-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இங்கு மலையக மக்கள் என்றுதானே கூறியுள்ளார் அப்படியானால் மலையகத்தில் வாழும் நாங்கள் முஸ்லீம்களும் வந்து குடியேரலாமா?. மாவனல்லய், கம்பொல, ஹேம்மாத்தகம, அக்குரனை, மடவளை போன்ற பகுதிகளும் மலைகம்தானே? செல்வசன்ந்திதி முருகன் கோயிலுக்கு பக்கத்தில் சவுதி உதவியுடன் செந்னிற பள்ளி, மதரசாக்களுடன் கட்ட அனுமதிப்பார்களா? மாலை 6 மணிக்கு பின், பாபத் கறி, பீஃப் கொத்து, தலைக்கறி,ஆட்டுக்கள் சூப், கத்தான்குடி ஸ்பெசல் புரியானி, கோல்பேசில் அல்லது மாளிகாவத்தையில் போல் நானாமார்களின் கடைகளை நல்லுர் கோவில் வளாகத்தை சுற்றி அமைக்க அனுமதிப்பார்களே? நாங்களும் மலையகம்தானே?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஆனல் எங்கட தென்பகுதி தமிழ்மக்கள் சிங்களாவனுடன் இருந்தாலுல் இருப்பன் யாழ்பாணாத்தவனோடு இருக்க ஏலாதப்ப என்று சொல்வார்கள்
-
மூதூரை மீளக் கட்டியெழுப்ப 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத் தருகிறேன் ; ஹிஸ்புல்லாஹ் MP
அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் – மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலில் ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் உருக்கமான வேண்டுகோள்..! மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அவர், “மூதூரை மீண்டும் உயிர்ப்பிக்க 100 கோடி தேவையென்றாலும், நான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி பெற்றுத்தருகிறேன். மக்கள் அழிந்துபோய் தவிக்கும் இந்த நிலையை மாற்றவும் மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்பவும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என பிரதேச செயலாளரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி பிரச்சனைகள், குடிநீர், சுகாதாரம், வீட்டு சேதங்கள், வாழ்வாதார இழப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர். — ஊடகப்பிரிவு https://madawalaenews.com/32952.html
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
சில நாட்களுக்கு முன்னர் பிரன்சில் இருந்து வந்த ஒரு இளைஞனையும் இப்படி வெட்டி கொன்றார்களே.
-
காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி, சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து புதன்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அத்துடன் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார். இதே போன்று அண்மை நாட்களில் வேறு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். https://madawalaenews.com/32520.html
-
கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும்
0 1 minute read கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது பற்றி ஸ்ரீ. ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் மஜீத் தெரிவித்ததாவது, அண்மைக்காலமாக தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் முரண்பாடு தோன்றுவதும் கவலைக்குரிய விடயமாகும். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்திலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களிலும், இது போல் பல இடங்களிலும் தொல்பொருள் அடையாளங்கள் உள்ளதாக கூறி பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது இந்திய மத வாதிகள் மசூதிகளில் இந்து மத தொல்பொருள் உள்ளது என கூறி மசூதிகளை இடிக்க முனைவது போன்றே உள்ளது. தொல்பொருள் என்பது ஆதி கால அடையாளங்கள் என்பதற்கப்பால் நவீன காலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் தோண்டப்படுபவை என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஒரு தொல்பொருள் என்றால் பூமிக்கு அடியில்தான் இருக்கும் என்பது போன்ற பிரேமை இந்தியாவிலும் இலங்கையிலும்தான் உள்ளது. அது மட்டுமல்ல, இலங்கையின் ஆதிகால தமிழ் மக்கள் தமது இந்து மத கடவுள்களுடன் புத்தரையும் வணங்கி வந்ததை வரலாற்றில் காண்கிறோம். இப்போதும் கூட இந்தியாவின் தமிழ் நாட்டில் பலர் புத்த சிலைகளையும் வைத்துள்ளனர். அந்த வகையில் புத்தர் சிங்கள மக்களுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் தமிழ் மக்களுக்கும் உரியவர்கள் என்பதால் சில பொருட்கள் தமிழ் மக்களாலும் பாவிக்கப்பட்டிருக்கலாம். அவற்றை தோண்டி எடுப்பதாக கூறி இனங்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற செயலைத்தான் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சில ஹாமதுருமார் கோட்டாபயவின் உதவியுடன் அரங்கேற்றியதால் நாட்டுக்கு நல்லது செய்த மஹிந்தவையும் சிறு பான்மை மக்கள் மிகக்கடுமையாக வெறுக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே தொல்பொருள் திணைக்களம் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆய்வு செய்தால் அவர்களுக்கு நிறைய தொல்பொருள்கள் கிடைக்கும் என்பதால் அதில் கவனமெடுக்கும் வகையில் அரசு அறிவிறுத்தல்கள் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. https://madawalaenews.com/32504.html
-
வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்!
