐந்து: புதிய எண்ணங்களை ஊக்குவித்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் சண்டைக் களத்தைப் பொறுத்தவரையில், கெரில்லாப் போராளிகள் எதற்கும் அஞ்சாதவர்கள், எதற்கும் துணிந்தவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். சண்டைக் களத்தில் வெளிப்படுத்தப்படும் இந்தப் பண்புகள் அரசியல் அரங்கிலும் அரச தந்திரச் செயற்பாடுகளிலும் கூட வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்படியென்றால், வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலகட்டத்தில் முன்சார்பெண்ணங்களோ அல்லது எம்மைக் கட்டிப்போடும் பழக்கவழக்கங்களோ புதிய வழிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் எமது சிந்தனை ஆற்றலை எந்தவிதத்திலும் முடக்கிவிட நாம் அனுமதிக்க முடியாது. எடுத்துக்காட்டாக, தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்த நிகழ்வு, பலருக்குத் துன்பங்களைத் தந்திருந்தாலும் இந்த நெருக்கடி பல புதிய வாய்ப்புக்களைத் தந்திருப்பதையும் மறுத்துரைக்க முடியாது. ஒரு புதிய நாட்டை மட்டுமல்ல உலகம் அலட்சியம் செய்ய முடியாத வகையில் முற்றிலும் ஒரு புதிய வகையான நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இது தந்திருக்கிறது. உலகெங்கும் பரந்து வாழுகின்ற புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் ஏற்கனவே ஒரு நாடாக (ஒரு தேசமாக) இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது. அரசு அல்லது நிலப்பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்துகின்ற முன்னைய எண்ணக்கருவைப் போலன்றிச், சமகாலச் சிந்தனைகளுக்கு ஏற்ப ஓர் புதிய நாடாக இருக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழ் மக்களும், தமக்கு எதிரான, தம்மை அடக்கியாளும் எண்ணங்களைக் கொண்ட சக்திகளின் நடுவில் தற்போது அகப்பட்டிருக்கின்ற போதிலும், இந்த நாடு முன்னரைவிட அளவில் எவ்வளவோ பெரிதாகவும் அறிவிலும் ஆற்றலிலும் பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் ஒரு மக்களினத்தைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கின்றது என்ற உண்மை உணரப்பட வேண்டும். எதிர்காலத்திலே உருவாகப் போகின்ற ஒரு நாடாக மட்டும் தமிழ் ஈழத்தை நாம் கண்ணோக்க முடியாது. அந்த நாடு ஏற்கனவே உருவாகி விட்டது என்பது மட்டுமன்றி, பூகோளப்பரப்பில் இந்த நாடு தனக்கென்று தனித்துவமான எண்ணத்தை வடிவமைத்து, அந்த எண்ணத்தை உரக்கச் சொல்லத் தொடங்கி விட்டது. உண்மையாகச் சொல்வதாயின், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாம் கொண்டிருக்கின்ற ஆற்றலை முதலில் தெளிவாக இனங்காண வேண்டும். அப்படியாக அந்த ஆற்றல் இனங்காணப்படும் பொழுது, உலகமும் அதனை அங்கீகரிக்கும் நேரம் உருவாகும். பாரம்பரியக் கட்டமைப்புகளுக்குள்ளே மட்டும் நின்று சிந்திப்பதை விடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து பன்னாட்டு அரசதந்திரம் (global diplomacy), குடியுரிமை, சனநாயகம் போன்ற அனைத்து விடயங்களிலும், துணிந்து, புதிய எண்ணக்கருக்களைப் வடிவமைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுப்பதே தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சவால் எனக் கொள்ளலாம். கொள்கை ஆறு: அரசாங்கம் போலவே செயற்படுதல், நாடாகுதல் பல்வேறு தமிழ் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, வேறு விடயங்களில் அவர்கள் எப்படிப்பட்ட மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், ஒரு பொதுத் தளத்தில், ஒரு பொதுவான இலக்குக்காக அனைவரும் பணியாற்றக்கூடிய ஒரு தந்திரோபாயத்தை வகுப்பது, தற்போதைய சூழலைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். ஒரே விதமாக எல்லோரையும் சிந்திக்க வைப்பது சனநாயகம் அல்ல. அதற்கு மாறாக, வேறுபாடுகளின் நடுவிலும் ஒரு பொதுவான இலக்கை அடைய அனைவரும் ஒருங்கிணைத்து உழைப்பது தான் சனநாயகம் ஆகும். சனநாயக வழிமுறைகளின் ஊடாக இவ்வாறான ஒரு ஒற்றுமையை எம்மால் காட்சிப்படுத்த முடிந்தால், அப்போது தமிழ் ஈழத்தின் காத்திரமான தன்மையை உலகமும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும். எமது தாயகத்தின் முழுமையான இறைமை இன்னும் அடையப்படாத போதிலும், தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டையும் ஒரு நாடு ஏற்கனவே உருவாகிவிட்டது போன்ற நடத்தையையும் எமது பொதுவான இலக்குகள் உள்ளடக்கியிருக்க வேண்டும். புவியியல் ரீதியாக உலகத்தின் எப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்த போதிலும் தமிழ் ஈழத்தை இயங்க வைப்பதும், அதன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதும் தற்போது அவசியமான விடயங்களாகும். எமது ஆளுகைக்கான