Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. சிறுதானிய உணவுகள் இன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது. சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. பாரம்பர்ய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட சிறுதானிய உணவுகளை முழு நாளுக்கும் திட்டமிடும் வகையில் செய்து நமக்கு அளிக்கிறார் சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. குதிரைவாலி கிச்சடி தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப் காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 4 (இரண்டாகக் கீறவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க: பட்டை, லவங்கம் - 2 பிரியாணி இலை - 2 மராத்தி மொக்கு - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும். கம்பு - பருப்பு சோறு தேவையானவை: கம்பு - ஒரு கப் துவரம்பருப்பு - அரை கப் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை புளி - சிறிய நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு தாளிக்க: கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். வரகு - அன்னாசிப்பழக் குழைச்சல் தேவையானவை: வரகு அரிசி – ஒரு கப் அன்னாசிப்பழம் - 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்) அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப் வெல்லம் – அரை கப் சுக்குத்தூள் - அரை டீஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் செய்முறை: குக்கரில் வரகு அரிசியுடன் அன்னாசிப் பழச்சாறு, சர்க்கரை சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதை கடாயில் சேர்த்து அதனுடன் சுக்குத்தூள், வேகவைத்த சாதம், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும். குறிப்பு: மெதுவடையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தினை - தேங்காய்ப்பால் புலாவ் தேவையானவை: தினை அரிசி - ஒரு கப் தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தண்ணீர் - ஒரு கப் பச்சைப் பட்டாணி - அரை கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க: பட்டை - 2 சோம்பு - கால் டீஸ்பூன் பிரியாணி இலை - ஒன்று ஏலக்காய் - ஒன்று செய்முறை: தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். தினை-தேங்காய்ப்பால் புலாவ் ரெடி. குறிப்பு: அகலமான பாத்திரத்திலும் செய்யலாம். எளிதில் வெந்துவிடும். சாதமும் உதிரியாக இருக்கும். சாமை - நெல்லிக்காய்ப் புட்டு தேவையானவை: வடித்த சாமை சாதம் - ஒரு கப் நெல்லிக்காய் (சீவியது) - ஒரு கப் வெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வறுத்து அரைக்க: பொட்டுக்கடலை - கால் கப் கசகசா - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து, அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வடித்த சாமை சாதத்தில் துருவிய நெல்லிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கிளறி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால், சாமை - நெல்லிக்காய் புட்டு தயார். சோளம் - ஜவ்வரிசி மசாலா புலாவ் தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப் வறுத்த வேர்க்கடலைப் பொடி - அரை கப் வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன் (தோல் நீக்கவும்) பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) சர்க்கரை - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – தேவையான அளவு கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு சீரகம் - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, உலரவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு வேர்க்கடலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், ஸ்வீட் கார்ன் முத்துகள், ஜவ்வரிசி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும். ஸ்நோ ஸ்வீட் போளி தேவையானவை: பனிவரகு மாவு - ஒரு கப் கோதுமை மாவு, வெல்லம் - தலா அரை கப் எண்ணெய் - தேவையான அளவு பூரணம் செய்ய: நெய் - கால் கப் தேங்காய்த் துருவல் - ஒரு கப் பொடித்த வெல்லம் - அரை கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் செய்முறை: வெல்லத்துடன் அரை கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அந்த மாவை எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும். வாயகன்ற பாத்திரத்தில் பூரணம் செய்ய கொடுத்துள்ள வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்விட்டு கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக்கவும். திரட்டிய சப்பாத்தியின் நடுவே பூரண உருண்டைகளை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் வட்டமாகப் போளி போல தேய்க்கவும். எண்ணெய்விட்டு, சப்பாத்திக்கல்லைக் காயவைத்து போளிகளைப் போட்டு சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பூரி போல பொரித்தும் எடுக்கலாம். வரகு - மிளகு கிச்சடி தேவையானவை: வரகு அரிசி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு மிளகு - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது) தோல் நீக்கிய பூண்டு - 5 பற்கள் கடுகு – கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வரகு அரிசியைப் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடித்த மிளகு, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வரகு அரிசியைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து சிறிதளவு எண்ணெய்விட்டு மீண்டும் மூடி, வேகவைத்து இறக்கிப் பரிமாறவும். ராகி சேமியா மசாலா கிச்சடி தேவையானவை: ராகி சேமியா - ஒரு பாக்கெட் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) கேரட், பீன்ஸ், பட்டாணி - தலா கால் கப் சோம்பு - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: ராகி சேமியாவுடன் மூழ்கும் அளவு வெந்நீர்விட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி மூடிபோட்டு, மிதமான தீயில் வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து ராகி சேமியாவைச் சேர்த்து லேசாகக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் மூடிவைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து தீயை அதிகப்படுத்தி, சிறிதளவு எண்ணெய்விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கிப் பரிமாறவும். சாமை - பூண்டு மசியல் சாதம் தேவையானவை: சாமை சாதம் - ஒரு கப் தோல் நீக்கிய பூண்டு - 20 பற்கள் காய்ந்த மிளகாய் - 4 புளி - பெரிய நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். ஆறிய பிறகு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாமை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அப்பளத்துடன் பரிமாறவும்.
