Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 1,2,3

Featured Replies

எச்சரிக்கை ஹொலி வூட் படம்கள் அதிலும் action படம்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கானது

மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை.

இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள்.

அடுத்து Werewolf(மனித ஓநாய்) , சாதாரண மனிதனிலிருந்து Werewolf ஆக மாறியவர்கள். பார்க்க ஓநாய் போல இருப்பவர்கள்.இவர்களால் மீண்டும் மனித உருவுக்கு வர முடியாது. இவர்களுக்கும் இயற்கை மரணம் கிடையாது. வெள்ளியால் செய்த குண்டு மற்றும் வாள் போன்றவற்றால் இவர்களை கொல்ல முடியும். இந்த Werewolf சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் Werewolf ஆக மாறி விடுவார்கள்.

அடுத்து லைகன்(Lycans – ஓநாய் மனிதர்கள்), இவர்கள் Werewolfலிருந்து உருவானவர்கள். Werewolf இன் அனைத்து குணங்களும் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால் இவர்களால் நினைத்த நேரம் மனித உருவும், ஓநாய் உருவும் எடுக்க முடியும்.

underworld_thumb%25255B2%25255D.png?imgmax=800

டிராகுலா மற்றும் ஆக்சன் பட பிரியர்களுக்கு விருந்தளிக்க கூடியவை Underworld பட வரிசைகள். Underworld Awakening இது Underworld பட வரிசையில் தற்போது வந்துள்ள நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களும் ஆக்சன் பட ரசிகர்களுக்கு தீனி போட்டவை. நீங்கள் Vanhelsing போன்ற படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் இந்த பட வரிசைகள் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. முதல் மூன்று பாகங்களும் ஒன்றுகொன்று சார்ந்த கதையமைப்பை கொண்டவை. மேலும் மற்ற வாம்பயர், Werewolf புராதன கதைகளை போல் சிலுவையை வைத்து கொல்லுவது,மாந்திரீகம் இல்லாமல் zombie கதையை போல் வைரஸ் ,சயின்ஸ் மூலமே சொல்ல பட்டிருக்கும். நான்காம் பாகம் முதல் மூன்று பாகங்களின் வசூல் வெற்றிக்கு பின் மீண்டும் வசூலை பார்க்க எடுக்கப்பட்ட படம். முதல் மூன்று படங்கள் சுவராசியமாகவும் ஆக்சன் கலந்து எடுக்கப்பட்டிருக்கும். இதுவரை வந்துள்ள பாகங்கள்

  1. Underworld
  2. Underworld: Evolution
  3. Underworld: Rise Of The Lycans
  4. Underworld: Awakening

வாம்பயர்கள்(Vampires) அதாவது டிராகுலா மற்றும் லைகன்கள்(Lycans) அதாவது ஓநாய் மனிதர்கள் இவைகளுக்கிடையே நடக்கும் மோதல்கள் தான் இப்படங்களின் மையக்கதை. படத்தின் முதல் இரு பாகங்களும் தொடர்ச்சியானவை. அதாவது இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சி. ஆனால் மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களின் Prequel. அதாவது முதல் இரண்டு பாகங்களுக்கு முன்னர் நடந்த கதையை விவரிக்கும். மூன்றாம் பாகம் தான் எப்படி வாம்பயர்களுக்கும், லைகன்களுக்கும் மோதல்கள் துவங்கின என காட்டுகிறது.

மூலக்கதை ஆரம்பிப்பது 5ஆம் நூற்றாண்டு. 5ஆம் நூற்றாண்டில் ஒரு கிராமத்தில் புது வைரஸ் மூலம் நோய் பரவி அனைவரும் இறக்கின்றாகள். அதில் Alexander Corvinus என்னும் போர்படைத்தலைவன் ஒருவன் மட்டும் தப்பிக்கிறான். வைரஸ் அவன் உடலில் வேறுமாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இறப்பதற்கு பதிலாக வைரஸ் மூலம் அவனது உடல் சாதாரண மனிதனை போல் இல்லாமல் சாகாத தன்மையை பெறுகிறது.

அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. அதில் இரண்டு குழந்தைகள் அவனை போல் சாகாத தன்மையை பெற்று இருக்கின்றன. ஒரு குழந்தை சாதாரண மனிதனை போல் இருக்கிறது.சாகாத தன்மையை பெற்ற இருவரில் ஒருவனான மார்கஸ் என்பவனை வவ்வால் கடிக்கிறது.

image_thumb12.png?imgmax=800 அதனால் முதல் வாம்பயர் ஆக உருவாகிறான்.

மற்றொருவன் வில்லியம், அவனை ஓநாய் கடிக்கிறது. அதனால் முதல் Werewolf என்னும் ஓநாய் மனிதனாக ஆக மாறுகிறான். கவனிக்க லைகன்(Lycan) அல்ல. லைகன்களுக்கும்(Lycans) ஓநாய் மனிதர்களுக்கும், Werewolf ஓநாய் மனிதர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. Werewolf ஆக மாறிவிட்டால் மீண்டும் மனிதனாக மாற முடியாது. ஆனால் Lycans நினைத்த நேரம் ஓநாயாகவும் பின் மீண்டும் மனித வடிவம் எடுக்க முடியும். இதில் வில்லியம் மாறுவது Werewolf ஆக.

வில்லியம் Werewolf ஆக மாறியதால் கட்டுப்படுத்த முடியாத ஓநாய் மனிதனாக மாறி அனைவரையும் கடிக்கிறான். இவனால் கட்டுப்படுத்த முடியாத பல Werewolf உருவாகின்றன. இவனை கட்டுப்படுத்த மார்கஸ் சாககிடக்கும் விக்டர் (இரண்டாவது வாம்பயர் ) என்னும் போர்படைத்தலைவனிடம் அவனை கடித்து வாம்பயர் ஆக மாற்றி ஒரு ஒப்பந்தம் செய்கிறான். அது அவனின் படையை வாம்பயர்களாக மாற்றி வில்லியமை பிடிப்பது. விக்டர் (இரண்டாவது வாம்பயர் ) அமிலியா என்பவளை கடித்து மூன்றாவது வாம்பயர் உருவாக்குகிறான். இந்த மூன்று வாம்பயர்கள் கடிப்பதன் மூலமே வாம்பயர்களாக கொண்ட Death Dealers என்ற படை உருவாக்கபடுகிறது. இப்படையின் வேலை வில்லியமை பிடிப்பது மற்றும் அவனால் Werewolf ஆக மாறியவர்களை கொல்வது

image_thumb4.png?imgmax=800

பின்னர் மூவரும் சேர்ந்து வாம்பயர்கள் ஆட்சி அமைகிறார்கள். இந்த மூவரில் ஒருவர் ஆட்சி புரியும் போது மீதி இருவர் தூக்கத்தில் இருக்க வேண்டும். ஒருவர் தூக்கத்துக்கு போகும் போது மற்றொருவரை எழுப்பி ஆட்சியை ஒப்படைத்து விட்டு தூக்கத்துக்கு செல்ல வேண்டும். அவ்வபோது மூவரும் எழுவர்.

மார்கஸ் , விக்டர் மற்றும் அமிலியா என்ற முதல் மூன்று வாம்பயர்களும் , அவர்களின் Death Dealers வாம்பயர்கள் படையும் 13ஆம் நூற்றாண்டில் வில்லியம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்கிறார்கள். மார்கஸ் வில்லியமை ஒன்று செய்ய கூடாது என விக்டரை கேட்டு கொள்கிறான். ஆனால் வில்லியமை பிடிக்கும் விக்டர் அவனை கட்டுப்படுத்த முடியாது அதனால் வாம்பயர் இனம் அழிந்து விடும் எனக் கூறி அவனை தப்பிக்க முடியாத சிறையில் அடைத்து அதன் இரண்டு சாவிகளில் ஒன்றை தன் நெஞ்சினிலும் மற்றொன்றை தன் மகள் Sonja கழுத்தில் சங்கிலியாக போடுகிறான்

