Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. உங்கள் வசதிக்கேற்ப உங்கள் முன்னைய வரிகளையே கண்டும் காணாதது போல மீண்டும் கருத்து வைக்கிறீர்கள். பெருமாள்.. நீங்கள் எழுதிய கருத்து "வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள். இந்த கூட என்ற உங்கள் கருத்துக்குத்தான் நான் ஆதாரம் கேட்டேன். மற்றும்படி என்னுடைய கருத்தில் கூட மிகத்தெளிவாக எழுதியிருக்கிறேன். உணர்ச்சிவசத்தில் எதையும் கருத்தாக வைக்கும் போக்கு எவ்வளவு நன்மை தரும்?? தமிழ் சிறியர், கப்பித்தான், நீங்களும் கூட அதை கவனிக்காதது மாதிரி கருத்து எழுதுகிறீர்கள்... 🙄
  2. வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இருக்கிறதா? ஏனென்றால் நான் அறிந்த வரையில் 300,000 படைவீரர்களை கொண்ட பெரும் படையணியை அரசாங்கம் அன்று வைத்திருந்தது. அதையும் தாண்டி பல்நாட்டு இராணுவ தொகுதியும் ஆலோசனை மற்றும் நேரடி யுத்த பங்களிப்பு செய்திருந்தார்கள். ஆனால் வேற்று நாட்டு படைகளே "கூட" இருந்தார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என நினைக்கிறன்.
  3. அவர் "Grand Master" நான் வெறும் "Experienced".. வித்தியாசம் இருக்கத்தானே வேணும். 😂
  4. உடான்ஸ் தெய்வமே... உன்னைப்போல இடித்து சொரணை வரும் அளவுக்கு (வராது... இருந்தாலும்) சொல்ல என்னால் முடியவியல்லையே. 🙏 😂
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.💐
  6. இவர் நடித்த பாலம யட்ட (பாலத்துக்கு அடியில்), கருமைக்காரையோ, மோகனப்புன்னகை எல்லாமே நல்ல, ஆனாலும் சில ஆடைகுறைப்பு /நிர்வாண காட்சிகள் கொண்ட படங்கள் தான். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஜானகி அம்மா பாடல் இது. 🙏 அய்யா சிவாஜி இந்த பாடலில் செய்யும் வேலையை இப்போது செய்தால் செய்தால் ஜெயிலில் போடுவார்கள் (கமராவை வைத்து கிளுகிளுப்பை கிலுக்குவது)
  7. சூப்பர் பெருமாள் ... எனக்கு இதுநாள் வரையிலும் 👆இவரை யார்ரென்று தெரிந்திருக்கவில்லை. சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏 அவர் சொன்னார்.....போய்ட்டார். நாங்களும் அதை செய்வோம்.
  8. நான் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒரு இளயதலைமுறை சார்ந்த இளைஞர் யுவதிகளோடு தொடர்பில் இருக்கிறேன். இன்று அவர்கள் மத்தியில்; தமிழ்சிறி இணைத்த அன்னை பூபதி அம்மா அவர்களின் நினைவுஏந்தல், அங்குநடைபெற்ற போலீஸ் தலையீடு பற்றி எடுத்து கூறினேன். அவர்கள் அன்னை பூபதி பற்றிய எந்தவித தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தை எடுத்து அவர்களுக்கு அன்னையின் வரலாறு, இந்திய ராணுவ கெடுபிடி, அவரின் மகன்மாரின் இழப்புகள், அன்னையின் உண்ணாவிரத போராட்டம், அவரின் மறைவு, அவருக்கு தேசிய தலைவரால் கொடுக்கப்பட்ட அதிஉயர் கௌரவம் போன்ற விடயங்களை பகிர்ந்ததோடு இன்றைக்கு 33 வருடங்களின் பின்னர் கூட அவருக்கான அஞ்சலியை செலுத்துவதில் எமக்குள்ள