  2. வேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி இடியாப்ப பிரியாணி தேவையானவை: மீதமான இடியாப்பம் - 3 (உதிர்க்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - பாதி (பொடியாக நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு அன்னாசி மொக்கு, ஏலக்காய் - தலா 2 பிரியாணி இலை - ஒன்று கிராம்பு - 3 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மேலும் வதக்கவும். அதனுடன் இடியாப்பம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆலு பராத்தா தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப் மீதமான உருளைக்கிழங்கு மசியல் - கால் கப் உப்பு - கால் டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்திகளின் நடுவே சிறிதளவு உருளைக்கிழங்கு மசியலை வைத்து மூடி, மீண்டும் உருட்டித் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடான ஆலு பராத்தா ரெடி. கறிவேப்பிலை இட்லி தேவையானவை: மீதமான இட்லி - 3 (துண்டுகளாக நறுக்கவும்) கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு கறிவேப்பிலை பொடி, எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்த கறிவேப்பிலை இட்லி, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. உப்புமா லட்டு தேவையானவை: மீதமான ரவை உப்புமா - ஒரு கப் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை - தலா கால் கப் எண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். உப்புமாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு தட்டில் நாட்டுச் சர்க்கரையைப் போட்டு, இன்னொரு தட்டில் வறுத்த தேங்காய்த் துருவலைப் போடவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நாட்டுச் சர்க்கரையில் புரட்டி எடுக்கவும். பிறகு தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும். கீரை தோசை தேவையானவை: மீதமான அரைக்கீரை மசியல் - 2 டேபிள்ஸ்பூன் தோசை மாவு - ஒரு கப் எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: தோசை மாவுடன் கீரை மசியலைச் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். அனைவரும் விரும்பி உண்ணும் இந்தக் கீரை தோசையில் இரும்புச் சத்து அதிகம். கேக் பாப்ஸ் தேவையானவை: மீதமான கேக் துண்டுகள் - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உருக்கிய சாக்லேட் - கால் கப். செய்முறை: கேக்குடன் வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிறகு, உருண்டைகளை உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுக்கவும். சப்பாத்தி நூடுல்ஸ் தேவையானவை: மீதமான சப்பாத்தி - 3 (நீளவாக்கில் நறுக்கவும்) கேரட் துருவல், வேகவைத்த ஸ்வீட் கார்ன், வேகவைத்த பச்சைப் பட்டாணி – தலா 2 டேபிள்ஸ்பூன் குடமிளகாய் - பாதி (நீளவாக்கில் நறுக்கவும்) நறுக்கிய வெங்காயத்தாள் - அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கேரட் துருவல், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஸ்வீட் கார்ன், பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். பிறகு, சப்பாத்தியைச் சேர்த்து மேலும் வதக்கவும். அதன்மீது சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். இறுதியாக வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இந்த உணவு, இரும்புச் சத்து மிகுந்த உணவாகும். கொத்து பரோட்டா தேவையானவை: மீதமான பரோட்டா - 2 (சிறிய துண்டுகளாக்கவும்) தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: பரோட்டா துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுவிட்டு உதிர் உதிராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு உதிர்த்த பரோட்டா, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். இட்லி டிக்கா தேவையானவை: மீதமான மினி இட்லி - 3 இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - ஒரு கைப்பிடி அளவு பனீர் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு, சூடானதும் மினி இட்லி, இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். தோசைக்கல்லில் மீதமுள்ள வெண்ணெய்விட்டுச் சூடாக்கி குடமிளகாய், பனீர் துண்டுகள் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். டூத் பிக்கில் முதலில் ஒரு குடமிளகாய் துண்டு குத்தவும். அதன்மீது ஒரு பனீர் துண்டு. அடுத்து மினி இட்லி என வரிசையாக அடுக்கி பரிமாறவும். கொத்து பனீர் ரொட்டி தேவையானவை: மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 4 (சதுர துண்டுகளாக்கவும்) துருவிய பனீர் - ஒரு கைப்பிடியளவு பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப் வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்) கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் ரொட்டித் துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயைச் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு பனீர் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இறுதியாக வறுத்த ரொட்டியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சீஸ் தோசை தேவையானவை: மீதமான கேரட் பொரியல் - 2 டேபிள்ஸ்பூன் தோசை மாவு - அரை கப் சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசையாக ஊற்றவும். அதன்மீது கேரட் பொரியல், சீஸ் தூவி மூடி வேகவிடவும். சீஸ் உருகியதும் எடுத்துப் பரிமாறவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்த சீஸ் தோசை. சில்லி பரோட்டா தேவையானவை: மீதமான பரோட்டா - 3 (சதுரத் துண்டுகளாக்கவும்) கேரட் துருவல், நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய் – தலா கால் கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய வெங்காயத்தாள், சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா அரை டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, பரோட்டாக்களைச் சேர்த்துக் கிளறவும். அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். சாத அடை தேவையானவை: மீதமான சாதம் - ஒரு கப் கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன் வற்றல் பொடி - அரை டீஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சாதத்துடன் கடலை மாவு, வற்றல் பொடி, தயிர், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய்விட்டுத் தேய்த்து, மாவை அடையாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும். சீஸ் பால்ஸ் தேவையானவை: மீதமான சாதம் - ஒரு கப் ஆரிகானோ, தைம், மிளகுத்தூள் - தலா ஒரு சிட்டிகை கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன் மோசரெல்லா சீஸ் துண்டுகள், பிரெட் தூள் - தலா ஒரு கைப்பிடியளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: சாதத்துடன் ஆரிகானோ, தைம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் சீஸ் துண்டுகளை வைத்து உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். முருங்கைக்கீரை போண்டா தேவையானவை: மீதமான முருங்கைக்கீரை பொரியல் - கால் கப் கடலை மாவு - முக்கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு சேர்த்து போண்டா பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் முருங்கைக்கீரை பொரியல் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம். டிபன் சாம்பார் தேவையானவை: மீதமான பருப்பு - அரை கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பீட்ரூட் சாதம் தேவையானவை: மீதமான சாதம் - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பீட்ரூட் துருவல் - கால் கப் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துள்ள இந்தச் சாதத்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது மிக நல்லது. பிரெட் ஃபிங்கர்ஸ் தேவையானவை: மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 4 (விரல் போல நீளவாக்கில் நறுக்கவும்) கடலை மாவு - அரை கப் மிளகாய்த்தூள் உப்பு - தலா அரை டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கடலை மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, பிரெட் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஸ்பிரிங் ரோல் தேவையானவை: மீதமான கோஸ் பொரியல் - கால் கப் கோதுமை மாவு - ஒரு கப் உப்பு - கால் டீஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்திகளின் நடுவே கோஸ் பொரியலை வைத்து, பாய் போலச் சுருட்டி, தண்ணீர்தொட்டு ஓரங்களை ஒட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, சுருட்டிய ரோல்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். பிரெட் குலாப் ஜாமூன் தேவையானவை: மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 7 சர்க்கரை - ஒரு கப் ரோஸ் எசென்ஸ் - 2 துளி பால் பவுடர், பால் - தலா 4 டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 2 (தட்டவும்) எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டுத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டுப் பொடித்து எடுக்கவும். அதனுடன் பால் பவுடர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பாலை சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் ரோஸ் எசென்ஸ், தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் உருண்டைகளைப் பொரித் தெடுக்கவும். பொரித்த உருண்டைகளைச் சர்க்கரைப் பாகில் ஊறவிட்டுப் பரிமாறவும். கேரட் - பீட்ரூட் சாலட் தேவையானவை: மீதமான பீட்ரூட் பொரியல் - அரை கப் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப் கேரட் துருவல் - கால் கப் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: பீட்ரூட் பொரியலுடன் வெள்ளரிக்காய், கேரட், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள கேரட் - பீட்ரூட் சாலட் ரெடி. குறிப்பு: வெள்ளரிக்காய், உப்பு ஆகியவற்றைப் பரிமாறும்போது சேர்க்கவும். இல்லையென்றால் சாலட் நீர்த்துவிடும். வாழைப்பழப் பணியாரம் தேவையானவை: மீதமான தோசை மாவு - 3 கரண்டி வாழைப்பழம் - 2 (தோல் நீக்கி, துண்டுகளாக்கி மசிக்கவும்) உப்பு, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை நெய் - 4 டீஸ்பூன். செய்முறை: தோசை மாவுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழ விழுது சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் நெய்விட்டு உருக்கி, மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். மசாலா சாதம் தேவையானவை: மீதமான சாதம் - ஒரு கப் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு அன்னாசி மொக்கு - 2 பிரியாணி இலை - ஒன்று இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடியளவு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். இறுதியாக சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். வடைகறி தேவையானவை: மீதமான மசால்வடை (அ) பருப்பு வடை - 3 (சிறிய துண்டுகளாக்கவும்) வெங்காயம்- ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்றரை (பொடியாக நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு அன்னாசி மொக்கு - 2 பிரியாணி இலை - ஒன்று ஏலக்காய் - 2 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 4 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு வடைத் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். நம்ம ஊரு ஹுமூஸ் தேவையானவை: மீதமான வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல் - ஒரு கப் எலுமிச்சைச் சாறு -அரை டீஸ்பூன் பூண்டு - 2 பல் ஆலிவ் எண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சுண்டலுடன், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிரெட்டுடன் பரிமாறவும். நம்ம ஊரு ஹுமூஸ், இரும்புச் சத்து மிகுந்தது.