150pxMarcusuw_thumb3.jpg?imgmax=800

.. Death Dealers படை விக்டர் வசம் இருப்பதால் மார்கஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மேலே சொல்லப்பட்டது வாம்பயர்கள் மற்றும் Werewolf உருவாகும் படத்தின் மூலக்கதை நடப்பது 5 நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை. இக்கதை நடக்கும் காலம் வரை லைகன்கள்(Lycans) கிடையாது. இதன் பின்னரே 13 ஆம் நூற்றாண்டில் முதல் லைகன்(Lycan) லுசியன்(Lucian) உருவாகிறான். லைகன்கள்(Lycans) எப்படி உருவானார்கள் என்பதை மூன்றாம் பாகம் விவரிக்கிறது. இப்போது முதல் பாகத்திற்கு செல்வோம்.

அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 2

முதல் பாகத்தில் கதை 21 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. லைகன்களின் தலைவன் லுசியன்(Lucian) 15ஆம் நூற்றாண்டில் லைகன்களுக்கும், வாம்பயர்களுக்கும் நடந்த போரில் கொல்லபட்டதாலும், போரில் வென்ற வாம்பயர்கள் எஞ்சியிருக்கும் லைகன்களையும் அழிக்க ஆரம்பிக்கின்றனர்.படத்தின் நாயகி செலின்(Selene) ஒரு வாம்பயர். லைகன்களை(Lycans) எதிராக அவர்களை அழிக்க உருவான Death Dealers குருப்பில் இருப்பவள். லைகன்களை தேடி பிடித்து அழிப்பவள்.தனது குடும்பத்தை லைகன்கள்(Lycans) கொன்றதால் அவர்கள் மேல் பழிவாங்கும் கோவத்தோடு இருக்கிறாள். கண்ணில் படும் லைகன்களை அழிக்கிறாள்.

லைகன்கள் சிலர் மைக்கேல் என்ற ஒருவனை பின் தொடர்ந்து செல்வதை பார்க்கிறாள். ஒரு சாதாரண மனிதனை ஏன் லைகன்கள் பின் தொடர்கின்றனர் என சந்தேகம் கொள்கிறாள். லைகன்கள் மைக்கேலிடமிருந்து சோதனைக்கு ரத்தத்தை எடுக்க முயல்வதை அறிந்து அவர்களை தடுத்து அவனை காப்பாற்றுகிறாள். ஆனால் 15ஆம் நூற்றாண்டில் இறந்ததாக சொல்லப்பட்ட லுசியன்(Lucian) உயிரோடு இருப்பதை அறிகிறாள். லுசியன்(Lucian) மைக்கேலை கடித்து விடுவதால் மைக்கேல் லைகனாக மாற ஆரம்பிக்கிறான். மைக்கேலும் , செலினும் காதல் கொள்கின்றனர்.

லைகன்கள் பலர் உயிரோடு இருப்பதை Death Dealersல் உள்ள வாம்பயர்கள் யாரும் நம்ப மறுப்பதால் செலின் தூக்கத்தில் இருக்கும் இரண்டாவது வாம்பயரான விக்டரை எழுப்புகிறாள். விக்டரே செலினை வளர்த்தவன் மற்றும் செலின் பெற்றோர் சாவிற்கு காரணம் லைகன்கள் என செலினுக்கு கூறியவனும் விக்டரே. லைகன்கள் மைக்கேலை பிடித்து கொண்டு சென்று விடுகின்றனர். லைகன்கள் கூட்டத்தில் இருக்கும் Singe என்னும் சயன்டிஸ்ட் செலின் பிடித்து வந்து விக்டரிடம் ஒப்படைக்கிறாள். அவனிடமிருந்து பல உண்மைகள் தெரிய வருகிறது. மைக்கேல் Alexander Corvinusனின் மூன்று மகன்களில் வில்லியம்,மார்கஸ் தவிர சாதாரண மனிதனாக இருந்த மற்றொரு மகனின் வம்சா வழியை சார்ந்தவன் எனவும் அவன் மூலம் எடுக்கப்படும் தூய ரத்தம் மூலம் லைகன்களை மேலும் சக்தி வாய்ந்த லைகன்களாக மாற்ற முயல்வதாக கூறுகிறான்.இதை கேட்கும் விக்டர் Singeஐ கொன்று விட்டு மைக்கேல் உட்பட அனைத்து லைகன்களையும் செலினிடம் அழிக்க சொல்கிறான்.

