-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
தம்பர்... வழமையான வழ வழ ... கொழ கொழ
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
படிக்க ஆர்வம் உள்ள பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் ... ஏகலைவன் தூர நின்று துரோணரின் கலையை பயின்றதும், ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்ததும் போல இந்த பிள்ளை எதோ செய்ய ட்ரை பண்ணி இருக்கு போல. இங்கு எந்த ஒரு பல்கலை கழக விரிவுரையிலும் யாரும் போய் உட்கார்ந்து இருந்து படிப்பிப்பதை கேட்டுக் கொண்டு இருக்கலாம். ID கார்டு பார்த்து உள்ளே அனுப்புவதில்லை. மாணவ விடுதிக்கு எப்படி போனார் என்பது தான் பெரிய கேள்வி?
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
இன்றைய திகதிக்கு உலக அரங்கின் நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியான உரையை நான் வாக்களித்த கட்சியின் பிரதமர் ஒருவர் உரையாற்றினார் என்ற பெருமையோடு...
-
வணக்கம்உறவுகளே
மீள்வருகை நல்வரவாக அமையட்டும் !!!
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மனையாளின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏 💐
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இந்த திரியை ஆரம்பத்தில் மேலோட்டமாக வாசித்து இருந்தேன். தேர் சில்லு உருள ஆரம்பித்து விட்டது. சிறிய அளவு என்றாலும் முடிந்த அளவு என்னுடைய பங்களிப்பும் இருக்கும். (உங்களை போலவே வேறு இரண்டு திட்டங்களில் இணைந்துள்ளேன்) **பனர், இலச்சினை இவற்றில் யாழ்க்களத்தின் சின்னம் கூட சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் பாராட்டுக்கள். ❤️🙏
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
இதை விட மோசமான கருத்தை நம்மட "பைத்தியன்" அர்ச்சுனா பாராளு மன்றத்தில் வைத்து அறுத்து உறுத்து பேசினான். அதுவும் ஹரிணியின் ஒருபால் இன சேர்க்கை சம்பந்தமான நக்கல், நையாண்டி...
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
தம்பர் தன்னுடைய shoe lace அவிழ்ந்துவிட்டது, ஓடிவந்து கட்டி விடுங்கோ பாய் என்று கேட்டால்... சிங்கம் இப்பவே ஓடிப்போய் குனிந்து கட்டிவிடும்.
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அல்லது "விட்டுப்போட்டு" கதை விடுறாரோ 😉
-
தாலிக்கொடியை யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்
அதுசரி களவா உல்லாசம் , சல்லாபம், டண்டணக்கா அனுபவிக்க போனவர் எதுக்கு மனைவியின் 9 பவுன் தாலிக்கொடியை கொண்டு போனார். சைத்தாங்கே பச்சி!!!
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.
-
இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம். நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.
-
யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!
- பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
அநீதி இழைக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உறுதுணையாக இருப்பதில் தப்பில்லை. காவி அணிந்தவரெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் என்ற காலம் மலையேறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. யாருடைய சங்கி மங்கி செயல்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியதில்லை. - பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.