கட்டமைப்புகள் (structures of governance), எமது வணிகத் தொழிற்பாடுகள், எமது வங்கிகள், எமது பிள்ளைகளுக்கான பாடசாலைகள், எமது பெருநூலகங்கள், எமது பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானத்தில் உயர் வளர்ச்சியைப் பறைசாற்றும் எமது நடுவங்கள், சுகாதார நிறுவனங்கள், எமது விளையாட்டு மைதானங்கள், எமது பண்பாட்டு அரங்கங்கள் போன்றவற்றை இப்போதே கட்டியெழுப்பத் தொடங்குவோம். தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்காமல், இப்போதே நாம் எங்கெங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ, அங்கங்கெல்லாம் எமது தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டைத் தொடங்குவோம். கொள்கை ஏழு: எம்மை எதிர்ப்பவர்களது தரத்தை விட எமது தரத்தைப் பன்மடங்கு உயர்வாகப் பேணுதல் எந்த ஒரு போராட்டத்திலும் ஒருவர் தன்னை எதிர்ப்பவர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் அதே நேரத்தில் எதிராளிகள் செய்வதையே எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பின்பற்றுவதும் ஏற்புடைய விடயமாக இருக்க முடியாது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் அணியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் தமது போராட்டத்தில் வெற்றியைச் சந்திக்கும் போது, தமது எதிராளிகளைப் போன்று மோசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பது எல்லாவிதமான முன்னணி விடுதலைப் போராட்டங்கள் அனைத்தினதும் தார்மீக அடிப்படையாகும். பூகோள ரீதியிலான ஆதரவைப் பெறுவதற்காகவும் அதே நேரத்தில் நாடிய விடுதலைப் போராட்டத்தின் (national liberation struggle) அறநெறிமுறைகள் தொடர்பான தெளிவை தமது அணியிலுள்ளவர்களிடையே உறுதிப்படுத்துவதற்காகவும், தமது எதிராளிகளை விடவும் தரத்தில் உயர்ந்த சிந்தனை, செயற்பாடு, நடத்தை என்பவற்றைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமான விடயமாகும். இனவாத, பாசிசவாதப் பண்புகளைக் கொண்ட ஓர் எதிரிக்கு எதிராகப் போராடுகின்ற அதே நேரம், எந்தவிதத்திலும் எதிரியின் அதே கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெற்றியை ஒருபோதும் அடைந்துவிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளிலுமே முழு மனித குலத்தாலும் மதித்துப் போற்றப்படும் உன்னதமான விழுமியங்களைப் பேணுவதன் மூலமே இப்போராட்டத்தின் வெற்றியை நாம் எமதாக்கிக் கொள்ள முடியும். (சத்தியா சிவராமன் -டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஊடகவியலாளர் என்பதோடு ஒரு சுகாதார ஆர்வலரும் ஆவார்) https://www.ilakku.org/தமிழீழம்-என்னும்-இலக்கை/
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
நடனங்கள்.
- நடனங்கள்.
- மாவீரர் புகழ் பாடுவோம்
கண்ணில் துளியும் நீங்க வேற நாடயா நாங்க வேற நாடு- இறைவனிடம் கையேந்துங்கள்
நல்லூர் கந்தன் தேர் திருவிழாவை முன்னிட்டு பாடல் - போர்க்குடி நாயகன் வரிகள் - உமாகரன் ராசையா இசை - சிந்துஜன் வெற்றிவேல் பாடியவர் - பவனுஜா கஜாகரன் நல்லூர் கந்தன் பாடல் அலங்கார கந்தன் - இசை: மகேஷ் இராசையா ( சங்கமம் ) வரிகள் : இன்பம் அருளையா குரல்: அம்ரிதா சுதர்ஷன் தயாரிப்பு : ஆர்ணி படைப்பகம்- இறைவனிடம் கையேந்துங்கள்
நீ செய்த நன்மை ராஜா நீர் செய்த நன்மைகள்- லெப். கேணல் ஜோய்
விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய். தமிழ்த்தேசிய இனத்தின் இழந்த தாய்நாட்டை மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உடல் பொருள் ஆன்மா என அனைத்தையும் ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் மாவீரர் கல்லறைகள் எமது தாய்மண்ணில் அகற்றப்பட்டு துயிலுமில்லங்கள், சிதைக்கப்பட்டபோதும் உலகப்பந்தின் எங்கோர் மூலையில் தன்மானமும் சிந்திக்கும் அறிவுமுள்ள கடைசித்தமிழன் வாழும் வரை மாவீரரின் நினைவும் அவர்களின் வரலாறும் அழியாது…. எம்மத்தியிலிருந்து உருவாகி எம்மோடு வாழ்ந்த வீரர்களின் வரலாற்றை பதிவு செய்யும் சிறுமுயற்சியே இத்தொடராகும். நிறைவானது என்று நிறுவ முடியாதெனினும் முயற்சிக்கின்றோம். ஆக்கéர்வமான கருத்துப்பரிமாற்றத்தை வேண்டி சுவடுகள் தொடரும்… வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய் 1991ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் வீரவணக்க நிகழ்வில் தளபதி ஜோய் வீரவணக்க உரையாற்றிய போது அதில் பொதிந்திருந்த கருத்துக்களின் ஆழமும் உறுதியும் உணர்வும் தேசியத்தலைவரின் தெரிவின் அர்த்தத்தை எமக்கு அப்போது புரியவைத்தது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக விசாலகன் என்னும் பெயருடன் ஜோய் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து எங்கும் சிங்கள