Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம் நீங்க ரெடியா???

Featured Replies

இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்!

-

மார்க் ட்வைன். பிரபல எழுத்தாளர் அவரு.

அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு

குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு.

-

அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில

வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு-

அவர் வீசி எறிஞ்ச குடையோட:

‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து

குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை!

கொடுத்துட்டுப் போயிட்டாரு

-

கடுப்பான மார்க் ட்வைன், அதக் கொண்டு போயி

ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு.

-

அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு

தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட:

‘சார்…இதோ உங்க குடை

யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’

கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப்

போனாரு மார்க். ராத்திரி முழுக்க யோசிச்சாரு:

‘எப்படி இதை ஒழித்துக் கட்டுவது?’

-

யோசனை ஒண்ணு உதயமாச்சு! அடுத்த நாள் -

அதை ஒருத்தரிடம் ஓசி கொடுத்து விட்டாரு.

அப்புறமென்ன! அது திரும்பி வரவேயில்லை.

இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்!

-

============================================

துல்லியமாக எடை போடுவதில் கெட்டிக்காரர் ஆண்களா, பெண்களா?

kambeeram-89.jpg

-

-

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து ,

இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்

கிடைக்கவில்லை.

-

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,

‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)

போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க

சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.

-

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை

கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

-

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே

கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி

விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்

மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய்

தின்னுட்டு , பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்

போறீங்க!

-

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே

வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ்

விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு

வர்றீங்க!

-

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி

ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடு

மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

-

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!

இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க

குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்

சொல்லி முடித்தாள் மனைவி.

-

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு

வச்சாளாம் மனைவி..!

-

=====================================================

sonia-agarwal-0217.jpg?w=300&h=400

கணவன்கிட்டே மனைவி புடவை கேட்டா

கட்டுறதுக்குன்னு அரத்தம்,

மனைவிகிட்டே கணவன் புடவை கேட்டா

துவைக்கிறதுக்குன்னு அர்த்தம்..!

-

-

============================================

-

சாப்பிட நிறைய அயிட்டங்களை வச்சா பலகாரம்னு

சொல்லலாம்,

ரெண்டே ரெண்டு அயிட்டம் மட்டும் வச்சா,

‘சிலகாரம்’னு சொல்ல முடியுமா?

-

-

=============================================

-

ஒவ்வொரு தமிழனுக்கள்ளேயும் ஆயிரம் போதிதர்மர்கள்

இருக்காங்க, ஆனா, அவனை வெளியே கொண்டு வர

ஸ்ருதிஹாசன் மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர்தான் இல்லை..!

-

-

=================================================

(

Dipa+Shah.jpg

என்னடி சொல்றே..அவங்க உன் வளர்ப்பு மாமியாரா?

-

ஆமாண்டி..வீட்டுல சண்டை போடறதுக்காகவே

வளர்க்கிறோம்..!

-

-

============================================

-

இந்தக் குற்றப் பத்திரிகையில இருக்கறது எதுவுமே எனக்குப்

புரியலைய்யா..!

-

அதுக்காக அந்தப் பத்திரிகை ஆபிசுக்கு போன் போட்டு

விளக்கம் கேட்கச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் தலைவரே..!

-

-

================================================

-

சின்ன ஆபரேஷனுக்கு எதுக்கு டாக்டர் இவ்வளவு பெரிய

கத்தி?

ஆபரேஷன் பெயிலியர் ஆயிட்டா, உங்க சொந்தக்காரங்ககிட்டே

இருந்து நான் தப்பிக்கத்தான்..!

-

-

================================================

-

மன்னரைப் பரிசோதித்த டாக்டர் என்ன சொன்னார்?

-

அவருக்கு மாற்று முதுகு அறுவை சிகிச்சை பண்ணனுமாம்..!

================================================

kadhalil_sodhapuvadhu_yeppadi_movie_stills3b8e4765098355ad7da7679906a5f890.jpg?w=300

-

தலைவரோட நாலு மணி நேரப்பேச்சை ஆயிரக்கணக்கான

மக்கள் அமைதியா உட்கார்ந்து கேட்கறாங்களே…?

-

அப்படின்னா தலைவர் எவ்வளவு செலவு பண்ணியிருப்பார்னு

நீயே பார்த்துக்கோ…!

