Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0

Featured Replies

வணக்கம்,

கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (11.04.2012 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் கண்டிப்பாக குறிப்பிடப்படல் வேண்டும்.
  • தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்
  • பிரதேச வாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் எந்தக்கருத்தும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களை (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்) யும் சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், சினிமாத்துறை உட்பட கலைஞர்களையும் ஒருமையில் அழைத்தலும் அவதூறான சொற்களால் இகழ்தலும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • ஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான எந்தவித கருத்துகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்

2. தலைப்பு

  • தலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்

    • நீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
    • சுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்
    • யாழ் கருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது
    • வன்முறையையும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது
    • [*]பின்வரும் முறையில் தலைப்புக்கள் எழுதப்படல் ஆகாது:

      • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
      • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
      • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)

      [*]செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின்கீழ் பதிய வேண்டும்.

3. மொழி

  • யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:

    • மிகவும் முக்கிய நிகழ்காலத்துக்குரிய செய்தி / அரசியல் அலசல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது எனில் சுருக்கமாக தமிழில் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கம் தந்துவிட்டு மிகுதியை இணைக்க அல்லது மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.
    • அல்லது அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் பதியப்படல் வேண்டும்.
    • அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும்.

4. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.
  • காக்கா, தொப்பி பிரட்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • சாதி சொல்லி திட்டுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்
  • மாற்றுத் திறனாளிகளை தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்

5. அரட்டை

  • கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் [சாதுவாக], யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும், திண்ணையிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.
  • இருப்பினும், மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும் என வேண்டுகோள் விடுப்பின் விதிமுறை "ஆ-5.1" செல்லுபடியாகும்.
  • ஒரு தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற கருத்துக்களைத் தவிர்த்தல் வேண்டும். அதே போன்று வேறு ஒரு திரியில் எழுதியவற்றை மீண்டும் இன்னொரு திரியில் அவசியமின்றி வந்து ஒட்டக்கூடாது

6. படங்கள்

  • யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.
  • இணைக்கப்படும் படங்கள் தொடர்பான விதிகள்:

    • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது
    • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள் இணைக்கப்படல் ஆகாது
    • உங்கள் தனிப்பட்ட அடையாளங்களை தெரிவிக்கும் படங்களையும் குடும்ப உறுப்பினர்களின், நண்பர்களின் படங்களையும் இணைப்பதை கூடியவரைக்கும் தவிர்க்கவும்.
    • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே இணைக்கப்படல் வேண்டும். இது வேறு ஒரு தளத்தில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும் பொருந்தும்.
    • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
    • [*]செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:

      • எ.கா.: [எச்சரிக்கை!] சுனாமியும் அதன் வடுக்களும்

      [*]படங்களின் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)

      [*]உங்கள் படம் அல்லாத வேறு ஒருவரின் படத்தை இணைக்கும் போது அவரது அனுமதி பெறப்படல் வேண்டும் (விதி விலக்கு: அரசியல், சினிமா மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் படங்கள்)

7. மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் உங்களால் இணைக்கப்படும் ஆக்கம், உங்கள் சுய ஆக்கம் இல்லாது விடின்:

    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்
    • அது எப்போது எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்
    • [*]மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது உங்களது ஆக்கம் இல்லை என்பதையாவது குறிப்பிடல் வேண்டும்.

      [*]அதேபோல், கருத்துக்களத்தில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் சொந்த ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:

      • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
      • அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
      • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

8. பொறுப்பு

  • கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.
  • கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவற்றை எழுதும் உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • அவரவர் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • யாழ் களத்தில் கள உறவுகளால் அறியத்தரப்படும் மற்றும் யாழில் விளம்பரம் செய்யப்படும் அமைப்புகள், நிதி நிறுவனங்கள் / மனித நேய அமைப்புகள் என்பனவற்றுடனான கள உறவுகளின் தொடர்புகளுக்கும் அவர்களுக்கிடையான கள உறுப்பினர்களின் தொடர்பாடலின் விளைவுகளுக்கும் அவரவரே (உறுப்பினர்கள்) முழுப் பொறுப்பும் ஆகும்.

ஆ) உறுப்பினர்கள்

1. உங்கள் பெயர்

  • யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

    • பயனர் பெயர் (user name): இது யாழ் கருத்துக்களத்தில் உங்கள் பதிவிற்கான பெயர். நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்கான பெயர்.
    • புனை பெயர் (nick name): இது உங்களை நீங்கள் யாழ் கருத்துக்களத்தில் அடையாளப்படுத்துவதற்கான பெயர்.
    • [*]இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.