இராணுவத்தினருக்கெதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டவண்ணம்மிருந்தன. 1991 ம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் மட்டக்களப்பு -பதுளை வீதியில் கொடுவாமடு என்ற இடத்தில் நடந்த சிங்கள இராணுவத்தினருக்கான வழிமறிப்புத்தாக்குதலில் தளபதி ஜோய் விழிப்புண் அடைந்து நவம்பர் 30 ம் நாள் வீரச்சாவடைந்தார். இவருடன் மாதவன் வந்தாறுமூலை, தூசன் சித்தாண்டி , ரோயல் வந்தாறுமூலை, தான்தோன்றி கல்லடி ஆகியோரும் வீரச்சாவடைந்தனர். வெற்றிகரமாக நடந்த இத்தாக்குதலில் 20 க்கு மேற்பட்டசிங்கள அரசபடையினர் அழிக்கப்பட்டு அவர்களிடமிருந்து படைத்துறைக்கருவிகளும் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்த வேளையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று ஜோய் அவர்களின் கழுத்தில் பாய்ந்ததனால் விழுப்புண் அடைந்தநிலையில் ஜோய் இறுதியாக தெரிவித்த கருத்துக்களை நினைக்கும்போது எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் தளபதியாகயிருந்து இலட்சியத்தை அடைவதற்கு பெரும் பங்காற்றக்கூடிய ஒரு தளபதியை நாம் அன்று இழந்திருந்தோம் என்பதை இன்று எண்ணிப்பார்க்கின்றோம். இறுதியாக ஜோய் கூறிய வார்த்தைகள் ஒரு போராளியான நான் வீரச்சாவு அடைவதில் எந்தவித வருத்தமுமில்லை ஆனால் தலைவர் என்னிடம்கூறிய எல்லாவற்றையும் என்னால் நிறைவுசெய்ய முடியாமல் போய்விட்டது என்பதுதான் வருத்தமாகவிருக்கின்றது. கட்டளைபிறப்பிக்கும் தளபதி களத்தில் தான் நிற்கவேண்டும் அதைத்தான் நான் செய்திருக்கின்றேன் என்று கூறிய கருத்துக்கள் ஒரு உண்மையான போராளியின் முதிர்ச்சியை எமக்கு உணர்த்தியது. தளபதி ஜோய் அவர்களின் சொந்த ஊர் கொம்மாதுறை. சாதாரண குடும்பத்தில் 20.05.1969ம் ஆண்டு பிறந்து சாதாரண தொழிலாளியாக வேலை செய்துகொண் டிருந்தபோது 1987 ம் ஆண்டு தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் . மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்தின் 7 வது பயிற்சிமுகாமில் பயிற்சியை முடித்துக்கொண்ட ரகுநாதன் என்னும் பெயரைக்கொண்ட ஜோய் அப்போது தலைவர் தங்கியிருந்த மணலாற்றுக்கு அனுப்பப்பட்டு தலைவரின் பாதுகாப்புப்பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். எமது தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்புப்பிரிவில் கடமைசெய்த ஜோய் வட தமிழீழத்தில் பல தாக்குதல்களில் பங்குகெடுத்து தலைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார். இந்தியப் படையினர் எமது மண்ணில் நிலை கொண்டிருந்த வேளையில் மணலாற்றில் கூர்க்கா படையினர் மீதான தாக்குதலில் ஜோய் அவர்களின் வீரம் செறிந்த போர் நடவடிக்கை பற்றி தலைவர் அவர்கள் தளபதிகள் போராளிகள் மத்தியில் குறிப்பிட்டுக்கூறியதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். 1990ம் ஆண்டு யாழ் கோட்டையில் தங்கியிருந்த சிங்கள அரச படையினருக்கெதிரான தாக்குதலை தான் வைத்திருந்த ஆர் .பி . ஜி உந்துகணையினால் தாக்கி தாக்குதலை ஆரம்பித்து வைத்ததை அப்போதைய யாழ். மாவட்டத் தளபதியாகயிருந்த பானு கூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். மட்டக்களப்பு மண்ணில் பிறந்த உறுதிமிக்க உணர்வான வீரமிக்க போராளிகளில் ஜோய் அவர்களும் ஒருவராகவிருந்தார் என்பதையிட்டு பெருமிதம் கொள்ளுகின்றோம். ஒரு போராளியாக இருப்பவன் தன்னையும் தனது குடும்பத்தை மட்டுமல்லாது தாய்நாட்டையும் மக்களையும் மேலாக நேசிக்கவேண்டும் என்பதற்கும் ஜோய் உதாரணமாகவிருந்தார். சித்தாண்டிக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்தனமடுவை அண்டிய குடாவட்டையில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் போராளிகளுடன் தங்கியிருந்த ஜோய் அவர்களை ஒரு முறை பி. பி. சி தமிழேசை ஆனந்தி அவர்கள் நிமலன் சவுந்தரநாயகத்துடன் சந்தித்தபோது ஜோயின் உறுதிமிக்க பதிலைக்கேட்டு ஆச்சிரியமடைந்ததையும் தமிழ்ப்பெண்ணாக ஆனந்தமடைந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இந்த மண்ணிலிருந்து சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டப் போகின்றேன் என்று ஜோய் கூறிய போது ஆனந்தி அவர்கள் உன்னைப் பார்த்தால் சிறுவனாக இருக்கின்றாய் உன்னால் முடியுமா ? என்று கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கப்போகின்றது என்று ஜோய் கூறியதையும் பின்னாளில் தொடராக நடந்த தாக்குதல்களையும் நினைவுபடுத்துவது ஒரு போராளியின் உறுதிமிக்க நடவடிக்கையை எமக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றது. எப்போதும் சிரித்தமுகத்துடன் மணலாற்றில் விழுப்புண்அடைந்து முழுமையாக இயங்காத ஒருகாலுடன் கெந்தி நடந்து வரும்போது ஜோயின் முகத்தில் தெரிகின்ற பிரகாசம் எம்மை எதிர்காலத்தில் மட்டக்களப்பில் வழிநடத்தப் போகின்ற