Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியத் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி

Featured Replies

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கும், அரசியற் செயற்பாடுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி பாராட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைக்கு, மலேசிய ஆதரவளிக்காது என்ற நிலைப்பாட்டினை, மலேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்த போது, அதறக்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி , தொடர்சியான போராட்டங்களையும் அரசியற் செயற்பாடுகளையும் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர்.

ஈழத்தமிழினத்தின் மீது இனவழிப்பினை மேற்கொண்ட சிறிலங்காவுக்கு, மலேசியா அரசு ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்துப்பட்டதோடு, 20 லட்சம் மலேசியத் தமிழர்களின் வாக்குகளை, ஆளும் மலேசிய அரசு இழக்க நேரிடுமெனவும் மலேசியத் தமிழர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கான உலகத் தமிழர்களின் குரலாக, மலேசியத் தமிழர்களின் ஆதரவுக்கரத்துக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி பாராட்டியுள்ளார்.

மலேசியத் தமிழர்கள் தனித்து, தமிழர்களின் போராட்டமாக அல்லாமல், மலே இனமக்களையும் , மலேசிய சீன இனமக்களையும் ஒன்றிணைத்து மேற்கொண்ட போராட்டத்தினை பாராட்டியதோடு , இத்தகைய உணர்வுபூர்வமான செயற்பாடுகள் ஊடாகவே, சிறிலங்காவுக்கு ஆதரவளிக்காது மலேசியா நடுநிலை வகித்தது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு கிடைத்த மாபெரும் இராஜதந்திரத் தோல்வி என குறிப்பிட்ட பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறிலங்காவுக்கு இது கடைசித் தோல்வியாக இருக்கப்போவத்தில்லை எனவும் அவர் உறுதிபட எடுத்துரைத்தார்.

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்கா தொடர்பில் ஓரு சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி, தொடர்ந்து தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாதம் ஊடகசேவை

http://www.seithy.co...WM4AOE.facebook

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.  நன்றியுடன் பரிசில்களையும் பெறுவது ஆசிய அரசியல் கோட்பாடுகளில் ஒன்று.

நாடு கடந்து அமெரிகாவில் இருந்து நன்றியை தெரிவித்த பிரதமருக்கு வாழ்த்துக்கள்! .. இது ஈஸ்ரர் விடுமுறையாதலினால், அப்புக்காத்துக்கு அறிக்கை விட நேரம் கிடைத்திருக்கிறது ...!! ... தயவு செய்து இப்படி ஈஸ்ரர், பப்ளிக்கொளிடே, கிறிஸ்மஸ் விடுமுறைகளில் ஆவது ஓரிரு அறிக்கைகளை என்றாலும் விடுங்கள் ... உயிரோடு இருக்கிறோம் என்றாவது காட்டுவதற்கு!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம். மலேசிய பிரதமருக்கும் நன்றி கூறப்பட்டிருக்கவேண்டும். அது இராசதந்திர மரபும்கூட. மலேசிய தமிழ் மலே சீன கட்ச்சிகளுகும் நன்றி கூறுவது பொருத்தமானதாகும். இயங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்புகள் யாவையும் அறிக்கைகள்மூலம் மலேசிய தமிழர்களுக்கும் மலேசிய பிரதமருக்கும் நன்றிகூறவேண்டு என வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடக்கம், இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மக்களின் ஆதரவை மேலும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒன்றுமே செய்யாது இருப்பதை விட ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம் ஈழத்தை அடைய முயற்சிகள் மேற் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.