Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸில் குணரட்ணம் சரணடைந்துள்ளார்: கோட்டாபய

Featured Replies

பொலிஸில் குணரட்ணம் சரணடைந்துள்ளார்: கோட்டாபய

கடத்தப்பட்டதாக பிரசாரப்படுத்திவரும் ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் குணரட்ணம் எனப்படுபவர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இரவு அரச தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே மேற்படி கூறினார்.

அந்நிகழ்ச்சியில் குணரட்ணம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து கூறுகையில்...

நாட்டில் நிலவுகின்ற சுமுகநிலையைக் குழப்புவதற்கு பலர் முயன்று வருகிறார்கள். அதில் ஓர் அங்கம் தான் கடத்தல் நாடகங்கள். அண்மையிலும் குணரட்ணம் என்பர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு சற்று முன்பாக பொலிஸில் குணரட்ணம் சரணடைந்துள்ளதாக தகவல் கிடைத்தது. எனினும் அதுபற்றி முழுமையாக இன்னமும் அறியமுடியவில்லை.

கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து குணரட்ணம் தொடர்பான பரபரப்பான செய்திகள் வெளிவரத் தொடங்கின. நாட்டில் புரட்சி ஏற்படுத்தப்போவதாகவும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகளை இணைத்து புரட்சி செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இச்செய்தி தொடர்பாக நாமும் தேடிப்பார்த்தோம். குறிப்பாக, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டிருந்தேன். அவுஸ்திரேலிய வதிவுரிமை பெற்றுள்ள, அவுஸ்திரேலிய கடவுச் சீட்டில் இலங்கை வந்துள்ள குணரட்ணம் என்பவர் பற்றிய முழு விபரத்தினை வழங்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டிருந்தேன். ஆனால் குணரட்ணம் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகும்வரை அவர்பற்றிய விபரங்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வழங்கியிருக்கவில்லை.

குணரட்ணம் கடத்தப்பட்டதாக செய்தி வெளியானவுடன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் என்னைத் தொடர்புகொண்டு மேற்படி நபர் கடத்தப்பட்டுள்ளதாக முறையிட்டார். நான் அவரிடம் தெளிவாகக் கூறினேன், குணரட்ணம் பற்றிய தகவல்களை வழங்குமாறு தங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. முதலில் அதனை வழங்குங்கள் என்று தெளிவுபடுத்தினேன். அதன்பின்னர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது. அதில் “நொயல் முதலிகே“ என்ற நபர் அவுஸ்திரேலிய வதிவுரிமை பெற்றுள்ளதாகவும் அவர் தற்சமயம் கடத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

நாங்கள் குணரட்ணம் என்று அறிந்துள்ளபோது, இப்போது புதிதாக நொயல் முதலிகே என்ற பெயர் அடிபடுகிறது. நாட்டை ஏமாற்றி வெளிநாடுகளில் வேறு பெயர்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களின் சதிவேலைகளுக்கு இச்சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டு. இவரைப்போல் பலர் இலங்கையில் காணாமல்போனதாக காட்டிக்கொண்டு வெளிநாடுகளில் வேறு பெயர்களில் குடியுரிமை பெற்று சுகபோகம் அனுபவித்து வருகிறார்கள். எமது நாட்டின் உரிமைகள் பற்றி பேசுகின்ற வெளிநாட்டவர்கள் முதலில் இதுபோன்ற விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பிரேம்குமார் குணரட்ணம் பொலிஸில் சரணடைந்தமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ரோஹணவிடம் கேட்டபோது...

“அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் நொயல் முதலிகே என அடையாளம் காட்டப்பட்டவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் நேற்று இரவு சரணடைந்துள்ளார். தன்னை வானொன்றில் ஏற்றி கடத்த முயன்றதாகவும் குணரட்ணம் கூறியுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சரணடைந்துள்ள குணரட்ணம் பற்றிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

[url="http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39164-2012-04-10-01-17-44.html"]http://www.tamilmirr...0-01-17-44.html[/url

Edited by akootha

அவரை உடனே TVல் காட்ட வேணும்..எதற்கும் அவரின் உடைத்த வீட்டிற்கு ஆஸ்திரேலியா நட்ட ஈடு வாங்கி கொடுக்க வேணும்.

ஜே. ஆர்., சிறீமா, பிரேமதாச, சந்திரகா, ரணில், மகிந்த போன்ற சிங்கள அரச பயங்கரவாதிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளுக்கு நீண்டகாலம் ஆதரவு வழங்கிய இந்தியப் பயங்கரவாதிகளால் முடியாததை, ஆஸ்திரேலியா மிக இலகுவில் சாதித்துள்ளது.

இந்தியக் காட்டுமிராண்டி ராஜதந்திரிகளுக்கு சிங்கள அரச பயங்கரவாதிகள் வழங்கும் மதிப்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜே. ஆர்., சிறீமா, பிரேமதாச, சந்திரகா, ரணில், மகிந்த போன்ற சிங்கள அரச பயங்கரவாதிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளுக்கு நீண்டகாலம் ஆதரவு வழங்கிய இந்தியப் பயங்கரவாதிகளால் முடியாததை, ஆஸ்திரேலியா மிக இலகுவில் சாதித்துள்ளது.

இந்தியக் காட்டுமிராண்டி ராஜதந்திரிகளுக்கு சிங்கள அரச பயங்கரவாதிகள் வழங்கும் மதிப்பு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது முதலாவது வெளிப்படையான, மூடி மறைக்க முடியாத மேற்கு சார் நாடுகளிடமான தோல்வி. இனி விமல் உண்மையில் coke வாங்க இயலாமல்த்தான் போகப் போகிறது போல் இருக்கு. நேரத்திற்கு நல்ல வெளிநாட்டு விஸ்கிகள், அமெரிக்கன் பியர் எல்லாவற்றையும் விமல் கழஞ்சியப்படுத்தி வைக்கட்டும்.

  • தொடங்கியவர்

கோத்தாவின் நேரடி கட்டளைகளுக்கு இணங்கவே கடத்தல்கள் நடந்தேறின என தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.