தளபதி என்பதையிட்டு மூத்தபோராளிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை ஜோயின் வீரச்சாவுடன் தகர்ந்துபோனது. மட்டக்களப்பு மண்ணில் கால்பதித்ததிலிருந்து அம்மண்ணிலே தான் விதையாகுமட்டும் தளபதி ஜோயின் வீரமிகு தாக்குதல்கள் சிங்களப்படையினரை சிதறடித்து அவர்களை சிந்திக்கவும் வைத்ததை சிங்களப்படைத் தளபதிகளின் வார்த்தைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள அரசபடையினருக்கெதிரான தாக்குதல்களில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய காலம் 1991 ம் ஆண்டு என்பதை இக்கட்டுரையில் பதிவு செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்கின்றோம். 1990 ம் ஆண்டு இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. ஒரேவேளையில் சிங்களக்காவல் நிலையங்கள், படைமுகாம்கள் தாக்கப்பட்டன. தமிழ்மக்களின் முழுமையான ஆதரவோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தினர். நகரத்தின் தென்பகுதி, வடபகுதி, மட்டக்களப்பு வாவிக்கு தெற்கே அமைந்துள்ள வயல்சாந்த ஊர்கள், மட்டக்களப்பு -பதுளை வீதியில் அமைத்துள்ள ஊர்கள் என்பன குறிப்பிட்ட சிலகாலம் விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இக்காலப்பகுதியில்தான் வந்தாறுமூலைகிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழ்மக்களில் 150 க்கு மேற்பட்ட ஆண்கள் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. மட்டக்களப்பு அம்பாறையில் தமிழ்மக்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டதன் வரிசையில் இச்சம்பவமும் இணைக்கப்பட்டது. இதற்கு பிற்பட்ட காலங்களில் சிங்கள அரசபடையினருக்கெதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் மந்தகதியிலிருந்தன. 1991 ம் ஆண்டு முற்பகுதியில் எமது தேசியத் தலைவரின் பணிப்பின்பேரில் அவருடைய பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றிய மூன்று இளநிலைத் தளபதிகளான லெப்.கேணல் ஜோய்,மேஜர் வினோத், லெப். கேணல் விஜயகாந் ஆகியோர் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்களின் வருகையை த்தொடந்து தாக்குதல்கள் பரவலாக நடத்தப்பட்டன. தேசியத் தலைவர் அவர்களின் பார்வையில் இம்மூவரும் நேர்த்தியான வீரர்களாகத் தென்பட்டனர் . எதிர்கால நோக்கோடு இவர்கள் அனுப்பப்பட்டதை போராளிகள் உணர்ந்து கொண்டனர். எம்மண்ணில் இவர்களின் பணி நீண்டு செல்லாதது எமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். வந்தாறுமூலை தொடரூந்துப்பாதையில் சிங்கள அரச படையினருக்கெதிரான தாக்குதல் மட்டக்களப்பு மண்ணில் தளபதி விசாலகனின் ( ஜோய்) முதல் தாக்குதலாக இருந்தது. இத் தாக்குதலில் ஒன்பது படையினர் அழிக்கப்பட்டு கருவிகளும் கைப்பற்றப்பட்டன. அடுத்து சித்தாண்டி காவல் நிலைய அழிப்புத் தாக்குதலும் இடம்பெற்றது. 25 .10 .1991 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை ஊரிலிருந்து மண்முனைத்துறைக்குச் செல்லும்பாதையில் தளபதி விசாலகன் தலைமையில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தபோதும் தேசியத் தலைவரினால் அனுப்பப்பட்ட மூவரில் ஒருவரான மேஜர் வினோத் என்பவரை நாம் இழந்திருந்தோம். இவருடன் இன்னும் இரு போராளிகள் வீரச்சாவடைந்தனர் . கொக்கட்டிச்சோலையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட வினோத் வறுமை நிலையிலுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த போதும் இவருடைய ஒவ்வொரு நிமிட எண்ணங்களும் தமிழ் மக்களின் விடுதலையையொட்டிதாக இருந்ததனால் களத்தில் வீரச்சாவு அடைவதில் இவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்வான ஒன்றாக இருந்தது. ஆனால் திறமை வீரம் பற்றுக்கொண்ட வீரர்களை இழப்பது எமக்கு எதிர்காலத்தில் போரை வழிநடத்த திறமையானவர்கள் இல்லாமல் போகும் என்பதுதான் முடிவாக இருந்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவராக இருந்த வினோத்தை இன்னும் எமது கண்முன்னே கொண்டுவரும்போது சாந்தமான முகமும், விடுதலையின்பால் கொண்டபற்றும் தான் நினைவுக்கு வருகின்றது. இவர்களைப்பற்றி எழுதும்போதுதான் இவர்கள் குடும்பங்கள் பற்றியும் எண்ணிப்பார்க்கமுடிகின்றது. இவ்வாறானவர்களை விடுதலைப் போராட்டத்தில் நாம் இழந்திருந்தாலும் இவர்களை நாம் பெற்றதிலிருந்து பெருமைகொள்கின்றோம். அத்தோடு இவர்களைப் பெற்றவர்களையும் தலைவணங்குகின்றோம். தாய்மண்ணின் மீது அளவற்ற பற்றுக்கொண்ட இவர்கள் அம் மண்ணிலே விதைக்கப்பட்டார்கள். வரலாற்றில் அழியாத பதிவாக இவர்கள் இருப்பார்கள். கிரான் ஊரைப்பிறப்பிடமாகக் கொண்ட லெப். கேணல் விஜய்காந் பற்றி அடுத்து ஒரு மாவீரர் தொடர்களில் விரிவாகப்பார்ப்போம். தளபதி விசாலகனின் தாக்குதலில் வெலிக்கந்தை வடமுனைத்கிடையிலான