Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரை அரசு நடத்துகின்ற முறை சரியா?

Featured Replies

சிறுபான்மையினரை அரசு நடத்துகின்ற முறை சரியா?; ஹக்கீமிடம் கேட்கிறார் சுரேஷ்

வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையின மக்கள் இலங்கை அரசால் நீதியாகவும், நேர்மை யாகவும் நடத்தப்படுகின்றனரா என்ற கேள்விக்கு சிறுபான்மையின மக்களின் தலைவர்களுள் முக்கியமான ஒருவர் என்ற அடிப்படையில் நண்பர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பன் விழாவுக்கு முக்கிய அதிதியாக அழைப்புவிடுக்கும் அளவுக்கு தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழ்மகன் நண்பர் ஹக்கீம், தமிழ் பேசும் மக்கள் தொடர்பிலான இலங்கை அரசின் செயற்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில், புலம்பெயர் தமிழர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால், பிரபாகரனின் வெற்றுடல் அதனைப் பெற்றுத்தரும் என புலத்தமிழர்கள் கனவு காண்கின்றனர் என்றும் ஹக் கீம் சரமாரியாக விமர்சித்துள்ளார். அமைச்சர் ஹக்கீமின் கடும் போக்குடைய இந்த உரை தமிழ் உணர்வாளர்களைச் கொதிப்படையச் செய்துள்ளது. சிறுபான்மையின மக்களின் மனங்களையும் நோகடித்துள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர் தலையும், அரசியல் சுயலாபங்களையும் இலக்கு வைத்தே, தான் ஒரு சிறுபான்மையினத் தலைவன் என்பதைக்கூட மறந்து ஹக்கீம் வீரவசனம் பேசுகின்றார் என்றெல்லாம் விமர்சனங்கள் குவிந்தவண்ணமுள்ளன.

இந்நிலையில், புலம்பெயர் தமிழர்களை அமைச்சர் ஹக்கீம் விமர்சித்துள்ளமை உட்பட முக்கிய சில காரணிகள் தொடர்பில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியிடம் கருத்துக் கேட்டோம்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

நீதியமைச்சர் என்ற அடிப்படையில் நண்பர் அமைச்சர் ஹக்கீம் ஜெனிவா சென்றதை நாம் ஏற்கின்றோம். அமைச்சர் என்ற அடிப்படையில் அவர் அரசின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால், இலங்கைவாழ் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை நண்பர் ஹக்கீம் ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களையோ அல்லது இங்கு வாழ் தமிழர்களையோ விமர்சிப்பது அவரின் ஜனநாயக உரிமை. அதை எவராலும் கட்டுப்படுத்தமுடியாது. இருப்பினும், சிறுபான்மையினத் தலைவர்களுள் ஒருவர் என்ற அடிப்படையில் அவரின் காட்டமான விமர்சனங்கள் ஆரோக்கியமானதா என்பது பற்றியும் அவர் சிந்திக்கவேண்டும். ஏனையவர்களின் மனங்களும் நோகாத வகையிலேயே கருத்துகள் இருத்தல் வேண்டும்.

கம்பன் விழாவில் முக்கிய அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் அளவுக்கு தமிழ்ப் பாண்டித்தியம் பெற்ற நண்பர் ஹக்கீம், வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மையின மக்கள் நீதியாகவும், நேர்மையாகவும் அரசினால் நடத்தப்படுகின்றனரா என்ற கேள்விக்கும் பதிலளிக்கவேண்டும் எனக் கோரியுள்ளார் சுரேஷ் எம்.பி.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=68042963709281825#

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன் எந்த முஸ்லிம்? போரி? ஷியா? சன்னி?

எந்த ஒற்றுமையான இசுலாமிய கூட்டத்தையும் பிரிக்கும் கேள்விகள். 

மேற்கால் இசுலாமிய தீவிரவாதிகளை பிரிக்க பாவிக்கும் ஆயுதம். 

Edited by KuLavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.