-

-

===================================================

-

தலைர் இவ்வளவு அல்பமா இருப்பார்னு எதிர்பார்க்கலை…!

-

ஏன் ..என்ன செய்தாரு?

-

நடிகை கையால ஜூஸ் தரப்போறாங்கன்னு யாரோ

கிளப்பிவிட்ட புரளியை நம்பி உண்ணாவிரதத்தை

உடனே முடிச்சுட்டாரே…!

-

-

====================================================

எங்க தலைவர் மைக்கைப் பிடிச்சா பேசிப் பேசி

‘களைச்சிடுவார்’…

-

எங்க தலைவர் மைக்கைப் பிடிச்சா பேசிப்பேசி

நாங்க கஷ்டப்பட்டு சேர்த்திருக்கும் கூட்டத்தைக்

‘கலைச்சிடுவார்’…!

-

=============================================

-

யோவ்..நான் என்ன போராடம் அறிவிச்சாலும் அதுக்க

மக்கள்கிட்ட ஆதரவு இல்லையே..என்ன செய்யறது?

-

பேசாம தீக்குளிப்புப் போராட்டம் அறிவிச்சுப் பாருங்க

தலைவரே…!

-

-

================================================

resize_20120228045429.jpg

-

உன் மாமியார் உன்னை வித்தியாசமா மிரட்டறாங்களா…எப்படி?

-

என்னோட, ஃபேஸ்புக், ஃபிரெண்ட்ஸூக்கெல்லாம் என்னோட

ஒரிஜினல் போட்டோவை அனுப்பிடுவேன்னுதான்…!

-

=================================================

-

மாப்பிள்ளை வீட்டுல நாலு யானை, நாலு குதிரை,

பதினாறு காவல்காரங்க இருக்கறதா சொன்னதும்,

பெரிய இடம்னு நினைச்சு பொண்ணைக் குடுத்தது

தப்பாப் போச்சு..!

-

ஏன் என்ன ஆச்சு?

-

அவங்க வீட்டுல ஒரு செஸ் போர்ட் இருக்கறதைத்தான்

அப்படி சொல்லியிருக்காங்கன்றது இப்போதானே

தெரியுது..!

-

resize_20120228043944.jpg

என்னடா, லீவ் லட்டர்ல ‘மின் விடுமுறை’னு

எழுதியிருக்கே?

-

நேத்து லீவு போட்டு, எங்க வீட்டுக்கு கரண்ட் பில்

கட்டப் போயிருந்தேன், சார்!

-

==================================

-

நகர்வலம் செல்லும் வழியில் ஏழை மக்களிடம்

மன்னர் ஜோக் சொல்கிறாரே, ஏன்?

-

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறாராம்..!

-

====================================

ஐயா! எனக்கு ‘சளி’ பிடிச்சிருக்கு…லோன் தருவீங்களா?

-

நீங்க, ‘கோல்ட்’ லோனுங்கிறதை தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க..!

========================================

16.jpg?w=265&h=400

-

எல்லா வகை குழம்பும் கிடைக்கும்னு போர்டு வைச்சது

தப்பாப் போச்சு முதலாளி…!

-

ஏன்…என்ன ஆச்சு?

-

ஒரு ஆளு வந்து ‘எரிமலைக் குழம்பு வேணும்’னு கேட்டு

அடம்பிடிக்கிறார்..!

-

======================================

-

கொண்டை ஊசி வளைவுல திரும்புறப்போ வண்டி

பஞ்சராயிடுச்சா, எப்படி?

-

கீழே கிடந்த கொண்டை ஊசி குத்தி…!

-

====================================

-

நீங்க எவ்வளவு நாளா புல்டோசர் ஓட்டறிங்க?

-

நான் புல் டவுசர் போட ஆரம்பிச்ச காலத்துலயிருந்துங்க…!

-

======================================

img1091117094_1_1.jpg

-

உன் கணவரை ஏன் நவரசத்திலகம்னு சொல்றே?

-

ஒன்பது விதமா ரசம் வைத்து அசத்துவாரு…!

-

==========================================

காளை அடக்கும் போட்டியிலே ஏன் நீங்க

கலந்துக்கலை..?

-

ஜல்லிக்காட்டு காளையை அடக்கப்போய்த்தான்

எங்கப்பா சொத்தாரு..அதான்..!