சிங்கள அரசபடையினருக்கெதிரான வழிமறிப்புத் தாக்குதலை குறிப்பிடமுடியும். இத் தாக்குதல் ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சிறுகுழப்பத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வேளையில் தளபதி விசாலகனின் அதிரடி நடவடிக்கைகள் பதட்டப் படாமல் நிதானமாக இருந்தன. சண்டையை நிறுத்தாமல் தொடருங்கள் என்று கூறி பின்புறமாக பiயினர் எதிர்பார்க்காதவிதத்தில் தாக்குதலை ஆரம்பித்தவுடன் படையினர் நிலைகுலைந்தனர். முன் பக்கதாக்குதலை நிறுத்துமாறு போராளிகளுக்கு கட்டளையிட்டார். இதனால் இத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தது. இத் தாக்குதலில் குருமண்வெளி, மட்டக்களப்பு சேர்ந்த 2 ம் லெப். நிலா வீரச்சாவடைந்தார். இவ்வாறு ஒவ்வொரு தாக்குதல்களிலும் தமிழனின் வீரத்தை வெளிக்காட்டி எதிரிபடைகளை எம் மண்ணிலிருந்து விரட்டும் பணியை தொடந்துகொண்டிருந்தான். இவ்வாறான தன்னலமற்ற ஒரு வீரன் காலம் பிந்தி எமக்கு கிடைத்தாராயினும். காலம் முந்தி நாம் அவரை இழந்தோம். இல்லையேல் எமது மாவட்டத்தின் நிலைமையே மாறியிருக்கும். நினைவுப்பகிர்வு: என்றும் எழுகதிர் . மின்னஞ்சல் முகவரி – paramathevaranjan@yahoo.com. https://thesakkatru.com/our-commander-joey-who-arose-as-a-storm-of-liberation/- லெப்டினன்ட் ஜோன்சன்
லெப்டினன்ட் ஜோன்சன் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து தமிழீழ விடுதலைப் போரில் கள பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் லெப்டினன்ட் ஜோன்சன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன பிரமுகர்கள் மீது மேற்கொண்ட சகல தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போன நிலையில் தனது எதிர்கால பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மூலமாக வழங்க முடிவெடுத்தார். ஜுனைதீன் இந்தியாவில் புலிகளின் மூன்றாவது பயிற்சி முகாமில் லெப். கேணல் பொன்னம்மான், லெப். கேணல் புலேந்திரன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார் இக்காலத்தில் ஜோன்சன் எனும் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது முகாமில் தனது தனி திறமைகளை அடிக்கடி வெளிப்படுத்தினார் ஓவியத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது அவர் வரைந்திருந்த ஓவியங்களில் உப இயந்திரத் துப்பாக்கி எனும் படம் தேசியத் தலைவரின் கவனத்தை ஈர்த்தது. ஒரு ஆயுத போராட்ட குழுவை ஆரம்பித்து இன விடுதலைக்காக போராடியவர் என்ற வகையில் இவர் மீது தனிப்பற்று அவருக்கு இருந்தது பிரபாகரனே தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்ட ஜூனைதீனுக்கு (ஜோன்சன்) அவருடனான சந்திப்புக்கள் மன நிறைவைக் கொடுத்தன இச்சந்திப்புக்களில் விடுதலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியே அதிகம் கலந்துரையாடப்பட்டன; அதில் தமிழ் – முஸ்லிம் இனங்களின் உறவை பலப்படுத்த ஆற்ற வேண்டிய பணிகள் முக்கியத்துவம் பெற்றன. பயிற்சி முகாமிலிருந்து வெளிவந்ததும் யாழ். மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டார் ஜோன்சன். தளபதி கிட்டு தலைமையில் 1985 நடைபெற்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தாக்குதலில் பங்கு பற்றி தனது ஆற்றலை நிரூபித்தார் 1985.02.13 நடைபெற்ற கொக்குளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் பங்குபற்றி பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்றார். அங்கே புதிய பலத்துடன் களமாடும் கனவுகளோடு இருந்தார். முஸ்லிம் – தமிழ் கலவரத்தின் போது மஞ்சந்தொடுவாய் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சில தமிழர்களை புலிகள் தோணிகளில் கொண்டுவந்து விசாரணை நடந்தினர் மறுதரப்பால் இவர்களும் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது இந்த விசாரணைகளை ஜுனைதீனும் (ஜோன்சன்) பார்த்துக்கொண்டிருந்தார். விசாரித்துக் கொண்டிருந்த அப்போதைய மட்டக்களப்பு தலைமையை தனியே அழைத்து “அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நாங்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது பாதிப்பின் வலியும் வேதனையும் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் வேணுமெண்டா கடுமையா எச்சரிச்சுப் போட்டு அனுப்புங்கோ வேறு ஒன்றும் செய்யவேண்டாம்” என வலியுறுத்தினார். இந்த நிதானமான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன ஒரு பதட்டமான சூழ்நிலையிலும் இரு இனங்களின் ஐக்கியத்தையே முதன்மைப் படுத்தினார் அவர் 07.05.1985 கரடியனாற்றில் பொலிஸாருடன் மோத வேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டது G3 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பி வந்தார். இதே போல் ஈரளக்குளப்பகுதியில் அமைக்கப்படட பயிற்சி முகாமில் புதிதாக இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இருந்தனர். அந்தப் பகுதியை வட்டமிட்டு தாக்குதல் நடாத்திய உலங்கு வானுர்தியை கீழே இறங்கவிடாமல் G3 துப்பாக்கியால் சுட்டு விரட்டினார். யுத்த நிறுத்த காலத்தில் ஜுனைதீனும் சக போராளி ஜோசப்பும் கரடியனாற்றில் இருந்து ஆயித்தியமலைக்குச் சென்ற நேரம் பொலிஸார் கைதுசெய்து பனாகொடை இராணுவ முகாமுக்கு அனுப்பினர். பின்னர் ஜுனைதீனும், ஜோசப்பும் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது சித்திரவதைகள் தொடர்ந்தால் பாதகமான நிலைமைகள் ஏற்படும் என உணந்தனர். 