Everything posted by நவீனன்
-
சமையல் செய்முறைகள் சில
உருளைக் கிழங்கைப் பற்றி 5 மொறு மொறு தகவல்கள் உருளைக் கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து, சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடும்போது, எளிமையான அந்த உணவு அதீதமாக ருசிக்கும். அரிசி, கோதுமைக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். எல்லா நாட்டிலும், எத்தகைய தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் உருளை உள்ளது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தப் பதார்த்தத்தைப் பார்க்கலாம். 100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97. இதில் ஈரப்பதம் 75%, புரதம் 2%, கொழுப்பு 0.1%, தாது உப்புகள் 0.61%, நார்ச்சத்து 0.41% மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவைத் தவிர வைட்டமின் சி 17 மில்லி கிராமமும், கால்ஷியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாஷியம் ஆகியவையும் இதிலுள்ளன. உருளைக் கிழங்கை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ சமைத்து சாப்பிட்டாலும் அதன் மருத்துவக் குணம் மாறவே மாறாது என்கின்றனர் ஊட்டச் சத்து நிபுணர்கள். சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம். தினமும் பாலும், உருளைக்கிழங்கும் சாப்பிட்டால் ஒருவர் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட் உருளைக்கிழங்கில் அதிகளவில் உள்ளது. http://www.dinamani.com/
-
சமையல் செய்முறைகள் சில
கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: பனை ஓலை கொழுக்கட்டை திருக்கார்த்திகை தினமான இன்று தீபம் ஏற்றும் போது இறைவனுக்கு பனை ஓலை கொழுக்கட்டையை படைத்து வழிபாடு செய்யலாம். தேவையானப்பொருட்கள் : பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்) பச்சரிசி மாவு - 3 கப் கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப் ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் - 1 கப் செய்முறை : கருப்பட்டியில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், வடிகட்டிய கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். மிகவும் குழைவாக இருக்க கூடாது. ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, மற்றொரு ஓலையால் அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும். இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும். சூப்பரான பனை ஓலை கொழுக்கட்டை ரெடி. இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம். கார்த்திகை வாழைப்பழ அப்பம் கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வாழைப்பழ அப்பம் படைத்து வழிபடலாம். இன்று இந்த அப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசிமாவு - 1 கப் வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை நன்கு கனிந்த வாழைப்பழம் - 1 பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை : 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்யவும். சூப்பரான கார்த்திகை வாழைப்பழ அப்பம் ரெடி. குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும். மேலும், இதை எண்ணெயில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம் கார்த்திகை வெல்ல பொரி கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். இன்று இந்த வெல்ல பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அவல் பொரி - 8 கப் வெல்லம் பொடி செய்தது - 2 கப் பொட்டுகடலை - 1 கப் தேங்காய் - ஒரு மூடி ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன் சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன் செய்முறை : தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். பொரியை நன்றாக புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும். உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது. உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டு விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி. குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம்.