-

==========================================

-

ராத்திரி முழுக்க நான் தூங்கவே இல்லை…

-

அப்ப என்னைத் திட்டிட்டு இருந்தீங்கள…அது

கனவுல இல்லையா…!

-

===========================================

-

மனைவியிடம் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் எது?

-

மாங்கல்யம்..!

-

============================================

தலைவர் ஏன் சி.பி.ஐ.மேல ரொம்ப கோபமா இருக்காரு?

-

அவரு படிச்சுக்கிட்டு போன எந்த கேள்வியையும் அவங்க

கேட்கலையாம்..!

-

-

===============================================

-

அந்த நர்ஸ் என் மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்…!

-

எப்படி சொல்றீங்க?

-

ஆபரேஷனுக்கு சம்மதிக்க வேணாம்னு ‘அட்வைஸ்’

பண்ணினாங்களே..!

-

-

============================================

-

மாதா கோவிலில் எல்லோரும் பிரார்த்தனை செய்து

கொண்டிருந்தார்கள்.

சாத்தானைக் கண்டதும் எல்லோரும் பயந்து ஓடினார்கள்.

ஒருவன் மட்டும் நகராமல் இருந்தான்.

-

சாத்தான் : நான் யாரென்று தெரியுமா?

-

மனிதன் : தெரியும்.

-

சாத்தான் : தெரிந்துமா. . . ? உனக்கு பயமாக இல்லை.

-

மனிதன் : இல்லை.

-

சாத்தான் : ஏன்

-

மனிதன் : நான் உன் சகோதரியை திருமணம் செய்து

25 வருடங்களாகிறது.

-

=========================================

-

என்னடா இது நோட்டு புல்லா மணி மணின்னு எழுதி

வச்சிருக்க

-

நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க.. நாளைக்கு நோட்டு

புத்தகத்து எடுத்து

பார்த்தா கையெழுத்து மணி மணியாக இருக்கணும்னு.

-

====================================

-

தின்னிப்பயலை பள்ளியிலே சேர்த்தது தப்பா போச்சு…!

-

ஏன்?

-

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நகரம் எதுன்னு கேட்டால்

‘சட்னி’ன்னு சொல்றான்..!

-

-

=========================================

-

அவர், மனைவியால அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு!

-

எப்படி சொல்றே?

-

வாய்ப்பூட்டு கிடைக்குமான்னு கேட்டு வந்திருக்காரே..!

-

-

==========================================

-

திருடுன பணத்தை செலவழிச்சு, கபாலி வீடு கட்டுறானாமே?

-

ஆமா, அது அவனோட களவு இல்லமாம்..!

-

-

===========================================

-

-

தலைவர் எல்லா சொத்தையும் அவரோட பையன் மேலே

எழுதி வச்சிட்டார்ன்னு எப்படி சொல்ஏ?

-

நேற்று அவர் பையனோட முதுகைப் பார்த்தேன்..!

-

===============================================

டாக்டர் : அந்த ஹார்ட் பேஷண்ட் சாகக் கிடக்கிறார்ன்னா,

அதுக்கு நீங்கதான் காரணம்

-

நர்ஸ் : என்ன சார், குண்டைத் தூக்கி போடறீங்க?

-

டாக்டர் : பின்ன என்ன? 8 மணிக்கொருதரம் 2 மாத்திரை கொடுன்னு

சொன்னா, 2 மணிக்கொருதரம் 8 மாத்திரை கொடுத்திருக்கே!

-

==========================================

-

டாக்டர் : நீங்க போன வாரம் கொடுத்த செக் திரும்பி வந்துடுச்சு!

-

நோயாளி : நீங்க ஆபரேஷன் செஞ்ச பைல்ஸும் எனக்கு திரும்பி

வந்துடுச்சே

-

டாக்டர்! அதுக்கு இது சரியா போச்சு...!

-

=========================================

-

என்னப்பா இது வித்யாசமா இருக்கே! கல்யாண மோதிரத்தை

மாப்பிள்ளை காலில் தான் போடணும்னு சொல்றாங்க…?

-

சரி நீ என்ன சொன்ன?

-

நான் சரின்னு சொல்லி கால் விரல் அளவு கேட்டேன்?

-

கொடுத்தாங்களா

-

அதப்பாத்துதான்பா பயந்து போயிட்டேன், மாப்பிள்ளைக்கு

யானைக்கால்..!

