Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்க பிள்ளைங்க இருக்காங்களா.. செத்தாங்களா? இந்தியக் குழுவிடம் ஈழக் குரல்!- ஜூனியர் விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

menick%2Bfarm02.jpg

ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான்.

ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தமிழகத்தில் ஓங்கிக் குரல் கொடுக்கும் ம.தி.மு.க., இந்தியக் கம்யூ​னிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி​கள் ஆரம்பத்திலேயே இந்தக் குழுவில் இல்லை. அடுத்து அ.தி.மு.க. விலகிக்கொள்ள, தி.மு.க-வும் பின்னர் வெளியேறியது.

அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியும் விலகிக்​கொண்டன. இந்த நிலையில், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு மட்டும் கடந்த 16-ம் தேதி கொழும்பு சென்று அடைந்தது!

திசை மாற்றிய பசில் ராஜபக்ச

சுற்றுப்பயணத்தின் முதல் நாள் காலை இலங்கை​யின் பொருளாதார அமைச்சரும் ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்சவை கொழும்​பில் சந்தித்தது இந்தியக் குழு.

இலங்கையில் அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ந்து வரும் இனப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். புனரமைப்புக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அரசு சார்பில் அமைக்​கப்பட்ட ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்’ என்று இந்தியக் குழு அவரிடம் வலியுறுத்தி உள்ளது.

அப்போது புனரமைப்புக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தே பசில் ராஜபக்ச பேசி இருக்கிறார். 'தமிழ் மக்களுக்கான பிரச்சினையை எப்படி இலங்கை அரசு கையாள்கிறது’ என்பதைப் பற்றி எதுவும் பேசவில்லையாம்.

பதில் இல்லாத கேள்வி!

இலங்கை நாடாளுமன்றத்துக்குச் சென்ற இந்தியக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை அரசுத் தரப்புடன் ஒரு சந்திப்பு நடத்தியது.

இதில், இலங்​கை அரசு சார்பில் பேசிய சபை முதல்வர் நிமல் சிறீபால டி சில்வா, ''இனப் பிரச்னையைத் தீர்த்திட அரசு சார்​பில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து உள்ளோம். ஆனால், இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புத் தரவில்லை'' என்று சொன்னதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இடை​மறித்துப் பேசி உள்ளார்.

''இலங்கை அரசுடன் 2011 முதல் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இன்னும் புலிகளைப் பற்றியே அரசு பேசுகிறது. இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டவரைவை அரசிடம் கொடுத்து உள்ளோம். ஆனால், அரசு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவே இல்லை'' என்று இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

''ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்​தையின் வாயிலாகவே தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. இதை ஏன் அரசு மறுக்கிறது?'' என்று இந்தியக் குழுவினர் கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்குச் சரியான பதிலை அமைச்சரால் சொல்ல முடியவில்லை!

எங்க அரிசியைப் பாருங்கள்!

இரண்டாம் நாள் வவுனியா, முல்லைத் தீவு, யாழ்ப்பாணப் பகுதிகளை பார்வையிட்டனர். அதன் பிறகு செட்டிகுளம், புளியங்குளம், மாங்குளம், முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கும் சென்றனர்.

செட்டிகுளத்தில் உள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்குச் சென்ற இந்தியக் குழு, அங்கே இருந்த அதிகாரிகளிடம் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியது. ''மூன்று லட்சம் மக்கள் 2009-ம் ஆண்டு நடந்த போரில் இடம்பெயர்ந்து வந்தார்கள். அவர்களில் 98 சதவிகிதம் பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டனர். மீதம் உள்ள இரண்டு சதவிகித மக்களையும் ஜூன் 30-ம் தேதிக்குள் மீள்குடியேற்றம் செய்து விடுவோம்'' என்று அரசு தரப்பு கூறியது.

அதன்பிறகு, மக்களைச் சந்தித்தனர். இவர்களைப் பார்த்ததும் ஒரு பெண், புழுத்துப்போன அரிசியைக் கொண்டுவந்து காட்டினார்.

''எங்களுக்குக் கொடுக்கப்படும் அரிசியைப் பாருங்கள்... இதை எப்படிச் சாப்பிடுவோம்?'' என்று மக்கள் கண்ணீருடன் கேள்வி கேட்​​​டார்கள். அப்போதும், ''தரமான பொருட்களைத்தான் தரு​கிறோம்'' என்று அரசு தரப்பு மனசாட்சி இல்லாமல் சொன்னதாம்.

எங்கே எங்க பிள்ளைங்க?

மெனிக் ஃபார்ம் முகாமுக்கு இந்தியக் குழு சென்றபோது, அவர்களுடன் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஒரு லட்சம் பேர் இருந்த இடத்தில் இப்போது 6,000 பேர் மட்டுமே உள்ளனர். அது கிட்டத்தட்ட திறந்தவெளிச் சிறைச்சாலையாகவே காட்சி அளித்துள்ளது. தகர வீடுகளில் இருந்த ஆண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்​பான்மையாக இருந்த பெண்கள்,

''விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை எல்லாம் காணோம். அவர்கள் உயிரோடு இருக்கிறாங்களா, இல்லையான்னே தெரியலை. எங்க பிள்ளைகளை மீட்டுத்தாங்க அய்யா'' என்று கதறி இருக்கிறார்கள். பதில் சொல்லத்தான் யாருக்கும் துணிவு இல்லை.

இந்தக் குழுவின் பயணத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை சுஷ்மாதான் நேர்மையாக அறிவிக்க​ வேண்டும்.

ஜூனியர் விகடன்

http://www.vannionli...-post_2400.html

''விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை எல்லாம் காணோம். அவர்கள் உயிரோடு இருக்கிறாங்களா, இல்லையான்னே தெரியலை. எங்க பிள்ளைகளை மீட்டுத்தாங்க அய்யா'' என்று கதறி இருக்கிறார்கள். பதில் சொல்லத்தான் யாருக்கும் துணிவு இல்லை.

மகிந்த கூட்டத்தை சர்வதேச விசாரணை கூட்டில் இல்லை முழுமையான ஐ.நா. சுயாதீன விசாரணை அமைத்தால் மட்டுமே உண்மைகள் வரலாம்.

இந்தக் குழுவின் பயணத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை சுஷ்மாதான் நேர்மையாக அறிவிக்க​ வேண்டும்.

பாரதீத ஜனதா கட்சி ஆட்சியில் ஏறும்பொழுது சிலவேளைகளில் இந்த பயண விளைவுகள் எமக்கு நன்மை தரலாம், ஆனால் காங்கிரஸ் ஆட்சியில்... அதே பல்லவி தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ந்து வரும் இனப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். புனரமைப்புக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அரசு சார்பில் அமைக்​கப்பட்ட ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்’ என்று இந்தியக் குழு அவரிடம் வலியுறுத்தி உள்ளது.

சர்வதேசத்தின் முழுமையான அழுத்தங்களும் பொருளாதார தடைகளுமே ஸ்ரீலங்காவை இதுபற்றி முடிவெடுக்கவைக்கும், அதைவிடுத்து அறிக்கைவிடுவது வெறும் கண்துடைப்பாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.