Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. தென்னாசியாவில் வல்லரசாக வளர முனையும் இந்தியா, ஈழத்தில் நடந்த விடுதலை போரை மும்மூரமாக பாரிய கட்டமைப்புகளோடு நடாத்தி வந்த புலிகளால் ஒரு நாள் நமக்கும் ஆபத்துவரும் என்று தெரிந்து கொண்டு தனது நாட்டை காக்க ஈழ விடுதலை போராளிகளை, ஈழ கட்டமைப்பை அடித்து நொறுக்க உதவி செய்ததில் தப்பே இல்லை!!! அப்படித்தானே சிறியர் 🤨
  2. அப்படியா விசுகு அண்ணா? ... அப்ப எதுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து வெறும் வாயால தமிழ்தேசிய வடை சுட்டுக்கொண்டு இருக்கிறம் ( நீங்கள் நான் உட்பட) 🤔 ஒருவழியா புலம்பெயர் தமிழர்கள் செய்வது ஒரு வெத்து வெட்டு அரசியல் என்பது இப்போது தெரியவந்து இருக்கிறதே அந்தளவுக்கு மகிழ்ச்சி. 🙄
  3. அதை நாங்கள் செய்யாமல் எங்கள் மனகிளர்ச்சியை தூண்டி, உணர்ச்சி பிழம்பாக்கி தவறான தகவலுடன் கவிதை எழுதி முகப்புத்தகம், வாட்ஸ்ஆப்பில் செய்தி போட்டு ஈழவிடுதலைக்கான "கடமையை" செய்யும் கூட்டமாகவே இருக்கிறோம்.
  4. இது உண்மை அல்ல நான் அறிந்தவரையில், தேடிய வரையில், இன்று வரைக்கும் அந்நிய துருப்புகள் உக்ரைனில் குவிக்கப்படவில்லை. அவர்கள் யுத்தத்தை அவர்கள் தான் செய்கிறார்கள். பெருமளவு ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் உக்ரேனியர்கள் தங்கள் நாட்டு யுத்தத்தில் பங்கு கொள்ள விருப்பமாக உள்ளார்கள்.
  5. மிகவும் தவறான கருத்து ஓணாண்டியார் ... கொஞ்சம் தேடித்தான் பாருங்களேன் முடிந்தால் Netflix ~ Winter On Fire எனும் விவரணப்படம் (Documentary) ஒன்று உள்ளது தயவு செய்து முடிந்தால் பாருங்கள். அதன் பின்னர் உங்கள் புரிதலை எழுதுங்கள்.
  6. வணக்கம் அண்ணா... நீங்கள் சொல்லும் அதே மன ஆதங்கம் எங்களுக்கு மட்டும் இல்லாமலா போகும்? -28 கடும் குளிரில் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை, ஒட்டாவா பாராளுமன்றம், டொரோண்டோ அமெரிக்க தூதுவராலயம், இலங்கை தூதுவராலயம், டி.வி, பத்திரிகை காரியாலயங்கள் 401 நெடுஞ்சாலை இப்படி எல்லாம் அலைந்து திரிந்த நாட்களை மறக்க முடியுமா? அவ்வளவு செய்தும் நீங்கள் சொல்லியது போல எங்களை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. உண்மை தான் !!! இன்றுவரையிலும் சரியான காரணத்தை அறிந்தும் அறியாதவர்கள் போலவும், தெரிந்தும் தெரியாதவர்கள் போலவும் இருக்கிறோமே ஒழிய எப்படி இதை சரி செய்யலாம், இந்த நிலையில் இருந்து எப்படி மீள் எழுந்து வரலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டோம் என்றே நினைக்கிறேன். இன்று வரையிலும் எங்களின் வீரம், தியாகம் பற்றி எங்களுக்குள் பேசுகிறோமே தவிர எல்லோரும் ஒரு அணியாக திரள முடியாமல் ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்ணோடு, நீயா நானா போட்டியில் இருக்கிறோம். சரி; இதே உக்ரைன் நிகழ்ச்சியை உலகமே சேர்ந்து அணிதிரண்டு உதவும் பண்பை அவர்களுக்கே ஞாபகப்படுத்தி; ஏன் எமக்கு நடந்த அநியாயத்தை, எட்டா கனியாக இருக்கும் நியாயத்தை சுட்டிக்காட்டி