Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. சுண்டியிழுக்கும் சுவையில் கமகம ரசம்! கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோ:  லக்ஷ்மி வெங்கடேஷ் தயாரிக்கும்போதே அற்புதமான மணம் பரவி, நாசியில் நுழைந்து, நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியாற வரவேற்கும் உணவு வகைகளில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு. சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது பசி தணிக்கும் ரசம், அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். `தென்னாட்டு சூப்’ என்ற செல்லப் பெயர்கொண்ட ரசத்தில் பல வகைகள் உண்டு. ரசம் தயாரிப்பதில் ரசப்பொடி ஒரு முக்கிய அங்கம்வகிக்கிறது. சில ரசப்பொடிகள் செய்யும் விதம், ரசம் செய்யும் முறை இங்கே... ரசம் செய்யும் முறை... முதலில் புளியைக் கரைத்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பொடியாக நறுக்கிய தக்காளியை நன்கு பிழிந்து, மசித்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பருப்பு சேர்ப்பதாக இருந்தால், பருப்பைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்த பின் ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்து நுரைத்து வந்தவுடன் உப்பு சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து மூடி வைக்கவும். விதம்விதமாக ரசப்பொடி தயாரிக்க... தேவையானவை: செய்முறை: வாணலியில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் மிளகாயை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இதர பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மிதமான சூட்டில் கறுகாமல் வறுக்கவும். ஆறியபின் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தவும். (அல்லது) எல்லாப் பொருள்களையும் வெயிலில் நன்கு காயவைத்துக் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து உபயோகப்படுத்தவும். ஸ்பெஷல் ரசப்பொடி வகைகள் மைசூர் ரசப்பொடி தேவையானவை: * காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20 * தனியா (மல்லி) - அரை கப் * மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன் * சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன் * வெந்தயம் - ஒரு டீஸ்பூன் * கடுகு - ஒரு டீஸ்பூன் * பெருங்காயம் - அரை டீஸ்பூன் * கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் * எண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம். குறிப்பு: ஃப்ரிட்ஜில் வைத்து, கைப்படாமல் உபயோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். உடுப்பி ரசப்பொடி தேவையானவை: * காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப் * தனியா (மல்லி) - ஒரு கப் * சீரகம் - கால் கப் * வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன் * கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் * பெருங்காயம் - அரை டீஸ்பூன் * கறிவேப்பிலை - 3 ஆர்க்கு * தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும். ஆந்திரா ரசப்பொடி தேவையானவை: * காய்ந்த மிளகாய் - 2 கப் * தனியா (மல்லி) - ஒரு கப் * சீரகம் - அரை கப் * வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன் * மிளகு - 2 டேபிள்ஸ்பூன் * கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன் * கறிவேப்பிலை - தேவையான அளவு * எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார். https://www.vikatan.com
  2. சத்தான பருப்பு ரெசிப்பிகள் தால் சாண்ட்விச் தேவை: கோதுமை பிரெட் - 8 ஸ்லைஸ் வேகவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு கலவை – 100 கிராம் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வேகவைத்த பருப்புக் கலவையுடன் மிளகுத்தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். இதை பிரெட் ஸ்லைஸ்களின் மீது தடவவும். ஒரு பிரெட்டின் மீது மற்றொரு பிரெட்டை வைத்து அழுத்தவும். (பருப்புக் கலவை நடுவில் வர வேண்டும்). தவாவில் பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி, சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து இருபுறமும் மொறுமொறுப்பாக டோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும். டொமேட்டோ பப்பு தேவை: முப்பருப்புக் கலவை (துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து) – 100 கிராம் தக்காளி – 5 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பூண்டு - 2 பல் (தட்டவும்) உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு. செய்முறை: குக்கரில் நெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பருப்புக் கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 (அ) 4 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசித்துப் பரிமாறவும். லெமன் தால் தேவை: பாசிப்பருப்பு – 100 கிராம் தோல் சீவி துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2. செய்முறை: பாசிப்பருப்புடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துப் பருப்புடன் கலக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த லெமன் தால் எல்லோருக்கும் ஏற்றது. முப்பருப்பு மசாலா போண்டா தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 2 டீஸ்பூன் நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் கலவை - அரை கப் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) சமையல் சோடா - ஒரு சிட்டிகை சோம்பு - சிறிதளவு எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி ஊறவைத்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சமையல் சோடா, உப்பு, நெய், புதினா கலவை, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சோம்பு, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாக எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மிளகு - பூண்டு பருப்புப் பொடி தேவை: துவரம்பருப்பு – 100 கிராம் மிளகு - 2 டீஸ்பூன் பூண்டு - 4 பல் (தட்டவும்) கறிவேப்பிலை – சிறிதளவு பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சேர்த்து, வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடியாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்தப் பொடியைச் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டுக் கலந்து சாப்பிடலாம். துவரம்பருப்புச் சுண்டல் தேவை: குழையாமல் வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஒன்று வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். மல்டி தால் சூப் தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம் சர்க்கரை – ஒரு சிட்டிகை பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று மிளகுத்தூள், நெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் பருப்புகளுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து, இரண்டு பங்கு நீர் சேர்த்துச் சூடாக்கி, நன்கு நுரைத்து வரும்போது இறக்கவும். இதை டம்ளர் / சூப் கப்பில் ஊற்றி மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும். தால் மக்னி தேவை: தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு – 200 கிராம் (8 மணி நேரம் ஊறவிடவும்) பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) அரைத்த தக்காளி விழுது - ஒரு கப் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை நறுக்கிய வெங்காயம் - அரை கப் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா அரை டீஸ்பூன் பிரியாணி இலை - 2 வெண்ணெய் – 100 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: உளுந்துடன் பிரியாணி இலை சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் 75 கிராம் வெண்ணெய்விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி விழுது, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர், வேகவைத்த உளுந்து சேர்த்து 10-20 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்துப் பொரித்து எடுத்துச் சேர்க்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும். மசூர் தால் - டேட்ஸ் லட்டு தேவை: மசூர் தால் – 100 கிராம் பொடித்த வெல்லம் – 150 கிராம் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த பேரீச்சைத் துண்டுகள் - கால் கப் உருக்கிய நெய் - கால் கப். செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு மசூர் தால் சேர்த்துச் சிவக்க வறுத்தெடுத்து நைஸாக பொடிக்கவும். வெல்லத்துடன் பேரீச்சை சேர்த்துக் கையால் நன்கு பிசையவும். பிறகு அதனுடன் ஏலக்காய்த்தூள், அரைத்த பருப்பு, சூடான நெய் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த லட்டு, புரதம் மற்றும் இரும்புச் சத்து மிக்கது. பாசிப்பருப்பு உக்காரை தேவை: பாசிப்பருப்பு – 200 கிராம் (வறுத்து ரவையாக உடைக்கவும்) வெல்லம் – 250 கிராம் நெய் – 50 கிராம் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த முந்திரி - திராட்சை கலவை – 50 கிராம். செய்முறை: பாசிப்பருப்பு ரவையுடன் சுடுநீர் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, இதைக் கொதிக்கவிட்டு ஏலக்காய்த்தூள், நெய், உதிர்த்த பாசிப்பருப்பு கலவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி மூடி வைக்கவும். அரை மணி கழித்து எடுத்தால், பொலபொலவென்று இருக்கும். இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இது இரண்டு நாள்கள் வரை நன்றாக இருக்கும். கீரை - தால் கொழுக்கட்டை தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம் காய்ந்த மிளகாய் - 6 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய அரைக்கீரை, அகத்திக்கீரை, பருப்புக்கீரை கலவை - ஒரு கப் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, கீரை வகைகள், வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசையவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, பருப்புக் கலவையுடன் கலக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தால் ஃபிங்கர் ஃப்ரை தேவை: துவரம்பருப்பு - 50 கிராம் அரிசி - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு – 4 (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்) எண்ணெய் - 250 கிராம் பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய், அரிசி சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும். தால் ஸ்டஃப்டு பராத்தா தேவை: கடலைப்பருப்பு – 100 கிராம் (வேகவிடவும்) பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. மேல் மாவுக்கு: கோதுமை மாவு – 200 கிராம் நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். ஸ்வீட் அண்டு சோர் பாசிப்பருப்பு சாலட் தேவை: பாசிப்பருப்பு – 100 கிராம் (ஊறவிடவும்) தேங்காய்த் துருவல் - கால் கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை பச்சை மிளகாய் - சிறிதளவு குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - கால் கப் எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன் சர்க்கரை - ஒரு சிட்டிகை தேன் - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். பிறகு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, ஸ்வீட் கார்ன் முத்துகள், சர்க்கரை, தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும். பாலக் தால் தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 200 கிராம் பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்) சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு பூண்டு – 2 (பொடியாக நறுக்கவும்) சீரகம் - கால் டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளைக் குழைய வேகவிடவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாலக்கீரை, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். அபரிமிதமான இரும்புச் சத்துள்ள இந்த பாலக் தால் அனைவருக்கும் ஏற்றது. பாசிப்பருப்பு