அங்கே லைகன்களிடம் மாட்டிக்கொண்டுள்ள மைக்கேல் லுசியன்(Lucian) மூலம் பல உண்மைகளை அறிகிறான். லைகன்கள் மற்றும் வாம்பயர்கள் இடையே போரை ஆரம்பித்தது வாம்பயர்களே என்றும் முக்கியமாக விக்டரே என்றும் , தன் மகள் sonja லைகன் லுசியனை விரும்பியதால் அவளை லுசியன் கண் முன்னால் கொல்கிறான். இதனாலே லைகன்கள் மற்றும் வாம்பயர்கள் இடையே போர் உருவாகிறது எனவும் அறிந்து கொல்கிறான்.இதற்கிடையே லைகன்களை அழிக்க வரும் செலினும் உண்மையை அறிந்து கொள்கிறாள். மேலும் தன் பெற்றோரை கொன்றது லைகன்கள் அல்ல விக்டரே எனவும் தெரிந்து கொள்கிறாள்.

வாம்பயர்களுக்கும் , லைகன்களுக்கும் இடையே நடக்கும் சண்டையில் லுசியன் கொல்லபடுகிறான். சாகும் முன் செலினை மைக்கேலை கடித்து அவனை வாம்பயர் மற்றும் லைகன் சக்தி கொண்டவனாக மாற்ற சொல்லி விட்டு சாகிறான். அதன் படி செலின் மைக்கேலை கடித்து அவனை சக்தி வாய்ந்த hybridஆக மாற்றுகிறாள். அங்கே வரும் விக்டர் மைக்கேலை கொல்ல பார்க்கிறான். இறுதியில் செலின் விக்டரை கொன்று விடுகிறாள். இதற்கிடையே விக்டரால் கொல்லப்பட்ட லைகன் Singe சயன்டிஸ்ட் ரத்தம் மூலம் தூங்கி கொண்டிருந்த மார்கஸ் முழிக்கிறான். லைகன் ரத்தத்தினால் அவன் சக்தி வாய்ந்த வாம்பயர் hybridஆக மாறி இருக்கிறான். இதோடு முதல் பாகம் முடிகிறது

அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 3

இரண்டாம் பாகத்தில் முழித்த மார்கஸ், விக்டரால் அடைக்கப்பட்ட அவனது சகோதரன் Werewolf வில்லியமை சிறையிலிருந்து விடுவிக்க செல்கிறான். சிறையிலிருந்து வில்லியமை விடுவிக்க அவனுக்கு இரண்டு சாவிகளும் தேவை. ஒன்று விக்டரின் நெஞ்சில் இருந்தது அதை விக்டர் இறந்த பின் அதை எடுக்கும் Kraven என்பவனிடமிருந்து அவனை கொன்று பெறுகிறான். மற்றொன்று விக்டரின் மகள் Sonja கழுத்தில் உள்ளது. Sonja விக்டரால் லுசியன் கண் முன் கொல்லப்பட்ட பின் லுசியன் அதனை எடுத்து கொள்கிறான். அதன் பின் லுசியன் இறந்த பின் அது செலின் மற்றும் மைக்கேல் எடுத்து கொள்கின்றனர். இதனால் மார்கஸ் செலினையும் , மைக்கேலையும் விரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பித்து அவனையும் ,வில்லியமையும் கொல்வதே இரண்டாம் பாகம்.