அவர்களது மனக்கதவை மீண்டும் தட்டக்கூடாது? அதை நாங்கள் செய்யாமல் எங்கள் மனகிளர்ச்சியை தூண்டி, உணர்ச்சி பிழம்பாக்கி தவறான தகவலுடன் கவிதை எழுதி முகப்புத்தகம், வாட்ஸ்ஆப்பில் செய்தி போட்டு ஈழவிடுதலைக்கான "கடமையை" செய்யும் கூட்டமாகவே இருக்கிறோம். மேலும் தற்போதைய இந்நிலையில் எங்களுக்கான சாதக பாதகங்களை கதைக்கக்கூடிய வல்லுநர்கள் இருக்கிறார்கள் அதை அவர்கள் சொல்லட்டும். எம்மை பற்றி சர்வதேச ரீதியில் ஒரு திரைப்படம் எடுத்த மீரா மேத்தாவை, படத்தை பார்க்காமலே கருத்து சொல்லி கழுத்தறுத்து, இனி ஒருகாலமும் அவர்கள் எங்களை திரும்பியும் பார்க்காமல் இருக்கும்படி தேசிய உணர்வை காட்டிய கூட்டம் நாங்கள். இப்படி பல...சொல்லிக்கொண்டே போகலாம். அந்த கோபத்தின் பிரதிபலிப்பு தான் என்னுடைய எழுத்து. தவறு இருந்தால் மன்னித்தருள்க சாமியார்
  7. மன்னிக்க வேணும் கு.சா அண்ணா. அந்த கருத்து உங்களை நோக்கி எழுதப்பட்டதாக எடுக்க வேண்டாம். எனது கருத்தை திருப்பி நான் வாசிக்கும் அப்படியான பிரதிபலிப்பு இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தூர நோக்கு இல்லாமல் தவறான கருத்துக்களை உருவாக்குபவர்களை நோக்கியே எனது கோபத்தை வைத்தேன். இருந்தாலும் உங்கள் மனதை வேதனை படுத்தியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கருத்தையும் திருத்தி பதிவிடுகிறேன்.
  8. இப்படியான தவறான கருத்தை எங்கோ ஒரு மூளையில் இருந்து உருவாக்கிய உன்னதர்களே... எது? ... உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் நிகழும் தற்போதைய போர் அல்லாத ஒரு வீடியோவை, அதாவது 2014 இல் நடந்த ஒரு ராணுவ சண்டை; அதில் இறந்துகிடக்கும் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டவர்; தாக்குதல் நடத்தியது (உக்ரைன் கிழக்கு பிராந்தியத்தில் ) ரஷ்ய ஆதரவரோடு இயங்கும் பயங்கரவாதிகள். இந்த உண்மையை அப்படியே உல்டா பண்ணி, பிளேட்டை மாற்றி இது உக்ரைன் படைகளின் வன்மம் என செய்தி போடுவது. இதை நான் சொல்லவில்லை உலக செய்தி நிறுவனங்கள் நிரூபித்து உள்ளன. இப்போதைய யுத்தம் நடப்பது குளிர் காலத்தில், கொட்டும் பனியில் குறைந்த பட்சம் அதையாவது கவனித்து இந்த மாதிரியான அப்பட்டமான பொய் வீடியோக்களை இணைப்பதை தவிர்த்து இருக்கலாம். நம்மளுடைய கருத்தை மற்றவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியான போலியான திரை கதை, டைரக்ஷன், முகநூல் கட்டுரை, பின்னூட்டங்களை தயாரிப்போர் எமது சமுதாயத்துக்கே வில்லங்கமானவர்கள் என்பது எனது கருத்து. https://www.altnews.in/video-from-2014-shared-as-slain-soldiers-in-the-russia-ukraine-conflict/
  9. அண்ணா.... ஆப்கானிஸ்தான் - நேட்டோ போனதற்கான காரணம் 9/11 பயங்கரவாத தாக்குதல். (அமேரிக்கா அங்கத்துவ நாடு) கோரிக்கை. ஈராக் - காரணம் துருக்கி, மற்றும் போலந்து (அங்கத்துவ நாடுகள்) கோரிக்கை இது அடிப்படை ... அது தவிர வேறு நோக்கங்களும் இருக்கலாம். ஆனால் தேவையில்லாத இடங்களில் (இலங்கையில்) நேட்டோ எதுக்கு மூக்கை நுழைப்பான்?