  3. மஷ்ரூம் ரெசிப்பிக்கள் II மஷ்ரூம் ஸ்டஃப்டு பரத்தா II மதுரை காளான் II மஷ்ரூம் செட்டிநாடு II காரைக்குடி பொரித்த மஷ்ரூம் II மஷ்ரூம் மிளகு சூப் மஷ்ரூம் ஸ்டஃப்டு பரத்தா தேவையானவை: கோதுமை மாவு- கால் கிலோ உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்) முழு பூண்டு -1 (பொடியாக நறுக்கவும்) மஷ்ரூம் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) சீரகத்தூள் - அரை டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் நெய் - தேவையான அளவு செய்முறை: ஒரு பவுலில் கோதுமை மாவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல், பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஷ்ரூம், பூண்டு போட்டு வதக்கி மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். பிசைந்து வைத்து இருக்கும் மாவை சிறிய வட்டமாக தேய்த்து, அதில் கிளறிய ஸ்டஃபிங்கை நடுவில் வைத்து மூடி, மீண்டும் உருண்டையாக்கி வட்டமாக தேய்க்கவும். இனி தோசைக்கல்லில் நெய் ஊற்றி சப்பாத்தியாக வேக வைத்து எடுக்கவும். மதுரை காளான் தேவையானவை: காளான் - 200 கிராம் முழு பூண்டு - 1 (இடித்துக்கொள்ளவும்) கறிவேப்பிலை - சிறிதளவு (இடித்துக்கொள்ளவும்) சோள மாவு -ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை - 1 (சாறு எடுக்கவும்) காய்ந்த மிளகாய்- 3 (இடித்துக்கொள்ளவும்) காய்ந்த மிளகாய் - 5 (ஊற வைத்து அரைத்து, பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ளவும்) இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: காளானைக் கழுவி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் இதனுடன் சேர்த்துக் கிளறி, எண்ணெயில் இரண்டு நிமிடம் போட்டு பொரித்து எடுக்கவும். * மஷ்ரும் ரெசிப்பிகளை வழங்கியவர் செஃப் பழனிமுருகன் மஷ்ரூம் செட்டிநாடு தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம் தக்காளி- 2 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்- அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - தேவையான அளவு சோம்பு - அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்) அன்னாசிப் பூ - 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 4 கறிவேப்பிலை - சிறிதளவு வறுத்து அரைக்க : தேங்காய் துருவியது - 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் பொட்டுக்கடலை - அரை டேபிள்ஸ்பூன் மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன் செய்முறை: வறுத்து அரைக்க வேண்டியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அன்னாசிப் பூ, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை போனதும் தக்காளி, அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கிளறவும். இதில் நறுக்கிய மஷ்ரூம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்தபின், கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கிவிடவும். காரைக்குடி பொரித்த மஷ்ரூம் தேவையானவை: மஷ்ரூம் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சை - 1 (சாறு எடுத்து வைக்கவும்) மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு ஸ்பிரிங் ரோல் ஆனியன் - சிறிதளவு வறுத்து அரைக்க : மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் சோம்பு - கால் டீஸ்பூன் பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன் (எண்ணெய் விடாமல் வறுத்து பேஸ்டாக்கி கொள்ளவும்) செய்முறை: மஷ்ரூமை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பவுலில் மஷ்ரும் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, எலுமிச்சைச் சாறு, வறுத்து அரைத்த பேஸ்ட், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) போன்றவற்றைச் சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருண்டையில் மசாலா ஒட்டவில்லை என்றால், ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளலாம். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து ஸ்பிரிங் ரோல் ஆனியனால் அலங்கரித்துப் பரிமாறவும். மஷ்ரூம் மிளகு சூப் தேவையானவை: மஷ்ரூம் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் புதினா - சிறிது (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - சற்று அதிகமாக எடுத்துக்கொள்ளவும் கறிவேப்பிலை -சிறிதளவு மிளகுத்தூள் - தேவையான அளவு வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, மஷ்ரூமை சேர்த்து வதக்கவும். மஷ்ரூம் லேசாக வதங்கும்போது தக்காளியையும் போட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். இறக்கும்போது மிளகுத்தூள், உப்பு போட்டு இறக்கவும்.