முதல் இரண்டு பாகங்களில் தான் நான் மேலே சொன்ன வாம்பயர்கள் ,Werewolf மற்றும் லைகன்கள் மூலக்கதை கொஞ்ச கொஞ்சமாக பிரித்து சொல்லபடுகிறது. முதல் இரு பாகங்களை முழுமையாக பார்த்த பின்னரே அனைத்து கதைகளும் நமக்கு விளங்கும். மேலும் செலின் பெற்றோர்களை ஏன் விக்டர் கொன்றான் என்பது இரண்டாம் பாகத்திலும், செத்து போனதாக சொல்லப்பட்ட லுசியன் எப்படி உயிரோடு வந்தான் என்பது முதல் பாகத்திலும் சொல்லபடுகிறது. முதல் இரு பாகங்களிலும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. முதல் இரண்டு பாகங்கள் மற்றும் நான்காம் பாகத்தின் கதாநாயகி செலின்(Selene) என்ற கதாபாத்திரம். Vanhelsing மற்றும் Pearl Harbor படங்களில் கதாநாயகியாக நடித்த Kate Beckinsale. மூன்றாம் பாகத்தில் இவர் கிடையாது. இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் கீழே

இனி மூன்றாம் பாகத்தை பார்ப்போம். இதில் லைகன்கள்(Lycans) எங்கே எப்படி வந்தார்கள் என்பது விவரிக்கபடுகிறது. முதல் பாகத்தில் வில்லனாக முதலில் காட்டப்படும் லுசியன்(Lucian) என்ற லைகன்(Lycan) கதாபாத்திரம் தான் மூன்றாம் பாகத்தின் ஹீரோ. இதில் செலின் கிடையாது. மூன்றாம் பாகம் மேலே நான் விட்ட மூலக்கதையில் இருந்து அதாவது 13 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது.werewolfகளை வேட்டையாடி கொண்டிருக்கும் விக்டர் , ஒரு பெண் Werewolfஐ பிடிக்கிறான். அவளுக்கு மனித வடிவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அது தான் முதல் லைகன் அதாவது மனித உருவுக்கு வர முடிகின்ற Werewolf. அவன் தான் லுசியன். விக்டர் அந்த பெண் Werewolfஐ கொன்று விட்டு லுசியனை அடிமையாக வளர்கிறான். அவனை Werewolfஆக மாற விடாமல் பார்த்து கொள்கிறான்.இதற்கிடையே விக்டர் மகள் Sonja லுசியன் மேல் காதல் கொல்கிறாள். ஒருநாள் அவளை Werwolfகளிடமிருந்து காப்பாற்ற லுசியன் Werewolfஆக மாறுகிறான். இதனால் விக்டர் அவனை ஜெயிலில் அடைத்து விடுகிறான். அங்கிருந்து மற்ற லைகன்களையும் காப்பற்றி தப்பிக்கும் லுசியன் விக்டருக்கு எதிராக போராட ஆரம்பிக்கிறான். லுசியன் மற்றும் தன் மகள் Sonja காதல் பற்றி அறியும் விக்டர் , Sonja வை லுசியன் கண் எதிரே சூரியஒளியை பட விட்டு கொல்கிறான்.

இதனை காணும் லுசியன் sonja கழுத்தில் இருக்கும் சங்கிலியை(அதாவது இரண்டாவது சாவி) எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறான். இதிலிருந்து லைகன்கள் மற்றும் வாம்பயர்கள் இடையே போர் ஆரம்பிக்கிறது. ..

முதல் மூன்று பாகங்கள் ஆக்சன் ரசிகர்கள் மற்றும் பரபர சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. பெரும்பாலான கதையை நானே சொல்லிவிட்டதால் படம் சுவராசியமாக இருக்காது என நினைக்காதீர்கள். நானே ஏதோ டிராகுலா படம் போல என பார்க்காமல் இருந்து பின் என் நண்பன் ஒருவன் நன்றாக இருக்கும் என்றதால் முழு மூன்று பாகங்களின் கதையை கேட்ட பின்னரே பார்க்க ஆரம்பித்தேன். என்னதான் கதையை கேட்டாலும் படங்களின் முடிச்சுகள் சுவராசியமாக அவிழ்கப்படுகின்றன. படத்தை பார்க்காத ஆக்சன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவும்.

என்ன ரொம்ப குழப்புதா? படம் பார்த்தவர்களுக்கு புரிஞ்சிருக்கும் படம் பார்க்காதவர்கள் இனி படத்தை பாருங்கள் புரியும்..

http://www.luckylimat.com

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.