  10. பாராட்டுகள் ரஞ்சித், கிருபன்... 👌 உங்கள் அளவுக்கு விபரங்கள் சேர்த்து பக்குவமாக இங்கே இருக்கும் நம்மவர்களுக்கு தெளிவூட்டும் வேலையை என்னால் செய்ய முடியாது. என்னதான் ஆழமான நல்ல கருத்துக்களை விக்கிரமாதித்தர்கள் விதைத்தாலும் வேதாளங்கள் மீண்டும் மீண்டும் மரத்தில் ஏறி குத்துவதை தவிர்க்க முடியாது!! என்ன செய்ய; அப்படி இருந்தால் தானே யாழ்களம் எனும் அம்புலிமாமா பக்கம் புரளும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு நியாயமான சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் உக்ரைன் தனி நாடாக பிரிந்து போனது. கேணைத்தனமான உப்புக்கு சப்பு இல்லாத, காரணங்களை சொல்லி சொல்லியே புட்டின் பிரிந்து போன ஒவ்வொரு நாட்டையும் மிகக் கொடூரமான யுத்த அழிவுகளை ஏற்படுத்தி திரும்பவும் தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது உக்ரைன் நாட்டு மக்களும், அவர்களது சுய ஆட்சி கனவும் களையப்பட இருக்கிறது. ஆனால் அவர்கள் அவ்வளவு இலகுவில் அடிபணிந்து போகும் மக்கள் கூட்டம் அல்ல. எம்மைவிட அவர்களுக்கு அவர்களின் நாட்டின் மேல் பற்று இருக்கிறது. இப்போதும் கூட தன்னிச்சையாக ஆண்களும் பெண்களுமாக ஆயுதங்களை தூக்கி அவர்களது நகரங்கள், கிராமங்களை காக்கும் கடமைக்கு விரைகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் பலர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். புலம்பெயர் உக்ரேனியர்களின் செயல்பாடுகள் கடந்த 3 நாட்களாக தீயாக இயங்குகிறது. வியக்கும் அளவுக்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. தனிநாடு கேட்டு பிரிந்து செல்ல போராடும் நாம்... பொதுஜன வாக்கின் மூலம் பிரிந்து செல்லும் வாய்ப்பை கேட்கும் நாம், சுயநிர்ணய ஆட்சி உரிமை உள்ளவர்களாக உலகுக்கு காட்ட முனையும் நாம் ... யுத்தத்தின் கொடூரத்தால் கொத்து கொத்தாக உயிர்களை பலிகொடுத்த நாம்... இன்று என்ன செய்கிறோம் எய்தவனை விட்டு விட்டு அம்பை நோகிறோம். புட்டினின் கேடுகெட்ட மிலேச்சத்தனத்தை "ஆதரிக்காத" மாதிரி ஆதரிக்கிறோம். புட்டினின் பற்றிய ஒரு CBC வீடியோ ... முடிந்தால் பாருங்கள்.
  11. தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் நினைவு தினம் இன்று. 10.01.1924 - 06.01.2010 தமிழர் வீரத்தின், தியாகத்தின் இலக்கணத்தை விதைத்தவரே உம்மை வணங்குகின்றோம். வீர வணக்கங்கள் ஐயா. 🙏💐🙏 https://imgur.com/3EFbTT1
  12. அதி சிறப்பான பதிவுகள் நன்னிச்சோழன் 🙏
  13. உயிருள்ளவரை மறவோம் உம்மை.. கண்மணிகளே வீரவணக்கம் 🙏💐🙏
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ஜி 💐
  15. ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்? எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் "இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை 😀
  16. ஓட்டம் ஓட்டம் என்று சொல்கிறீர்கள் சைக்கிள் ஓட்டம் எப்படி ? கொஞ்ச ஊர் பொடியன்கள் 4 , 5 பேர் செட் ஆகி சமர் நேரம் 10 கிலோமீட்டர் சைக்கிள் ஓடுவோம்... என்ன ஆளாளுக்கு கையில 4 பியர் கானையும் கொண்டல்லே வாறாங்கள். 😂
  17. ஓ ... அவசரமாக பார்க்கும் போது அதன் அமைப்பு, நிறம் இவற்றை வைத்து Trafalgar square என நினைத்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி. இணையவன் பாரிஸ் என்று அறிந்தும் கொண்டேன்🙂
  18. நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!! எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும். நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. ஸ்டெமினா காணாது என நினைக்கிறன். உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது 👌
