அருமையான புகைப்பட தொகுப்பு அர்ஜுன் அண்ணா. இது ஒரு வகையில் வரலாற்று ஆவணம் கூட.
இவர்களைப் போன்ற மூளைசாலிகள் பலரை யாழ் இந்து தமிழ் ஈழ விடுதலைக்கு ஈகம் செய்து இருக்கிறது.
மிக்க நன்றி.
இந்த திரியை இப்போது தான் கவனித்தேன்... அனைவரும் என்னை மன்னித்தருள்க.
என் பிறந்த நாளில் யாழ் களத்தில் எனக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அரசியல் அக்கப்போரான திரிகளில் கொட்டி தீர்ப்பதற்கே என்று திரிவதால் இது போன்ற மனதுக்கு இதமான, மயிலிறகால் வருடியது போன்ற சின்ன சின்ன நல்ல உணர்வுகளை கவனிக்காது விடுகின்றோம். (விடுகின்றேன்)
என் பிறந்த நாள் அன்று கூட நான் யோசித்தேன் என்னடா....யாழ் நண்பர்கள் ஒருவர்கூட என்னை நினைக்கவில்லையே என்று... சீய் ..என்ன ஒரு சிறுமையான சிந்தனை.
இனிமேல் இந்த திரிகளில் கவனம் செலுத்துவேன்.
உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாய் ....சசி வர்ணம்..
வணக்கம் சகாறா ,
மிகவும் அருமையானதொரு பதிவு.
காதில் தேனாய் வந்து சொட்டும் இசை துளிகளிடம் எங்களை கைபிடித்து அழைத்து செல்கிறீர்கள்.
இன்று தான் ஒவ்வொன்றாய் கேட்கும் நேரம் கிடைத்தது. இவளவு நாள் இம் முயற்சியை பாராட்டாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். தொடருங்கள்.