நான் யாழ் நண்பர்களிமே முடி வெட்டுவது வழமை. நான் கட்டரில் இருந்த காலத்தில் அங்கு வந்து சொந்தமாக சலூன் போட்டு அதை இன்னும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கினறார்கள். இவர்கள் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். கொழும்பில் கூட நிறைய இடங்களில் இவர்கள்தான் முன்னனி சலூன்காரர்கள். சிங்களவர்கள் வந்து காத்திருந்து முடிவெட்டி செல்வார்கள். இராணுவம் நடத்துகின்ற சலூனுக்கு தமிழர்கள் ஏன் செல்கின்றார்கள்? இந்த செய்தியின்படி சிங்களவர்கள் தமிழர்களின் இந்த வியாபாரத்தை பிடிக்க நினக்கின்றார்களா?
-
அமெரிக்காவின் அவலம்
இப்படி இந்தியா நல்ல நாடு என்றால் அங்கு இருக்கலாமே. ஏன் பிளைட் பிடித்து இவ்வளவு இந்தியர்கள் அமெரிக்க வரவேண்டும்.
-
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
நீங்கள் சொன்வது பல வருடங்களுக்கு முன் நடந்தது. நான் சொல்வ்து சமிபத்தில் 2 அல்லது 3 மாதமளவில் நடந்தது வீடியோவும் வந்து இருந்தது.
-
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
இல்லை. டொல்பின் சமீபத்தில் ஒரு பெண்ணை விளையட்டின்போது கொன்று விட்டது.
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இது உண்மையான தரவா? அப்படியென்றால் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மேலாகவா இப்படி அகதிகளாக வருகின்றார்கள். சில வருடங்களுக்கு முன் (டெயிலி மெயில் என நினக்கின்றேன்) எங்கோ வாசித்த ஞாபகம் அகதியாக கோரிக்கை வைப்பவர்களில் இலங்கையர்கள் 3வது அல்லது 4வது இடத்தில் உள்ளார்கள் என, ஹோம் ஒபீஸ் தரவுகளின் படி இது உண்மையா?
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இந்த சட்டம் நடமுறைக்கு வராது என நினக்கின்றேன்
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
கெய்ரோவில் பொதுவாக உபர் சாரதிகள் ஆங்கிலம் கதைப்பர்கள் எனவே பயப்பட தேவையில்லை. ஆனல் மொபபைல் போன் கவனம் அடித்து பறித்து கொண்டு ஓடிவிடுவார்கள். நேரம் போதுமாக இருக்கும் என நம்புகிறேன். படகு மூலம் வருவதை பற்றி சரியாக நான் கேட்டு சொல்கிறேன்
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆம் இவை ஓரளவு உண்மை. அலெக்ஸான்ரியா பகுதியிலும் இப்படி என கேள்விப்பட்டுள்ளேன். ஜோர்டன் மிக அருகில் உள்ளது. இஸ்ரேல் காச பகுதிக்கு தரைவழியூடக செல்லலாம். 10 கட்டளை இறைவனாஇ கொடுக்கபட்ட இடம் என நிறய இடமுள்ளது போகவேண்டும் ஆம் உண்மை. அழகான தோல் நிறம் கொண்ட வித்தியாசமன இனக்கூட்டம். இவர்கள் அரபுக்கள் அல்ல
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
பெரியளாவில் எனக்கு இவை பற்றி போதிய அறிவில்லை கோசான். முயன்று பார்கின்ரேன். இங்குள்ள தமிழர்களிடம் கேட்டு பார்கின்றேன். சுயஸ் வந்தல்ல் என்னை சந்திக்கலாம். மிக அழகிய இடம் பழைய பிரன்சு வீடுகளை இன்னும் காணலாம்.