பக்கோடா தேவை: பாசிப்பருப்பு – 200 கிராம் பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பைக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பருப்புக் கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். இதை டீயுடன் சாப்பிடலாம் அல்லது மோர்க்குழம்பில் போட்டு ஊறவிட்டுப் பரிமாறலாம். மல்டி தால் வெஜ் மிக்ஸ் தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மசூர் பருப்பு தலா - 25 கிராம் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு கலவை - ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி – சிறிதளவு மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: குக்கரில் பருப்பு வகைகளுடன் நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்துக் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேகவைத்த கலவை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். காய்கறிகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்துகொடுப்பது நல்ல பலன் தரும். தால் கிச்சடி தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா 50 கிராம் அரிசி – 150 கிராம் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) நெய் – 100 கிராம் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை, லவங்கம், மராத்தி மொக்கு, ஏலக்காய் - தலா 2 சீரகம் - அரை டீஸ்பூன். செய்முறை: பருப்பு வகைகளுடன் அரிசி சேர்த்துக் களையவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் நெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரிசி - பருப்பு கலவை, மூன்று பங்கு தண்ணீர்விட்டு மூடி, 4 - 5 விசில்விட்டு இறக்கவும். சற்று ஆறியபின் திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும். மிக்ஸ்டு தால் பிளெய்ன் கறி தேவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவிட்டுக் களைந்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, மஞ்சள்தூள் சேர்த்து உதிர் உதிராகக் கிளறி இறக்கவும். பாசிப்பருப்பு - கடலைப்பருப்பு பண்டிகை பாயசம் தேவை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் வெல்லம் - 200 கிராம் தேங்காய்ப்பால், காய்ச்சிய பால் - தலா அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை – சிறிதளவு. செய்முறை: பருப்பு வகைகளைக் களைந்து குழைய வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்புக் கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அத்துடன் முந்திரி, திராட்சை, பால், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும். உடனடி உளுத்தம்பருப்பு பச்சடி தேவை: உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - கால் கப் பெருங்காயம் – சிறிதளவு உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - அரை டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தயிர் சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். நியூட்ரி தால் இட்லி தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம் பச்சரிசி – 50 கிராம் துருவிய கேரட், கோஸ் கலவை - கால் கப் பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) நெய் - 2 டீஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதனுடன் கேரட், கோஸ், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு - சீரகத்தூள், நெய் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். துவரம்பருப்பு - கறிவேப்பிலை துவையல் தேவை: துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2 கறிவேப்பிலை - 2 ஆர்க்கு தேங்காய்த் துருவல் - கால் கப் புளி - நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கடலை எண்ணெய் – சிறிதளவு உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்தத் துவையலை அடிக்கடி பயன்படுத்துவது அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. தால் பேஸ்கட் தேவை: கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா 100 கிராம் துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு எண்ணெய் - கால் கிலோ. செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் உப்பு, சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டியில் எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவு எடுத்து, கரண்டியின் உட்புறமாகக் கூடைபோல பரப்பி, அப்படியே கரண்டியுடன் சூடான எண்ணெயில் விடவும். சிறிது நேரத்தில் கரண்டி, கூடை இரண்டும் தனித்தனியே பிரிந்து வரும். சற்றே சிவந்தவுடன் எடுத்துவிடவும். இது 15 நாள்களுக்கு நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால், தால் பேஸ்கட்டில் சுண்டல், வறுத்த வேர்க்கடலை போட்டுப் பரிமாறலாம். உளுத்தம்பருப்பு - கீரை வடை தேவை: உளுத்தம்பருப்பு – 100 கிராம் நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு சோம்பு - சிறிதளவு பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, ஊறிய உளுத்தம்பருப்பைக் களைந்து சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, சோம்பு சேர்க்கவும். பிறகு வெங்காயம், கீரை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். மாவை வடைகளாகத் தட்டி நடுவே துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த கீரை வடை, அனைவரும் விரும்பி உண்ணும் வடையாகவும் அமையும். `பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது பழமொழி. கல்யாண விருந்தில் மட்டுமல்லாமல், அன்றாட வீட்டுச் சமையலிலும் பருப்பு இன்றியமையாத பொருளாக அங்கம்வகிக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பருப்பு மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, சைவ உணவு உண்பவர்களுக்குப் பருப்பிலிருந்தே பெருமளவுக்குக் கிடைக்கிறது. மேலும், பருப்பு வகைகளிலிருந்து வைட்டமின், இரும்புச் சத்து, நார்ச் சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட் போன்றவற்றையும் பெறலாம். பொதுவாக, பருப்பில் சாம்பார், ரசம், வடை, துவையல், பாயசம், சுண்டல் போன்றவற்றைச் செய்வது வழக்கம். இந்த இணைப்பிதழில் பருப்பை வைத்து, வழக்கமான ரெசிப்பிகளுடன் சூப், சாண்ட்விச், சாலட், ஃபிங்கர் ஃப்ரை, தால் பாஸ்கெட் என்று கலந்துகட்டி உணவு வகைகள் தயாரித்து அளித்து அசத்துகிறார் சமையல் கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். இவற்றை யெல்லாம் செய்து பரிமாறி... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் நீங்கள் `சமையல் சக்கரவர்த்தினி’யாக வலம்வர வாழ்த்துகள்! https://www.vikatan.com
