சற்று நேரம் அதிகம் எடுத்து கொண்டதால் உரையை முடித்துக்கொள்ளும்படி கேட்ட்கும் பொது 20 செகண்ட் , 15 செகண்ட் 10 செகண்ட் 5 செகண்ட் என்று அவைத் தலைவருக்கே நேரம் காட்டி உரையை முழுவதுமாக முடித்தது கூட வித்தியாசமாக இருந்தது.
திரு ராமலிங்கம் அவர்களின் உரையை முழுமையாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் சற்றே தடுமாறினார், பலமுறை அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த பிமல் ரத்னாயக்க சாடையாக ராமலிங்கம் அவர்களின் சட்டையை சற்றே பிடித்து இழுத்து சிக்னல் கொடுத்தார்.