-

==========================================

-

படிக்கும்போது அடுத்தவன பாத்து காப்பி அடிச்சு காப்பி அடிச்சு

பழகிக்கிட்டது தப்பாபோச்சு!

-

ஏன்?

-

மறந்து போயி, என் பையனுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க போன

இடத்திலுயும் விண்ணப்பத்த பக்கத்துல எழுதினவனா பாத்து

காப்பி அடிச்சிட்டேன்.

-

============================================

RKR_6346.JPG

-

என் வாளும் உன் விழியும் சந்தித்தால்..?

அதுக்குப் பேருதான் காடராக்ட் சர்ஜரி…ட்யூப்லைட்..!

-

ராஜா கையை வெச்சா…?

ஹி..ஹி..ஊர் உலகத்துக்கே தெரியுமே…!

-

மன்னவன் வந்தானடி…தோழி!

புறமுதுகு காட்டி ஓடியபடிதானே..!

-

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..!

வெளிநாட்டிலிருந்து பாடுறீங்க மிஸ்டர் ஐ.எஸ்.டி..

நம்ம ஊருக்கு வந்து பாடிப்பாருங்க…’பொலி’ மயமான எதிர்காலாம் தெரியும்!

-

எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்..!

அடப்பாவி…பர்ஸ் கொண்டு வரவில்லையா..?

-

அண்ணாத்தே ஆடுறார்…ஒத்திக்கோ ஒத்திக்கோ..!

ஒரு ‘குவார்ட்டர்’ போட்டதுக்கே இவ்வளவு ஆட்டமா?

-

மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா?

மகாராணி சமையலாம், போதாக்குறைக்கு வெங்காயம் வேற

உரிக்கச் சொல்லிட்டாங்க..என்னதான் செய்வார்..!

-

ஆறு பெருகி வரும் அணை கட்டலாமா?

அணை கட்டினா, முதுகில் ‘டின்’ கட்டிடுவாங்க..!

-

ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?

விலைவாசியும், பணவீக்கமும் விண்ணை முட்டும்போது

விலா நோக சிரிக்கவா முடியும்..!

-

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..?

புது செல் வாங்கினேன், டெஸ்ட் பண்ணினேன்..அவ்வளவுதான்!

-

==================================================

sandya.jpg

ஏம்மா, நேத்து ராத்திரி உன் கனவுல அவன் வந்து

உன்னைக் கெடுத்துட்டான்கிறே…இதுக்கெல்லாம்

தண்டனை எப்படிக் கொடுக்கிறது…!

-

இன்னிக்கி ராத்திரி நீங்க என் கனவுல வந்து

அவனுக்கு தண்டனை கொடுங்க அய்யா..!

-

=============================================

-

நேத்து வரைக்கும் ரவி உன்னை அன்பான பார்வைதானே

பார்த்துக்கிடிருந்தான். இப்போ ஏன் அவனைப் பார்த்து

பயப்படுறே?

என்னன்னே தெரியலே. இன்னிக்குக் காலயிலே என்னைக்

கொலை வெறியோட பார்த்துக்கிட்டிருந்தான்..!

-

-

=================================================

-

என்ன கதாசிரியரே! உங்க கதையோட முடிவை

எழுதாமே, ரசிகர்களுடைய முடிவுக்கே விடறேன்னு

எழுதிட்டீங்க?

-

எனக்கே புரியலே…வேற என்ன பண்ணுறதுன்னு…அதான்..!

==========================-==========================

preethi-varma.png

-

டார்லிங்க்! இந்த சனி, ஞாயிறு ஜாலியா பொழுது போகணுமா?

-

ஆமாங்க..!

-

சரி! அப்ப நான் திங்கட்கிழமை காலைலே வீட்டுக்கு வர்றேன்..!

-

===========================================

-

பாடகர், அவருக்கு முன்னால ஒரு இரும்புக் கம்பியை ஏன்

கட்டி வைச்சிருக்காரு?

-

உச்சஸ்தாயி பாடறப்ப அதுல தாவித் தொங்கினாதான்

வருமாம்..!

-

-

======================================================

-

நீ நினைச்ச பொண்ணே உனக்கு கிடைப்பா…எந்த தடங்கலும்

வராது…!

-

வாக்கு மாறக்கூடாது மாமா..!

-

==================================================

-

பத்தாயிரம் ரூபாய் திருடியதை நீ ஒத்துக்கறியா?