  4. கிச்சடி ஓர் உணவு ஒரு நாட்டின் தேசிய உணவாக என்னென்ன கல்யாண குணங்கள் தேவை? அந்த உணவு, அந்த தேச மக்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த உணவு, அந்த தேசத்துக்கே உரிய முக்கியமான விளைபொருள்களைக் கொண்டு சமைக்கப்படுவதாக இருக்க வேண்டும். அந்த உணவு, அந்த தேச மக்களின் பாரம்பர்ய உணவாக, கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். முக்கியமான பண்டிகைக் கால உணவாகவும் இருக்க வேண்டும். சரி, இத்தனைக் குணாதிசயங்களும் பொருந்திய இந்தியாவின் தேசிய உணவு எது? ‘எதுவுமில்லை’ என்பது பதில் இல்லை. மேலே சொன்ன செம்மையான குணங்களுடன் பல உணவுகள் இருப்பதால் எதைச் சொல்வது என்பதில் குழப்பமுண்டு. காரணம், பல இன மக்களும், உணவுக் கலாசாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடி அந்தத் தகுதியுடன் பார்க்கப்படுகிறது. அது அவ்வளவு பாரம்பர்யமான உணவா? இந்திய மக்களின் உணவுக் கலாசாரத்துடன் அது பின்னிப்பிணைந்ததா? அதன் வரலாறு என்ன? `கிச்டி’ அல்லது `கிச்சிரி’ அல்லது `கிச்சடி’ என்பது தெற்காசிய உணவு. அதன் வயது இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேல் இருக்கலாம். khicc என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைத்தது என்று பொருள். Khichdi அல்லது Khichiri என்ற சொல்லுக்கு மூலம் அதுவே. அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்திரகுப்த மௌரியர் காலத்தில், அதாவது கி.மு 305 சமயத்தில் இந்தியாவுக்கு வந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் தளபதி செலூகஸ் நிகாடர், ‘அரிசியையும் பருப்பையும் சேர்த்துச் சமைத்து உண்பது இந்த மக்களின் முக்கிய உணவு’ என்று பதிவு செய்துள்ளார். முகலாயர்களின் அரண்மனைகளில் தினசரி உணவாக கிச்சடி கமகமத் திருக்கிறது. அரிசி, பாசிப்பருப்பு, நெய் சம அளவில் எடுக்கப்பட்டு, அவற்றுடன் சில மசாலாக்களும் சேர்த்துச் செய்யப்பட்ட கிச்சடி, பேரரசர் அக்பரின் விருப்பத்துக்குரிய உணவாக இருந்திருக்கிறது. அக்பரின் அவைக்குறிப்புகளைச் சொல்லும் Ain-i-Akbari-ல் விதவிதமான கிச்சடிகளின் செய்முறைகள் சொல்லப்பட்டுள்ளன. பேரரசர் ஜஹாங்கீர் என்றைக்கெல்லாம் உணவில் இறைச்சியைத் தவிர்க்க விரும்பி னாரோ அன்றைக்கெல்லாம் `லஸிஸா’ விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். அது, குஜராத்திய பாணி கிச்சடி. ஆடம்பரத்தையும் சிறப்பு உணவுகளையும் ஒதுக்கிய பேரரசர் ஔரங்கசீப்பின் வாய்க்குப் பிடித்த உணவாகவும் கிச்சடி இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவாத் சமஸ்தானத்தின் நவாப்பாக இருந்த நஸ்ருதீன் ஷா, போஜனப் பிரியர். அவருக்கு அரிசி, பருப்புடன் பாதாம், பிஸ்தா, உயர்ரக மசாலாக்கள் எல்லாம் கலந்து குறைந்த நெருப்பில் நீண்ட நேரம் வேகவைத்துத் தயாரிக்கப்படும் ராயல் கிச்சடி விருப்பத்துக்குரியதாக இருந்திருக்கிறது. காலனியாதிக்கக் காலத்தில் கிச்சடியின் சுவை பிரிட்டிஷாரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அந்த பிரிட்டிஷ் இந்தியக் கிச்சடியின் பெயர் Kedgeree. இது அசைவ கிச்சடி. அரிசி, பதப்படுத்தப்பட்ட மீன், வோக்கோசு என்ற மல்லி வகை, கறி மசால், முட்டை, வெண்ணெய் போன்ற பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்திய-ஐரோப்பியக் கலவை கிச்சடி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே Kedgeree-ஐ பிரிட்டிஷார் லண்டனுக்குக்கொண்டு சென்றுவிட்டனர். அங்கேயும் காலை நேர உணவாக அது பரவ ஆரம்பித்தது. அப்போதைய சமையல் குறிப்புப் புத்தகங்கள் சிலவற்றிலும் Kedgeree இடம்பிடித்தது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலோ-இந்தியர்கள் மத்தியில் இது முக்கியமான உணவாக இருந்தது. கிழக்கே வங்கப் பகுதியில் எட்டிப்பார்த்தால் கிச்சடி அங்கே Khichuri என்றழைக்கப்படுகிறது. நெய்யின் சுவை தூக்கலாக இருக்கும். கிச்சுரிக்குப் பக்கபலமாகப் பெங்காலி பாணி ஊறுகாய், ஆம்லெட், இறைச்சி, மீன், உருளை வறுவல் போன்றவை பரிமாறப்படுகின்றன. அரிசியுடன் பல்வேறு தானியங்கள் சேர்த்துச் சமைக்கப்படும் Joga Khichuri வங்க மக்களின் விருப்பத்துக்குரிய உணவு. மேற்கில் குஜராத்தின் சில பகுதிகளில் மஞ்சள்தூள் சேர்த்துச் சமைக்கப்பட்ட சோறுடன் கடலை மாவும் மசாலாக்களும் கொண்டு தயாரிக்கப்பட்ட குழம்பு (Khadi) சேர்த்து உண்பதே கிச்சடி என்றழைக்கப்படுகிறது. குறைவான எண்ணெயும் காரமும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கிச்சடி, குஜராத்தியர்களால் பத்திய உணவாகவும் கருதப்படுகிறது. பீகார் மக்களையும் கிச்சடியையும் பிரிக்கவே முடியாது. அரிசி, பருப்பு, கரம் மசாலா சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கிச்சடி, சில வகை பராத்தாக்களுமே அவர்களது தினசரி மதிய உணவு. குறிப்பாக, நமக்கு ‘சனி நீராடு’ என்பதுபோல, அவர்கள் சனிக்கிழமைதோறும் கிச்சடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஹரியானாவின் கிராமப் பகுதிகளில் கம்பும் பாசிப்பருப்பும் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிச்சடி, அன்றாட உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதில் தயிரும் சர்க்கரையும் கலந்து இனிப்பாக உண்ணும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். ஒடிஸாவில் இந்த உணவு, Khechidi என்றழைக்கப்படுகிறது. பூரி ஜெகன்னாத் கோயில் பிரசாதங்களில் Adahengu khechidi என்பதும் ஒன்று. இங்கே