30.11.1985 அன்று படையினரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்கையில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரகாவியமானார் ஜுனைதீன் மற்றும் ஜோசப். தமிழீழ விடுதலை போராட்டத்தில் களப்பலியான முதல் முஸ்லிம் மாவீரன் என வரலாற்றில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார் ஜுனைதீன். நன்றிகள்: தமிழ் ஊடகங்கள். https://thesakkatru.com/lieutenant-jonsan/- லெப். கேணல் ஜோய்
லெப். கேணல் ஜோய் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி லெப். கேணல் ஜோய் / விசாலகன் கணபதிப்பிள்ளை ரகுநாதன் செங்கலடி, மட்டக்களப்பு பிறப்பு:- 20.05.1956 வீரச்சாவு:- 30.11.1991 முடுகு… முடுகு… ஆ… ஆ… கிறுகு… கிறுகு… மெல்லிய உயரமாக இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக் கொண்டிருந்தான். ‘ஏன்டா, கமல் இப்படிக் கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகா கோஸ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். இது என்ன புது கோஸ்டி. வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன். “அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன். “நான் மட்டக்களப்பில இருந்து வந்தனான்” என்கிறான் அவன். எனக்கும் ஜோய்க்குமான ஆரம்ப அறிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது. எங்களுக்கு மணலாறு காடு மட்டும் புதிதல்ல, மட்டக்களப்பு தமிழும் புதியது தான். நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி என 70 மைல்கள் அகண்டு கிடக்கும் மட்டக்களப்பு. உழவு, வெட்டு, விதைப்பு எல்லாம் ஒன்றாக நடக்கும். தேனும் வயலும் கொட்டிக் கிடக்கும் அழகான வளமான எம் நிலம். 1988…….1989 எம்மைச் சுற்றிவர இந்தியப் படை. நாம் உழுது உழுது விதைத்து அறுவடைக்கு ஆயத்தமான போது, அறுவடையை அழிக்க வந்த அயலவனை மிரட்டி விட்டு அபகரிக்க வந்த வேற்றவன். 10 தமிழர்களுக்கு ஒரு இந்தியன். இந்திய முற்றுகைக்குள் புலிகளா? புலிகளின் முற்றுகைக்குள் இந்தியனா? எம் மீதான முற்றுகை கண்முன் தெரிந்தது. அவன் மேலான எம் முற்றுகை தெரியாமல் நடந்தது. தடக்கித் தடக்கி அழிந்தான். நயினாமடு இந்தியப் படை முகாமுக்கு அருகே அவனது ஆட்டுப்பட்டி, ஒரு போராளி இரகசியமாக பட்டிக்கருகே சென்று ஆடுகளை “பா பா” என அழைக்கின்றான். ஒவ்வொரு ஆடாக, பட்டியிலிருந்த 29 ஆடுகளும் வெளியேறி வருகின்றன. ஆடுகளைச் சாய்த்த படி அவன் நடக்கின்றான். இந்திய இராணுவத்தில் ஒருவன் ஆடுகள் போவதைக் கண்டு விட்டுக் கத்தித் தொலைக்கிறான். ஆட்டை வந்து பிடிக்க அவனுக்குத் துணிவில்லை. வெளியேவர வேண்டுமானால் குறைந்தது 50 சிப்பாய்கள் துணை வேண்டும். ஆட்டைத்தேடி உலங்கு வானூர்தி வந்து ஆடு சாய்ப்பவனைத் தேடித் தேடி சுடுகின்றது. அடுத்தநாள் இந்திய இராணுவத்தின் வோக்கி எண்ணில் அவனது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அவன் கத்திக்கொண்டிருந்தான். தனது ஆட்டையே காப்பாற்ற முடியாத இந்தியப் பெரும் படை தமிழீழ நாட்டுக்கு ஆசைப்பட்டது. இப்படி அவனது முற்றுகைக்குள் நாமும், எமது முற்றுகைக்குள் அவனும் ஓடிப்படித்து விளையாடும் காலத்தில் தான் ஜோய் மணலாற்றிற்கு வந்தான். மணலாறு காடே குண்டு வீச்சால் அதிர்ந்து கொண்டிருந்தது. “பொங்கலுக்கு இந்தியன் வெடி கொளுத்துகிறான்” பொங்கலுக்கான நிகழ்ச்சிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஜஸ்டின் என்னைப் பார்த்துக் கூறினான். “இரவு என்ன நிகழ்ச்சி” நான் கேட்கிறேன். “பாட்டு, டான்ஸ் இப்படிப் பல” ஜஸ்டின் அபிநயம் பிடித்துக் காட்டினான். பொங்கல்இ கிறிஸ்மஸ்இ போராளிகளின் நினைவு நாட்கள் எனச் சில நிகழ்ச்சிகள் காட்டில் நடக்கும். இரவு, ஏதோ ஒரு புது மொழியில் பாடி தனக்கேற்றாற் போல் தன் பெரிய உடம்பை ஒய்யாரமாய் வளைத்து, நெளித்து ஜஸ்டின் ஆடினான். அடுத்து மேளங்களான தகரங்கள் முழங்க “ஜோய் வழங்கும் பிறேக் நடனம்” அறிவிப்பு வருகிறது. வளைந்து, நிமிர்ந்து, முறிந்து… என்ன உடம்படா, இப்படி வளைந்து முறிகின்றது. “வடமோடி, தென்மோடி இவன் பிறந்த இடமோடி, இவன் கூத்து என்ன கூத்தோடி” நான் என்னுள் முணுமுணுத்தபடி அவன் நடனத்தை ரசித்துச் சுவைக்கிறேன்” ஆர்.