Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்திச் செல்லப்பட்ட பிரேம்குமார் குணரத்னம் இன்று (10) முற்பகல் கோலாலம்பூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

Featured Replies

கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரான பிரேம்குமார் குணரத்னம் என்ற குமார் மாத்தயா இன்று (10) முற்பகல் 7.40 இற்கு சிறிலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL 314 என்ற விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேம்குமார் குணரத்னம் கடந்த செப்டம்பர் மாதம் "நொயேல் முதலிகே" என்ற பெயரில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். N1016123 என்ற அவுஸ்திரேலிய கடவுச் சீட்டிலேயே பிரேம்குமார் குணரத்னம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார்.

குமார் குணரத்னத்தை விமானத்தில் அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரியொருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். பிரேம்குமார் குணரத்னம் என்ற குமார் மாத்தயா கடந்த 06 ஆம் திகதி கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு (1)

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று காலை 7.10 மணிக்கு புறப்படவுள்ள யூ.எல்.882 விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவார் என முன்னிலை சோஷலிசக் கட்சி சார்பு இணையத்தளமான லங்காவிவ்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணமும் (42) அக்கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகலவும் கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது. தனது பிரஜையான நோயல் முதலிகே (குமார் குணரட்ணம்) கடத்தப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை தெளிவாக்கும்படி அஸ்திரேலிய அரசாங்கம் கோரியிருந்தது.

இந்நிலையில் நோயல் முதலிகே என்பவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் நேற்றிரவு சரணடைந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேம்குமார் குணரட்ணம் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக 'தி அவுஸ்திரேலியன்' பத்திரிகையிடம் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திசரா சமரசிங்க கூறியுள்ளார்.

"அவர் வெவ்வேறு மூன்று பெயர்களில் மூன்று கடவுச்சீட்டுகளின் கீழ் இலங்கையில் வசித்துள்ளார். பிரேம்குமார் குணரட்ணம் என்ற பெயரில் நாட்டிற்கு ஒருவர் சட்டபூர்வமாக வரவில்லை என நாம் தொடர்ந்து கூறிவந்தோம். அதனால்தான் அவரை கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவர் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பிஅனுப்பப்பட சிறந்த வாய்ப்புள்ளது. அவர் உரிய விஸா இல்லாமல் தங்கியிருந்ததாக அறிகிறோம்" என உயர் ஸ்தானிகர் திசரா சமரசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை குணரட்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலதிக விடயங்களை இத்தருணத்தில் கலந்துரையாடுவது பொருத்தமற்றதாக இருக்கும்' என அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=58406&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.