தெற்குப்பக்கம் எட்டிப் பார்த்தால், ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்களின் மெனுவிலும் கிச்சடி முக்கிய உணவாக இருந்திருக்கிறது. அவை Keeme ki khichdi என்ற அசைவ கிச்சடி. மேற்படி கிச்சடியுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட இறைச்சியையும் சேர்த்துச் சமைத்திருக்கிறார்கள். அதற்குத் துணையாக Khatta என்ற புளிப்புச் சுவை தூக்கலான சூப்பையும் (புளி, வெங்காயம், சீரகம், மிளகாய் கலந்தது) பரிமாறியிருக்கிறார்கள். கர்நாடகாவுக்கு வந்தால், அங்கே Bisi bele huli anna என்பதும் கிச்சடி வகையில் தான் வருகிறது. அரிசி, பருப்பு, அந்தப் பருவத்தில் கிடைக்கும் காய்கறிகள், புளி, வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய், காய்ந்த மிளகாய், மராட்டி மொக்கு உள்ளிட்டவை எல்லாம் சேர்த்துச் சமைக்கப்படும் பிசிபேளா பாத்தே அது. இந்த வகை உணவு, மைசூர் அரண்மனையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. மைசூர் ராஜ குடும்பத்தினரது விருப்பத்துக்குரிய உணவாகவும் இது காலம் காலமாக இருந்து வருகிறது. இன்னும் தெற்கே நம் தமிழகத்துக்கு வந்தால், மேற்படி தென்னிந்தியக் கிச்சடி யின் சற்றே மாறுபட்ட வடிவம்தான் நமக்கு கூட்டாங்சோறு. அதில் காய்கறிகள் சேராமல் பாசிப்பருப்புக்குப் பதிலாக, அரிசியுடன் துவரம்பருப்பு சேர்த்துச் சமைக்கப்படுவது பருப்புச் சோறு அல்லது துவரம்பருப்புச் சோறு. கொங்கு மண்டலத்தில் அதுவே ‘அரிசியும் பருப்பும்’ என்று அழைக்கப்படுகிறது. அரிசி, பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துச் சமைக்கப்படும் தென்னிந்தியர்களின் காலை உணவுகளின் ஒன்றான பொங்கல் / வெண்பொங்கலையும் இந்த வகையில்தான் சேர்க்க வேண்டும். அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைத்து உண்பது என்பது தென்னிந்திய மக்களின் பழைமையான உணவுக் கலாசாரம்தான். ஆக, அரிசியும் பருப்பும் சில நறுமணப் பொருள்களும் சேர்த்துச் சமைக்கப்படுவது என்பது இந்தியா முழுக்க எளிய மக்களின், விவசாய மக்களின் அடிப்படை உணவாக, காலம் காலமாக இருந்து வருகிறது. அரிசியுடன் சேர்க்கப்படும் பருப்பு மாறுபடலாம். மசாலாக்கள் மாறுபடலாம். செய்முறையில் வித்தியாசம் இருக்கலாம். பிராந்தியத்துக்கேற்ப ருசி மாறுபடலாம். ஒவ்வொரு இன மக்களும் அதற்கு ஒவ்வொரு பெயர் வைத்திருக்கலாம். காரத்துக்குப் பதில் சிலர் இனிப்பைச் சேர்த்துச் சமைக்கலாம். சைவத்துக்குப் பதில் இறைச்சியும் சேர்த்துச் சமைக்கலாம். இப்படி அரிசி, பருப்பு பிரதானமாக இருக்க, அதனுடன் கூடுதலாகச் சில பல நறுமணப் பொருள்கள் சேர்த்து வேகவைத்துச் சமைக்கப்படும் பதார்த்தங்கள் அனைத்தையுமே ‘கிச்சடி’ என்ற பொதுச்சொல்லின் கீழ் நம் வசதிக்காக வகைப்படுத்தலாம். எனவே, தேசமெங்கும் வியாபித்திருக்கும் கிச்சடியை India’s superfood என்கிறார்கள். ‘இந்திய உணவுகளின் ராணி’ என்றும் அழைக்கிறார்கள். அதை ‘கிச்சடி’ என்ற பொதுப்பெயருடன் தேசிய உணவாக அறிவிக்க இயலாது என்றாலும், பல்வேறு இந்திய மாநிலங்களின் அடிப்படை உணவு என்ற அந்தஸ்து அதற்கு என்றும் உண்டு. அயல்தேச கிச்சடிகள் * Khichra என்பது தெற்காசிய நாடுகளில் இஸ்லாமியர்கள் உண்ணும் கிச்சடி வகை உணவு. குறிப்பாக ரமலான் நோன்பு காலத்தில் இந்த உணவு அதிகம் சமைக்கப்படுகிறது. பாகிஸ்தான் மக்களின் அன்றாட உணவுகளில் Khichra-ம் ஒன்று. இறைச்சியும் பருப்பு வகைகளும் சேர்த்துச் சமைக்கப்படும் இது, அங்கே சாலையோரக் கடைகளில்கூட தாராளமாகக் கிடைக்கும் உணவு. * கிச்சடியின் எகிப்திய வடிவம்தான் குஷாரி. அரிசி, பருப்பு, மக்ரோனி கலவையுடன் சாஸ் வகைகள், வினிகர், வெங்காயம், கொண்டைக்கடலை உள்ளிட்டவை சேர்த்துத் தயாரிக்கப்படும் பழைமையான உணவு. இதில் அசைவம் சேர்க்கப்படுவதில்லை. * பிஜி தீவுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் பிற இன மக்கள் மத்தியிலும் கிச்சடி முக்கியமான உணவு. இங்கே அரிசி, பருப்பு, மசாலா, வெங்காயம், பூண்டு போன்றவற்றையெல்லாம் சேர்த்து வறுத்தும் வதக்கியும் பின்பு தண்ணீர் சேர்த்து வேகவைத்தும் கிச்சடி தயாரிக்கிறார்கள். ஒருமுறை அக்பர் பீர்பாலிடம் சவால் விட்டாராம். கீழே நெருப்பு இருக்க, மேலே மிக உயரத்தில் உள்ள பாத்திரத்தில் கிச்சடியை வேக வைத்துத் தயாரிக்க வேண்டுமென்பதே சவால். இந்த நாடோடிக் கதை அங்கே பிரபலம் என்பதால், குறிப்பிட்ட பணியை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை, ‘கிச்சடி தயாராக எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று பொதுவாகக் கேட்பது அந்த மக்களது வழக்கமாக இருக்கிறது. இவையும் கிச்சடியே! * வடதமிழகத்தில் ரவையும் மசாலாக்களும் கொண்டு தயாரிக்கப்படும் உணவுக்கு ‘கிச்சடி’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. `ரவாபாத்’ என்றும் இதை அழைக்கலாம். உப்புமா வகையான இந்த உணவு பெரும்பாலான உணவகங்களில் கிடைக்கிறது. * தென்தமிழகத்தில் கத்திரிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற காய்கறிகளைக்கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு வகைக்கு ‘கிச்சடி’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இவை இட்லி, தோசை வகைகளுடன் சாம்பாருக்குப் பதிலாக உண்ணப்படுகிறது. * கேரளாவில் ஓணம் விருந்தில் கிச்சடி என்ற பதார்த்தமும் ஒன்று. வெண்பூசணி, வெள்ளரி, சீரகம், தயிர் எல்லாம் சேர்த்துச் செய்யப்படும் கூட்டு வகை அது.