பி.ஜி தோளில் வைத்தபடி ஜோய் நிமிர்ந்து நின்றால், உடம்பில் வளைவிருக்காது. தமிழீழ – சிறீலங்காப் போர் மீண்டும், தொடங்கியபின், யாழ். கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியில் ஜோய் காயமடைந்தான். ஒரு கால் சிறிது காலம் உணர்வு குன்றி இருந்தது. மட்டக்களப்பு மண்ணுக்கே உரிய கலை இரசனையும்இ இலகுவாகப் பழகும் பண்பும், சூதுவாதற்ற பேச்சுக்களும் ஜோயை விட்டுப் பிரிந்தது கிடையாது. மட்டக்களப்பை மேலிருந்து பார்த்தால் கடற்கரையை அண்டிய பகுதிகள் பெரும்வெளியாக இருக்கும். கடலுக்குச் சற்று மேலே வந்து நிற்கும் நீர் மூழ்கிக் கப்பல் போல, சுற்றிவர இருக்கும் ஏரியும் இடையிடையே தெரியும் நிலங்களும், வீடுகளும் கரந்தடிப் போராட்டத்திற்கு கடினமான பகுதி தான். “70ல் வந்த புயலோடு மரங்கள் எல்லாம் அழிந்து போயிற்று. அடுத்து வந்த இனவாதப் புயலோடு எல்லாமே போயிற்று” என்றார் ஒருவர். ஓவ்வொரு வீட்டிலும் சோகக் கதைகள் இருக்கும். சிங்கள, முஸ்லீம் காடையர்களினதும், சிறீலங்கா இராணுவத்தினதும் கொலைத் தடயங்கள் பதிந்திருக்கும். இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது. இந்தியப் படையுடனான போராட்ட காலத்தில் தமிழீழத்தின் மற்றைய பகுதிகள் போலவே, மட்டக்களப்பு, அம்பாறையிலும் அழிவுகள் தொடர்ந்தது. மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்த போதும் “எங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடி மிகுந்த துன்பத்திற்கு நடுவில் போராடுகின்றோம்” என ஒரு வார்த்தை மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி கருணாவிடம் இருந்து வந்ததில்லை. “எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்றே எப்போதும் பதில் வரும். தலைவர் வளர்த்த பிள்ளை அவன் தளராது நின்றான். அவன் பாசறை தான் ஜோய் தவழ்ந்த வீடு. அன்று தலைவரின் பாசறையான மணலாறுதான் அவன் வளர்ந்த வீடு. இந்திய கூர்காப் படைகள் குறித்து பல வீரக்கதைகள் உண்டு. ஒருமுறை ஒரு ஆங்கிலச் சிப்பாய் ஒரு கூர்க்காவைக் குறிபார்த்து “உன்னைச் சுடுவேன்” என்றான். அதற்கு கூர்க்கா அச்சிப்பாயைப் பார்த்து “முதலில் தலையை ஆட்டு பின் சுடு” என்றானாம். சிப்பாய் தலையை ஆட்ட தலை விழுந்து விட்டதாம். ஆங்கிலேயன் ‘சுடப்போகிறேன்’ என்று சொல்லும் போதே கூர்க்கா தனது கத்தியை அவனது கழுத்தைக் குறிபார்த்து வீசி விட்டானாம். அவ்வளவு விரைவு, கத்தி கூரானது. அதனால் வெட்டப்பட்ட தலை விழவில்லை. தலையை ஆட்டிய போது தலை விழுந்து விட்டதாம். இப்படி வீரக்கதை பேசும் கூர்க்காப்படையொன்று 02.03.1989 அன்று கேணல் பக்சியின் தலைமையில் மணலாற்றுக்குள் நுழைந்தது. கமல், அரி, குகேந்திரன், சேவியர் இவர்களுடன் ஜோயும் அங்கு நின்றான். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தச் சண்டையில் கூர்க்காப்படை பக்சியின் உடலையும் விட்டு விட்டு ஒடியது. ஓடும் போது தமது கத்திகளை மண்ணில் புதைத்து புதைத்து ஓடியது. கூர்க்காப் படை தமது கத்திகளை புதைத்துவிட்டு ஓடிய மணலாற்றில் ஜோயின் போரியல் கல்வி தொடர்ந்தது. இவன் போன்றோரின் போரியல் கல்வியே இந்தியப் படைக்குப் போராட்டப் படிப்பினையாகியது. தமிழீழ – சிறீலங்காப் போர் மீண்டும் தொடங்கிய போது சிறீலங்காப்படை, முஸ்லிம் காடையர், தேச விரோதக் கும்பல் இவற்றால் மட்டக்களப்பு, அம்பாறை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் எரிந்தன. பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன. மதவுகளுக்குக் கீழ், காட்டு மரங்களுக்குக் கீழ் தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது. “தென் தமிழீழத்தில் புலிகளா? அழிந்து விட்டார்கள். என சிறீலங்கா கொக்கரித்தது. வீட்டில் ரகுநாதன் எனவும் இயக்கத்தில் ஜோய் எனவும் இப்போது விசாலகன் ஆகிவிட்ட ஜோய் மீண்டும் மட்டக்களப்பில் காலடி எடுத்து வைத்தான். மிகக் குறுகிய காலத்தில் அவன் ஆற்றல் கண்ட மட்டக்களப்பு, அம்பாறை விசேட தளபதி அவனை மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆக்கினார். புலிகளா? எங்கே? எனக் கேட்டு கொக்கரித்த சிறீலங்காப் படை “ஐயோ எல்லா இடங்களிலும் மீண்டும் புலிகள்” என அலற அலற தாக்குதல்கள் தொடர்ந்தன. தொடர்ந்த தாக்குதல்களில் ஒன்று 25.10.1991 கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமில் இருந்து மண்முனைத்துறைக்கு சென்ற இராணுவத்தினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விசாலகன் (ஜோய்) தலைமையில் நடந்த இத்தாக்குதலில் எதிர்பார்த்தபடி தாக்குதல் வலயத்தில் சிறீலங்காப்படை வராததால் தான்னுதல் திட்டமிட்டபடி நடக்கவில்லை. 