  3. காலிஃபிளவர் பிரை செய்வது எப்படி சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காலிஃபிளவர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த பிரையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் - 1 கறிவேப்பிலை - கொஞ்சம் சீரகம் - அரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்புன் சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : காலிஃபிளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். காடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவரை போட்டு வதக்கவும். காலிஃபிளவர் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும். காலிஃபிளவர் முக்கால்பாகம் வெந்ததும் சில்லி சிக்கன் மசாலா பொ, கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும். காலிஃபிளவர் நன்றாக வெந்து மசாலா வாடை அடங்கியதும் இறக்கி பரிமாறவும். https://www.maalaimalar.com
  4. சூப்பரான முருங்கைப்பூ முட்டை பொரியல் முருங்கைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைப்பூ, முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு சீரகம் - கால் தேக்கரண்டி முட்டை - ஒன்று கறிவேப்பிலை - 5 சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவேண்டும். ப.மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவேண்டும். இப்பொழுது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும் நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார். http://www.maalaimalar.com
  5. கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி அ-அ+ சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கத்தரிக்காய் பொரியல் அருமையாக இருக்கும். இன்று இந்த பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிறிய கத்தரிக்காய் - 10 கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 5 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை : கத்திரிக்காயை நீளவாட்டில் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும் மீண்டும் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் கத்திரிக்காயை நீர் வடியவிட்டு எடுத்து அதில் போட்டு வதக்கவும். அடுத்து அதில் உப்பு சேர்த்துக் கலந்து மெதுவாக கிளறவும். வெந்து வரும் சமயம் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதனுடன் கலந்து கிளறவும். கத்தரிக்காய் பதமாக வெந்ததும் தீயை நிறுத்தி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். அருமையான சைடிஷ் கத்தரிக்காய் பொரியல் ரெடி. http://www.maalaimalar.com
  6. சீஸ் - நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சீஸ், நூடுல்ஸ் சேர்த்து சாண்ட்விச் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் - கால் கப், பிரெட் - 10 துண்டுகள், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பச்சை மிளகாய் - 2, கேரட் - 1 சிறியது, குடைமிளகாய் - பாதி, தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை : வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும். அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும். ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும். http://www.maalaimalar.com
  7. சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல் அ-அ+ குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால் குடைமிளகாய் வைத்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1 கிலோ பச்சை குடைமிளகாய் - 2 சிவப்பு குடைமிளகாய் - 1 வெங்காயம் - 4 பூண்டு - 6 பல் தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்புத்தூள் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும். பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடிகனமான சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும். பிறகு அதில் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவேண்டும். குடைமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். ஐந்து நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும். சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல் ரெடி. http://www.maalaimalar.com/
  8. மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே அலிபாபாவும் 40 திருடர்களும்.
  9. ஜீரண சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை சாதம் வயதானவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை சாதத்தை செய்து சாப்பிடலாம். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெற்றிலை - 4, கடுகு - அரை டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன வெங்காயம் - 6, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் - பாதி மூடி சாதம் - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : வெற்றிலை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்த வெற்றிலைக் கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும். இந்த சாதம் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். http://www.maalaimalar.com/
  10. பாகப்பிரிவினை கலர் கலர் ஆக பார்க்கும் காலத்தில் இப்படி கறுப்பு வெள்ளையை தேட வைத்து விட்டீர்களே.