  5. “புதுமையான ரெசிப்பிகளே என் பலம்!” ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர் ‘குக்கரி வெப்சைட்’டில் கலக்கும் ஷர்மிலி “ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகும் சமைக்கக் கற்றுக்கொள்ளவில்லை. இன்று என் வாழ்க்கை அப்படியே என்னை வேறு திசையில் கொண்டுவந்து வெற்றியாளராக நிறுத்தியிருக்கிறது” உற்சாகமாகப் பேசுகிறார், கோயம்புத்தூரில் வசிக்கும் ஷர்மிலி ஜெயப்பிரகாஷ்.sharmispassions.com என்ற தன் குக்கரி வெப்சைட்டில் பிஸியாக இருப்பவர், அது உருவான கதையைச் சொன்னார்... ``எம்.சி.ஏ முடித்த பின்னர், பல ஆண்டுகளாக ஐ.டி வேலையில் இருந்தேன். திருமணத்துக்குப் பின்னர்தான் என் தோழிகள் பலரும் சமைக்கக் கற்றுக் கொண்டனர். ஆனால், எனக்கு அப்போதும் அந்த அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில், என் அம்மா என்னுடன் இருந்ததால், தண்ணீர் குடிக்க மட்டுமே கிச்சனுக்குள் சென்றுவந்தவளாக இருந்தேன். ஒரு திருப்பமாக நான் கர்ப்பமடைந்த பின், நான் சாப்பிடுவது எனக்குள் வளரும் குட்டி உயிருக்குமானது என்றான பிறகு, சாப்பாட்டின் மீது என் கவனம் அதிகரித்தது. ரோக்கியமான உணவுகள் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தபோது, `உணவு என்பது இவ்வளவு பெரிய உலகமா?’ என்று அசந்தே விட்டேன். ‘நெட்டில் நீ பார்த்து வியக்கும் அந்த உலகம் ஆரம்பிப்பது, நம் வீட்டுக் கிச்சனில் இருந்துதான்’ என்று அம்மா சொல்ல, ஆசை ஆசையாகச் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 2009-ல் ஃபுட் ப்ளாகிங் (Food Blogging) எழுத ஆரம்பித்தேன். அது நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பு இன்றுவரையும் தொடர்கிறது. 2012-ல் என் ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தை வளர்ப்பிலும், ரெசிப்பிகளிலும், என் வலைதளத்திலும் கவனம் செலுத்தினேன். அம்மாவின் கைப்பக்குவமே நான் படித்த பாடங்கள். புதுமையான ரெசிப்பிகளே என் வலைதளத்தின் பலம். என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகள் சூழ்ந்திருப்பதால், வீடியோக்களில் கவனம் செலுத்த இயலவில்லை. என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் கிடைத்திருப்பதால், என் எண்ணங்கள் எல்லாம் செயலாகி வருகின்றன. எனவே, விரைவில் வித்தியாசமான ரெசிப்பிகளை வீடியோக்களுடனும் பதிவிடுவேன். பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கலாசாரங்களை இணைத்துச் செய்யப்படும் உணவுகளுக்கு ‘ஃப்யூஷன் ரெசிப்பிகள் (Fusion Recipes)’ எனப் பெயர். இதற்கென வரைமுறைகள் எதுவும் இருக்காது. விருப்பம்போல் செய்து சாப்பிடலாம். நம் கற்பனைத்திறனுக்குச் சவால் என்றே சொல்லலாம். இங்கு ஐந்து ஃப்யூஷன் ரெசிப்பிகளை வழங்குகிறேன்... வாருங்கள் சுவைக்கலாம்!” செஷ்வான் தோசை தேவையானவை: தோசை மாவு - ஒரு கப் பூண்டு விழுது - 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (வெள்ளை) - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (பச்சை) - ஒரு டேபிள்ஸ்பூன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப் நீளவாக்கில் நறுக்கிய பச்சை நிற குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன் நீளவாக்கில் நறுக்கிய கேரட் - கால் கப் நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப் செஷ்வான் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு பீட்சா பராத்தா தேவையானவை: சப்பாத்தி மாவு - அரை கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய சிவப்பு குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன் உலர்ந்த ஆரிகானோ தூள் - கால் டீஸ்பூன் உலர்ந்த மிளகாய் செதில்கள் - கால் டீஸ்பூன் வேகவைத்த சிறிய சோளம் - 2 பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல் – கால் கப் உப்பு - தேவையான அளவு பீட்சா பணியாரம் தேவையானவை: தோசை மாவு - ஒரு கப் நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - அரை கப் கேரட் துருவல் - கால் கப் உலர்ந்த ஆரிகானோ தூள் - கால் டீஸ்பூன் உலர்ந்த மிளகாய் செதில்கள் - கால் டீஸ்பூன் பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல் – கால் கப் உலர்ந்த ஆரிகானோ தூள், உலர்ந்த மிளகாய் செதில்கள் (மேலே தூவ) - சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு இட்லி சாண்ட்விச் தேவையானவை: இட்லி - 3 சீரகம் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - கால் கப் உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயத் துண்டுகள் - 3 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காய தோசை வாஃபிள்ஸ் தேவையானவை: தோசை மாவு - 2 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  6. நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. சத்தான சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை பழம் - 1, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, மஞ்சள்தூள் - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. தாளிக்க : கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு. செய்முறை : மாதுளை முத்துக்களை தனியாக உதிர்த்து வைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி!
  8. லெமன் பெப்பர் மீன் வறுவல் குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். இன்று லெமன், பெப்பர் சேர்த்து மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : வஞ்சிரம் மீன் - அரை கிலோ இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் லெமன் சாறு - 3 ஸ்பூன் கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் செய்முறை : வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு பொடி, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையில் மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு புரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும். சுவையான லெமன் பெப்பர் மீன் வறுவல் ரெடி http://www.maalaimalar.com
  9. சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா சிக்கனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து குருமா செய்தால் சூப்பராக இருக்கும். இதை இட்லி, தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 10 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தனியா தூள் - 3 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி உப்பு, எண்ணெய் - தேவையான அளவு தாளிக்க : கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை அரைத்து திக்காக பால் எடுக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கவும். இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா ரெடி.
