Everything posted by Sasi_varnam
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஒரு கை தேர்ந்த பக்கா அரசியல் ரவுடி கையில அணு ஆயுத ஸ்விட்சை வச்சு கொண்டு மூடன் என்ன செய்வானோ என்று உலகம் தவிக்க இங்க இந்திய சினிமா பைத்தியங்களை விட ஒரு ஆடி மேல போல போய் அண்ணனுக்கு ஜே!! ... தலைவனுக்கு ஜே!! போட்டு கொண்டு இருக்கீனம். 🤐- 20220830_180055.jpg
- காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29, 2023 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கே.கே.எஸ் துறைமுகத்துக்கு ஏப்ரல் 29-ம் தேதி புதிய படகு சேவையின் முதல் கப்பல் போக்குவரத்து வரும் என்றார். அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். படகு சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும் மற்றும் 100 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படும். ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து KKS க்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும். படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார். KKS துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார். (அஜித் சிறிவர்தன) https://www.dailymirror.lk/breaking_news/Karaikkal-KKS-Ferry-service-to-commence-on-April-29-Minister/108-256557#.ZCAmve8qry4.whatsapp- naba.jpg
- எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
உதயன் மிகவும் அருமையான கவிதை. என்னை மறந்து சந்தத்தோடு லயித்து வாசித்த கவிதை இது. நன்றி.- ceylon61.jpg
- திரும்பும் வரலாறு!
- எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
வணக்கம் சகோதரம், உங்கள் முதல் ஆக்கத்தையே மிக ரசனையோடு, அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.!!! நல்லதொரு நேரத்தில் (ரஷிய /உக்ரைன்) போர் சூழலில் உங்களின் ஆக்கம் வருவது இன்னும் சிறப்பு. 👌 உங்களின் நிறைந்த அனுபவங்கள், கற்றல்கள் சார்ந்து கருத்துக்கள் இந்த நாட்டின் இன்றைய சூழ்நிலையை கூட அலசிப்பார்க்கும் என்பது எண்ணம். நீங்கள் நடந்து திறிந்த, சுற்றிய இடங்கள் எல்லாம் இன்று சிதைந்தும், சீமேந்தும், கட்குவியலாகவும் இருப்பது கவலைக்குரியதே. நானும் நுணாவில் பக்கத்தில் ...கைதடி / நாவற்குழி வாசிதான். 😉- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இந்த பயம் எனக்கும் இருக்கு சாமியார். வேண்டும் என்றால் திரியை வெளியார் பார்வைக்கு தெரியாதவாறு மூடி வைக்கலாம்- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஐயோ...ஐயோ... ஒரு (ச)கோதாரி இது ஜே.வி.பியின் செய்தியாம் மேலே நீங்கள் காட்டியிருக்கும் அனைவரும் பச்சை தமிழ் இன துரோகிகள். மண்டையன் குழு முக்கியஸ்தர் முதல், பல கொள்ளை, கொலை பாலியல் வல்லுறவுகள் போன்ற ஈனச்செயல்களை செய்த அசிங்கங்கள்.- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தற்போது செருப்படி வாங்கிய அருண் சித்தார்த் ஒட்டுக்குழு, மண்டையன் குழுவுடன் சேர்ந்து கிளப் ஹவுசில் தமிழ் சிறியரின் ஏப்ரல் வதந்தியை பற்றி குத்தி முறிகிறார் https://www.clubhouse.com/room/mg86njed?utm_medium=ch_room_merc&utm_campaign=Kt1MZwv70hpR17EiIUH-Bw-131558- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தமிழ்சிறியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இணையவழி செய்திகள் எப்படி காட்டுத்தீயாய் பரவும் என்பதை மனுஷன் செயல்முறை வடிவத்தோடு காட்டி இருக்கிறார். நேற்று நான் கலந்து கொண்ட கிளப் ஹவுஸ் விவாதத்தில் ஒரு ஐரோப்பிய தமிழ் ஊடகவியலாளர் இந்த செய்தியை அடித்து உண்மை என்று கூறினார்.... நானும் கொடுக்குப் பல்லுக்குள் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எதிரே பறந்த "இலையானை" பார்த்து தலையை ஆட்டினேன். பரட்ட ..... பத்தவச்சுட்டியே பரட்ட... 😂- கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
வயிறு குலுங்க சிரிக்கவைத்த உங்கள் பல வரிகளில் இது தனி ரகம். செங்கைஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" போல "நெடுக்ஸ் வடக்ஸ் போகிறார்" சூப்பர் ஜீ 🤣- புட்டினும் புதுமாத்தளனும்
உடான்ஸ் ஜீ ... நகைச்சுவையாக கூட யதார்த்தங்கள், உண்மைகளை நெத்தியடியாக உறைக்கச்சொல்லலாம் என்ற வித்தை உங்களிடம் இருந்து கற்கவேண்டும். இங்கே கொஞ்ச கருத்துக்கள் சொல்லப்போய் நானும் இப்போ தமிழர் விரோத, வெள்ளைத்தோல் மோக, சூ நக்கி, போன்ற "இன்ஸ்டன்ட் முத்திரைகளோடு" உலா வருகிறேன். மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி தனிக்காட்டு ராஜா, தங்கை யாயினி, சகோதரர் கொழும்பான்- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது ஒருவருடைய சுய ஆக்கம், அதை முழுமையாக எழுத விடாமல்; எதோ மற்றையவர்கள் ஒன்றும் அறியாத உலக விடயங்களாக இவர்களாக கருதிக்கொண்டு... சிரியா முதல் சமாறா வரை நடந்த யுத்தங்களின் படங்கள், பாவித்த ஆயுதங்கள் என்று இந்த திரியில் குப்பை கொட்டுவது அநாகரீகமாகவே தோன்றுகிறது. இதை எப்படி கையாளலாம், ரஞ்சித் தனது ஆக்கத்தை எழுதி முடிய, அந்த கட்டுரை குறித்த ஒரு பார்வை, விமர்சனமாக நீங்கள் ஒரு திரியை திறக்கலாம். அப்போது ரஞ்சித் பயன்படுத்திய தலைப்பில் இருந்து தரவுகள் வரை பல கேள்விகள் கேட்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம். அதுவரையிலும் அவசர உடுக்கை அடித்து உரு ஏறாமல், மற்றையவர்களுக்கும் உரு ஏற்றாமல் பொறுமை காக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தை பொழுதனிக்கும் மனதிலும் சுமந்து , அதன் வலியையும், கொடூரத்தையும் பிறரிடம் செய்தியாக காவித்திரியும் பல நல்லுள்ளங்களையும் இந்த ஒரு உலக நடப்பு பற்றிய அவர்களின் பார்வை காரணமாய் எதோ தேசத்துரோகம் செய்தவர்கள் போல ஒரு விம்பத்தையும் காட்டுகிறார்கள்... 😥- புட்டினும் புதுமாத்தளனும்
ஓணாண்டியார்... உங்களோடு எனக்கென்னய்யா வன்மம்... 🙏 "வெள்ளைத்தோல் அடிமை மோகம்" என்ற தடித்த எழுத்துக்கள் வரும் பொழுது இப்படியான பதில்கள் வாஸ்தவம் தானே. உங்களுக்கு மேற்குலக (அமெரிக்க) வெளிவிகார கொள்கையில் சரி பிழை நியாயங்கள் கதைக்க வேண்டும் என்றால் தனி திறந்து அலசினால் உங்களோடு சேர்ந்து நாங்களும் கும்மி அடிக்கலாம். பொதுவாக இந்த யுத்தம், இதனால் ஏற்படும் மக்கள், உடைமைகள், உளவியல் அழிவுகள் பற்றி கரிசனை படும் ஒரு சராசரி மனிதனின் கருத்து. இந்த கரிசனை ஈராக்கிலும், லிபியாவிலும், இதர நாடுகளிலும் நடக்கும் போதும் எமக்கு இருந்தது. அப்போதும் நாங்கள் ஒருவரும் அமெரிக்கனுக்கு வாழ் பிடிக்க வில்லையே. இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.- புட்டினும் புதுமாத்தளனும்