-
சமையல் செய்முறைகள் சில
சாதத்திற்கு அருமையான வெஜிடபிள் மசாலா சப்பாத்தி, பூரி, தோசை, நாண், சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கேரட் - 2 உருளைக்கிழங்கு - பெரியது பச்சைப்பட்டாணி - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் முட்டைக்கோஸ் - 100 கிராம் காலிப்ளவர் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் சோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு. செய்முறை : வெங்காயம், பீன்ஸ், கோஸ், காலிப்பிளவர், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு குக்கரை மூடி விசில் போடவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
அருமையான சைடிஷ் கருணைக்கிழங்கு பொடிமாஸ் தயிர் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கருணைக்கிழங்கு பொடிமாஸ். தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு - அரை கிலோ, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : கருணைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய கருணைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும். கருணைக்கிழங்கு வேகும் வரை மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் ஊற்றிக்கூடாது. கருணைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்தவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு வதக்கவும். கருணைக்கிழங்கு வெந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சேர்த்து இறக்கவும். சூப்பரான கருணைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
பாஸ்தா இத்தாலியர் ஒருவரை ஆத்திரப்படுத்த வேண்டுமென்றால், ‘பதின்மூன்றாம் நூற்றாண்டு வெனிஸ் நகரப் பயணி மார்க்கோ போலோதான் நூடுல்ஸை இத்தாலிக்கு அறிமுகப்படுத்தினாரா?’ என்று மட்டும் கேளுங்கள். அவ்வளவுதான். தங்கள் தேசத்தின் புகழையே அவமதித்துவிட்டதாகக் கருதி, தாம்தூம் என்று குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏன்? சீனர்களுக்கு எப்படி `நூடுல்ஸ்’ஸோ, அதேபோலத்தான் இத்தாலியர்களுக்கு `பாஸ்தா’. நூடுல்ஸ் வேறு; பாஸ்தா வேறு. ‘அது இத்தாலியர்களுக்கே சொந்தமானது.எங்கள் உணவுக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது’ என்று இத்தாலியர்கள் வாதம் செய்யக்கூடும். ‘நூடுல்ஸ் நூல்நூலா மட்டும்தான் இருக்கும். பாஸ்தா பார்த்திருக்கியா? வட்டமா, சதுரமா, தட்டையா, உருளையா, நீளமா, கோணலா... இப்படி பல டிசைன்ல டக்கரா இருக்கும். எப்படிப் பார்த்தாலும் பாஸ்தாதான் பிஸ்தா!’ என்று பஞ்ச் பேசவும் வாய்ப்பிருக்கிறது.சரி, பாஸ்தாவின் வரலாறு என்ன? அது இத்தாலியர்களுடைய கண்டுபிடிப்பா? ‘இன்ன தேதியில், இந்த நபர். இன்ன மாதிரி பாஸ்தாவைப் படைத்தார்’ என்று தெளிவாகச் சொல்லும் சரித்திரக் குறிப்பெல்லாம் கிடையாது. தவிர, பாஸ்தா இத்தாலியர்களுடைய கண்டுபிடிப்பும் கிடையாது. ஆனால், இத்தாலியர்களின் கலாசார அடையாளமாக உலகப்புகழ் பெற்றது என்று சொல்லலாம். பாஸ்தாவின் வேரைத் தெரிந்துகொள்ள, அதன் மூதாதைய உணவுப்பொருள்கள் சிலவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. கிரேக்கர் களுடைய நெருப்புக் கடவுள் Hephaestus. கிரேக்கப் புராண நளன் என்று சொல்லலாம். அவர்தான், மாவையும் நீரையும் கலந்து தனலால் (அதாவது நெருப்பால்) வாட்டி, பாஸ்தா போன்ற ஒரு பதார்த்தத்தைக் கண்டுபிடித்தார் என்பது அவர்களுடைய புராண நம்பிக்கை. Lagonon அல்லது Tracta என்பது பண்டைய கிரேக்கர்களும் ரோமானி யர்களும் சமைத்த ஒரு மாவுப் பண்டம். தண்ணீர்சேர்த்துப் பிசையப்பட்ட மாவை, வறுத்துத் தயாரிக்கப்படும் உணவு இது. