Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குணரத்னத்தைக் கொல்ல நான்கு மாதத்திற்கு முன்னரே உத்தரவு – லங்கா நியுஸ் வெப்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gotabaya1-copy-100x100.jpg

கடத்தப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரத்னத்தை கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்‌ஷ நான்கு மாதங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்ததாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் Lanka News Web இணையத்திற்குத் தெரிவித்தார்.மக்கள் எழுச்சி இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அவர்களது செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானிக்குமாறும் பாதுகாப்புச் செயலாளரது கொலைக் கும்பலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியை ஸ்தாபித்து அதன் தலைவராக பிரேம்குமார் குணரத்னம் நியமிக்கப்படுவதற்கு முன்னர் தமது உத்தரவை நிறைவேற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரின் இந்த உத்தரவிற்கமையவே கடந்த 06ஆம் திகதி பிரேம்குமார் குணரத்னம் கடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தக் கடத்தல் இரகசிய பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் பெரேராவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பிரேம்குமார் குறித்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

09ஆம் திகதி இலங்கை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் நந்தசேன கோதாபய ராஜபக்‌ஷ, ”அவுஸ்திரேலிய காரர்களுக்கு இங்கு நினைத்தாற்போல் விளையாட அனுமதிக்க முடியாது” எனக் கூறி, தமது அடாவடி, கொலைவெறி, உத்தரவை நியாயப்படுத்த முயற்சித்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

http://www.saritham.com/?p=56818

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருண் ரணதுங்கா அண்ணா, உங்களுக்கு இது அடாவடியா,  அராஜகமா தெரியவில்லை? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.