Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் மக்கள் மீண்டும் தலையெடுக்க கல்வியே ஒரேயொரு ஆயுதம்!

Featured Replies

தமிழ் பேசும் மக்கள் மீண்டும் தலையெடுக்க கல்வியே ஒரேயொரு ஆயுதம்! - கூட்டமைப்பின் எம்.பி சரவணபவன் தெரிவிப்பு!!

'ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் மீண்டும் தலையெடுப்பதற்கு கல்வியே ஒரேயொரு ஆயுதம். எனவே, கல்வியில் அரசியல் வேண்டாம். கட்சித் தலைவர்கள் கட்சிகளின் எல்லையைத் தாண்டி எமது மக்களின் நலன் கருதி கல்வியில் அக்கறை காட்ட வேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் சிறுபான்மை இனத்தவர்கள் அல்லர். அவர்கள் இந்நாட்டின் தேசிய இனத்தவர்கள். இதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொண்டு சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூறக்கூடாது.

தமிழர்களின் கதை முடிந்து விட்டது என சிலர் எண்ணுகிறார்கள். ஆனால், அவர்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் தலையெடுப்பார்கள். அவர்கள் கல்வி என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து சர்வதேச ரீதியில் கோலோச்சுவார்கள். இது நிச்சயம் நடக்கும் என்றும் அவர் அடித்துக் கூறினார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் 'புலமைச்சுடர்' கையேட்டின் வளவாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளவத்தை அக்ஷயா விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியவை வருமாறு:

'ஒரு நாட்டின் வாழ்வும், வளர்ச்சியும், வளமும் சார்ந்திருக்கின்ற முக்கிய அடிப்படைகளில் ஒன்று கல்வி. மனிதனை உருவாக்கும் கல்வியை முயன்று போற்றி வளர்க்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் அயராது பாடுபடவேண்டும்.

ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு, இன்றைய இந்த நிகழ்வின் நாயகர்களாக வருகை தந்திருக்கும் கல்விப்பிரிவு வளவாளர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

பேரழிவுகளாலும், போரழிவுகளாலும் பின்னடைவைச் சந்தித்துள்ள எமது மக்கள் மீண்டெழுவதற்கு கல்வியை ஒரேயொரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.

அன்று தமிழ் பேசும் மக்கள் கல்வியில் அசுர வளர்ச்சியைப் பெற்றிருந்தபோது, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பேரினவாத ஆட்சியாளர்கள் புதிய புதிய சட்டங்களை உருவாக்கி அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

இவ்வாறான சட்டங்கள் தற்போது இல்லை என நினைக்காதீர்கள். இனிமேல்தான் எமது மக்களின் கல்வி வளர்ச்சியைத் தடுப்பதில் ஆட்சியாளர்கள் குறியாக இருப்பார்கள்.

எனவே, அன்று கொண்டுவந்த சட்டங்களைவிட மிக மோசமான சட்டங்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்' என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=5c5c7172-3ebd-4d98-9db4-37eba9a53e1b

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் ஞானத்தில் சுத்த சூனியங்கள். 

இதையும் கொஞ்சம் கவனியுங்கோ

395110_217419965007572_100002187094503_485927_804878076_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கொஞ்சம் கவனியுங்கோ

395110_217419965007572_100002187094503_485927_804878076_n.jpg

என்ன பெரிய ஐயர் பேஸ்? ஒரு மைல் தடக்கு முடக்கு ரோட்டை போட்டு விட்டு ஒரு பிளேனை அங்கேயும் இங்கேயும் பறப்பது. பதினாறு மில்லியன் பேர் இருந்தும் பாக்கியும், ருசியனும் தான் சண்டைக்கு ஒரு மூண்டை பறந்தவங்கள் . 

பின்னுக்கு என்ன தட்டிவானே?  ருசியா அப்கானிஸ்தானில முப்பது வருசத்திற்கு பாவித்ததோ?

One of the US Warships would have hundered times more planes than miniscule Sri lankan genocidal air force. Sri Lankan air force possess Chinese chemical weapons and North Korean cluster bombs. Very dangerous. Tiny like Bacteria but Sri Lankans are very lethal towards humanity.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.