Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய வங்கி ஆண்டறிக்கை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் சந்தேகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

agith%20cabraal_CI.jpg

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2011ம் ஆண்டுக்கான அறிக்கை தொடர்பில் பொருளியல் நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் சரியானவையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 8.4 வீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம், டிசம்பர் மாதம் 4.9 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும், இது எவ்வாறு கணிப்பீடு செய்யப்பட்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பொருளியல் நிபுணருமான ஏரான் விக்ரமரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஏனைய குறிகாட்டிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் தொடர்பிலும் சில சந்தேகங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டிக் கணிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படை தொடர்பில் தெளிவின்மை நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளதாக ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் அவ்வாறான மாற்றம் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் சிறிமல் அபேரட்ன தெரிவித்துள்ளார். சில ஹோட்டல் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளைத் தவிர நாட்டில் பாரியளவிலான முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டு, முன்னர் அறிவிக்கப்பட்டதை விடக் குறைவாக இருக்குமென ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இவ்வாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்குமெனவும், எதிர்வரும் ஆண்டில் அது 8 சதவீதமாக அதிகரிக்குமெனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், நாணய மாற்று வீதத்தைப் பலப்படுத்தவுமென இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி மிதமாக இருக்குமென வங்கி குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 8.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததெனவும், இவ்வாண்டு பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடையுமெனவும் இலங்கை அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11724

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.