-

ஒத்துக்கறேன் எசமான்! 2ஜியோட கம்பேர் பண்ணும்போது

இது ஜூஜூபி, யூவர் ஆனர்…. அதனால மன்னிச்சு

விட்டுடங்க சாமி..!

-

================================================

-

தினசரி ஒரு பச்சை முட்டை சாப்பிடு..1

-

எந்தக் கடையில கேட்டாலும் வெள்ளை முட்டைதான்

இருக்கு..!

-

-

============================================

-

என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு

மிஸ்டு கால் கொடுப்பாராம்..!

-

லேண்ட் லைனிலயா?

-

இல்லே..அவங்க வீட்டு ‘காலிங் பெல்லை’ அடிச்சுட்டு

ஓரமா ஒளிஞ்சுப்பாராம்…!

-

-

=======================================================

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து

கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார்.

எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக்

கொண்டிருந்தார்.எடிசனுக்கோ தாங்க முடியவில்லை.இருந்தாலும் அங்கிருந்து நகரவும்

வழியில்லை.

நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,”பேசும்

எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர்

எடிசன்தான்,”என்றார்.

எடிசன் அவரிடம் சொன்னார்,”நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது

உண்மைதான்.ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.”

-

=========================

ஒருவன் தன் டாக்டர் நண்பருடன் காபி

சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவன்,”ஏன் நண்பா,வருத்தமாய்

இருப்பதுபோலத் தெரிகிறதே?என்று கேட்டான்.

டாக்டர் சொன்னார்,”இன்று ஓரு தவறு செய்து

விட்டேன்.ஒரு நோயாளிக்கு தவறான

மாத்திரையை எழுதி விட்டேன்.

”நண்பன்,”அது என்ன ஆபத்தானதா?”என்று

கேட்டான்.

டாக்டரும் கவலையுடன் சொன்னார்,

”இல்லை,அவன் ஒரு பெரிய பணக்காரன் இந்த மாத்திரை

சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடுவான்”

=========================================

பார்த்து சிரிக்க வேண்டிய புகைப்படங்கள் .

புகைப்படங்கள் .

9.gif

8.gif

7.gif

6.gif

5.gif

-

52822.jpg

-

தலைவர் ‘வேட்டை’க்கு போனாரே..என்ன கிடைச்சுது?

-

தியேட்டர்லே மூட்டைப் பூச்சி கடிதான்..!

-

========================================

-

என்னய்யா வெறும் டீ மட்டும்தானா? கடிக்க எதுவம்

இல்லையா?

-

நாய் இருக்கு, அவுத்து விடவா..!

-

========================================

-

போன பந்தியில்தானே, நாங்க சாப்பிட்டீங்க..அப்புறம் ஏன்

இரண்டாவது பந்தியிலும் சாப்பிட உடக்ராந்திருக்கீங்க?

-

மொய்ப்பணம் நான் எழுதினது தெரியாம, என் மகனும்

எழுதிட்டானாம்…அதான்!

-

=======================================

bibasha.jpg?w=300

-

காலையில் நான் எழுந்த்தும் சூப்பரான டீயும்,பேப்பரும் என் மனைவி\

கொண்டு வந்து கொடுத்திடுவா?

-

ஆகா…அப்புறம்?

-

டீயைக் குடிச்சுட்டு, பேப்பர் படிச்சுட்டு, சமைக்கப் போயிடுவேன்..!

-

-

சே..தமிழ் நாட்டிலே அறவே ‘குடி’ இருக்கக் கூடாதுன்னு நம்ம தலவர்

அடம் பிடிக்கிறார்..!

-

அட, இது பாராட்டுக்குரிய விஷயம்தானே..?

-

புரியாம பேசாதீங்க…மன்னார்குடி, பரமக்குடி, திட்டக்குடி,

காரைக்குடி-ன்னு வர்ற பெயர்களில் ‘குடி’யை நீக்க மறியல் பண்ணச்

சொல்றாருங்க..!

-

===========================================

-

டார்லிங்..ஒரு வேளை நான் வேற யாரையாவது கல்யாணம்

பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவீங்க?

-

என்னைப் பிடிச்ச ஜென்மச் சனி விலகிட்ட மாதிரி கேட்கையிலே

அப்படி ஒரு சந்தோஷம் ..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.