15 நிமிட தாக்குதலில் பல சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டனர் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. “விடுதலைப் புலிகள் இல்லை என்கிறீர்கள், அக்டோபர் மாதம் மட்டும் நாம் எதிரியிடம் இருந்து பறித்த ஆயுதங்கள் ஒன்றா இரண்டா” என பெருமையோடு தளபதி ஓர் செய்தியாளரை கேட்டார். டிசம்பர் 20 வெளிவந்த புரண்ட்லைன் (frontline) சஞ்சிகையில் விசாலகனின் நேர்காணல் வந்திருந்தது. “எங்களுக்கு மக்கள் ஆதரவில்லை என்கிறார்கள் இவ்வளவு சிங்களப் படை முகாம்களுக்கு நடுவில், படகில், உங்களை எங்களிடம் யார் அழைத்து வந்தார்கள்? ஆதரவில்லாமல் இது நடக்குமா?” “முல்லைத்தீவில், அம்பாறையில் கைவிடப்பட்ட முகாம்களைத்தான் சிறீலங்காப் படை கைப்பற்றியது” “மணலாற்றில் மைக்கல் முகாமுக்கு வந்த சிறீலங்காப் படை பின் வாங்கிய பின் அங்கு சென்ற நாம் கண்ணிவெடியில் சிக்கிய 100 காலணிகளைக் கண்டோம். எவ்வளவு இழப்பை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்” “மட்டக்களப்பு நகரத்துள் நாங்கள் இல்லை என்பது பொய். நாம் தேவைக்கேற்ப, சூழலுக்கேற்ப எங்கும் செல்வோம்” “நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள். அக்டோபர் மாதம் மட்டும் 51 ஆயுதங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். இது நாங்கள் தோற்கடிக்கப்பட்டதையா காட்டுகிறது?” “நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை வென்று கொண்டு தான் இருக்கிறோம்” என மிக உறுதியோடும், பெருமையோடும் அவன் நேர்காணல் தொடர்கின்றது. 27.11.1991, 3000க்கும் மேற்பட்ட சிறீலங்காப் படையினர் “வட்டேறவும்” என்ற பெயரில் சுற்றி வளைப்பில் இறங்கினர். இந்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக சிறப்புத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய விசாலகன் தாக்குதல் ஒள்றைத் திட்டமிட்டான் பன்குடாவெளி இராணுவ முகாமிலிருந்தும், முதிரையடி ஏத்தம் இராணுவ முகாமிலிருந்தும் உணவுப் பொருட்களை எடுக்க செங்கலடி நோக்கி வரும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தத் தீர்மானித்தான். தாக்குதல் மையப்பகுதியில் உள்ள முக்கிய வீதியில் 25 மீற்றர் நீளமுள்ள கறுத்தப்பாலமும், அவ்வலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் 15 மீற்றர் நீளமுள்ள இன்னுமொரு பாலமும் இருந்தது. 29.11.1991 காலை 8.40 மணிக்கு தாக்குதல் தொடங்கியது. 7 சிறீலங்காப்படையினர் கொல்லப்பட்டனர். மற்றையோர் தப்பி ஓடினார்கள். தாக்குதல் வலயத்தில் நின்ற விசாலகனிடம் இருந்து கட்டளைகள் பிறந்து கொண்டிருந்தன. தாக்குதலில் காயமடைந்து காட்டுக்குள் ஓடிமறைந்த சிறீலங்கா இராணுவ வீரன் சுட்ட ரவை ஒன்று விசாலகனின் தொண்டைக்கு கீழ் தாக்குகின்றது. படுகாயமடைந்த ஜோய் 30.11.1991 அன்று காலை 5.30 மணிக்கு வீரச்சாவைச் சந்தித்துக் கொண்டான். இந்தியப் படை வெளியேறிய சிறிது காலத்தில் மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் செல்ல இருந்த தேனிசை செல்லப்பா குழுவினருக்காக திரு.காசி ஆனந்தன் அவர்கள் தான் முன்பு எழுதிய மீன் மகள் பாடுகின்றாள் வாவி மகள் ஆடுகின்றாள் மட்டு நகர் அழகான மேடையம்மா – இங்கே எட்டுத் திசையும் கலையின் வாடையம்மா என்ற பாடலுக்கு புதிதாக கடைசியில் நாலு வரிகளை எழுதினார். அதன் கடைசி இரண்டு வரிகள் போர்க்கலையில் வல்ல புலிக்கூட்டமும் உண்டு பகையைப் பொடிப் பொடியாக்கும் போராட்டமும் உண்டு . முடுகு – முன்னேறு . கிறுகு – திரும்பு . மறுகா – பின்புஇ பிறகு (இவை இன்றும் மட்டக்களப்பு பகுதியில் வழக்கிலிருக்கும் பழந்தமிழ் சொற்களாகும்) நினைவுப்பகிர்வு: யோகரத்தினம் யோகி வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 1992). https://thesakkatru.com/batticaloa-ampara-district-commander-lieutenant-colonel-joy/- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 இனிய நபிகள் ஓர் தொடர்காவியம் அருளன்பு பண்பில்... அளவற்ற உந்தன்- களைத்த மனசு களிப்புற ......!
வித்தியாசமான விளையாட்டுகள் மனைவியை தூக்கி ஓடும் போட்டி எனக்கு பிடித்திருக்கு, அடிக்கடி கீழே விழுத்தி விழுத்தி தூக்கி ஓட நல்ல சந்தர்ப்பம் 😂- மாவீரர் புகழ் பாடுவோம்
மாவீரர் போற்றி அகவல் 108 எழும்பு தமிழா- களைத்த மனசு களிப்புற ......!
காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்- இறைவனிடம் கையேந்துங்கள்
செந்தமிழால் உந்தனிற்கு மாலை தொடுத்தேன் . சிங்கார வேலனே மாயவனை கண்டு வந்தோம் பாடல் ஆனந்த பரவசம் - திருச்சதகம் - திருவாசகம்- குமாரசாமி.gif
- Zuma.jpg
- Justin.jpg
- தனிக்காட்டு ராஜா.jpg
- நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.