  11. குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் புட்டு அ-அ+ காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறியை சேர்த்து புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த வெஜிடபிள் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி மாவு - 2 கப் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - சுவைக்கு தேங்காய் துருவல் - அரை கப் கேரட் - 2 பீன்ஸ் - 15 பட்டாணி - சிறிதளவு செய்முறை : கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதனுடம் பொடியாக நறுக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல் சேர்த்து அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு குழாயில், இந்த மாவை நிரப்பி புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும். சூப்பரான சத்தான வெஜிடபிள் புட்டு ரெடி. சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு அ-அ+ அரிசியை விட சிவப்பரிசியை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று சிவப்பரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிவப்பரிசி மாவு - 4 கப் தேங்காய் துருவல் - 1 கப் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.) புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும். பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும். சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. அதனை சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். http://www.maalaimalar.com
  12. கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.??
  13. சப்பாத்திக்கு அருமையான வெள்ளரிக்காய் கூட்டு அ-அ+ சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெள்ளரிக்காய் கூட்டு. இன்று இந்த கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் - 3, பாசிப்பருப்பு - 1 கப், தேங்காய் - துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அருமையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.
  14. சிந்திக்கத் தூண்டும் மலையாளப் பத்திரிகையின் கேலிச்சித்திரம்! தமிழர் தைத் திருநாளான இன்று இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான மாத்துருபூமி, கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகமயமாதல் சூழலில் நவீன ஊடகங்களின் ஆதிக்கத்தின் மத்தியில் தைப்பொங்கல் எவ்வாறான தாக்கத்தை அடைந்திருக்கிறது என்பதை குறித்து வரையப்பட்ட இக் கேலிச்சித்திரம் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. http://globaltamilnews.net/2018/61194/
  15. நாட்டுக் காய்கறி சமையல் முக்கூட்டு மசியல் தேவை: தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிய பரங்கி, பூசணி, சுரைக்காய் கலவை - ஒன்றரை கப் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், சீரகம் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 சோம்பு - அரை டீஸ்பூன். செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். பருப்பு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பருப்புடன் காய்கறிகள், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது, வேகவைத்த காய்கறிகள், பருப்புக் கலவை, மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு கிளறி இறக்கவும். மஞ்சள் பூசணி பாயசம் தேவை: தோல் சீவி, விதை நீக்கி துருவிய மஞ்சள் பூசணி - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் பால் - ஒரு லிட்டர் கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் குங்குமப்பூ - சிறிதளவு தேங்காய்த் துருவல் - கால் கப் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன் நெய் - சிறிதளவு நெய்யில் வறுத்த உலர் பூசணி விதை - ஒரு டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் - ஒரு துளி. செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூசணித் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் பால் ஊற்றி (சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்) நன்றாக வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம், கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ, பூசணி விதை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வெனிலா எசென்ஸ் விட்டுச் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும். பூசணிக்காய் வயிற்றுப்புண்ணை ஆற்றும். சுண்டைக்காய் கொத்சு தேவை: சுண்டைக்காய் - அரை கப் (நறுக்கி தண்ணீரில் போடவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப் கடுகு - அரை டீஸ்பூன் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் எள் - ஒரு டேபிள்ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு (கரைக்கவும்) கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 சீரகம் - அரை டீஸ்பூன் தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, பிறகு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். பின்பு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, எள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கொதிக்கும் கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இரும்புச் சத்துமிக்க சுண்டைக்காய் கொத்சு வயிற்றில் கிருமிகள் வராமலும் தடுக்கும். ஸ்டஃப்டு வெண்டைக்காய் தேவை: பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ (இரு முனைகளையும் நீக்கி, நீளவாக்கில் நடுவே கீறி விதைகளை எடுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு இந்த மசாலாவைக் கீறிவைத்துள்ள வெண்டைக்காய்க்குள் அடைக்கவும். கடலை மாவுடன் அரிசி மாவு, மைதா மாவு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஸ்டப்ஃபிங் செய்த வெண்டைக்காயை மாவில் முக்கி எடுத்துப்போட்டுப் பொரித்தெடுக்கவும் (மெதுவாக திருப்பிப் போட்டு வேகவிடவும்). இதை சாதத்துடன் பரிமாறலாம். அல்லது, சாஸ் தொட்டுத் தனியாகவும் சாப்பிடலாம். முருங்கைக்காய் மசாலா தேவை: முருங்கைக்காய் - 3 (விரல் நீள துண்டுகளாக்கவும்) பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - தலா அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்). செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி அரைக்கக் கொடுத் துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு அதனுடன் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, முருங்கைத் துண்டுகளைப் போட்டு மூழ்கும்வரை தண்ணீர்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் வற்றி காய் வெந்த பிறகு இறக்கிப் பரிமாறவும். முருங்கையில் இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. இது நரம்புகளுக்கு நல்லது. சுரைக்காய் பர்ஃபி தேவை: தோல், விதை நீக்கி துருவிய சுரைக்காய் - ஒன்றரை கப் தேங்காய்த் துருவல் - அரை கப் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா கால் கப் நெய் - சிறிதளவு பச்சை நிற ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சர்க்கரை - ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் நட்ஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: சுரைக்காய் துருவலில் நீர் இல்லாமல் ஒட்டப்பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெறும் வாணலியில் மைதா மாவு சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், சுரைக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பிறகு ஃபுட் கலர், நெய், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் சுருள கிளறி இறக்கி நெய் (அ) வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே நட்ஸ் தூவி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும். பாகற்காய் பிட்லை தேவை: வட்டமாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப் வெல்லம் - சிறிதளவு புளி - நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைக்கவும்) துவரம்பருப்பு - ஒரு கப் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 8 தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் எண்ணெய் - சிறிதளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து வறுத்து எடுத்து விழுதாக அரைக்கவும். துவரம்பருப்புடன் பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். நறுக்கிய பாகற்காயில் சிறிதளவு உப்பு தூவி அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து ஒட்டப்பிழிந்து எடுக்கவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் , பாகற்காய் சேர்த்து வேகவிடவும். பிறகு மசித்த பருப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து குழம்பு கெட்டிப்படும் வரை வேகவிடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்துக் குழம்பில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்தப் பாகற்காய் பிட்லை. பீர்க்கங்காய் பஜ்ஜி தேவை: லேசாக தோல் சீவி வட்டமாக நறுக்கிய பீர்க்கங்காய்த் துண்டுகள் - ஒரு கப் கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - அரை கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் ஓமம் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், ஓமம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பீர்க்கங்காயில் நீர்ச்சத்து உள்ளதால் உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். நாட்டுக் காய்கறிக் கலவை ஊறுகாய் தேவை: பொடியாக நறுக்கிய, விருப்பமான நாட்டுக் காய்கறிகள் கலவை (மாங்காய், கொத்தவரை, பூண்டு என சேர்க்கலாம்) - 2 கப் மிளகாய்த்தூள் - 50 கிராம் கடுகு - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - 3 வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 100 மில்லி உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்கறிகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு சுத்தமான துணியில் உலரவிடவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ஈரமில்லாத பாத்திரத்தில் காய்கறிக் கலவை, எலுமிச்சைக் கலவையைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்க்கவும். மேலே வெந்தயப்பொடி, சீரகத்தூள் சேர்த்துக் கிளறி, காற்றுப்புகாத பாட்டிலில் கைபடாமல் ஸ்பூனால் எடுத்துப் போட்டுச் சேகரிக்கவும். நன்கு குலுக்கிவிடவும். இதை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். இரும்புச் சத்து மிகுந்த இந்த ஊறுகாயைப் பரிமாறும்முன் ஒவ்வொரு முறையும் நன்கு கிளறிவிட்டுப் பரிமாறவும். வெள்ளைப் பூசணி - பயறு கூட்டு தேவை: விதை, தோல் நீக்கி சதுர துண்டுகளாக்கிய பூசணி - ஒரு கப் முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - சீரகம் - தலா அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்). அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4. செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர்விட்டு முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து வேகவிடவும், பாதி வெந்ததும் பூசணித் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தேங்காய் எண்ணெயில் தாளித்து கூட்டுடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மேலே மீதமுள்ள தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் பரிமாறவும். பூசணி வயிற்றுப் புண்ணில் இருந்து நிவாரணம் அளிக்கும். பரங்கிக்காய் சட்னி தேவை: தோல், விதை நீக்கி சதுரமாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - கால் கப் புளி - சிறிதளவு வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - கால் இன்ச் துண்டு பூண்டு - 2 பல் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பரங்கிக்காய், தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும். அதனுடன் தேங்காய்த் துருவல், புளி, வேர்க்கடலை, இஞ்சி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும். மிக்ஸ்டு நாட்டுக் காய்கறி அவியல் தேவை: நாட்டுக் காய்கறிகள் கலவை (தோல், விதை நீக்கி நீளவாக்கில் நறுக்கியது) - ஒரு