  19. எனது பிறந்தநாளுக்கு உளம்கனிந்து வாழ்த்திய சொந்தங்கள் தமிழ் சிறி அண்ணா, புங்கையூரன் அண்ணா, சகோதரர் நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, கிருபன் ஜீ, சகோதரி ஜெகதா துரை, புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணா, சுவீ அண்ணா, வாத்தியார் ஐயா, சகோதரர் நுணா, வாதவூரான் அண்ணா, சகோதரி ரதி, சகோதரர் நொச்சி, குமாரசாமி அண்ணர், சகோதரர் பெருமாள், நிலாமதி அக்கா , சகோதரர் துல்பென், சகோதரர் ஓணாண்டியர், சகோதரர் கந்தையா, சகோதரர் சுவைப்பிரியன், சகோதரர் சபேஸ், சகோதரர் எப்போதும் தமிழன், சகோதரர் கோஷன், சகோதரர் ஏராளன், நிழலி சாமியார் மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துக்களில் அகம் மகிழ்ந்து கரைந்து போகிறேன். 🙏
  20. அன்றைய காலங்களில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் சில, (கொழும்பு அல்லாத) சிங்களப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்கும் இவை பற்றி என நினைக்கிறன் 😃 👉 ஜில் போல (மார்பிள் ) - இதில் கூட பல ரகங்கள், விளையாடும் முறைகள் உண்டு யாருக்காவது இந்த இந்த வார்த்தைகளை ஞாபகம் இருக்கிறதா ? டொம்பா ச்சிக்கா (G)கப்பா 👉 தாராடி - ஒரு டின்னில் கூழாங் கற்களை போட்டு, அந்த டின்னின் திறந்த முனையை நசுக்கி அடைத்து விடுவார்கள். அதை கிலுக்கினால் சத்தம் வரும் இதன் பெயர் தாராடி ""ஹைட் அன்ட் சீக்" விளையாடுவதை போல ஒரு விளையாட்டு. தாராடியை தூற எறிய வேண்டும், தேடுவதற்கு பொறுப்பானவர் ஓடி சென்று அதை பொறுக்கிக்கொண்டு வருவதற்கிடையில் ஏனையவர்கள் எங்கேயாவது ஒளிந்து மறைந்துகொள்வார்கள். தாரடியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு எல்லோரையும் தேடி கண்டு பிடிக்க வேணும். ஒருவரின் மறைவிடத்தை கண்டு பிடித்தால் ஓடிச்சென்று அந்த தாரடியை எடுத்து கிளிக்கி அவரின் பெயரை சொல்லவேண்டும். உதாரணம் "கோஷன்வ தேக்கா தாராடி", ரதிவ தேக்கா தாராடி " இவர்கள் அவுட். அப்படி தேடும் பொழுது மறைந்து இருந்த யாராவது ஓடி வந்து தாராடியை உதைத்தாலோ, அல்லது கையிலே எடுத்து கிலுக்கினாலோ திரும்பவும் அவரே தேடுதலை முதலில் இருந்து ஆரம்பிக்க வேணும். 👉 ரப்பர் எட்ட - ரப்பர் கொட்டைகளை மாபிள் போல வைத்து விளையாடும் விளையாட்டு. 👉 டொனிக் மூடி - ஆரஞ் பார்லி , பாண்டா போன்ற குளிர்பான போத்தல் மூடிகளை (சோடா மூடி) தேடி சேகரித்து அவற்றை வைத்து மாபிள் போல விளையாடுவோம். அதிலும் மூடியின் உள்புறத்தில் தார் வைத்தது அழுத்தி பாரமாக ஆக்கி அதனையே "ஸ்ட்ரைக்கராக" பாவிப்போம். 👉 டின் அடுக்கி விளையாடுவது - 👉 எல்லே - (வெளிநாட்டில் பேஸ் பால் போல ) 👉 பிள்ளையார் - விளக்கம் சொல்லவே கஷ்டமான விளையாட்டு. இரண்டு அணிகளாக பிரிந்து, ஒரு அணி ஓட , மற்ற அணி பிடிக்க (பந்தால் அடித்து ) அவுட் ஆக்க வேண்டும். பிடிக்கும் அணியில் உள்ள அனைவரும் (டென்னிஸ் பந்தை மார்பு பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு யாரிடம் பந்து இருப்பது என்று தெரியாமல் காட்டிக்கொள்ளாமல் எதிர் அணியின் ஆட்களை பந்தால் அடித்து அவுட் ஆக்க வேண்டும். எதற்கு பிள்ளையார் என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை. இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏
  21. இந்த விளம்பரத்தை பாருங்கள்... இதன் கீழே உள்ள வரிகள் வெள்ளை இனத்தவரின் இனவெறியை காட்டும் வரிகளாக அமைந்துள்ளது... "வெள்ளைக்காரனின் சுமை தூய்மை, நல்லொழுக்கம் போதிப்பதே... படத்திலும் கூட ஒரு வெள்ளை இனத்தவர் ஆதிகுடி/ பூர்வீக மகன் ஒருவனுக்கு சவர்க்காரம் தருவது போல போடப்பட்டு இருக்கிறது. 🤔 😠 சிகரெட் விளம்பரத்தில் "அப்பாவை போலவே " என்ற வரிகள் வேறு " just liek dad" 🤔
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.