சிக்கல்கள், அடக்குமுறைகள் பற்றியும் எடுத்தது கூறினேன். அதோடு சார்ந்து, அவர்கள் திலீபன் அண்ணா, வெலிகடை சிறையில் கொலைசெய்யப்பட்ட குட்டிமணி அண்ணா, ஜெகன் அண்ணா போன்றவர்கள் பற்றிய விபரங்களையும் மேலதிகமாக தெரிந்து கொள்ள விரும்பினார்கள். அந்த தகவல்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு சிங்கள சகோதரி அவரின் பெயர் மதுஷிகா கொழும்பில் உள்ள IT கம்பனியில் வேலை பார்ப்பவர், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஒரு பகுதியில் இன்னும் சில மணிநேரங்களில் தான் உரையாற்ற இருப்பதாகவும், என்னிடம் அன்னை பூபதி சார்ந்த செய்திகளை, அவர் சரிதங்களை ஆங்கிலத்தில் பகிர முடியுமா என்று கேட்டு இருந்தார். உடனடியாக நானும் அவற்றை அவருக்கு பகிர்ந்திருந்தேன். சுமார் இருணித்தியாலங்களின் பின்னர் அந்த இளம் சகோதரி அவர் அங்கே உரையாற்றிய விடயங்கள், படங்கள் போன்ற தகவல்களை எனக்கு அனுப்பி இருந்தார். தன்னால் இன்றைக்கு அன்னைபூபதி அம்மாவின் நினைவு சார்ந்து பேசக்கூடிய செய்திகளை தந்தமைக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். இது ஒரு பெரிய விடயமல்ல... ஆனாலும் மாற்றங்களை நாங்கள் தான் சிறிது சிறிதாக சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஏற்படுத்த வேண்டுமே தவிர வெறுமனே அவர்கள் புரிந்து கொள்ளவேனும், அவர்கள் செய்யவில்லை, அவர்கள் உணரவில்லை என்று தொடர்ந்தும் நடக்காத ஒன்றை பற்றியே நித்தமும் பேசுவது எந்தளவுக்கு நன்மை தருமோ எனக்கு தெரியவில்லை. சிங்களவன் திருந்தாவிட்டால் என்ன அவனுக்கு உண்மையை எடுத்து சொல்வோம்... மனமாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சி இல்லையேல் சாத்தானுக்கு நம் பக்க ஞாயங்களை எடுத்து சொன்ன திருப்தியோடு சாவோம். 🙏
  9. இது தவறு.. தமிழ்சிறி ஐயா . நாங்களும் வீதிக்கிறங்கி ஆண்கள் பெண்கள் வித்தியாசம் பாராமல் இரவு இரவாக போராட்டம் நடத்தியவர்கள் தானே. எங்களுக்கு இந்த தேவை இருந்ததா? நீங்கள் பகிடியாக போட்டாலும் கூட சின்ன நெருடலை தருகிறது.
  10. குசா அண்ணா, நீங்கள் இந்த அதிமோக தென்னிந்திய சினிமா கலாச்சாரத்தை ஆதரிக்காதவர் என்பதும் எங்களுக்கு தெரியும். நான் உங்கள் கருத்தை அந்த அர்த்தத்தில் எடுக்கவும் இல்லை. ❤️ 👍
  11. ஓம் அண்ணா.. நீங்கள் சொல்லும் காலம் தமிழீழ தேச விடுதலை நோக்கி இளைஞர் யுவதிகள் சாரி சாரியாய் போராட்ட களத்தில் சேராத காலம். செலுலைட் திரைக்கு பின்னால் அட்டக்கத்தி, அட்டை துப்பாக்கியோடு மிளிர்ந்த கதாநாயகரை சட்டை செய்யாது கந்தகம், சயனைட், கைக்குண்டு, முப்படைக்கட்டுமானம், மண்மீட்பு, முறியடிப்பு, முகாம் தகர்ப்பு, வீரமரணம் இவற்றை எமது சொந்த அண்ணாக்கள், அக்காக்கள் ரத்தமும் தசையுமாய் எம்கண்முன்னே நடாத்தி காட்டியதன் பின்னர் இந்த கற்பனை கதாநாயகர்கள்காணாமல் போனார்கள்.... ஆனால் ... இப்போ மீண்டும் இந்த திரை கூத்தாடிகளை தூக்கி திரியும் கற்காலம் தொடங்கியுள்ளது.