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்கர்களின் உணவுப் பழக்கத்தில் இது இருந்திருக்கிறது. மாவும் தண்ணீரும் சேர்த்து, நெருப்பில் வாட்டி செய்யப்பட்ட விதத்தில் பாஸ்தாவின் ஆதி வடிவமாக Lagonon-ஐ சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். ஆனால், தண்ணீரையும் மாவையும் கலந்து, அதை ஏதோ ஒரு வடிவில் செய்து காயவைத்து, பின் சுடுநீரில் வேகவைத்துத் தயாரிக்கப்பட்ட எந்த ஓர் ஆதி உணவும் பாஸ்தாவின் மூதாதையரே என்று சொல்லலாம். பாஸ்தா தயாரிப்புக்கு ஆதாரமான தானியம், Durum Wheat என்ற வகை கோதுமை. இந்தக் கோதுமை அதிக புரோட்டின் சத்துகொண்டது. கடினமானது. இவ்வளவு கடினமான கோதுமையை நூடுல்ஸ் தயாரிப்பதற்குப் பயன்படுத்த மாட்டார்கள். பாஸ்தா வேறு, நூடுல்ஸ் வேறு என்பதற்கு அதன் மூலப்பொருளான Durum Wheat-ம் ஒரு சாட்சி. இந்த வகை கோதுமையை அரைத்துப் பொடி செய்யப்பட்ட ரவையை (Semolina) பல நூற்றாண்டுகளாக உபயோகித்து வந்தவர்கள் அரேபியர்கள். ஆக, ரவையின் ஆதி வடிவம் அரேபியர் களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த வகை ரவையில் பாஸ்தா தயாரிக்கும் கலையை இத்தாலியர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் அரேபியர்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. Isho bar Ali என்ற ஒன்பதாம் நூற்றாண்டு அரேபிய மருத்துவர் தொகுத்த அகராதியில், இந்த ரவையைத் தண்ணீர்கொண்டு பிசைந்து, நீள வடிவில் உருட்டி, காய வைத்து, பின் சமைத்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. அதன் பெயர் Itriyya.இத்தாலியின் தீவு நகரமான சிசிலியில் இருந்து பதினோராம் நூற்றாண்டில் Itriyya அதிக அளவில் தயாரிக்கப்பட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. பதினான்காம் நூற்றாண்டு வரை பாஸ்தா தயாரிப்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. அதிக நேரமும் பொறுமையும் மனித உழைப்பும் தேவைப்பட்டன. அதனால் பாஸ்தாவின் உற்பத்தி குறைவாக இருந்தது. விலை அதிகமாகவே இருந்தது. ஏழைகளுக்கு எட்டாக்கனி. பணக்காரர்களின் உணவுத் தட்டுகளில் மட்டும் சுடச்சுட பாஸ்தாவின் ஆவி பறந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் ‘பாஸ்தா புரட்சி’ நடந்தது.அப்போது இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்தில் பாஸ்தா தயாரிப்பதற்கான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.பாஸ்தாவைத் தயாரித்துக் காயவைத்து பத்திரப்படுத்திவிட்டால் அது ஒரு நல்ல உணவுப்பொருள். நல்ல வணிகப் பொருளும்கூட என்று இத்தாலியர்கள் உணர்ந்துகொண்டார்கள். இயந்திரங்கள் வந்துவிட்டதால் மனித உழைப்பு குறைவாகத் தேவைப்பட்டது. நேரம் மிச்சமானது. உற்பத்தி அதிகமாக, அதன் விலையும் குறைந்துபோனது.ஆகவே, படிப்படியாக நடுத்தர, ஏழை மக்கள் மெனுவிலும் பாஸ்தா இடம்பெற ஆரம்பித்தது. Pasta என்ற இத்தாலிய வார்த்தைக்கு Paste என்று பொருள். லத்தீனில் மாவு என்று அர்த்தம். Croseti, Formentine, Maccaroni, Quinquinelli, Ravioli, Tortelli, Vermicelli என்று ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு விதமான பாஸ்தா போன்ற உணவுகள் புழக்கத்துக்கு வந்தன.பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ‘பாஸ்தா’ என்ற பொதுச்சொல் புழக்கத்தில் இல்லை. இத்தாலியின் தீவான சார்தீனியாவைச் சேர்ந்த வியாபாரிகள், பதினான்காம் நூற்றாண்டில் obra de pasta (dried pasta) என்று தங்கள் ஏற்றுமதி செய்த பாஸ்தாவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகே பாஸ்தா என்ற பொதுச்சொல் அதிக அளவில் புழக்கத்துக்கு வந்திருக்கலாம். இன்றைக்குப் புழக்கத்திலிருக்கும் புகழ்பெற்ற பதார்த்தம் லஸாங்னே (Lasagne). தட்டையான வடிவம்கொண்ட பாஸ்தா இது. இறைச்சி, மசாலா, கீரை, காய்கறி, சாஸ், சீஸ் என்று பல லேயர்களுக்கிடையில் திணித்து உண்கிறார்கள். இந்த வடிவ பாஸ்தாவின் தாயகம், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரம்தான். இதுகுறித்த முதல் சமையல் குறிப்பு, பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, யார் எழுதியது என்றே தெரியாத, Liber de