கப் (வாழைக்காய், பூசணி, முருங்கை, புடலை இப்படி சேர்த்துக்கொள்ளலாம்) கெட்டித் தயிர் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - சிறிதளவு வாழை இலை - பாத்திரத்தை மூடிவைக்க தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன் (15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்) உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் காய்கறி கலவை, தயிர், அரைத்த விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி சேர்த்து நன்கு கலக்கவும். இதை வேறு பாத்திரத்துக்கு மாற்றி வாழை இலையால் மூடவும். பிறகு, அதன்மீது மற்றொரு மூடியை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பிறகு பரிமாறவும். தேங்காய் எண்ணெய் மற்றும் வாழை இலை மணத்துடன் காய்கறி அவியல் மிகவும் சுவையாக இருக்கும். கொத்தவரங்காய் - பருப்பு உசிலி தேவை: பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் - ஒரு கப் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்ந்து) - கால் கப் காய்ந்த மிளகாய் - 4 கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளுடன் மிளகாய் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். கொத்தவரங்காய், அரைத்த பருப்புக் கலவையைத் தனித்தனியாக ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த பருப்புக் கலவையை மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கொத்தவரங்காய், உப்பு, அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். சாதத்துக்குத் தொட்டு சாப்பிடலாம். பிரெட், சப்பாத்தி நடுவே வைத்தும் சாப்பிடலாம். வாழைப்பூ அடை தேவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - தலா ஒரு கப் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் - 8 கறிவேப்பிலை - சிறிதளவு தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, 6 மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மீதமுள்ள மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி, மஞ்சள்தூள், வாழைப்பூ, உப்பு சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வெண்டை - சுண்டை சூப் தேவை: பிஞ்சு வெண்டைக்காய் - 3 (பொடியாக நறுக்கவும்) சுண்டைக்காய் - 6 (இரண்டாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்) மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் லவங்கம் - ஒன்று பட்டை - சிறிய துண்டு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய், சுண்டைக்காய் சேர்த்து வதக்கி உப்பு, பருப்பு வேகவைத்த நீர், சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டுச் சூடாகப் பரிமாறவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்த சூப். வாழைத்தண்டு ரசம் தேவை: வாழைத்தண்டு (சிறியது) - ஒன்று (பொடியாக நறுக்கவும்) ரசப்பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்) பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) வெந்தயப்பொடி, கடுகு - தலா அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து மசிக்கவும். பாதி வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். பருப்புடன் வாழைத்தண்டு சாறு, தக்காளி, மீதமுள்ள வாழைத்தண்டு, உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்து நன்கு கரைத்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி தாளித்து ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிட்டு, எலுமிச்சைச் சாறு கலந்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். நாட்டுக் காய்கறிகள் மசாலா சாட் தேவை: துண்டுகளாக நறுக்கிய நாட்டுக் காய்கறிகள் கலவை - ஒரு கப் சாட் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன் ரெடிமேட் சிவப்பு இனிப்பு சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன் ரெடிமேட் கிரீன் சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்கறிகள் கலவையை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் காய்கறிகளுடன் உப்பு, தக்காளி, கிரீன் சட்னி, இனிப்பு சட்னி சேர்த்துக் கிளறவும். பிறகு கொத்தமல்லித்தழை, வெங்காயம், சாட் மசாலாத்தூள் தூவிக் கிளறவும். இரும்புச் சத்து மிகுந்த இந்த மசாலா சாட் பரிமாறும்போது ஓமப்பொடி தூவவும். மாங்காய் தால் தேவை: மாங்காய்த் துருவல் - ஒரு கப் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்த்து) - அரை கப் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து எடுத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் பருப்புக் கடைசல் சேர்த்துக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி, நாண் வகைகளுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். மாங்காய் நார்சத்து உள்ள காயாகும். பசியைத் தூண்டும். துவரை மசாலா சுண்டல் தேவை: உரித்த பச்சை துவரை - ஒரு கப் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு எடுக்கவும்) உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் தோல் சீவிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு சோம்பு - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - கால் கப் (அலசி ஆய்ந்தது) பூண்டு - 2 பல் எள் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று. செய்முறை: துவரையைத் தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, துவரையைப் சேர்த்துப் புரட்டி சாட் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். வாழைக்காய்ப் பொடி தேவை: நாட்டு வாழைக்காய் - 2 புளி - நெல்லிக்காய் அளவு முழு வெள்ளை உளுத்தம்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 3 பல் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சுக்குப் பொடி - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைக்காயைத் தோலோடு தீயில் சுட்டு எடுக்கவும். பிறகு தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சுக்குப் பொடி, பூண்டு, உப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு புளி சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். அதனுடன் வாழைக்காய் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றி எடுக்கவும். எலும்புகளுக்கு உறுதி தரக்கூடிய சத்தான, சுவையான பொடி தயார். இதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். பொரியல் செய்யும்போது இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கிளறி இறக்கலாம். அவரை - துவரைப் பொரியல் தேவை: நாட்டு அவரைக்காய் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் உரித்த பச்சை துவரை - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் - அரை கப் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் தக்காளி - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன். செய்முறை: தக்காளியை வெந்நீரில் போட்டுச் சில நிமிடங்கள் கழித்து எடுத்துத் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். துவரையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெந்த துவரையைச் சேர்த்துக் கிளறி தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். புடலை மசாலா பாத் தேவை: நறுக்கிய புடலங்காய் - ஒரு கப் நறுக்கிய பீர்க்கங்காய் - கால் கப் பாஸ்மதி அரிசி - ஒரு கப் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: பச்சை மிளகாய் - 2 பூண்டு - 3 பல் தேங்காய்த் துருவல் - கால் கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் சோம்பு, ஓமம் - தலா அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுக்கவும். அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு உதிர் உதிராக வடித்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், புடலங்காய் சேர்த்து வதக்கவும். பிறகு பீர்க்கங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவிடவும். காய் வெந்த பிறகு அரைத்த விழுது, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி ஆறவிடவும். இந்த மசாலாவைச் சாதத்தில் சேர்த்துக் கிளறி பரிமாறவும். புடலங்காய் புரதச்சத்து நிறைந்தது. கத்திரி - முருங்கைக் கறி தேவை: முருங்கைக்காய்த் துண்டுகள் - ஒரு கப் புளி - எலுமிச்சை அளவு நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - கால் கப் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - அரை கப் நெய் - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வாங்கிபாத் பவுடர் செய்ய: காய்ந்த மிளகாய் - 5 மல்லி (தனியா) , கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை பட்டை - சிறிய துண்டு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் வாங்கிபாத் பவுடர் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், முருங்கை, கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, குறைந்த தீயில் வேகவிடவும். காய்கள் நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் வாங்கிபாத் பவுடர், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்து மிகுந்த உணவு இது. கொத்தவரங்காய் வற்றல் தேவை: கொத்தவரங்காய் - கால் கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன். செய்முறை: கொத்தவரங்காயின் இரு ஓரங்களையும் நீக்கவும். பிறகு அலசி உப்பு, மஞ்சள்தூள், மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி வடிகட்டவும். இதை வெயிலில் நன்கு காயவிடவும் (முறுகலாக உடையும் பதம் வரை காயவிடவும்). பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை வற்றல் குழம்பு செய்யும்போது சேர்க்கலாம். அல்லது, தனியாக எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம். கொத்தவரங்காய் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். பாகற்காய் - கோதுமை புலாவ் தேவை: விதை நீக்கி, பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப் கோதுமை ரவை - ஒரு கப் சிறிய பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு கடுகு - ஒரு டீஸ்பூன் கிராம்பு, ஏலக்காய் - தலா 2 பிரியாணி இலை - ஒன்று இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி (சேர்த்து) - கால் கப் உப்பு, நெய், எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய், எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து புலாவில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்த புலாவ் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. ``நாம் எத்தனையோ பல நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவதைச் சென்ற தலைமுறையோடு மிகவும் குறைத்துவிட்டோம். இந்தப் பட்டியலில் நாட்டுக் காய்கறிகளும் அடங்கும். முருங்கைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கத்திரிக்காய், அவரை, துவரை, சுண்டைக்காய், பாகற்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், மாங்காய், கொத்தவரங்காய், கோவக்காய், வாழைக்காய், தேங்காய் இவையெல்லாம் நம்மூர் பாரம்பர்யக் காய்கறிகள். நம் வீட்டுத் தோட்டத்திலேயேகூட பயிரிடலாம். இவை சத்தில், சுவையில் இங்கிலீஷ் காய்கறிகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. நாட்டுக் காய்கறிகள் இரும்புச்சத்து மிக்கவை. பாகற்காய், கொத்தவரை, புடலை, சுண்டைக்காய் அவரைக்காயில் சுண்ணாம்பு சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன. கத்திரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து உள்ளது. முருங்கைக்காயில் இரும்புச் சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. நாட்டுக் காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் குடும்ப ஆரோக்கியத்தை உயர்த்துவோம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார், நாட்டுக் காய்கறிகளில் மசியல், பஜ்ஜி, கூட்டு, ஊறுகாய், அவியல், பாயசம், சூப், சாட் என சுவையான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார். இவற்றை எல்லாம் செய்து பரிமாறினால்... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் உங்கள் பெருமை கொடிகட்டிப் பறக்கும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.