Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகத்தில் ஆயுத முனையில் நான்கு வீடுகளில் கொள்ளை! அயலவர்கள் மீது வாள் வெட்டு!

Featured Replies

யாழ். கந்தரோடை மடத்தடி சுன்னாகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 11.40 மணியளவில் அப்பகுதியிலுள்ள எல்.லோகேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் வெளியே நிற்க மூன்று கொள்ளையர்கள் மதிலால் ஏறிச் சென்று அவ்வீட்டில் பின்புறமாக இருந்த மின்சார உருகியை நிறுத்திவிட்டு கதவுகளை திறக்குமாறு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் வீட்டு யன்னல்களை யாரோ உடைப்பதாக நினைத்து கதவை திறந்தவுடன் வெளியில் இருந்த மூன்று திருட்டு நபர்கள் உள்ள நுழைந்து வீட்டின் உரிமையாளர் சின்னத்துரை இராசத்தினம் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் இருவரையும் தனித்தனி அறையில் பூட்டி வைத்து மகனின் மனைவியை அச்சுறுத்தி அவர்களது நித்திரையிலிருந்த பிள்ளையொன்றின் மீது கைத்துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவோம் என அச்சுறுத்தி அங்குள்ள பணம், நகைகளை தருமாறு என மிட்டல்விடுத்தனர்.

இதனையடுத்து செய்வதறியாதிருந்த குறித்த பெண் தன்னிடமிருந்த இருபது பவுண் நகை முப்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடர்களிடம் கொடுத்துள்ளார். குறித்த திருடர்கள் அதனைப்பெற்றுவிட்டு யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரிக்கை செய்து தப்பிச்சென்றுள்ளனர். குறித்த வீட்டுக்குச் சென்ற நபர்களும் முகத்தை கறுப்பு துணியால் கட்டியிருந்ததுடன் கறுத்தஉடை அணிந்து கத்தி அலவாங்கு கைத்துப்பாக்கி போன்றவற்றை வைத்திருந்தனர்.

குறித்த அதே நபர்கள் அப்பகுதியிலுள்ள எல்.லோகேஸ்வரன் என்வரது வீட்டிற்குச் சென்று யன்னலை உடைத்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தி பணம் நகைகளை தருமாறு கோரியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் தம்மிடம் எதுவும் இல்லையெனவும் கடந்தவருடம் களவுபோனதாக தெரிவவித்தனர். எனினும் கொள்ளையர்களில் ஒருவர் அது ஐந்து ஐந்து வருத்திற்கு முன்பு நடைபெற்றது என தெரிவித்து அங்கிருந்த கையடக்க தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

அதே குழுவினர் அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று அங்கும் கதவினை உடைத்து அங்கிருந்தவர்களை தாக்கி அவர்களிடமிருந்து ஏழு பவுண் நகைகளையும் கையடக்கத்தொலைபேசியையும் கொள்ளையடித்ததுடன் வீட்டின் உரிமையாளரான கோபாலசர்மாவையும் அவர் மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதே குழுவினர் மடத்தடியிலுள்ள சி.இரத்தினம் (வயது 65) என்பவரது வீட்டிற்குச் சென்று அனைவரையும் வெளியே வருமாறு கூறி வீட்டினை சோதனை செய்து அங்கிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டபோது அயலிலிருந்த உறனர்கள் ஓடிவந்த போது திருடன் ஒருவனை பிடித்தபோது மற்றைய திருடன் ஒருவனால் வாளால் தலை, முதுகு, கால் பகுதிகளில் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இசச்சம்பவங்களை அறிந்து அயலில் உள்ள முகாம் பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்தளூபாது கொள்ளையர் குழு அப்பகுதியின் வயல்வெளிகளால் தப்பிச்சென்றுள்ளனர் சம்பவத்தில் காயமடைந்த நபரான சின்னத்தம்பி குணரத்தினம் (வயது 52) என்பவர் அங்கிருந்தவர்களால் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்றபோது கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிலுள்ளவர்கள் மற்றும் அயல் வீட்டிலுள்ளவர்கள் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்தபோதும் அவ்விலக்கதின் அழைப்பினை பெற்றுக்கொள்ளமுடியவில்லையெனவும் சம்பவம் நடைபெற்று ஒரு மணித்தியாலயத்தின் பின்னரே பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதே வேளை இக்கொள்ளைச் சம்வம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று காலை 8.30 மணிக்கு நான்கு வீட்டின் உரிமையாளர்களும் சென்ன்ற போதும் 12 மணி வரை முறைப்பாடுகள் எவையும் பெற்றுக்கொள்ளவில்லையெனவும் சம்பவம் நடைபெற்ற வீட்டின் உரிமையாளர்களது பெயர்களை மாத்திரம் பதிவுசெய்துள்ளனர் என மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அபயசிங்க பண்டார சம்பவம் நடைபெற்ற ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

31.jpg21.jpg13.jpg

http://thaaitamil.com/?p=15829

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.