Coquina என்ற சமையல் புத்தகத்தில் இருக்கிறது. அதே சமையல் புத்தகத்தில் பாஸ்தாவையும் கோழிக்கறியையும் சேர்த்துச் சமைத்து அதன்மேல் பாலாடைக்கட்டி,கோழிக்கறியின் கொழுப்புகொண்டு அழகு செய்வது பற்றிய சமையல் குறிப்பு இருக்கிறது. Spaghetti – இது நூடுல்ஸ் வடிவிலான, நீண்ட கயிறு போன்ற பாஸ்தா பத்தொன்பதாம் நூற்றாண்டில் Spaghetti தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இத்தாலியில் பெருகின. தெருவோரக் கடைகள் தொடங்கி ரெஸ்ட்டாரன்ட்கள் வரை எங்கும் மக்கள் உண்ணக்கூடிய அடிப்படை உணவுகளில் ஒன்றாக Spaghetti வகை பாஸ்தா மாறிப்போனது. பிறகு, அமெரிக்காவின் ரெஸ்ட்டாரன்ட்களிலும் Spaghetti Italienne என்று இந்த பாஸ்தா விருப்பத்துக்குரிய உணவாகிப்போனது. அமெரிக்காவில் பாஸ்தா அறிமுகமானது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன், பிரான்ஸுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தபோது அங்கே maccaroni வகை பாஸ்தாவைச் சாப்பிட்டிருக்கிறார். சற்றே தயக்கத்துடன் அதைச் சாப்பிட ஆரம்பித்தவர், உடனே அதன் சுவையில் மயங்கிக் கிறங்கியிருக்கிறார். அவரது விருப்பத்துக்குரிய உணவுகளில் ஒன்றாக பாஸ்தா இதயத்தில் இடம்பிடித்தது. யாம் பெற்ற பாஸ்தா இன்பம் அமெரிக்கர்களும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், பாஸ்தா தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை ஆர்டர் செய்தார். அதை அமெரிக்காவுக்குக் கொண்டுசென்றார். அங்கும் தாமஸ் ஜெபர்சன் புண்ணியத்தால் maccaroni வகை உற்பத்தி ஆரம்பமானது. தாமஸ் ஜெபர்சன் அதிபராக இருந்த காலத்தில் அதிபர் மாளிகை விருந்துகளில் maccaroni-யும் தவறாமல் இடம்பெற்றது. இப்படியாக பாஸ்தா வகைகளை அமெரிக்கர்களின் விருப்பத்துக்குரிய உணவாக மாற்றியதில் ஜெபர்சனுக்கும் பெரும் பங்கு உண்டு. முதலில் ஒரு மார்க்கோ போலோ விஷயம் பார்த்தோமே... சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓர் அமெரிக்க நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்த பொய் பரப்புரையே அது. மார்க்கோ போலோ இத்தாலிக்குக் கொண்டுவந்த உணவுப் பொருள்தான் பாஸ்தா என்று அமெரிக்கர்களைக் கவர்ந்திழுக்க விளம்பரத்தினார்கள். அது இத்தாலியர்களுக்கு ரத்தக் கொதிப்பைக் கொடுத்தது. ஆம், இதுகூட அமெரிக்கச் சதிதான். Pasta Bytes உருளையாக, சதுரமாக, வட்டமாக, தட்டையாக, குழல் வடிவில், நட்சத்திர வடிவில் என்று உலகமெங்கும் சுமார் 310 விதமான வடிவங்களில் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. அதில் 1,300 வகை பாஸ்தாவின் பெயர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டொன்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 14.3 மில்லியன் டன் பாஸ்தா வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் அதிக அளவில் பாஸ்தா உற்பத்தி செய்யப்படும் நாடு இத்தாலிதான்.அங்கே ஆண்டொன்றுக்குச் சுமார் 34,08,500 டன் பாஸ்தா உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாமிடத்தில் அமெரிக்கா. 20,00,000 டன் அங்கே உற்பத்தி நடக்கிறது. ஆசியாவிலும் ஆஸ்திரேலியாவிலுமே பாஸ்தா உற்பத்தி மிகக்குறைந்த அளவில் நடைபெறுகிறது. Source: International pasta Organisation. உலகிலேயே பாஸ்தா அதிகம் உண்பவர்கள் இத்தாலியர்களே. பாஸ்தா அதிகமாக உண்ணும் தேசங்களின் டாப் 6 பட்டியல். தேசம் - கிலோ அளவில் (ஒரு வருடத்தில் ஒரு மனிதர் சராசரியாக உண்ணும் அளவு) 1. இத்தாலி 25.3 2. துனிசியா 16.0 3. வெனிசுவேலா 12.2 4. கிரீஸ் 11.5 5. சுவிட்சர்லாந்து 9.2 6. அமெரிக்கா 8.8 Source: International pasta Organisation - Annual Survey on World Pasta Industry (2014) பாஸ்தாவின் காதலி! ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாவதி அமராவதி காவியக் காதலர்களின் வரிசையில் பாஸ்தா – தக்காளி சாஸையும் சேர்த்தே ஆக வேண்டும். ஆம், தக்காளி சாஸ் இன்றி பாஸ்தாவைத் தனியாக நினைத்துப் பார்க்க முடியாது. எப்படி பாஸ்தா காதலனாகவும், தக்காளி சாஸ் காதலியாகவும் ஜோடி சேர்ந்தார்கள்? அந்த அமர காவியக் காதல் கதை என்ன? தக்காளியின் பூர்வீக மண் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா.கி.பி.1492 கொலம்பஸின் அமெரிக்கக் கண்ட வருகைக்குப் பிறகு, அங்கே ஸ்பெயினின் காலனியாதிக்கம் பரவியது.ஸ்பானியர்களே அமெரிக்கக் கண்டத்தின் தக்காளியை ஐரோப்பியக் கண்டத்துக்குக் கொண்டு சென்றனர். பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளிலெல்லாம் ஐரோப்பியர்கள் தக்காளியைப் பரிசு கொடுக்க உகந்த அலங்காரப் பொருளாகத்தான் பார்த்தனர்.அதற்குப் பிறகே அது உணவாக உருமாற ஆரம்பித்தது. தக்காளி சாஸை உருவாக்கியவர்கள் இத்தாலியர்கள் அல்ல. கி.பி.1692-ல் நேப்பிள்ஸ் நகரத்தில் ஸ்பானிய வைஸ்ராயின் செஃப்பாகப் பணியாற்றியவர் அண்டோனியோ லாடினி. இத்தாலியர். அவர் தக்காளியைக் கொண்டு ஸ்பானிய ஸ்டைலில் alla spagnuola என்ற சாஸைத் தயாரித்தார். Lo scalco alla moderna என்ற அண்டோனியோ எழுதிய சமையல் புத்தகத்தில் இந்த சாஸ் இடம்பெற்றிருக்கிறது. அது பாஸ்தாவோடு பரிமாறப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. கி.பி. 1790-ல் ரோமன் செஃப் பிரான்செஸ்கோ லியோனார்டி என்பவர் எழுதி வெளியிட்ட L’Apicio moderno என்ற இத்தாலிய பாணி சமையல் புத்தகத்தில் பாஸ்தாவோடு தக்காளி சாஸும் சேர்த்துச் சமைக்கப்பட்ட ரெசிப்பிகள் உள்ளன. இப்படியாக இத்தாலியில் ஜோடி சேர்ந்த பாஸ்தா – தக்காளி சாஸின் காவியக் காதல், இன்றுவரை உலகமெங்கும் கமகமத்துக் கொண்டிருக்கிறது.- சமையல் செய்முறைகள் சில
சிறுதானியச் சிறப்பு ரெசிப்பி படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார் பழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தவை சிறுதானியங்களே. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைச் சிறுதானியங்கள் சிறப்பான முறையில் அளிக்கின்றன. வரகு, கேழ்வரகு, கம்பு, தினை ஆகிய சிறுதானியங்களிலிருந்து சுவையான இனிப்பு, காரம், பானம் ஆகியவற்றைத் தயாரிக்கும் ரெசிப்பிகளை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. வரகு காரத் தட்டை தேவையானவை: வரகு அரிசி - 2 கப் பொட்டுக்கடலை - அரை கப் கடலைப் பருப்பு - கால் கப் தேங்காய் - அரை மூடி (துருவியது) மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கிச் சலித்து எடுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். அரைத்த வரகு அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஊறவைத்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். வேர்க்கடலை - கம்பு சிப்ஸ் தேவையானவை: கம்பு - ஒரு கப் வேர்க்கடலை - அரை கப் கோதுமை மாவு - அரை கப் பொட்டுக்கடலை - கால் கப் பொடித்த மிளகு - சீரகம் - ஒரு டீஸ்பூன் வெண்ணெய் - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கம்பு, வேர்க்கடலையைத் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும். பொட்டுக் கடலையையும் மாவாக்கிக்கொள்ளவும். இவற்றுடன் பொடித்த மிளகு - சீரகம், கோதுமை மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக்கி, சற்று கனமான சப்பாத்தியாக இட்டு வட்டம், சதுரம் எனத் தேவையான வடிவில் சிப்ஸாகச் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாவு முழுவதையும் இதுபோல செய்து கொள்ளவும். சுவையான, கரகரப்பான வேர்க்கடலை - கம்பு சிப்ஸ் ரெடி. கேழ்வரகு இனிப்புப் புட்டு தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப் நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப் தேங்காய்த் துருவல் - அரை கப் ஏலக்காய் - ஒன்று (தூளாக்கவும்) நெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - கால் டம்ளர் உப்பு - அரை டீஸ்பூன் செய்முறை: கேழ்வரகு