Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் நடத்திய ஊடக சந்திப்பும் கேளிவி பதில்களும்:-(காணொளி )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/9mMp_Hx_BLE

http://youtu.be/hLGMf0tsMco

http://www.globaltam...IN/article.aspx

இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவின் அறிக்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தமது விஜயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில், அங்கு மக்கள் மறுவாழ்வுப் பணிகளும், நீடித்து நிலைக்கக்கூடிய அமைதிக்கான வழிமுறைகளும் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காகவே தங்களது இந்தப் பயணம் அமைந்திருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் குழுவினர் கூறியுள்ளனர்.

அரசு, தமிழ்க் கூட்டமைப்பு, மற்றத் தரப்பினரை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை

இலங்கையில் இப்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்ட சூழ்நிலையில் அங்கு தேசிய

இணக்கப்பாடு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் நோக்கிச் செல்வதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று இந்தியா கருதுகிறது.

அதற்காக அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழு (எல்எல்ஆர்சி) முன்வைத்த பரிந்துரைகளுக்கு அவசரத் தேவை கருதி முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை தமது தரப்பு இலங்கைத் தரப்புக்கு எடுத்துரைத்துள்ளதாகவும் இந்திய குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோர் பற்றிய விசாரணைகள் பற்றியும் தனியார் காணிகளிலிருந்து இராணுவங்களை விலக்கிக்கொள்ளல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல் மற்றும் வடக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

அந்த பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டுமென்று தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கக்கூடிய அர்த்த பூர்வமான அதிகார பகிர்வுத்திட்டத்தை எட்டுவதற்கு தற்போதுள்ள சூழலை இலங்கை அரசு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

13th Amentment plus- அதாவது அதிகாரப் பகிர்வு விடயத்தில் 'இலங்கை அரசியலமைப்பின் 13ம் திருத்தத்துடன் இன்னும் சில விடயங்களும் சேர்க்கப்படும்' என்ற அணுகுமுறையை ஒட்டி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்று இலங்கை அரசு ஏற்கனவே கடந்த காலங்களில் வாக்குறுதி அளித்துள்ளதை இந்தியா இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மற்றபல தரப்பினரும் அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய பேச்சை முன்னெடுக்க வேண்டுமென்றும் இந்திய பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளின் அடிப்படையில், அந்நாட்டின் பலதுறைகளிலும் தாங்கள் வழங்கிவரும் மனிதநேய உதவித்திட்டங்கள் குறித்து திருப்தியடைவதாகக் கூறியுள்ள இந்திய நாடாளுமன்றக் குழு, இரு நாட்டு மீனவர்களின் பிரச்சனை விடயத்தில் தான் இரு தரப்பினரும் மிக அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றும் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.bbc.co.uk...npmrlease.shtml

Edited by akootha

தீர்வுக்கான சாதக சமிக்ஞையை அரசே முதலில் வெளியிடட்டும் ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்தார் சுஷ்மா

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சாதக சமிக்ஞைகளைக் காட்டவேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. என வலியுறுத்தி உள்ளார் இந்திய நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமைதாங்கி இலங்கை வந்த சுஷ்மா சுவராஜ்.

"அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவில் எட்டிவிடலாம்'' என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் அவர் நேரில் தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை சுஷ்மா, அவரது மகள், இந்தியத் தூதுவர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு நாம் கூட்டமைப்பிடம் கேட்டுப்பார்க்கின்றோம் என்றும் அச்சந்திப்பின் போது இந்திய எதிர்க்கட்சித் தலைவி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

http://184.107.230.1...08996521751573#

இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை எமது நோக்கம் நிறைவேறாது - சுஷ்மா சுவராஜ்

'மீள்குடியேற்றம்"

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட சிறு தொகையினர் இன்னும் மீள்குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களை முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் வரை எமது விஜயத்தின் நோக்கம் நிறைவேறாது.

அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு தேவையான வழிவகைகளை இருநாட்டு ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்"

எமது இந்த விஜயத்தின்போது கடந்த நான்கு நாட்களாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிட்டோம். குறிப்பாக காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பிலும் உயர் பாதுகாப்பு வலயங்களை குறைப்பது பற்றியும் இராணுவ வசப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகளை மீளளிப்பது குறித்தும் வடக்கில் பொதுமக்கள் தொடர்பான விடயங்களில் இராணுவ தலையீடுகள் குறைக்கப்பட வேண்டியது பற்றியும் பேசினோம்.