  12. விஜய் கூட சங்கி தான். எந்த இஸ்லாமியரால் பாதிக்கப்பட்டாரோ தெரியவில்லை!😊 தொடர்ந்து இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் சினிமாக்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் அஜித் இதுவரை விஜய் போல் வெறித்தனமாக இஸ்லாமியர்களை வெறுக்கும் கதைகளில்,படங்களில் நடிக்க வில்லை. அதை விட கொடுமை என்னவென்றால் சன் டிவி காரர்களின் அதீத இஸ்லாமிய வெறுப்பு.கலாநிதி மாறன் குரூப் தினகரன் பேப்பர், டிவி எல்லாவற்றிலும் அது நன்றாக எதிரொலிக்கும். தீவிரவாதிகளை பற்றி படம் என்றால் இன்றைய தீவிரவாதம் மொத்தம் ஆர் எஸ் எஸ் ,இந்துத்துவ தீவிரவாதிகள் தானே செய்கிறார்கள்! அவர்களை கண்டிப்பது போல் படம் நடிக்க விஜய்க்கு ஆண்மை இல்லை.பயம்.உண்மை சொல்வதென்றால் அப்படி அல்லவா நடிக்க வேண்டும்? நெல்சன் சேவியர் (பத்திரிகையாளர் ) தமிழ்நாட்ல எப்ப கடைசியா தீவிரவாதிய பாத்தீங்க ? எந்த ஹைஜாக் நடந்துச்சு? பாகிஸ்தானுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னய்யா சம்மந்தம்? விஜயகாந்தே Outdatedன்னு கிழிச்சுப் போட்ட ஸ்க்ரிப்ட்ய்யா இது. இங்க ஒரு முஸ்லீம் நிம்மதியா கடை வைச்சு நடத்த முடியல, முஸ்லீம் புள்ளைங்க ஸ்கூல் காலேஜ்ல படிக்க போக முடியலைன்னு அந்த சமூகமே கதறிட்டு இருக்கு. சமூகத்துல சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம எதுக்குய்யா படம் எடுக்குறீங்க ? முஸ்லீம்ன்னா தீவிரவாதின்னு பொது புத்திய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு? பேப்பர், டிவில நியூஸ்லாம் பாப்பீங்களா இல்லையா? ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஜாலியா ஒரு படம்ன்னு சொன்னாங்க. இது ஜாலியா எடுத்த படம் இல்லை. திரைப்படமா பார்த்தா கூட எந்த பொறுப்புணர்வும் கலை அம்சமும் இல்லாம ஏனோதானோன்னு பண்ணிருக்க ப்ராஜெக்ட். சிரிச்ச நாலு சீன்தான் படம்னா லொள்ளுசபா பெட்டர். பொறுப்புள்ள நடிகர்ன்னு ஃபையர் விடுறப்போ அந்த பொறுப்பை காப்பாத்திக்கிறதும் அதை தக்கவைக்கிறதும் ரொம்ப முக்கியம். இயக்குநரை குறை சொல்றது இங்க பொருந்தாது. ஏன்னா அடுத்தது தளபதியா தலைவரான்னு மக்கள் முடிவு பண்ணுவாங்கன்னு விஜய் சொன்னாரு. இந்த கதைய இப்போ இருக்க சூழ்நிலைல முழுசா கேட்டுட்டு நடிக்கிறார்னா அது ஒரு தலைவனோட முடிவா இருக்காது. இருக்கவும் கூடாது. நெல்சன் திலீப் குமார் இயக்குனர் . இந்த ஆள் தினசரி நடப்புகளை படிக்கிறானா இல்லையா தெரியவில்லை😊 மொத்தத்தில் விஜயின் சுயரூபம் வெளிவந்து விட்டது இந்த படத்தின் மூலம். இனி சங்கீகள் கொண்டாடலாம் விஜயை. அப்படியே அண்ணா அறிவாலயம் எச்சரிக்கையாக இருக்கணும் சன் டிவி ஒனர்களிடம். திமுகவை உயிராய் ஆதரிக்கும் சிறுபான்மை மக்களை திமுகவிடம் இருந்து பிரிக்கும் செயலில் தீவிரமாக வேலை செய்கிறார்கள் சன் டிவி ஓனர்கள். சன் டிவி ஆட்களை விட தினமலர்,துக்ளக்,மற்றும் சங்கீகள் நல்லவர்கள் போல் இருக்கிறது.அவர்கள் செயலில் சரியாக இருக்கிறார்கள். சன் டிவி ஒனர்கள் தான் துரோகிகளாகி ஆதரிக்கும் மக்கள் முதுகில் குத்துகிறார்கள். இஸ்லாமிய கட்சி தலைவர்களும் ஏனோ வேடிக்கை பார்த்து கொண்டு வாய் மூடி இருக்கிறார்கள். சாமர்த்தியமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று போர்வை போத்தி விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்? சங்கியநுழைய விடாமல் தடுக்கும் தமிழக மக்கள்,பாகிஸ்தான் முட்டாள்களை நுழைய விடுவார்களா? எப்படியோ முதல்வர் அவர்கள் சன் டிவி சங்கீகளிடமும்,விஜய் என்னும் சங்கியிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சன்டிவி பேட்டியில் விஜய் தலைவனாக வருவேன் என்று சொல்கிறார்.அதை சன் டிவி ஒனர்கள் ஒளிபரப்பு செய்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக விஜயை கொம்பு சீவுகிறார்கள் சன் டிவி ஓனர்கள். 💐ராஜேந்திரன்💐
  13. இந்த பயம் எனக்கும் இருக்கு சாமியார். வேண்டும் என்றால் திரியை வெளியார் பார்வைக்கு தெரியாதவாறு மூடி வைக்கலாம்
  14. ஐயோ...ஐயோ... ஒரு (ச)கோதாரி இது ஜே.வி.பியின் செய்தியாம் மேலே நீங்கள் காட்டியிருக்கும் அனைவரும் பச்சை தமிழ் இன துரோகிகள். மண்டையன் குழு முக்கியஸ்தர் முதல், பல கொள்ளை, கொலை பாலியல் வல்லுறவுகள் போன்ற ஈனச்செயல்களை செய்த அசிங்கங்கள்.