      [*]பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாது.)

      [*]பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

      • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள்
      • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
      • பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்)

      [*]பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:

      • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
      • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
      • இலக்கங்கள் (எ.கா.: 12345678)
      • குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

2. உங்கள் படம்

  • யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.

    • பயனர் படம் (profile foto): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • சின்னம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • [*]இவை இரண்டும் உண்மையான உங்கள் படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.

      [*]படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:

      • பயனர் படம்: 90px * 90px
      • சின்னம்: 80px * 80px

      [*]பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:

      • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்
      • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்
      • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்)
      • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்)
      • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்

3. கருத்தாடல்

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது.)
  • சக கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்
  • எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது
  • கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்க்கவும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலோ தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலோ எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது

4. தனிமடற் சேவை

  • கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினை பயன்படுத்தலாம்.
  • தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது.(அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்)
  • தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.
  • ஒருவரின் தனிமடலை நிர்வாகப் பிரிவில் இருப்பவர்கள் தவிர்ந்த இன்னொருவருக்கு அனுப்புதோ, பகிரங்கப்படுத்துவதோ ஆகாது
  • கள உறவுகளுக்கிடையில் ஆபாசமாகவோ அல்லது வக்கிரமாகவோ தனி மடல் பிரயோகம் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

இ) வடிவம்

1. எழுத்து

  • கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் unicode எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகளுக்கு மட்டும் "அளவு 2" இனை பயன்படுத்தலாம்.
  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) - சரிந்த - கோடிட்ட" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.
  • தலைப்புக்களில் (Topic Title) வடிவமைப்புக்களை இணைக்க முடியாது என்பதால் தலைப்புக்கள் அனைத்தும் வடிவமைப்புகள் இன்றியே இணைக்குப்பட வேண்டும்.

2. நிறம்

  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும்.

3. படம்

  • இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

கருத்துக்களத்திற்கான அனைத்து பகுதிகளுக்கும் உண்டான பொதுவான விதிகள்

1. கருத்துகளை திருத்துதல்: ஒருவர் தனது பதிவில் கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம். இது தொடர்பான மேலதிக உப விதிகள்

  • ஏனைய உறுப்பினர்கள் தமது பதில்களை எழுதியபின் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதோ அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தையோ செய்யக் கூடாது
  • நிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை அழிக்க கூடாது
  • தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தரலாம். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்

2.0. மட்டுறுத்தப்பட்ட கருத்துகள்:

  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் நிச்சயம் மட்டுறுத்தினர்களிடம் தனி மடலில் விளக்கம் கேட்கலாம்
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

ஒரு உறுப்பினரை தடை செய்ய வேண்டி வரும் சந்தர்ப்பங்களும் முறைகளும்

1. ஒரு உறவு கள விதிகளை மீறினால் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். எச்சரிக்கை புள்ளிகள் 10 பெற்றால் அந்த உறவு தானியங்கி மூலமாகவோ அல்லது மட்டுறுத்தினர் மூலமாகவோ தடை செய்யப்படுவார்

2. உறுப்பினர் ஒருவர் தனது கருத்துகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி நீக்கினால் அவரை தடை செய்வதற்குரிய சூழ்நிலைகளை தோற்றுவித்தவர் ஆவார் என்று கருதப்பட்டு தடை செய்யப்படுவார்

3. ஏனைய உறவுகளை மிரட்டினாலோ, ஆபாசமாக தனி மடல் அனுப்பினாலோ, மற்றவர்களை யாழுக்கு எதிராக இயங்குமாறு கோரினாலோ அல்லது யாழின் விதிகளை அப்பட்டமாக மீறினாலோ உடனடியாக குறிப்பிட்ட உறுப்பினர் தடை செய்யப்படுவார்.

4. மற்றவரின் ஆக்கங்களை தன் சொந்த ஆக்கமாக பிரசுரித்தால் முதலில் எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் அதே தவறு நிகழுமாயின் அவர் நிரந்தரமாக தடை செய்யப்படுவார்

மேற்கூறிய அனைத்து விதிகளின் எல்லைகள் எவை என்பது மட்டுறுத்தினரின் முடிவாகவே இருக்கும். இப்படியான கருத்தொன்றை எப்படித் தணிக்கை செய்வது (திருத்துவது/ஒரு பகுதியை நீக்கி *** இடுவது/முற்றாக நீக்குவது) என்பதனையும் மட்டுறுத்தினரே தீர்மானிக்க வேண்டும். மட்டுறுத்தினரின் முடிவே இறுதியானது ஆகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.