  10. 30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் தண்ணிக்குழம்பு தேவை: துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் புளி - பெரிய நெல்லிக்காய் அளவு வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் துவரம்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கலவை, தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (ரசம் போல தண்ணீர் அதிகமாகச் சேர்த்து இளங்குழம்பாகத் தயாரிக்கவும்). சும்மா குழம்பு  தேவை: தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 3 பல் புளி - பெரிய நெல்லிக்காய் அளவு சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகுச் சாம்பார் பொடி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பாசிப்பயறு இளங்குழம்பு தேவை: பாசிப்பயறு - அரை கப் புளி - பெரிய நெல்லிக்காய் அளவு வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பட்டை - சிறிய துண்டு காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 4 பல் (தட்டவும்) கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் பாசிப்பயறைச் சேர்த்து வாசனைவரும் வரை வறுத்து வேகவைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, கொதிக்கும் குழம்புடன் சேர்த்து இறக்கவும். எண்ணெய்க் கத்திரிக்காய்க் குழம்பு தேவை: குட்டி கத்திரிக்காய் - 10 (நான்காகப் பிளந்து, உப்பு கலந்த நீரில் கழுவி எடுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 10 பல் தக்காளி - 3 (விழுதாக அரைக்கவும்) புளி (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்) - சிறிதளவு சாம்பார் பொடி - 4 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன் எண்ணெய் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் வெந்தயம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சீரகம் - கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி விழுது, சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, 2 கப் தண்ணீர், கத்திரிக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கத்திரிக்காய் நன்றாக வெந்த பின் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கவும். பறங்கிக்காய்க் குழம்பு தேவை: பறங்கிக்காய் - ஒரு கீற்று (தோலுடன் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 10 பல் தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்) சாம்பார் பொடி - 4 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, பறங்கிக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு, சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, புளிக்கரைசல், 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு திறந்து, லேசாக மசித்து, வேர்க்கடலைப் பொடியைத் தூவி மீண்டும் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக கெட்டியானதும் இறக்கவும். பலாக்காய்ப் பிரட்டல் தேவை: பலாக்காய் – அரை கிலோ உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – ஒன்று மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் தக்காளி - 2 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி – ஒரு துண்டு பூண்டு - 3 பல் சோம்பு, சீரகம், கசகசா – தலா ஒரு டீஸ்பூன் முந்திரி - அரை டேபிள்ஸ்பூன் (நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்). தாளிக்க: சோம்பு - கால் டீஸ்பூன் பட்டை - சிறிய துண்டு பிரியாணி இலை - ஒரு துண்டு. செய்முறை: உருளைக்கிழங்கு, பலாக்காயைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, வேகவைத்த பலாக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி, நன்கு சுருள வதக்கி இறக்கவும். வெண்டைக்காய்ப் பச்சடி தேவை: வெண்டைக்காய் – கால் கிலோ (சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) துவரம்பருப்பு (மலர வேகவைத்தது) - அரை கப் தக்காளி – மூன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு புளி – நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்) சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: கடாயில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு, வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடியைச் சேர்த்து லேசாகக் கிளறி, புளித்தண்ணீரை ஊற்றிக் கலக்கவும். வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போய், காய்கள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். கத்திரிக்காய்த் திரக்கல் தேவை: கத்திரிக்காய் - 4 (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பட்டை - சிறிய துண்டு பிரியாணி இலை - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் தக்காளி - 2 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு - 3 பல் சோம்பு - ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உடைத்த முந்திரி - தலா அரை டேபிள்ஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பட்டை, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். பிறகு அரைத்த விழுது, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். இதைக் குழிப்பணியாரம், ரவா இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தியுடன் பரிமாறலாம். டிபன் சாம்பார் தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்) கீறிய பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப) புளி - பெரிய நெல்லிக்காய் அளவு சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன் வெந்தயம் – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். முனுக்கி வைத்த சாம்பார் தேவை: வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் பச்சரிசி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 6 (இதுவே முனுக்கிய பொடி) தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் முனுக்கிய பொடியை மூன்று கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இனிப்புச் சீயம் தேவை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா அரை கப் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. பூரணம் செய்ய: மலர வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப் தேங்காய்த் துருவல் - அரை கப் பொடித்த வெல்லம் - ஒன்றரை கப் ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை நெய் - 3 டீஸ்பூன். செய்முறை: வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பிறகு, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி, இறக்கி ஆறவிடவும். இதுவே பூரணம். பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு சேர்த்துக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். பூரணத்தை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பூரண உருண்டைகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். கவுனி அரிசி கீர் தேவை: கவுனி அரிசி - கால் கப் காய்ச்சாத பால் - ஒரு லிட்டர் சர்க்கரை - முக்கால் கப் கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கவுனி அரிசியைக் கழுவி மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதே தண்ணீருடன் குக்கரில் வைத்து மூடி, ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிறுதீயில் 15 நிமிடங்கள் வைத்து, பிறகு இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டராகும் வரை காய்ச்சவும். இதனுடன் அரைத்த கவுனி சாதம், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக சர்க்கரை சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம். கவுனி அரிசி இனிப்பு தேவை: கவுனி அரிசி - ஒரு கப் சர்க்கரை - ஒன்றரை கப் தேங்காய் - ஒரு மூடி (துருவவும்) நெய் - 3 டேபிள்ஸ்பூன் முந்திரி - 10. செய்முறை: வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரி சேர்த்து லேசாக வறுத்துத் தனியாக வைக்கவும். கவுனி அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி ஒரு விசில் வந்ததும், சிறு தீயில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் திறந்து சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து, முந்திரியை நெய்யுடன் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும். கும்மாயம் தேவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப் பச்சரிசி - கால் கப் பாசிப்பருப்பு - அரை கப் பொடித்த கருப்பட்டி (அ) வெல்லம் - 2 கப் நெய் - கால் கப். செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசி, பாசிப்பருப்பைத் தனித்தனியாக வெறும் வாணலியில் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறிய பின் ஒன்றாகச் சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். அதனுடன் அரை கப் மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாதியளவு நெய்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் கரைத்த மாவைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மீதி நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். ரங்கூன் புட்டு தேவை: வறுத்த ரவை, வெல்லத்தூள் - தலா ஒரு கப் வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப் நெய் - கால் கப் முந்திரி - 10 காய்ச்சாத பால் - இரண்டரை கப் ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப். செய்முறை: வாணலியில் நெய்விட்டு உருக்கி, முந்திரி சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் ரவை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுக்கவும். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் பாலைவிட்டு கொதிக்கவிடவும். அதனுடன் ரவை - தேங்காய்த் துருவல் கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வேகவைக்கவும். பிறகு, வெல்லக் கரைசல், பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மகிழம்பூப் புட்டு தேவை: பாசிப்பருப்பு - ஒரு கப் கடலைப்பருப்பு - கால் கப் சர்க்கரை - முக்கால் கப் நெய் - 5 டீஸ்பூன் முந்திரி - 10 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப் உப்பு - ஒரு சிட்டிகை. செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒருமணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். மாவை இட்லித்தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு இட்லிகளை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுவிட்டு உதிர்த்து எடுக்கவும். சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். உதிர்த்த பருப்புடன் பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதனுடன் முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். தக்காளித் துவையல் தேவை: தோலுரித்த சின்ன வெங்காயம் - அரை கப் தக்காளி - ஒன்று (நறுக்கவும்) புளி - நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் - 4 கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்துடன் புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. டாங்கர் சட்னி தேவை: பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப் பூண்டு - 10 பல் தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த வெல்லம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். பிறகு வெல்லம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். சூடான இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். வெளியூர் பயணம் செல்லும்போது எடுத்துச் செல்லலாம். இரண்டு நாள்கள் வரை கெடாது. ரோஜாப்பூச் சட்னி தேவை: காய்ந்த மிளகாய் - 20 புளி - சிறிய எலுமிச்சை அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து இறக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து அதே சூட்டில் வறுக்கவும். இதை ஆறவைத்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் கலந்து பரிமாறவும். சட்னி ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும். காலிஃப்ளவர் சூப் தேவை: துவரம்பருப்பு வேகவைத்த நீர் - 2 கப் நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப் வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) பட்டை - சிறிய துண்டு பிரியாணி இலை - ஒன்று காய்ச்சி ஆறவைத்த பால் - அரை டம்ளர் நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நறுக்கிய காலிஃப்ளவரை உப்பு கலந்த சூடான நீரில் போட்டுக் கழுவி எடுக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு நீர், நறுக்கிய காலிஃப்ளவர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கிப் பரிமாறவும். கீரை மண்டி தேவை: ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு (ஆய்ந்து, நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) அரிசி கழுவிய மண்டி – இரண்டு கப் (அரிசி கழுவிய தண்ணீரைத் தெளியவிட்டு அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்) தேங்காய்ப்பால் - கால் கப் கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, வெந்தயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை நன்கு வெந்ததும் மண்டி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். வெண்டைக்காய் மண்டி தேவை: வெண்டைக்காய் - கால் கிலோ (பெரிய துண்டுகளாக்கவும்) கத்திரிக்காய் - 2 (பெரிய துண்டுகளாக்கவும்) உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) அரிசி களைந்த நீர் - 2 கப் புளி - பெரிய நெல்லிக்காய் அளவு கீறிய பச்சை மிளகாய் - 7 (அல்லது காரத்துக்கேற்ப) தோலுரித்த சின்ன வெங்காயம் - 15 கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 10 பல் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியை அரிசி களைந்த நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெண்டைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும். குழிப்பணியாரம் தேவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப் உளுத்தம்பருப்பு - அரை கப் ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியுடன் புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். அரிசி கலவையை முதலில் மாவாக அரைக்கவும். அதனுடன் ஜவ்வரிசி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, மூடிபோட்டு வேகவைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும். பீட்ரூட் வடை தேவை: பீட்ரூட் துருவல் - ஒன்றரை கப் கடலைப்பருப்பு - ஒரு கப் துவரம்பருப்பு - கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் காய்ந்த மிளகாய் - 8 சோம்பு - அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பீட்ரூட் துருவலைப் பிழிந்து சாறு எடுக்கவும். பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு பீட்ரூட் சாறு சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். புடலங்காய் ரிங்ஸ் தேவை: நீளமான மெல்லிய புடலங்காய் - ஒன்று (மெல்லிய வில்லைகளாக நறுக்கவும்) கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புடலங்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு புடலங்காய்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ரவா கிச்சடி தேவை: ரவை - ஒரு கப் பாசிப்பருப்பு - அரை கப் உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்) முந்திரி - 6 தக்காளி, வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் ரவை, பாசிப்பருப்பைத் தனித்தனியாக மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கி ரவை, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, 5 கப் சுடுநீர் ஊற்றி மூடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து, பத்து நிமிடங்கள் கழித்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். வாழைப்பூ கோலா தேவை: வாழைப்பூ- ஒன்று (ஆய்ந்து நறுக்கவும்) கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப் காய்ந்த மிளகாய் - 8 சோம்பு - அரை டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப் நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, வாழைப்பூ சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த கலவையும் உப்பும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும். மரக்கறி தோசை தேவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப் பாசிப்பருப்பு - முக்கால் கப் காய்ந்த மிளகாய் - 15 சோம்பு - 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - ஒரு கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து சிறிதளவு எண்ணெய் தடவி, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தோசைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சேனைக்கிழங்குப் பொரியல் தேவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு பூண்டு - 3 பல் சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: சேனைக்கிழங்குடன் மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, நீரை வடியவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் கிளறி இறக்கவும். சேனைக்கிழங்கு மசியல் தேவை: சேனைக்கிழங்கு - அரை கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்) எலுமிச்சைச் சாறு - 5 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பூண்டு - 3 பல் (தட்டவும்) கறிவேப்பிலை - சிறிதளவு வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கீறிய பச்சை மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப) சோம்பு, சீரகம் - அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சேனைக்கிழங்குடன் மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து வடித்து எடுக்கவும். ஆறிய பிறகு கையால் நன்கு மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மசித்த கிழங்கு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கவும் (மசியல் வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அதுவே தயாரான பக்குவம்). கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். உணவுக்கும் உபசரிப்புக்கும் புகழ்பெற்றது செட்டிநாடு. நறுமணம் கமழும் இந்த உணவுகளில் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. செட்டிநாட்டு மதிய உணவில் உப்பு முதல் மோர் வரை பரிமாறப்படுவதற்கு ஓர் இலக்கணமே உண்டு. தலைவாழை இலையில் இனிப்புப் பலகாரம், சித்ரான்னம், தயிர் பச்சடி, கூட்டு, பொரியல், பச்சடி, பிரட்டல், மண்டி, ஊறுகாய், வடை, சிப்ஸ், அப்பளம், அன்னம் (சாதம்) என எல்லாம் இடம்பெறும். முதலில் அன்னத்துக்குப் பருப்பு மற்றும் நெய் பரிமாற வேண்டும். பிறகு குழம்பு, பிறகு ரசம், பிறகு மோர். இப்படி கமகமக்கும் செட்டிநாடு சமையலின் சிறப்பான உணவு வகைகளை அழகிய படங்களோடு அளிக்கிறார் Classic Chettinad Kitchen வலைதளத்தை நடத்தும் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். https://www.vikatan.com
  11. கொள்ளு - கருப்பு உளுந்து வடை மாலையில் சூடாக சாப்பிட கொள்ளு - கருப்பு உளுந்து வடை சூப்பராக இருக்கும். இன்று வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முளை விட்ட கொள்ளு - 200 கிராம், கருப்பு உளுந்து - 50 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : புதினா, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கருப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கருப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கடாயை எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சூப்பரான கொள்ளு - கருப்பு உளுந்து வடை ரெடி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.