அதற்கும் மேலதிகமாக இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வினை முன்வைக்கும் நோக்கில், மக்கள் சம உரிமை, நீதி, சுய உரிமையோடு வாழ்வதற்காக 13 பிளஸ் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.

'மீனவர் பிரச்சினை"

இருநாட்டு மீனவர்கள் விடயத்தில் கவனமாகச் செயற்படுதல் அவசியமாகும். இருதரப்பினரும் இணைந்து நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவன் மூலம் தீர்விiனி பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார்.

இலங்கையில் அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர் அளித்த உறுதி மொழி என்ன?

பதின்மூன்றாவது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி எம்முடன் கலந்துரையாடல் நடத்தினார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாக தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். தீர்வுக்கான கால அவகாசம் உறுதியளிக்காவிடினும் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக நம்புகிறோம்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படப்போவதில்லை என்றும் இது ஏமாற்று நடவடிக்கை என்றும் இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சிலர் கூறுவது பற்றி..?

13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்னோடு பேசினார். ஏன், இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கூட அதைப்பற்றித்தான் பேசினோம். மற்றவர்களுடைய கருத்துப் பற்றி எனக்குத் தெரியாது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்திய தூதுக்குழுவுக்கு விருந்துபசாரம் வழங்கியதாகவும் அதில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறதே?

அதில் உண்மையில்லை. அவர் எங்களுக்கு விருந்துபசாரம் வழங்கவில்லை. மஹாபோதி சங்கத்தினர் வழங்கிய விருந்துபசாரத்தில் அவர் கலந்துகொண்டிருந்தார். அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37703

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்திய தூதுக்குழுவுக்கு விருந்துபசாரம் வழங்கியதாகவும் அதில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறதே?

அதில் உண்மையில்லை. அவர் எங்களுக்கு விருந்துபசாரம் வழங்கவில்லை. மஹாபோதி சங்கத்தினர் வழங்கிய விருந்துபசாரத்தில் அவர் கலந்துகொண்டிருந்தார். அதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

மிக மோசமான படுகொலைகளை செய்த சிங்கள பௌத்த காட்டுமிராண்டிப் பயங்கரவாதி கோத்தபாயவை விருந்துக்கு அழைத்ததன் மூலம் மகா சங்க பயங்கரவாதிகளும் போர் குற்றங்களுக்கு உடந்தையானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் சிங்கள பௌத்த பிக்குகளும் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட வேண்டியவர்கள்.

காட்டுமிராண்டிகள் கொலைகாரர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்திருப்பர்.

இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜின் ஊடகங்களுக்கான அறிக்கையும், செவ்வியும் அண்மைக்கால இந்திய அரசியல்வாதிகளால் இலங்கை சம்பந்தமாக வெளிவிட்ட அறிக்கைகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது.

முதலாவதாக, கடந்த சில ஆண்டு காலங்களில் பயணம் வந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இலங்கை அதிபரின் அறிக்கைகளையேதான், அறிந்து லஞ்சம் பெற்றுக்கொண்டோ, அல்லது அறியாமல் தவறி எடுத்தோ படித்து வந்தார்கள். இந்த அறிக்கை இவராலோ அல்லது இவரின் உதவிகளாலோதான் தயாரிக்க பட்டதாக நிச்சயமாக கூறமுடியும். ஏனெனில் இது எதிர்க்கட்சி தலைவரை நடுநிலைமையானவராக காட்டி, இந்த பயணத்திற்கு பணம் தந்த இந்திய பொதுமகனுக்கு பயணத்தை பற்றி தெரிவிக்கத்தக்கதாக எழுதப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக இந்திய பிரதிநிதிகள், பயங்கர போர்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வஞ்சகங்கள் நிறைந்த இலங்கைத்தலைவர்களின் சூழ்ச்சிகளில் விழுந்து அவர்களை பண்பின் சிகரங்களாக வருணிப்பதிலிருந்து வேறுபட்டு தமிழர்கள் தலைவன் சம்பந்தனை புடம்போட்ட ஒரு இலட்சிய அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய பொதுமகனுக்கு யார் இந்த இராஜவரோதயம் சம்பந்தன் என்பதை தெரிய வைப்பதிலும் பார்க்க, இவ்வளவு வேதனைகளுக்குள்ளும், தமக்கு முதன்மையானது அரசியல் உரிமைகளே என, தமது வாழ்வுகளை கூட்டமைப்பிடம் கையளித்துவிட்டு காத்திருக்கும் ஈழத்து மக்களுக்குத்தான், சம்பந்தர் ஐயா யார் எனத்தெளிய வைக்கிறது.