ஓம் மச்சான்... புட்டின் ஆபிரிக்கா காட்டுக்குள்ள பிறந்த கருப்பு சொக்கத்தங்கம். என்டபடியால நாங்கள் புலம்பெயர்ஸ் எல்லாம் அவருக்கு பின்னால அணிவகுக்கிறம். மற்றது நாங்கள் அசைலம் அடிக்கேக்க...அடிக்கும் முதல்ல... ஓடோடி வந்து கேஸ் அக்செப்ட் பண்ணி எங்களை ஆப்பிரிக்காவில அந்த மாதிரி வாழ வச்ச மனிசன். நான் செய்யிற தொழில், அடிக்கிற கோட்டம் எல்லாம் கருவல்ஸ் புட்டின் தந்த வரம்.- புட்டினும் புதுமாத்தளனும்
😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை. அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣 "டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ. ~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!!- புட்டினும் புதுமாத்தளனும்
உடான்ஸ் சாமியார்... கற்பனையிலும் கனதியான பல செய்திகள் சொல்லியிருக்கிறார். 👌 என்ன.... அதை வாசித்தது, கிரகிக்க எக்ஸ்டரா ஐகியூ தேவை. அது "டிக் டொக்கில்", "மீம்ஸ் கிளிப்பிங்கில்" கிடைக்கும் சமாச்சாரம் அல்லவே !!- நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
ம்ம்ம்.. இலவசமா வார கனவுல கூட இன்னும் நக்மா, நமீதா காலத்திலேயே இருந்தால் எப்படி? சட்டு புட்டுன்னு அப்டேட் ஆகிற வழிய பாருங்க தலைவா.🤣- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித் மன்னிக்கவும், இங்கே ஒரு வரிகூட எழுதக்கூடாது என்றே நான் நினைத்தேன்... இருந்தாலும் என்னுடைய ஆதங்கத்தையும் பதிந்து விடுகிறேன். ரஞ்சித் யாழ் அகவை - சுய ஆக்கங்கள் - பகுதியில் தனது அவதானிப்பு, புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு கட்டுரை வரைகிறார். அதற்கான இடத்தை , சுதந்திரத்தை அவருக்கு கொடுக்கும் அடிப்படை மாண்பு மீறி தங்களது கிறுக்குப்பிள்ளை அரசியல் எதிர் வாதத்தையும் இங்கே வைக்கிறார்கள். உங்ககளால் முடிந்தால் ரஷியா தன்னிச்சையாக மேட்கொண்டு வரும் யுத்தம், அவர்கள் பக்கத்துக்கான ஞயாயங்களை பக்கம் பக்கமாக எழுதுங்களேன். யார் உங்களை தடுத்தார்கள்? வெறுமனே ஆதாரமற்ற "உக்ரைன் போட்ட "பொஸ்பரஸ்" குண்டு, உக்ரைன் கொன்ற "செஞ்சோலை சிறார் " போன்ற "டிக் டொக்" வீடியோ பார்த்து உணர்ச்சி பிழம்பாவத்தை விட்டு உருப்படியாக எதையாவது எழுதுங்கள் நாங்களும் வாசிக்கலாம். இன்றும் கூட ஒரு வீடியோ பார்த்தேன்... கைகள் கட்டப்பட்ட ஒரு மனிதனின் நெஞ்சாங்கூடு பிளக்கப்பட்டு, தசை நார்கள் கிழிக்கப்பட்டு இதயம் துடிக்க துடிக்க பிடுங்கப்படுகிறது... பின்னணியில் "நித்திரையோ தமிழா நீ .. திரும்பிப்பாரடா" பாட்டு ஓட்டுகிறது. ஆனால் அந்த வீடியோ தென்அமெரிக்க நாட்டில் நடந்த சம்பவம் போல் தெரிகிறது. இப்படித்தான் எம்மவரை "உணர்ச்சியுள்ள தேசியவாதிகளாக" காட்ட பாடுபடுகிறார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். அதன் முடிவில் நியாயங்களை, "மாயங்களை" தீர்மானிப்பது வாசிப்பவர்களாக இருக்கட்டும்.- மனிதாபிமானப் பன்னாடை
புங்கை அண்ணா, நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்திய நல்லதொரு கவிதை 🙏. போரின் வலி, இழப்பு எங்குமே, எல்லோருக்குமே ஒன்றுதான் நீங்கள் கூறிய பன்னாடைகள் போல் அல்லாமல் இருக்க தமிழர்கள் கடவர்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Cheers!!! - ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.