  15. தற்போது செருப்படி வாங்கிய அருண் சித்தார்த் ஒட்டுக்குழு, மண்டையன் குழுவுடன் சேர்ந்து கிளப் ஹவுசில் தமிழ் சிறியரின் ஏப்ரல் வதந்தியை பற்றி குத்தி முறிகிறார் https://www.clubhouse.com/room/mg86njed?utm_medium=ch_room_merc&utm_campaign=Kt1MZwv70hpR17EiIUH-Bw-131558
  16. தமிழ்சிறியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இணையவழி செய்திகள் எப்படி காட்டுத்தீயாய் பரவும் என்பதை மனுஷன் செயல்முறை வடிவத்தோடு காட்டி இருக்கிறார். நேற்று நான் கலந்து கொண்ட கிளப் ஹவுஸ் விவாதத்தில் ஒரு ஐரோப்பிய தமிழ் ஊடகவியலாளர் இந்த செய்தியை அடித்து உண்மை என்று கூறினார்.... நானும் கொடுக்குப் பல்லுக்குள் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எதிரே பறந்த "இலையானை" பார்த்து தலையை ஆட்டினேன். பரட்ட ..... பத்தவச்சுட்டியே பரட்ட... 😂
  17. வயிறு குலுங்க சிரிக்கவைத்த உங்கள் பல வரிகளில் இது தனி ரகம். செங்கைஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" போல "நெடுக்ஸ் வடக்ஸ் போகிறார்" சூப்பர் ஜீ 🤣
  18. உடான்ஸ் ஜீ ... நகைச்சுவையாக கூட யதார்த்தங்கள், உண்மைகளை நெத்தியடியாக உறைக்கச்சொல்லலாம் என்ற வித்தை உங்களிடம் இருந்து கற்கவேண்டும். இங்கே கொஞ்ச கருத்துக்கள் சொல்லப்போய் நானும் இப்போ தமிழர் விரோத, வெள்ளைத்தோல் மோக, சூ நக்கி, போன்ற "இன்ஸ்டன்ட் முத்திரைகளோடு" உலா வருகிறேன். மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி தனிக்காட்டு ராஜா, தங்கை யாயினி, சகோதரர் கொழும்பான்
  20. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உடம்பில், மனதில் எதோ ஒரு மழைச்சாரல் அடித்துச்செல்லும் அதிசயம் பதின்மவயதில் இருந்து இன்றுவரை தொடர்கிறதே... 🙏
  21. இது ஒருவருடைய சுய ஆக்கம், அதை முழுமையாக எழுத விடாமல்; எதோ மற்றையவர்கள் ஒன்றும் அறியாத உலக விடயங்களாக இவர்களாக கருதிக்கொண்டு... சிரியா முதல் சமாறா வரை நடந்த யுத்தங்களின் படங்கள், பாவித்த ஆயுதங்கள் என்று இந்த திரியில் குப்பை கொட்டுவது அநாகரீகமாகவே தோன்றுகிறது. இதை எப்படி கையாளலாம், ரஞ்சித் தனது ஆக்கத்தை எழுதி முடிய, அந்த கட்டுரை குறித்த ஒரு பார்வை, விமர்சனமாக நீங்கள் ஒரு திரியை திறக்கலாம். அப்போது ரஞ்சித் பயன்படுத்திய தலைப்பில் இருந்து தரவுகள் வரை பல கேள்விகள் கேட்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம். அதுவரையிலும் அவசர உடுக்கை அடித்து உரு ஏறாமல், மற்றையவர்களுக்கும் உரு ஏற்றாமல் பொறுமை காக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தை பொழுதனிக்கும் மனதிலும் சுமந்து , அதன் வலியையும், கொடூரத்தையும் பிறரிடம் செய்தியாக காவித்திரியும் பல நல்லுள்ளங்களையும் இந்த ஒரு உலக நடப்பு பற்றிய அவர்களின் பார்வை காரணமாய் எதோ தேசத்துரோகம் செய்தவர்கள் போல ஒரு விம்பத்தையும் காட்டுகிறார்கள்... 😥
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.