மேலும் ஆராயும் போது இந்திய இலங்கை உறவுகளின் திருப்பம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது “இந்த பிரேரணை என்ன, வெறுமனே இலங்கையின் LLRC அறிக்கையை நடைமுறைப்படுத்த சொல்கிறது அவ்வளவுதானே” என்று முடிக்கிறார். ஆளும் கட்சி பிரேரணைக்கு வாக்களித்திருப்பதும், எதிர்க்கட்சி முற்றுமுழுதாக பிரேரணையை கூட்டித் தள்ளிவிடுவதும், இந்தியா முழுவதும், பிரேரணை பல்லில்லாத புடையன் பாம்பாகத்தான் பார்க்கின்றது என்பதை வெளிக்காட்டுகிறது.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒற்றுமையை சுஸ்மா அம்மையார் இன்னொருதடவையிலும் வெளிக்காட்டியிருக்கிறார். “13ம் திருத்தம் கடந்த தீர்வு” பற்றி பேசும் போது இது பிரதமருக்கும், அயலுறவு மந்திரிக்கும்,(ஏன் தனக்கும் கூடத்தான்) இலங்கை அதிபரால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாக கூறுகிறார். இது பிரேரணை அவலத்திலிருந்து மீண்டுவந்த அகில இந்தியா, 13ம் திருத்தம் மீது தொடர்ந்தும் கண் வைத்திருக்கிறது என்பதாகும். ஆனாலும் அம்மையாரின் 13ம் திருத்தம் கடந்த தீர்வு சம்பந்தமாக இலங்கையின் வாக்குறுதிகள் மீது எவ்வளவு கூர்மையாக நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருக்கிறார் என்பதை அலச வேண்டுமாயின், 13ம் திருத்தம் கடந்த தீர்வை ஊடகவியளாருக்கு விளக்க வந்து, அது, “More than the Devolution of Power” என்ற பதத்தை பாவிக்கும் போது அவரின் குரலில் இருந்த உணர்வுகளை தட்டிக்கழிக்க முடியாது.

சுஸ்மா சுவராஜ், தமிழக முதல்வரின் கட்சி, பயணத்தை ரத்து செய்தது சம்பந்தமாக அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இது பயணத்திற்கான உண்மை நோக்கங்களுக்கும், தனது நடுநிலைமைக்கும் விட்டசவாலாகவே பார்க்கிறார்.