மாவுடன் சிறிதளவு உப்பு கலந்த நீரைத் தெளித்துப் பிசையவும். கட்டிகள் இல்லாதவாறு நன்கு உதிர்த்து எடுக்கவும். அனைத்து மாவும் நீருடன் கலந்து மென்மைத் தன்மை வந்ததும், காட்டன் துணியை நனைத்து நன்கு பிழிந்துவிட்டு, அதில் இந்த மாவைக் கொட்டி, மூடி இட்லித் தட்டில் வைத்து, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இதை முதல்நாள் இரவு செய்து வைத்து கொள்ளவும். அடுத்த நாள் காலை மீண்டும் இந்த மாவில் உப்பு கலந்த நீரைத் தெளித்து, உதிர்த்துக் கலந்து, 20 நிமிடத்தில் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதில் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நெய்விட்டுப் பரிமாறவும். குறிப்பு: முளைகட்டிய கேழ்வரகு மாவாக இருந்தால் கூடுதல் சத்து கிடைக்கும். உடனே சாப்பிட வேண்டும் என்றால் ஒருமுறை ஆவியில் வேகவைத்தால் போதுமானது. இருமுறை வேகவைப்பதால் சுவை அதிகரிப்பதுடன் புட்டு, பூ போன்று மென்மையாகும். தினை அப்பம் தேவையானவை: தினை - 2 கப் தேங்காய் - அரை மூடி பொடித்த வெல்லம் - ஒரு கப் வாழைப்பழம் - ஒன்று ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் நெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: தேங்காயைத் துருவி கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ளவும். தினை அரிசியை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப்பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக் கல்லில் நெய்விட்டு ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடிவைத்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். கம்பு - தேன் லட்டு தேவையானவை: கம்பு மாவு - 1 கப் கேழ்வரகு மாவு - கால் கப் பொட்டுக்கடலை மாவு - கால் கப் தேன் - முக்கால் கப் ஏலப்பொடி - அரை டீஸ்பூன் நெய் - கால் கப் முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன் (நறுக்கியது) செய்முறை: கம்பு மாவு, கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் கலந்துகொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து லேசாக வதங்கியதும் மாவையும் சேர்த்து வறுத்து இறக்கி, சில நிமிடங்கள் ஆறவிடவும். சூடு குறைவதற்குள் மேலும் சிறிது நெய் விட்டு கலந்து, தேனும் ஊற்றி மாவை உருண்டையாகப் பிடித்து வைக்கவும். ஆறவிட்டு டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை கெடாது. காலை நேரப் பசிக்கு மிகவும் ஏற்றது. வரகு இலை அடை தேவையானவை: வரகு மாவு - 1 கப் வெல்லம் - 200 கிராம் நெய் - 2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் வாழை இலை - 5 சதுரங்கள் உப்பு - அரை டீஸ்பூன் செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் வடிவட்டி வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைப் போடவும். நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை ஊற்றவும். நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள் போட்டு நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விட்டு கெட்டி பதம் வந்ததும் நெய்விட்டு பூர்ணமாக்கி இறக்கிவிட்டு ஆறவிடவும் வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் வரகு மாவை இட்டு அதில் நெய்விட்டு, கொதிக்கும் நீரை வேண்டிய அளவு ஊற்றி வேகமாகக் கிளறவும். மாவு இறுக்கமாக கொழுக்கட்டைப் பிடிக்கும் பதம் வந்ததும் நெய் தடவிக்கொண்டு, பந்து போல் பிடித்து வைக்கவும். வாழை இலையில் நெய் தடவி வரகு பந்தை வைத்து வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் தேங்காய் பூர்ணத்தை வைத்து இலையோடு சேர்த்து மடித்து வைத்துக்கொள்ளவும். இட்லிக் குக்கரில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வாசமான வரகு இலை அடை ரெடி. தினை மில்க் ஷேக் தேவையானவை: தினை மாவு - அரை கப் தண்ணீர் - ஒரு கப் பால் - 1 கப் பேரீச்சம் பழம் - 5 ஏலத்தூள் - அரை டீஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தினை மாவைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி கலந்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் ஆறவிட்டு 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர், எடுத்து அதில் ஏலத்தூள், பேரீச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை, பால், தண்ணீர் சேர்த்து ஜூஸரில் நன்கு அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும். சுவைகேற்ப சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளவும். கேழ்வரகு கொள்ளு கருப்பட்டி பானம் தேவையானவை: கேழ்வரகு - கால் கப் கொள்ளு மாவு - கால் கப் கருப்பட்டி - 1 கப் (தூளாக்கியது) ஏலத்தூள் - அரை டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: குக்கரில் கேழ்வரகு மாவு, கொள்ளு மாவு, கருப்பட்டி, ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர்விட்டு கரைத்து, குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு வேகவைத்து எடுக்க, சுவையான கேழ்வரகு - கொள்ளு - கருப்பட்டி பானம் ரெடி தினை பாயசம் தேவையானவை: தினை மாவு - 1 கப் வெல்லம் - 1 கப் பாசிப்பருப்பு - கால் கப் ஏலத்தூள் - அரை டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் முந்திரி, திராட்சை - தலா 1 டீஸ்பூன் செய்முறை: வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து அடுப்பில் வைக்கவும். முழுவதும் கரைந்தவுடன் வடிகட்டிக்கொள்ளவும். பாசிப்பருப்பை வேகவிடவும். பருப்பு பாதி வெந்ததும் தினை மாவை வெல்லத்துடன் கலந்து அதில் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்து வரும்போது, ஏலத்தூள் தூவி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்க்கவும். தினை பூரணக் கொழுக்கட்டை தேவையானவை: தினை மாவு - ஒரு கப் பச்சரிசி மாவு - கால் கப் உப்பு - கால் டீஸ்பூன் சுடுநீர் – தேவையான அளவு பூரணம் செய்ய: வறுத்த எள் - ஒரு கைப்பிடி அளவு தேங்காய் - அரை மூடி (துருவவும்) வெல்லம் – அரை கப் செய்முறை: தினை மாவுடன் பச்சரிசி மாவு, உப்பு, சுடுநீர் சேர்த்து நன்கு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்குப் பிசையவும். எள்ளுடன் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதுவே பூரணம். பிசைந்து வைத்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டி, நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஒரு கொதிவிட்டு கரைந்தபின் வடிகட்டி, அதிலும் மாவைப் பிசைந்துச் செய்யலாம்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் மட்டன் கொத்துக்கறி - 300 கிராம் தயிர் - 2 கப் ப.மிளகாய் - 5 வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் லவங்கம் - 6 ஏலக்காய் - 8 மிளகு - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன் நெய் - 5 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை : மட்டன் கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், ப.மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும். இப்போது போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். பிரஷர் போனதும் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அகத்திக்கீரை சொதி என்னென்ன தேவை? அகத்தி கீரை- 1 கட்டு பெரிய வெங்காயம்- 1 தக்காளி-2 பச்சை மிளகாய்-4 பால் – 1கப் உப்பு- 1 டீஸ்பூன் மஞ்சள்பொடி- 1டீஸ்பூன் கறிவேப்பிலை- தேவையான அளவு எப்படி செய்வது? கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுகி கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும். அதில் மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போடுங்கள் மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும். கீரை சுலபமாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள். பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார். இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சோள ரவை உப்புமா மாலை நேரத்தில் சத்து நிறைந்த உணவான சோள ரவை உப்புமாவை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சோளம் – 1 கப் அரிசி ரவை – 1 கப் கோதுமை ரவை – 1 கப் பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை – சிறிதளவு இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 1 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – சிறிதளவு கடலைப்பருப்பு – சிறிதளவு பெருங்காயத்தூள் – சிறிதளவு முந்திரி – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: சோளத்தை ரவையாக உடைத்துக்கொள்ள வேண்டும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும். பிடித்தமான காய்கறிகளை சேர்த்தும் சோள ரவை உப்புமா தயாரிக்கலாம். விருப்பப்பட்டவர்கள் சட்னியுடன் சாப்பிடலாம்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது நல்லது. இன்று ஸ்வீட் கார்ன், பாதாம் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கார்ன் முத்துக்கள் - ஒரு கப், பாதாம் - 10 ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு, சர்க்கரை - சிட்டிகை, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு. செய்முறை : ஸ்பீட் கார்ன் முத்துக்களை வேகவைத்து கொள்ளவும். பாதம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரிக்கவும். உரித்த பாதாமுடன் வேக வைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
பலாப்பழ கேசரி FacebookTwitterPinterestEmailGmailViber தேவையான பொருள்கள் பலாப்பழத் துண்டுகள் -2 கப் சீனி- 1 கப் ரவை – 1 கப் முந்திரிப்பருப்பு – 15 நெய் – 4 தேக்கரண்டி பால் – 1 கப் ஏலக்காய் – 4 செய்முறை சிறிது நெய் விட்டு ரவையையும் முந்திரிப் பருப்பையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும் பலாப்பழத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். சட்டியில் பால், சீனி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சீனி கரைந்தவுடன் , ரவை , சீனி சேர்த்துக் கிளரவும். ரவை வெந்து கேசரிப் பதம் வந்தவுடன் பலாப்பழத்துண்டு , முந்திரி, நெய் ,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பலாபழ கேசரி தயார்.- சமையல் செய்முறைகள் சில
வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி? வெண்டைக்காய் வைத்து காரக்குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த வெண்டைக்காய் காரகுழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 250 கிராம் பூண்டு - 10 பற்கள் சாம்பார் பொடி - 2 ஸ்பூன் புளி - 1 உருண்டை வெங்காயம் - 1 தக்காளி - 1 நல்லெண்ணைய் - 3 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு அரைத்த தேங்காய் - 3 ஸ்பூன் சீரகம், மிளகு - 1 1/2 டீஸ்பூன் செய்முறை : தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும். வெண்டைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். வெட்டிய வெண்டைக்காயை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய், சீரகம், மிளகை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும் அடுத்து அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கியதும் சாம்பார் பொடி, உப்பு, வதக்கிய வெண்டைக்காய் போட்டு நன்கு கிளறவும். நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும். பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணெய் ஊற்றி குழம்பை மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி ஓரங்களில் எண்ணெய் பரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். சுவையான வெண்டைக்காய் காரகுழம்பு ரெடி.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்