Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்ட குழுவொன்று இலங்கையில்?

Featured Replies

ந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக்கொண்ட குழுவொன்று இலங்கையில் இயங்கி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்தக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தென் இந்தியாவிலிருந்து வந்த ஆயுதக் குழுவொன்றே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். சடலம் மீட்கப்பட்ட இடத்தில் “துரோகிகளுக்கு இடமில்லை, மீண்டும் வந்து விட்டோம்” என எழுதப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

படகு மூலம் தென் இந்தியாவிலிருந்து குறித்த தரப்பினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். இரகசியமான முறையில் ஈ.பி.டி.பி உறுப்பினரை கொலை செய்த நபர்கள், மீண்டும் இந்தியா செல்ல எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனால் இந்த நபர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரகுநாதன் எனப்படும் முத்து என்பவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இறுதியாக முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றிய குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் எனவும், பின்னர் ஈ.பி.டி.பி.யில் இணைந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்திய முகாம் ஒன்றில் இராணுவ பயிற்சி பெற்றுக் கொண்டதாக சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பிரான்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து பெருந்தொகை பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இயங்கி வரும் குழுவொன்றே இந்த கொலைச் சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை வழிநடத்தியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/show-RUmqyDQVPdeqz.html

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் கன கதைகள் இனிமேல் உலாவத்தொடங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு குழுவா?  சிங்கள காடை தொடக்கம் எல்லா குழுக்களுக்கும் காந்தீய கூட்டம் தானே டிரெயினிங் கொடுத்தது? 

  • தொடங்கியவர்

ஈ.பி.டி.பி உறுப்பினரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ். இளைஞர்கள் நால்வர் கைது

திருகோணமாலையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 18ஆம் திகதி குச்சவெளிப் பகுதியில், ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முச்சக்கர வண்டிக்குள் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் இவரது சடலத்தின் அருகில் விடுதலைப்புலிகள் என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றும் காணப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவரின் மரணம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை யாழில் வைத்து இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இறந்தவரின் தொலைபேசியிலுள்ள இலக்கத்தை வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் நேரடியாக குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும், மற்றுமொருவர் படுகொலை செய்யப்பட்ட நபருடன் ஒரேயொரு தடவை மது அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, மேலும் சிலரை புலனாய்வுத்துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://news.lankasri.com/show-RUmqyDQVPder3.html

இச்செய்தி உண்மையாக இருக்கலாம் ..

... முள்ளிவாய்க்காலுக்கு பின், இந்தியா முன்னைய அனைத்து ஈழத்தமிழ் ஆயுதக்குழுக்களையும் அணுகியதுதானாம் ... உங்களுக்கு மீண்டும் பயிற்ச்சியும், ஆயுதமும், பணமும், பாதுகாப்பும் தருகிறேன் என்று உறுதியளித்ததாம்!... ரெலோவும், சுரேஸ் ஈபிஆர்எல்எவ் போன்றன விட்டால் போதும் என்று ஓடித்தப்பி விட்டதாம்! ... கேரளாவில் தூள்க்கும்பல் பரந்தன் ராசனின் ஈ.என்.டி.எல்.எப் இற்கு, இந்தியா சென்று அகப்பட்ட சில முன்னாள் போராளிகளையும் சேர்த்து பயிற்ச்சியளிக்கப்படுவதாக முன்னர் சில தகவல்கள் வந்தன ...

... இந்தியாவிற்கு சீனாவின் அப்பாந்தோட்டை துறைமுகமோ அல்லது சீனாவின் இலங்கை இருப்புக்கள் இருக்கும் மட்டும் ... உந்த செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி உண்மையாக இருக்கலாம் ..

... முள்ளிவாய்க்காலுக்கு பின், இந்தியா முன்னைய அனைத்து ஈழத்தமிழ் ஆயுதக்குழுக்களையும் அணுகியதுதானாம் ... உங்களுக்கு மீண்டும் பயிற்ச்சியும், ஆயுதமும், பணமும், பாதுகாப்பும் தருகிறேன் என்று உறுதியளித்ததாம்!... ரெலோவும், சுரேஸ் ஈபிஆர்எல்எவ் போன்றன விட்டால் போதும் என்று ஓடித்தப்பி விட்டதாம்! ... கேரளாவில் தூள்க்கும்பல் பரந்தன் ராசனின் ஈ.என்.டி.எல்.எப் இற்கு, இந்தியா சென்று அகப்பட்ட சில முன்னாள் போராளிகளையும் சேர்த்து பயிற்ச்சியளிக்கப்படுவதாக முன்னர் சில தகவல்கள் வந்தன ...

