Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் கேட்பது வீடல்ல நாடு இதை இந்திய புரிந்து கொள்ளவேண்டும் – காசியானந்தன். (Video in)

Featured Replies

தேசியத்தலைவர் அவர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் தலைவர் அவர்களால் மரியாதைக்குரியவராக பார்க்கப்படுபவர் பழ.நொடுமாறன் அவர்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியனந்தன் தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறன் அவர்கள் இந்திரா காந்தி அம்மையார் அவர்களால் அவரது மூத்தமகன் என்று பாராட்டப்பட்டவர்,விடுதலைப்போருடன் தொடர்புடைய ஒரு தலைவி தன்னுடைய மூத்தமகன் என்று அழைத்த பழ.நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்ட பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் இன்று வெளியிடப்படுகின்றது இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தால் இன்று தமிழீழம் இருந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்இந்திராகாந்தி அவர்கள் மறைந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் கறுப்பு கொடியினை பறக்கவிடுவதற்காக இரண்டு விடுதலைப்புலிகள் கொடிக்கம்பத்தில் ஏறியபோது சிங்கள வெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள் அப்போது யாழ்ப்பாணமக்கள் குமுறி அழுதார்கள் அவ்வாறு இந்திர காந்திஅவர்களின் இழப்பு அன்று தமிழ்மக்கள் மத்தியில் காணப்பட்டது.

இன்று ஜ.நாவின் மனிதஉரிமைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒரு நிறைவான அறிக்கை அல்ல ஆனாலும் அமெரிக்கா உலக அரங்கில் முதல் முதல் தமிழர்களின் அந்த மண்ணில் நிகழ்த நிகழ்வினை குறித்த ஒரு கருத்தினை முதல் முதல்ஓங்கி ஒலித்ததால் அது உலக அரங்கில் தமிழர்களின் போர்முனைக்கு ஒரு தொடக்கமாக எங்கோ கதவை தட்டுகின்ற நிகழ்வாக இருப்பதால் நாங்கள்அதனை வரவேற்கின்றோம் ஆனாலும் அது முழுமையான அறிக்கை அல்லஅதற்கு முன்னர் ஜ.நா அறிக்கை குழு வெளியிட்ட அறிக்கையிலும் இனஅழிப்பு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை இந்த அறிக்கையிலும் அவ்வாறு இல்லை மனிதஉரிமை மீறல் என்று தான்குறிப்பிட்டுள்ளார்கள் அமெரிக்காவின் இந்த தீர்மானம் ஒருசிறிய தொடக்கம் போல தமிழர்களுக்கு பட்டாலும் அதில் பெரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.எதிர்காலத்தில் அமெரிக்கா தன்னுடைய இந்த கருத்தினை மாற்றிக்கொள்ளும் காலம் வரும் இந்த தீர்மானத்தில் பாரிய கொடுமை காணப்படுகின்றது இலங்கைத்தீவில் வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று சொல்லப்படுகின்றது தமிழர்வாழும் நிலப்பரப்பு ஒருதாயகம் அந்த தாயகம் தான் வடக்கு கிழக்கு ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கையில் வடக்கு என்று சுருக்கி சொல்லப்பட்டிருக்கின்றது இது ஒரு பாரிய கொடுமை றாஜீவ்காந்தி உடன்படிக்கையில்கூட தமிழர்தாயகம் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது.

பிரபாகரன் ஒரு ஈடுஇணையற்ற தலைவன் என்மீதுஅவர் வைத்திருப்பது பாசம் ஆனால் நெடுமாறன் அவர்கள்மீது வைத்திருப்பது மரியாதை தலைவர் அவர்கள் நெஞ்சத்தில் நெடுமாறன் அவர்கள் இடம்பிடித்திருக்கின்றார் என்பது எனக்கு நீண்ட நெடுங்காலமாக தெரியும்,நெடுமாறன் அவர்கள் மீது தலைவர் அவர்கள் மிகப்பெரிய உயர்வான எண்ணத்தை கொண்டுள்ளார். ஆகவே தமிழர்களது வரலாறு படைத்தவர் எங்கள் தலைவர் அவர்கள் துப்பாக்கி ஏந்திய பெண் என்ற வரலாற்றை பிரபாகரன் அவர்கள்தான் படைத்தார் அது தமிழர்களின் வரலாற்றில் பெரிய வரலாறு சேரன்,சோழன்,பாண்டியனிடம் படைகள் இருந்தான ஆனால் தமிழருக்கு வான்படையினை தலைவர் அவர்கள்தான் படைத்தார்அது வரலாறு அதனை யாரும் மறக்கமுடியாது,உலகவிடுதலையாளரின் வரலாற்றில் முதல் முதல் போராளியின் கழுத்தில் நஞ்சை கட்டியவர் தலைவர்அவர்கள் ஒருபோராளியின் சாவுக்கு அஞ்சாக அந்த உறுதியினை நிலைநாட்டியவர் எங்கள் தலைவர் அவர்கள்,