பயணத்தின் நோக்கத்தை மட்டும் எடுத்து பேச வேண்டுமாயின், இலங்கை அரசியலை தெரிந்தவர்கள் யாரும், இந்த பயணம் இன்னொரு மாட்டுப்பொங்கள் விழாவாகவோ அல்லது புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டமாகவோ மாற்றமடையாமல் இருந்ததிற்கு முதல்வரின் நடவடிக்கையே காரணம் என்பதை தெரிந்துதான் வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்தியாவின் நடுநிலை பற்றி பேசுவது என்பது வேறு ஒரு முழுமையான தொடர். அயல் நாடு ஒன்றின் நடுநிலை செயல்ப்பாட்டால் ஈழத்தமிழர் தமிழர் பயனடையக்கூடிய நிலைமை இருந்தது, ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் சமநிலை இருந்த போது மட்டுமே. இந்தியா இந்த சமநிலையை அழிக்க முன் வந்து விடுதலை இயக்கத்தை அழித்தும், அதற்கு மேலும் சென்று தமிழரின் வாழ்விடங்களை குண்டு வீசி அழித்து, அவர்களின் உயிர்களை இராசாயன ஆயுதங்களால் அழித்து மிஞ்சியவர்களிடம் மிஞ்சியிருத்ததொன்றான மானத்தையும் அழித்துவிட்டுத்தான் திரும்பி போயிருக்கிறது. இது இந்தியா இலங்கையில் செய்த இனவழிப்பு. இதில் எதையும் எதிர்க்கட்சி தலைவருக்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையில்லை. போரில் நடந்தவற்றை இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து, இறந்த உடலமொன்றை விடுதலைத் தலைவரின் மரணமாக கிழமைக் கணக்காக காட்டி விளம்பரம் செய்த போது உண்மைகளை அறியாமல் இருந்தவர்கள் பொது மக்கள் மட்டுமே. சுஸ்மா சுவராஜ் நிச்சயமாக நடந்தவற்றை எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார். அதாவது நடுநிலை இல்லாமல், சமத்துவத்தை அழித்து அநாதரவாக்கிவிட்ட தமிழரை, இந்தியாவின் எதிர்க்கட்சித்தலைவர், வெற்றிக்களிப்பில் திகழும் இலங்கையுடன் சமத்துவமாக நடத்துவதாக இந்திய பொதுமகனுக்கு காட்ட செய்யும் பேச்சுக்குக்கள், உண்மையில் தமிழரை இலங்கையுடன் சமமாக மதிக்க இன்னமும் தயாரில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஈழயுத்தத்தின் போது இந்தியா இலங்கையில் எவ்வளவு அழிவுகளை செய்தது என்ற குற்றச்சாட்டுக்களை தமிழர் எப்படித்தான் இவர் முன் வைத்தாலும், இவர் அப்போதும் எதிர்கட்சித்தலைவர். இப்போதும் எதிர்க் கட்சித்தலைவர் மட்டுமே. அதாவது நாம் இவர் பதவிக்கு வருமுன் அயல்நாடான இலங்கையை எதிர்க்க வேண்டுமென்றோ அல்லது பதவிக்கு வரத்தக்க தனது சந்தர்பங்களை கெடுத்துக்கொள்ள வேண்டுமென்றோ கூறவில்லை. ஆனல் இவர் எதிர்க் கட்சித்தலைவர். காங்கிரசை அத்தாட்சிகளோடு எதிர்ப்பதினால் மட்டும் தான் தனது கட்சியை பதவிக்கு கொண்டுவர முடியும். இலங்கையில் நடந்தவற்றை, காங்கிரஸ், இந்திய ஊடகங்களில் இருட்டடிக்க பண்ணியதின் காரணம் அதை பொது மக்கள் தெரிய வந்தால் காங்கிரஸ் இனி பதவிக்கு வர முடியாது என்பதனாலேயேதான். அதனால் தான் இவரிடம் கேட்கிறோம், இவர் நடுநிலைமையாக இலங்கையில் நடந்தவற்றை வெளியே கூற வேண்டும். தான் சுதந்திரமாக தமிழ் மக்களை பார்க்க இலங்கை ராணுவம் அனுமதிக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். இலங்கையில் நடந்து, காங்கிரசால் இருட்டடிக்கப்பட்ட இனப்படுகொலையை பற்றி இந்திய பொதுமகனுக்கு ஒளிவு மறைவின்றிக்கூற வேண்டும். இது தமிழகத்திலேயே இருட்டடிப்பு செய்ய முயன்றும் முடியாமல் போய்விட்ட உண்மை. காங்கிரசின் இணைக்கூட்டாளி கருணாநிதியை மண்கவ்வ வைத்த சம்பவம். சுஸ்மாவும் தமிழகத்தில் ஜெயலலிதா செய்தது போன்றே ஈனவழிப்பு குற்றவாளிகளை குற்றவாளிகள் என்று இந்திய மேடைகளில் பேசத்தயாரானால் அவருக்கும் அடுத்தமுறை ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றிகள் நிச்சயம் கிடைக்கும். அப்போது அவருக்கும் விளங்கும் ஏன் முதல்வர் தமிழநாட்டு மக்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதிகளுக்கு மாறாக இலங்கை சென்று சிங்கள் பயங்கரவாத மகாநாயக்க தேரர்களுடன் விருந்துண்ண விரும்பவில்லை என்பது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.