... இந்தியாவிற்கு சீனாவின் அப்பாந்தோட்டை துறைமுகமோ அல்லது சீனாவின் இலங்கை இருப்புக்கள் இருக்கும் மட்டும் ... உந்த செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கும்!

நம்புவது கடினம் இல்லை..! மே 2009 இன் பின்னர் நடந்தவை குறித்து இந்தியாவுக்கே குழப்பமாம்..! :D

மீண்டும் ஓர் ஆயுதப்போர் இப்போதைக்கு சாத்தியமும் இல்லை. இதனால் எமக்கு எதுவித நன்மையையும் கிடைக்கப்போவதும்

இல்லை.

புலம் பெயர்ந்துள்ள நாம் செய்யும் இடைவிடாத பரப்புரைகளும் தமிழக உறவுகளின் தார்மீக ஆதரவும் மட்டுமே எமது தாயக மக்களின் நிரந்தர நிம்மதியான வாழ்க்கையை மீட்டுத்தரும் என்பதே எனது கருத்து.

நன்றி

  • தொடங்கியவர்

இந்தியா மறுப்பு

இந்த செய்திகளைப் பற்றி, இலங்கையிலிருக்கும் இந்தியத்தூதரகம் , வெளியிட்டிருக்கும் மறுப்பறிக்கை ஒன்றில், தமிழ் நாட்டில், விடுதலைப்புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் இருப்பதாக கூறப்படுவதை நிராகரிக்கிறது.

இந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறைகளும் இது போன்ற விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைத்துக்கொண்டிருக்கின்றன, இது போன்ற ஒரு தகவல் இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவேயில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"செய்தி ஆதாரமற்றது"- தமிழகக் காவல்துறை

தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் கே.ராமானுஜம் இந்தச் செய்தியை மறுத்து வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தச் செய்தி “ முற்றிலும் ஆதாரமற்றது.

அத்தகைய ஆயுதப்பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் எதுவும் இல்லை. சில காலத்துக்கு முன்பு இது போன்ற ஒரு தகவல் இலங்கையில் கிளப்பப்பட்டு, பின்னர் அது வெளியானதற்குப் பழியை இந்திய ஊடகங்களின் மீது தவறாகப் போட்டு அச்செய்தி திரும்ப பெறப்பட்டது.

தமிழ் நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு மறைமுக அல்லது வெளிப்படையான தீவிரவாதச் செயல்கள் ஏதும் நடைபெறாதபடி கடுமையாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

யாராவது தீவிரவாதி என்று கண்டறியப்பட்டால் அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். எனவே தமிழ் நாட்டில் ஆயுதப் பயிற்சி முகாம்கள் நட்த்தப்படுவது அல்லது அவ்வாறு நடத்தப்பட அனுமதி வழங்கப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை “ என்று அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையும் மறுக்கிறது

இதனிடையே இது குறித்து இலங்கை தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் தலைமை இயக்குநர் லக்ஷ்மண் ஹுலுகல்ல தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், இந்தச் செய்தியை மறுத்தார்.

தானும் அந்தச் செய்திகளைப் பார்த்ததாகவும், ஆனால் இதை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை கொண்ட ஆதாரம் ஏதும் இல்லை.

எனவே இதில் உண்மை எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும், என்றார் ஹுலுகல்லஆனால் இந்த பத்திரிகை, இலங்கை உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த ஹுலுகல்ல,

“ ஆனால் இந்த செய்தி பொதுப்படையாக அப்படிக்கூறுகிறது. எந்த ஒரு பொறுப்பான அதிகாரியையும் மேற்கோள் காட்டவில்லை. இவ்வாறு அவர்கள் கூற முடியாது”, என்றார் .

http://www.lankasri.com/ta/link-3Oc3Y2SaeEe608SdW3v4.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.