உலக விடுதலைப்போராளிகளுடைய வரலாற்றில் ஒவ்வொரு நாடுகளின் உதவியுடன் தான் களத்தில் நின்றார்கள் அதனை இந்த நுலில் மிகச்சிறப்பாக சொல்லுகின்றார்.வியட்நாம் போராளிகள் களத்தில் நின்றார்கள் என்றால் சீனா,ரஸ்யநாடுகளின் ஆதரவுடன் தான் களத்தில் நின்றார்கள்,பாலஸ்தீனம் களத்தில் நின்றது என்றால் அதனை சுற்றிஉள்ள அரபுநாடுகளின் உதவியுடன் தான் அவர்கள் களத்தில் நின்றார்கள்,நேதாஜி களத்தில் இறங்கினார் என்றால் அதற்கு ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகளின் உதவி இருந்தது, ஆனால் எந்த நாட்டின் எந்த அரசின் உதவி இல்லை என்றாலும் விடுதலைப்போராளி தன்னுடைய விடுதலை உணர்வினை கொச்சைப்படுத்த மாட்டான் தனித்து களத்தில் நின்று விடுதலைப்போராட்ட வரலாற்றினை நிகழ்த்திகாட்டிய ஈடு இணையற்ற போராளியாக தலைவர் அவர்களை பாக்கின்றோனம் என்றும் எதற்கும் வளைந்ததில்லை அப்படி ஒரு தலைவர் அப்படிப்பட்ட அற்புதமான தலைவர் அவர்களை பற்றிய பல செய்திகளை இந்த நூலில் நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ளார்உலகில் உள்ள அத்தனை விடுதலையாளர்களுக்கும் வழிகாட்டியாக இந்த நூல் இருக்கின்றது இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த கருத்துக்கள் உலகம் எங்கும் பரவவேண்டும்,தலைவர் அவர்கள் ஆயுதத்தினை மட்டும் வைத்திருந்தவர் அல்ல அவரிடம் அறிவு,ஆற்றல், கருத்துவலிமை,அவர் உருவாக்கிய போராளிகளிடமும் அதே கருத்து வலிமைகொண்ட போராளிகளாக உருவாக்கும் திறமையினை கொண்டவர் எங்கள் தலைவர் இப்படிப்பட்ட விடுதலைப்பேராட்டம் தொடர்பான புதிய புதிய தகவல்களை கருத்துக்களை கொண்ட நூலாக இந்த நூல் காணப்படுகின்றது.தலைவர் அவர்கள் உண்மையில் பல நிலைகளில் ஈடுஇணையற்ற இயக்கத்தை உருவாக்கினார் அவர் படைத்த வரலாறு யாரும் படைக்கவில்லை அவர் உருவாக்கிய வீரர்களை போல் உலகத்தில் அந்த வீரர்களுக்கு இணையான வீரர்கள் இல்லை .

தற்போது தமிழர் தாயகத்தில் மிகக்கொடுமையான நிலமை சிங்களக்குடியேற்றம் இன்னும் 10 ஆண்டுகள் தமிழீழத்தில் சிங்கள குடியேற்றம் தொடர்ந்து நிகழுமானால் அதற்கு பிறகு தமிழீழம் என்ற தாயகம் இருக்காது ஆகவேதான் தொடக்கத்தில் இருந்து தாயக கொள்கையினை தலைவர் அவர்கள் வலியுறுத்திவருகின்றார் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்களவர் அடிக்கும் கொலைவெறி கூத்து கொஞ்சநஞ்சமல்ல தலைவர் அவர்கள் ஆயுதத்துடன் களத்தில் நின்ற 2009 வரையான 33 ஆண்டுகள் அதற்கு பிறகு இந்த மூன்று ஆண்டுகள் சிங்களவர்கள் தமிழீழத்தில் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல சிங்களக்குடியேற்றம் மிக கொடுமையாக தாயக மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது இங்கு ஜம்பதாயிரம் வீடுகள்கட்டிக்கொடுப்பதாக சொல்கின்றார்கள் நாங்கள் ஈழத்தில் கேட்பது வீடு அல்ல நாடு அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நாங்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்த கேடும் நினைத்ததில்லை தமிழர்மண்ணைதுலைத்துகட்டுங்கள் என்று சிங்களவர்கள் தான் சொல்கின்றார்கள் இவ்வாறு தான் தற்போதைய ஈழத்தின் நிலமை காணப்படுகின்றது தமிழகத்தில் தமிழகஅரசும் ஈழத்தமிழர் விடயத்தில் துணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்

பழ நெடுமாறன் அவர்களின் இந்த நூலினை படித்தால் எதிர்காலத்தில் இந்தியஅரசின் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் கூட அவர்களிடம் மாற்றம் வருவதற்கு இந்த நூல் பெரியளவில் அமைகிறது அறிவூட்டும் நூலாக இந்தநூல் அமைகிறது சீண்டிப்பாக்கும் நூலாக அல்ல வாசிப்பவர்களை தொட்டுஉலுக்கும் நூலாக காணப்படுகின்றது இந்தநூல் ஒரு அரும்பெரும்நூல் இதுவரை வெளிவந்த ஈழத்தமிழர்களின் வரலாற்று பொறித்த நூலில் இந்த நூல் முதன்மையானது இதனை அனைவரும் வாங்கி படியுங்கள் என்று பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=15671

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.